திருப்புகழ் 1070 புரக்க வந்த  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1070 purakkavandha  (common)
Thiruppugazh - 1070 purakkavandha - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்த தந்தனம் தனத்த தந்தனம்
     தனத்த தந்தனம் ...... தனதான

......... பாடல் .........

புரக்க வந்தநங் குறக்க ரும்பைமென்
     புனத்தி லன்றுசென் ...... றுறவாடிப்

புடைத்த லங்க்ருதம் படைத்தெ ழுந்ததிண்
     புதுக்கு ரும்பைமென் ...... புயமீதே

செருக்க நெஞ்சகங் களிக்க அன்புடன்
     திளைக்கு நின்திறம் ...... புகலாதிந்

த்ரியக்க டஞ்சுமந் தலக்கண் மண்டிடுந்
     தியக்க மென்றொழிந் ...... திடுவேனோ

குரக்கி னங்கொணர்ந் தரக்கர் தண்டமுங்
     குவட்டி லங்கையுந் ...... துகளாகக்

கொதித்த கொண்டலுந் த்ரியக்ஷ ருங்கடங்
     கொதித்து மண்டுவெம் ...... பகையோடத்

துரக்கும் விம்பகிம் புரிப்ர சண்டசிந்
     துரத்த னும்பிறந் ...... திறவாத

சுகத்தி லன்பருஞ் செகத்ர யங்களுந்
     துதிக்கு மும்பர்தம் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

புரக்க வந்த நம் குறக் கரும்பை மென் புனத்தில் அன்று
சென்று உறவாடி
... நம்மை ஆண்டு காக்க வந்த, நமது குறவர் குலக்
கரும்பாகிய வள்ளியை அமைதி வாய்ந்த தினைப் புனத்துக்கு நீ அன்று
ஒரு நாள் சென்று பார்த்து, நட்புப் பேச்சுக்களைப் பேசி,

புடைத்து அலங்க்ருதம் படைத்து எழுந்த திண் புதுக்
குரும்பை மென் புய(ம்) மீதே
... புடைத்துப் பருத்து அலங்காரம்
விளங்க எழுந்துள்ளதும், வலிமையும் அற்புத எழிலும் வாய்ந்ததும், இளநீர்
போன்றதும் ஆகிய மார்பகத்தின் மீதும், மென்மையான தோள்கள் மீதும்,

செருக்க நெஞ்சகம் களிக்க அன்புடன் திளைக்கு(ம்)
நின் திறம் புகலாது
... காம மயக்கம் கொள்ளும்படி மனத்தில் மகிழ்ச்சி
பொங்க அன்புடன் இடைவிடாது தழுவிய உன்னுடைய மேன்மையான
குணத்தைச் சொல்லிப் புகழாமல்,

இந்திரியக் கடம் சுமந்து அலக்கண் மண்டிடும் தியக்கம் என்று
ஒழிந்திடுவேனோ
... ஐம்பொறிகளைக் கொண்ட உடலைச் சுமந்து,
துக்கம் நிரம்பும் கலக்கத்தை நான் எப்போது நீங்கி இருப்பேனோ?

குரக்கினம் கொணர்ந்து அரக்கர் தண்டமும் குவட்டு
இலங்கையும் துகளாகக் கொதித்த கொண்டலும் த்ரி
அக்ஷரும்
... குரங்கின் கூட்டங்களைத் தன்னுடன் கொண்டு வந்து
அசுரர்களுடைய ஆயுதங்களும், மலைகளைக் கொண்ட இலங்கையும்
பொடியாகும்படி கோபித்து எழுந்த மேக நிறம் கொண்ட திருமாலும்,
(சூரியன், சந்திரன், அக்கினி என்ற) மூன்று கண்களைக் கொண்ட
சிவபெருமானும்,

கடம் கொதித்து மண்டு வெம் பகை ஓடத் துரக்கும் விம்ப
கிம்புரி ப்ரசண்ட சிந்துரத்தனும்
... மத நீர் கொதிப்பு உற்று
நெருங்கி வந்த கொடிய பகைவர்களும் ஓடும்படி விரட்டுவதும், ஒளி
வாய்ந்ததும், பூண் உடையதும், வீரம் நிறைந்ததும் ஆன ஐராவதம்
என்னும் யானைக்குத் தலைவனுமாகிய இந்திரனும்,

பிறந்து இறவாத சுகத்தில் அன்பரும் செக த்ரயங்களும்
துதிக்கும் உம்பர் தம் பெருமாளே.
... என்றும் நிலைத்து நிற்கும்
பேற்றைப் பெற்றவர்களாய் நித்திய சுகத்தில் இருக்கும் அடியார்களும்,
மூன்று உலகங்களிலும் உள்ள அன்பர்கள் யாவரும் சேர்ந்து துதி
செய்து போற்றும் தேவர்கள் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.178  pg 3.179 
 WIKI_urai Song number: 1073 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1070 - purakka vantha (common)

purakka vanthanang kuRakka rumpaimen
     punaththi lanRusen ...... RuRavAdip

pudaiththa langrutham padaiththe zhunthathiN
     puthukku rumpaimen ...... puyameethE

serukka nenjakang kaLikka anpudan
     thiLaikku ninthiRam ...... pukalAthin

thriyakka danjuman thalakkaN maNdidun
     thiyakka menRozhin ...... thiduvEnO

kurakki nangkoNarn tharakkar thaNdamung
     kuvatti langaiyun ...... thukaLAkak

kothiththa koNdalun thriyaksha rumkadang
     kothiththu maNduvem ...... pakaiyOdath

thurakkum vimpakim puripra saNdasin
     thuraththa numpiRan ...... thiRavAtha

sukaththi lanparum sekathra yangaLun
     thuthikku mumpartham ...... perumALE.

......... Meaning .........

purakka vantha nam kuRak karumpai men punaththil anRu senRu uRavAdi: She came to win us over in order to protect us; She is our dear VaLLi, the sugarcane-like damsel of the KuRavAs; You went one day to the serene millet-field to see her and spoke to her in a friendly manner;

pudaiththu alangrutham padaiththu ezhuntha thiN puthuk kurumpai men puya(m) meethE: You fell for her bulging and bejewelled bosom that are strong and exquisitely beautiful, looking like tender coconuts, and for her smooth shoulders;

serukka nenjakam kaLikka anpudan thiLaikku(m) nin thiRam pukalAthu: and in a passionate trance, You happily hugged her, without releasing her and with overwhelming love; not praising Your great quality,

inthiriyak kadam sumanthu alakkaN maNdidum thiyakkam enRu ozhinthiduvEnO: I have been carrying the burden of this body consisting of five sensory organs, filled with perplexity and misery; when will I be able to get rid of that?

kurakkinam koNarnthu arakkar thaNdamum kuvattu ilangaiyum thukaLAkak kothiththa koNdalum thri aksharum: He brought along with him an army of monkeys and, in a rage, smashed the weapons of the demons and their mountainous country, Lanka, to pieces; He is Lord VishNu with the hue of black cloud; along with Him, Lord SivA, endowed with three eyes (the Sun, the Moon and Agni, the Fire),

kadam kothiththu maNdu vem pakai Odath thurakkum vimpa kimpuri prasaNda sinthuraththanum: and IndrA, the leader of the elephant AirAvadham that is bright and valorous, well-decorated with ornaments, and that gets wildly enraged and chases away evil enemies, with its saliva oozing;

piRanthu iRavAtha sukaththil anparum seka thrayangaLum thuthikkum umpar tham perumALE.: and Your devotees in eternal bliss having been granted the boon of immortality and the dear ones in the three worlds have all assembled to praise and worship You; You are the Lord of the celestials, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1070 purakka vandha - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]