திருப்புகழ் 1078 கொடியன பிணி  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1078 kodiyanapiNi  (common)
Thiruppugazh - 1078 kodiyanapiNi - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தனதன தத்தத் தத்தத்
     தாந்தாந் ...... தனதான

......... பாடல் .........

கொடியன பிணிகொடு விக்கிக் கக்கிக்
     கூன்போந் ...... தசடாகுங்

குடிலுற வருமொரு மிக்கச் சித்ரக்
     கோண்பூண் ...... டமையாதே

பொடிவன பரசம யத்துத் தப்பிப்
     போந்தேன் ...... தலைமேலே

பொருளது பெறஅடி நட்புச் சற்றுப்
     பூண்டாண் ...... டருள்வாயே

துடிபட அலகைகள் கைக்கொட் டிட்டுச்
     சூழ்ந்தாங் ...... குடனாடத்

தொகுதொகு திகுதிகு தொக்குத் திக்குத்
     தோந்தாந் ...... தரிதாளம்

படிதரு பதிவ்ரதை யொத்தச் சுத்தப்
     பாழ்ங்கான் ...... தனிலாடும்

பழயவர் குமரகு றத்தத் தைக்குப்
     பாங்காம் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கொடியன பிணி கொ(ண்)டு விக்கிக் கக்கிக் கூன் போந்து
அசடு ஆகும்
... கொடுமையான நோய்களை அடைந்து, விக்கல்
எடுத்தும், வாந்தி எடுத்தும், கூன் விழுந்தும், அறிவு கலங்கப் பெற்றும்,

குடில் உற வரும் ஒரு மிக்கச் சித்ரக் கோண் பூண்டு
அமையாதே
... உடலில் பொருந்தி வரும் ஒரு மிக வேடிக்கையான
மாறுபட்ட நிலையை அடையாதபடி,

பொடிவன பர சமயத்துத் தப்பிப் போந்தேன் தலை மேலே ...
நிலைத்து நிற்காது அழிவு பெறும் மற்ற சமயக் கூச்சல்களிலிருந்து
பிழைத்து வந்துள்ள என் தலை மீது,

பொருள் அது பெற அடி நட்புச் சற்றுப் பூண்டு ஆண்டு
அருள்வாயே
... மெய்ப் பொருளை நான் பெற, உனது திருவடியை
அன்பு கொஞ்சம் வைத்து ஆண்டு அருள்வாயாக.

துடி பட அலகைகள் கைக் கொட்டிட்டுச் சூழ்ந்து ஆங்கு
உடன் ஆட
... உடுக்கை வாத்தியம் ஒலிக்க, பேய்கள் கைகளைக்
கொட்டிச் சூழ்ந்து அவ்விடத்தில் தம்முடன் கூத்தாட,

தொகு தொகு திகு திகு தொக்குத் திக்குத் தோம் தாம் தரி
தாளம் படி தரு பதிவ்ரதை ஒத்த
... தொகு தொகு திகு திகு
தொக்குத் திக்குத் தோம் தாம் தரி என்ற தாளத்தைப் படியப் போடுகின்ற
பதி விரதையாகிய பார்வதி (அதற்குத் தகுந்தபடி) ஒத்திட்டு ஒலிக்க,

சுத்தப் பாழ்ங் கான் தனில் ஆடும் பழயவர் குமர ... தூய சுடு
காட்டில் ஆடுகின்ற பழையவராகிய சிவபெருமானுடைய குமரனே,

குறத் தத்தைக்குப் பாங்காம் பெருமாளே. ... குறப்பெண்ணாகிய
வள்ளிக்குத் துணைவனான பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.190  pg 3.191  pg 3.192  pg 3.193 
 WIKI_urai Song number: 1081 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1078 - kodiyana piNi (common)

kodiyana piNikodu vikkik kakkik
     kUnpOn ...... thasadAkum

kudiluRa varumoru mikkac cithrak
     kONpUN ...... damaiyAthE

podivana parasama yaththuth thappip
     pOnthEn ...... thalaimElE

poruLathu peRa adi natpuc catRup
     pUNdAN ...... daruLvAyE

thudipada alakaikaL kaikkot tittuc
     sUzhnthAng ...... kudanAdath

thokuthoku thikuthiku thokkuth thikkuth
     thOnthAn ...... tharithALam

paditharu pathivrathai yoththac cuththap
     pAzhngkAn ...... thanilAdum

pazhayavar kumaraku Raththath thaikkup
     pAngAm ...... perumALE.

......... Meaning .........

kodiyana piNi ko(N)du vikkik kakkik kUn pOnthu asadu Akum: Being afflicted by terrible diseases, hick-up and vomiting, I developed a hunch-back and became destabilised mentally.

kudil uRa varum oru mikkac cithrak kON pUNdu amaiyAthE: I do not wish to undergo a funny physical deformation of the body.

podivana para samayaththuth thappip pOnthEn: I have somehow escaped from the din of other religious hecklings which are transient and destined to die away;

thalai mElE poruL athu peRa adi natpuc caRtup pUNdu ANdu aruLvAyE: upon my head, kindly place Your hallowed feet with a little compassion so that I could realise true knowledge!

thudi pada alakaikaL kaik kottittuc sUzhnthu Angu udan Ada: Against the noise of the beating hand-drums, the devils clapped their hands, gathered at the dancing ground and danced along with Him;

thoku thoku thiku thiku thokkuth thikkuth
     thOm thAm thari thALam padi tharu pathivrathai oththa:
the devoted consort, PArvathi, kept perfect pace with the meter of "thoku thoku thiku thiku thokkuth thikkuth thOm thAm thari";

suththap pAzhng kAn thanil Adum pazhayavar kumara: as the old Lord SivA danced on the holy cremation ground; You are the son of that SivA!

kuRath thaththaikkup pAngAm perumALE.: You are the consort of VaLLi, the damsel of the KuRavAs, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1078 kodiyana piNi - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]