திருப்புகழ் 1082 கரு மயல் ஏறி  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1082 karumayalERi  (common)
Thiruppugazh - 1082 karumayalERi - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

mp3
 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தானத் தனதன தானத்
     தனதன தானத் ...... தனதான

......... பாடல் .........

கருமய லேறிப் பெருகிய காமக்
     கடலினில் மூழ்கித் ...... துயராலே

கயல்விழி யாரைப் பொருளென நாடிக்
     கழியும நாளிற் ...... கடைநாளே

எருமையி லேறித் தருமனும் வாவுற்
     றிறுகிய பாசக் ...... கயிறாலே

எனைவளை யாமற் றுணைநினை வேனுக்
     கியலிசை பாடத் ...... தரவேணும்

திருமயில் சேர்பொற் புயனென வாழத்
     தெரியல னோடப் ...... பொரும்வீரா

செகதல மீதிற் பகர்தமிழ் பாடற்
     செழுமறை சேர்பொற் ...... புயநாதா

பொருமயி லேறிக் கிரிபொடி யாகப்
     புவியது சூழத் ...... திரிவோனே

புனமக ளாரைக் கனதன மார்பிற்
     புணரும்வி நோதப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கரு மயல் ஏறிப் பெருகிய காமக் கடலினில் மூழ்கித்
துயராலே
... கொடிய ஆசை மிகுந்து பெருகி வளர்ந்த காமமாகிய
கடலில் முழுகித் துயரம் அடைந்து,

கயல் விழியாரைப் பொருள் என நாடிக் கழியும்
அ(ந்)நாளில்
... மீன் போன்ற கண்களைக் கொண்ட விலைமாதர்களை
அடையத் தக்க பொருள் என்று தேடி விரும்பி, காலம் கழிக்கின்ற அந்த
நாட்களில்

கடை நாளே எருமையில் ஏறித் தருமனும் வாவுற்று ... இறுதி
நாள் வர, எருமைக் கடா வாகனத்தில் ஏறி யமதர்மனும் வீட்டு வாசற்படி
தாண்டி வந்து,

இறுகிய பாசக் கயிறாலே எனை வளையாமல் ... அழுத்திக்
கட்டிய பாசக் கயிற்றால் என்னை வளைத்து இழுக்காமல்,

துணை நினைவேனுக்கு இயல் இசை பாடத் தரவேணும் ...
உன்னையே துணையாக நினைக்கின்ற எனக்கு, இயற்றமிழ்
இசைத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்ல வரத்தைத் தந்தருள வேண்டும்.

திரு மயில் சேர் பொன் புயன் என வாழ் அ(த்)தெரியலன்
ஓடப் பொரும் வீரா
... மயில் போன்ற லக்ஷ்மிகரம் பொருந்திய அழகிய
புயங்களை உடையவன் என்று சொல்லும்படி வாழ்ந்திருந்த அந்தப்
பகைவனாகிய சூரன் புற முதுகு காட்டி ஓடும்படிச் சண்டை செய்த
வீரனே,

செக தலம் மீதில் பகர் தமிழ் பாடல் செழு மறை சேர் பொன்
புய நாதா
... இந்தப் பூமியில் புகழ்ந்து பேசப்படும் தமிழ்ப் பாட்டுக்களால்
ஆகிய பாமாலைகளும், செழுமை வாய்ந்த வேத மொழிகளும் மாலையாக
அணிந்த அழகிய புயங்களைக் கொண்டவனே,

பொரு மயில் ஏறிக் கிரி பொடியாகப் புவி அது சூழத்
திரிவோனே
... சண்டை செய்ய வல்ல மயில் மீது ஏறி, மலைகள் எல்லாம்
பொடியாகும் படி பூமியை வலம் வந்தவனே,

புன மகளாரைக் கனதன மார்பில் புணரும் விநோதப்
பெருமாளே.
... தினைப் புனத்தில் காவலில் இருந்த வள்ளியை,
அவளது சிறப்பு மிக்க மார்பகங்களோடு, ஆரத் தழுவிய
திருவிளையாடலைச் செய்த பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.196  pg 3.197 
 WIKI_urai Song number: 1085 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1082 - karu mayal ERi (common)

karumaya lERip perukiya kAmak
     kadalinil mUzhkith ...... thuyarAlE

kayalvizhi yAraip poruLena nAdik
     kazhiyuma nALiR ...... kadainALE

erumaiyi lERith tharumanum vAvut
     RiRukiya pAsak ...... kayiRAlE

enaivaLai yAmaR RuNaininai vEnuk
     kiyalisai pAdath ...... tharavENum

thirumayil sErpoR puyanena vAzhath
     theriyala nOdap ...... porumveerA

sekathala meethiR pakarthamizh pAdaR
     sezhumaRai sErpoR ...... puyanAthA

porumayi lERik kiripodi yAkap
     puviyathu sUzhath ...... thirivOnE

punamaka LAraik kanathana mArpiR
     puNarumvi nOthap ...... perumALE.

......... Meaning .........

karu mayal ERip perukiya kAmak kadalinil mUzhkith thuyarAlE: Possessed by excessive and evil desire, drowning in the swelling sea of lust and feeling miserable;

kayal vizhiyAraip poruL ena nAdik kazhiyum a(n)nALil: during the days when I while away my time thinking that whores with beautiful sEl-fish-like eyes would be a worthy acquisition;

kadai nALE erumaiyil ERith tharumanum vAvutRu: on the final day, lest Yamadharman (God of Death), mounted on his vehicle buffalo, cross my door-step

iRukiya pAsak kayiRAlE enai vaLaiyAmal: to take my life by throwing the tightly-twisted rope of bondage around my neck,

thuNai ninaivEnukku iyal isai pAdath tharavENum: kindly grant me, your devotee who thinks solely of you as refuge, the boon of singing songs in literary and musical Tamil language!

thiru mayil sEr pon puyan ena vAzh a(th) theriyalan Odap porum veerA: SUran was known for his shapely shoulders which were described as the seat of the peacock-like Goddess, Lakshmi; You fought with that enemy, SUran, chasing him away, with his back to the battlefield, Oh valorous One!

seka thalam meethil pakar thamizh pAdal sezhu maRai sEr pon puya nAthA: In this world, several Tamil poems are praiseworthy; You wear garlands of such poems and garlands made of rich scriptures, adorning Your pretty shoulders!

poru mayil ERik kiri podiyAkap puvi athu sUzhath thirivOnE: Mounting the combat-ready peacock, You flew around the world smashing all the mountains to pieces, Oh Lord!

puna makaLAraik kanathana mArpil puNarum vinOthap perumALE.: She was guarding the millet field; You tightly hugged that VaLLi, endowed with rich bosom, in an act of playful sport, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

mp3
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1082 karu mayal ERi - common


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]