திருப்புகழ் 1066 பணிகள் பணமும்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1066 paNigaLpaNamum  (common)
Thiruppugazh - 1066 paNigaLpaNamum - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனன தனன தனன
     தனன தனன ...... தனதான

......... பாடல் .........

பணிகள் பணமு மணிகொள் துகில்கள்
     பழைய அடிமை ...... யொடுமாதும்

பகரி லொருவர் வருக அரிய
     பயண மதனி ...... லுயிர்போகக்

குணமு மனமு முடைய கிளைஞர்
     குறுகி விறகி ...... லுடல்போடாக்

கொடுமை யிடுமு னடிமை யடிகள்
     குளிர மொழிவ ...... தருள்வாயே

இணையி லருணை பழநி கிழவ
     இளைய இறைவ ...... முருகோனே

எயினர் வயினின் முயலு மயிலை
     யிருகை தொழுது ...... புணர்மார்பா

அணியொ டமரர் பணிய அசுரர்
     அடைய மடிய ...... விடும்வேலா

அறிவு முரமு மறமு நிறமு
     மழகு முடைய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பணிகள் பணமும் அணி கொள் துகில்கள் பழைய
அடிமையொடு மாதும்
... அணிகலன்கள், பணம், அணியும்
ஆடைகள், பழகி வந்த வேலை ஆட்கள், (இவர்களோடு) மனைவியும்,

பகரில் ஒருவர் வருக அரிய பயணம் அதனில் உயிர் போக ...
சொல்லப் போனால், (இவர்களில்) ஒருவரும் கூட வருவதற்கு
முடியாததான (இறுதிப்) பயணத்தில் உயிர் பிரிய,

குணமும் மனமும் உடைய கிளைஞர் குறுகி விறகில் உடல்
போடாக் கொடுமை இடுமுன்
... நற்குணங்களும், நல்ல மனமும்
கொண்ட உறவினர் ஒன்று கூடி, விறகினிடையே இந்த உடலைப்
போட்டு தீயிடும் துயரமான செயலைச் செய்வதற்கு முன்பாக,

அடிமை அடிகள் குளிர மொழிவது அருள்வாயே ...
அடிமையாகிய நான் உனது திருவடியை என் உள்ளம் குளிர
வாழ்த்தித் துதிக்கும்படியான திறமையைத் தந்து அருள்வாயாக.

இணை இல் அருணை பழநி கிழவ இளைய இறைவ
முருகோனே
... நிகரில்லாத திருவண்ணாமலை, பழநி ஆகிய
தலங்களுக்கு உரியவனே, என்றும் இளமை வாய்ந்த இறைவனே,
முருகனே,

எயினர் வயினின் முயலு(ம்) மயிலை இரு கை தொழுது
புணர் மார்பா
... வேடர்கள் இடத்தே (தினை காக்கும் தொழிலில்)
முயன்றிருந்த மயில் போன்ற வள்ளியை இரண்டு கைகளையும்
கூப்பித் தொழுது, பின்பு தழுவிய திருமார்பனே,

அணியொடு அமரர் பணிய அசுரர் அடைய மடிய விடும்
வேலா
... வரிசையாக நின்று தேவர்கள் பணிந்து வணங்க, அசுரர்கள்
யாவரும் இறக்கும்படி வேலாயுதத்தை விடுவோனே,

அறிவும் உரமும் அறமும் நிறமும் அழகும் உடைய
பெருமாளே.
... அறிவு, வலிமை, தருமநெறி, ஒளி, அழகு இவை
உடைய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.172  pg 3.173 
 WIKI_urai Song number: 1069 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1066 - paNigaL paNamum (common)

paNikaL paNamu maNikoL thukilkaL
     pazhaiya adimai ...... yodumAthum

pakari loruvar varuka ariya
     payaNa mathani ...... luyirpOkak

kuNamu manamu mudaiya kiLainjar
     kuRuki viRaki ...... ludalpOdAk

kodumai yidumu nadimai yadikaL
     kuLira mozhiva ...... tharuLvAyE

iNaiyi laruNai pazhani kizhava
     iLaiya iRaiva ...... murukOnE

eyinar vayinin muyalu mayilai
     yirukai thozhuthu ...... puNarmArpA

aNiyo damarar paNiya asurar
     adaiya madiya ...... vidumvElA

aRivu muramu maRamu niRamu
     mazhaku mudaiya ...... perumALE.

......... Meaning .........

paNikaL paNamum aNi koL thukilkaL pazhaiya adimaiyodu mAthum: The jewellery, money, the attires one wears, seasoned servants and the wife,

pakaril oruvar varuka ariya payaNam athanil uyir pOka: - for that matter, none of the above - could accompany us in this (final) trip; as life departs,

kuNamum manamum udaiya kiLainjar kuRuki viRakil udal pOdAk kodumai idumun: well-meaning and good hearted relatives get together and decide to consign this body to flames by placing it between logs of firewood; before they resort to that grievous act,

adimai adikaL kuLira mozhivathu aruLvAyE: kindly bestow upon me, Your slave, the ability to extol, and prostrate at, Your hallowed feet to my heart's content!

iNai il aruNai pazhani kizhava iLaiya iRaiva murukOnE: You belong to the matchless holy places, namely ThiruvaNNAmalai and Pazhani, Oh Lord with eternal youth! Oh MurugA!

eyinar vayinin muyalu(m) mayilai iru kai thozhuthu puNar mArpA: She was engaged in the chore of standing guard for the millet-field that belonged to the hunters; You folded both Your hands and worshipped that peacock-like VaLLi and later hugged her with Your hallowed chest!

aNiyodu amarar paNiya asurar adaiya madiya vidum vElA: As the celestials lined up to worship You, the entire clan of demons was annihilated by the spear wielded by You, Oh Lord!

aRivum uramum aRamum niRamum azhakum udaiya perumALE.: You are full of Knowledge, strength, righteousness, radiance and beauty, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1066 paNigaL paNamum - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]