திருப்புகழ் 1079 சுடரொளி கதிரவன்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1079 sudaroLikadhiravan  (common)
Thiruppugazh - 1079 sudaroLikadhiravan - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தனதன தத்தத் தத்தத்
     தாந்தாந் ...... தனதான

......... பாடல் .........

சுடரொளி கதிரவ னுற்றுப் பற்றிச்
     சூழ்ந்தோங் ...... கிடுபாரிற்

றுயரிரு வினைபல சுற்றப் பட்டுச்
     சோர்ந்தோய்ந் ...... திடநாறுங்

கடுகென எடுமெனு டற்பற் றற்றுக்
     கான்போந் ...... துறவோருங்

கனலிடை விதியிடு தத்துக் கத்தைக்
     காய்ந்தாண் ...... டருளாயோ

தடமுடை வயிரவர் தற்கித் தொக்கத்
     தாந்தோய்ந் ...... திருபாலும்

தமருக வொலிசவு தத்திற் றத்தத்
     தாழ்ந்தூர்ந் ...... திடநாகம்

படிநெடி யவர்கர மொத்தக் கெத்துப்
     பாய்ந்தாய்ந் ...... துயர்கானம்

பயில்பவர் புதல்வகு றத்தத் தைக்குப்
     பாங்காம் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சுடர் ஒளி கதிரவன் உற்றுப் பற்றிச் சூழ்ந்து ஓங்கிடு பாரில் ...
ஜோதி ஒளி வீசும் சூரியன் உதித்துப் புறப்பட்டு, வலம் வந்து
விளங்குகின்ற இந்தப் பூமியில்

துயர் இரு வினை பல சுற்றப்பட்டு சோர்ந்து ஓய்ந்திட ...
துன்பம், நல் வினை, தீ வினை என்னும் இருவினைகள் பலவற்றாலும்
இவ்வாழ்க்கை சுற்றப்பட்டு, (அதனால்) சோர்வடைந்து அலுத்து மாய்ந்திட

நாறும் கடுகென எடும் எனும் உடல் பற்று அற்று ... (பிணம்)
நாற்றம் எடுக்கும், விரைவில் எடுத்துக் கொண்டு போகவும் என்று
சொல்லப்படும் உடல் மீதுள்ள பற்று ஒழிந்து,

கான் போந்து உறவோரும் கனல் இடை விதி இடு தத்
துக்கத்தைக் காய்ந்து ஆண்டு அருளாயோ
... சுடு காட்டுக்குப்
போய் உறவினரும் நெருப்பிடையே விதிப்படி இடுகின்ற அந்தத் துக்க
நிகழ்ச்சிக்கு இடம் தருகின்ற பிறப்பைக் கோபித்து ஒழித்து, என்னை
ஆண்டருள மாட்டாயோ?

தடம் உடை வயிரவர் தற்கித்து ஒக்க ... பெருமை உடைய
(துர்க்கையின் படைகளான) கணங்கள் செருக்குற்று ஒன்று சேர்ந்து,

தாம் தோய்ந்து இரு பாலும் தமருக ஒலி சவுதத்தில் தத்த ...
தாங்கள் கூடிப் பொருந்தி (நடனம் ஆடுபவரின்) இரண்டு பக்கங்களிலும்
உடுக்கையின் ஓசையை நடன ஜதிக்கு ஏற்ப சவுக்க காலத்தில் ஒலிக்க,

தாழ்ந்து ஊர்ந்திட நாகம் படி நெடியவர் கரம் ஒத்த ...
(ஜடையில்) அணிந்துள்ள பாம்பு தொங்கி நகர்ந்து செல்ல, அக்கூத்தின்
போக்கைக் கவனித்தும் படிக்கும் திருமால் கைகளால் (மத்தளம்) அடிக்க,

கெத்துப் பாய்ந்து ஆய்ந்து உயர் கானம் பயில்பவர் புதல்வ ...
கிட்டிப் புள் பாய்வது போலப் பாய்ந்து, கூத்திலக்கணத்தை ஆராய்ந்து,
பெரிய சுடுகாட்டினிடையே நடனம் செய்பவரான சிவபெருமானின்
மகனே,

குறத் தத்தைக்குப் பாங்காம் பெருமாளே. ... கிளி போன்ற
குறப்பெண் ஆகிய வள்ளிக்கு மணாளனாகும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.192  pg 3.193 
 WIKI_urai Song number: 1082 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1079 - sudaroLi kadhiravan (common)

sudaroLi kathirava nutRup patRic
     sUzhnthOn ...... gidupAril

thuyariru vinaipala sutRap pattuc
     cOrnthOyn ...... thidanARum

kadukena edumenu daRpat RatRuk
     kAnpOn ...... thuRavOrum

kanalidai vithiyidu thaththuk kaththaik
     kAynthAN ...... daruLAyO

thadamudai vayiravar thaRkith thokkath
     thAnthOyn ...... thirupAlum

thamaruka volisavu thaththit Raththath
     thAzhnthUrn ...... thidanAkam

padinedi yavarkara moththak keththup
     pAynthAyn ...... thuyarkAnam

payilpavar puthalvaku Raththath thaikkup
     pAngAm ...... perumALE.

......... Meaning .........

sudar oLi kathiravan utRup patRic sUzhnthu Ongidu pAril: In this world which is orbited by the rising bright sun,

thuyar iru vinai pala sutRappattu sOrnthu Oynthida: this life is tangled in misery and the two deeds (both good and bad), causing depression and disgust, leading to death;

nARum kadukena edum enum udal patRu atRu: people begin to say "This corpse is about to stink; take it away at once (to be cremated)", at which point the attachment to the body is gone;

kAn pOnthu uRavOrum kanal idai vithi idu thath thukkaththaik kAynthu ANdu aruLAyO: upon reaching the cremation ground, the relatives ritually set fire to the body; will You not direct Your anger at the cause for this kind of grief by destroying birth altogether and take charge of me?

thadam udai vayiravar thaRkiththu okka: The famous army of fiends belonging to Durga got together pompously;

thAm thOynthu iru pAlum thamaruka oli savuthaththil thaththa: they grouped themselves on either side (of the dancer) and began to beat the hand-drums at a slow pace in accordance with the tempo of the dance;

thAzhnthu Urnthida nAkam padi nediyavar karam oththa: the serpent (from the matted hair) glided down and moved slowly; VishNu, who was closely following the rhythm, beat the drum with His hands;

keththup pAynthu Aynthu uyar kAnam payilpavar puthalva: like a puck that leaps in a game (of stick and puck), He jumped about dancing on the large cremation ground after having performed a profound research of the principles of dancing; You are the Son of that Lord SivA!

kuRath thaththaikkup pAngAm perumALE.: You are the Consort of VaLLi, the parrot-like damsel of the KuRavAs, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1079 sudaroLi kadhiravan - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]