திருப்புகழ் 1081 மடவியர் எச்சில்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1081 madaviyarechchil  (common)
Thiruppugazh - 1081 madaviyarechchil - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தத்த தந்த தனதன தத்த தந்த
     தனதன தத்த தந்த ...... தனதான

......... பாடல் .........

மடவிய ரெச்சி லுண்டு கையில்முத லைக்க ளைந்து
     மறுமைத னிற்சு ழன்று ...... வடிவான

சடமிக வற்றி நொந்து கலவிசெ யத்து ணிந்து
     தளர்வுறு தற்கு முந்தி ...... யெனையாள்வாய்

படவர விற்சி றந்த இடமிதெ னத்து யின்ற
     பசுமுகி லுக்கு கந்த ...... மருகோனே

குடமுனி கற்க வன்று தமிழ்செவி யிற்ப கர்ந்த
     குமரகு றத்தி நம்பு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மடவியர் எச்சில் உண்டு கையில் முதலைக் களைந்து மறுமை
தனில் சுழன்று
... விலைமாதர்களுடைய எச்சிலை உண்டு, கையில்
உள்ள மூலப்பொருளை அவர்கள் பொருட்டுச் செலவழித்து ஒழித்து, மறு
பிறப்புக்கு ஏதுவான செயல்களில் அலைச்சல் உற்று,

வடிவான சடம் மிக வற்றி நொந்து கலவி செயத் துணிந்து
தளர் உறுதற்கு முந்தி எனை ஆள்வாய்
... அழகாய் இருந்த உடம்பு
வர வர இளைத்து, காய்ந்து வாடி, புணர்ச்சிச் செயல்களில் மீண்டும்
ஈடுபடத் துணிந்து, நான் சோர்வு அடைவதற்கு முன்பாக என்னை நீ
ஆண்டருள்க.

பட அரவில் சிறந்த இடம் இது எனத் துயின்ற பசு முகிலுக்கு
உகந்த மருகோனே
... படம் கொண்ட (ஆதிசேஷன் என்னும்)
பாம்பாகிய படுக்கையை மிகத் தக்க இடம் இது என்று கொண்டு அதில்
பள்ளி கொண்ட கரிய மேகம் போன்ற திருமாலுக்குப் பிரியமான மருகனே,

குட முனி கற்க அன்று தமிழ் செவியில் பகர்ந்த குமர குறத்தி
நம்பு(ம்) பெருமாளே.
... அகத்திய முனிவர் கற்க*, அன்று தமிழ்
ஞானத்தை அவர் காதில் சொல்லி ஊட்டிய குமரனே, குறத்தியாகிய
வள்ளி நம்பித் தொழும் பெருமாளே.


* அகத்தியர் சிவபெருமானை வணங்கி தமிழ் ஞானம் வேண்ட, அவர் முனிவரைத்
திருத்தணிகை முருகனை அணுகுமாறு பணித்தார். அங்ஙனமே அகத்தியர்
முருக வேளைப் பூஜித்துத் தமிழ் ஞானம் பெற்றார்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.194  pg 3.195 
 WIKI_urai Song number: 1084 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1081 - madaviya recchil (common)

madaviya recchi luNdu kaiyilmutha laikka Lainthu
     maRumaitha niRchu zhanRu ...... vadivAna

sadamika vatRi nonthu kalavise yaththu Ninthu
     thaLarvuRu thaRku munthi ...... yenaiyALvAy

padavara viRchi Rantha idamithe naththu yinRa
     pasumuki lukku kantha ...... marukOnE

kudamuni kaRka vanRu thamizhsevi yiRpa karntha
     kumaraku Raththi nampu ...... perumALE.

......... Meaning .........

madaviyar ecchil uNdu kaiyil muthalaik kaLainthu maRumai thanil suzhanRu: Imbibing the saliva from the lips of whores, squandering away all my property on those women, indulging in such activities of roaming about aimlessly that become the root cause for my getting caught in the cycle of rebirth,

vadivAna sadam mika vatRi nonthu kalavi seyath thuNinthu thaLar uRuthaRku munthi enai ALvAy: and the handsome body weakening day by day and becoming withered and dried up, I still have the audacity of seeking carnal pleasure; before I tire out, kindly come and take charge of me.

pada aravil siRantha idam ithu enath thuyinRa pasu mukilukku ukantha marukOnE: Selecting the serpent AdhisEshan with the hood as the most appropriate place for Him to recline, He slumbered on it; He is Lord VishNu with the complexion of the dark cloud; and You are His favourite nephew, Oh Lord!

kuda muni kaRka anRu thamizh seviyil pakarntha kumara kuRaththi nampu(m) perumALE.: In order that Sage Agasthiyar could learn it*, You once preached the essence of Tamil Knowledge into his ears, Oh Lord KumarA! VaLLi, the damsel of the KuRavAs, trusts and worships You, Oh Great One!


* Once, Agasthiyar prayed to Lord SivA seeking the knowledge of Tamil.
Lord SivA directed him to ThiruththaNigai to approach Murugan with his request.
Agasthiyar worshipped Murugan and was blessed with the knowledge of Tamil.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1081 madaviyar echchil - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]