திருப்புகழ் 1073 கலந்த மாதும்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1073 kalandhamAdhum  (common)
Thiruppugazh - 1073 kalandhamAdhum - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனந்த தானந் தந்தன தனதன ...... தனதான

......... பாடல் .........

கலந்த மாதுங் கண்களி யுறவரு ...... புதல்வோருங்

கலங்கி டாரென் றின்பமு றுலகிடை ...... கலிமேவி

உலந்த காயங் கொண்டுள முறுதுய ...... ருடன்மேவா

உகந்த பாதந் தந்துனை யுரைசெய ...... அருள்வாயே

மலர்ந்த பூவின் மங்கையை மருவரி ...... மருகோனே

மறஞ்செய் வார்தம் வஞ்சியை மருவிய ...... மணவாளா

சிலம்பி னோடுங் கிண்கிணி திசைதொறும் ...... ஒலிவீசச்

சிவந்த காலுந் தண்டையு மழகிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கலந்த மாதும் கண் களி உற வரு(ம்) புதல்வோரும் ... தான்
மனைவியாகக் கொண்டு இணைந்த பெண்மணியும், கண்கள்
மகிழ்ச்சி அடையும்படி ஓடி வருகின்ற குழந்தைகளும்,

கலங்கிடார் என்று இன்பம் உறு உலகிடை கலி மேவி ...
கலக்கம் கொள்ளாது வாழ்வார்கள் என்று எண்ணி, இன்பத்துடன்
பொருந்த வாழும் உலக வாழ்க்கையின் நடுவே துக்க நிலையான
வறுமையை அடைந்து,

உலந்த காயம் கொண்டு உளம் உறு துயருடன் மேவா ... தேய்ந்து
அழியும் இந்த உடலுடனும், மனத்தில் கொண்ட துயரத்துடனும்
இருக்கின்ற எனக்கு

உகந்த பாதம் தந்து உனை உரை செய அருள்வாயே ... நான்
மகிழ்ச்சி கொண்டு தியானிக்கும் உனது திருவடியைத் தந்து,
உன்னைப் புகழ்ந்து பாட எனக்கு அருள் செய்வாயாக.

மலர்ந்த பூவின் மங்கையை மருவு அரி மருகோனே ... மலர்ந்த
தாமரையில் உறையும் லக்ஷ்மியை அணைந்த திருமாலின் மருகனே,

மறம் செய்வார் தம் வஞ்சியை மருவிய மணவாளா ...
(மிருகங்களைக்) கொல்லும் தொழிலைச் செய்யும் வேடர்களுடைய
கொடிபோன்ற பெண்ணாகிய வள்ளியை மணந்த கணவனே,

சிலம்பினோடும் கிண்கிணி திசை தொறும் ஒலி வீச ...
சிலம்புடன் கிண்கிணியும் எல்லா திசைகளிலும் ஒலி முழங்க,

சிவந்த காலும் தண்டையும் அழகிய பெருமாளே. ... சிவந்த
திருவடியும் தண்டையும் அழகு விளங்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.184  pg 3.185 
 WIKI_urai Song number: 1076 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1073 - kalandha mAdhum (common)

kalantha mAthum kaNkaLi yuRavaru ...... puthalvOrum

kalangi dAren Rinpamu Rulakidai ...... kalimEvi

ulantha kAyam koNduLa muRuthuya ...... rudanmEvA

ukantha pAthan thanthunai yuraiseya ...... aruLvAyE

malarntha pUvin mangaiyai maruvari ...... marukOnE

maRanjcey vArtham vanjiyai maruviya ...... maNavALA

silampi nOdung kiNkiNi thisaithoRum ...... oliveesa

sivantha kAlum thaNdaiyu mazhakiya ...... perumALE.

......... Meaning .........

kalantha mAthum kaN kaLi uRa varu(m) puthalvOrum: The woman whom I married and the children running towards me brightening my eyes with delight

kalangidAr enRu inpam uRu ulakidai kali mEvi: would live for ever without any worries; so I thought, but later, in the midst of my happy life on this earth, poverty crept in;

ulantha kAyam koNdu uLam uRu thuyarudan mEvA: as I am left with this degenerating body and a mind full of misery,

ukantha pAtham thanthu unai urai seya aruLvAyE: kindly grant me Your cherished and hallowed feet, giving me the ability to sing songs praising Your glory!

malarntha pUvin mangaiyai maruvu ari marukOnE: You are the nephew of Lord VishNu who embraces Lakshmi seated on a fully-blossomed lotus!

maRam seyvAr tham vanjiyai maruviya maNavALA: You are the consort of VaLLi, the vanji (rattan reed) creeper-like damsel of the hunters who hound and kill (the animals)!

silampinOdum kiNkiNi thisai thoRum oli veesa: Against the background of lilting sounds all around of Your anklets and the stones embedded in them,

sivantha kAlum thaNdaiyum azhakiya perumALE.: You stand there elegantly with rosy feet, adorned with thaNdais around Your ankles, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1073 kalandha mAdhum - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]