திருப்புகழ் 1063 மறலி போற்சில  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1063 maRalipORtsila  (common)
Thiruppugazh - 1063 maRalipORtsila - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தாத்தன தனன தாத்தன
     தானா தானா தானா தானா ...... தனதான

......... பாடல் .........

மறலி போற்சில நயன வேற்கொடு
     மாயா தோயா வேயார் தோளார் ...... மறையோதும்

வகையு மார்க்கமு மறமு மாய்த்திட
     வாறா ராயா தேபோ மாறா ...... திடதீர

விறலு மேற்பொலி அறிவு மாக்கமும்
     வேறாய் நீரே றாதோர் மேடாய் ...... வினையூடே

விழுவி னாற்களை யெழும தாற்பெரு
     வீரா பாராய் வீணே மேவா ...... தெனையாளாய்

மறலி சாய்த்தவ ரிறைப ராக்ரம
     மால்கா ணாதே மாதோ டேவாழ் ...... பவர்சேயே

மறுவி லாத்திரு வடிக ணாட்டொறும்
     வாயார் நாவால் மாறா தேயோ ...... தினர்வாழ்வே

குறவர் காற்புன அரிவை தோட்கன
     கோடார் மார்பா கூர்வே லாலே ...... அசுரேசர்

குலைய மாக்கட லதனி லோட்டிய
     கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மறலி போல் சில நயன வேல் கொடு ... யமனை ஒப்பதான
கண்கள் என்னும் வேலாயுதத்தால் (விலைமாதர் தாக்குவதாலே)

மாயா தோயா வேய் ஆர் தோளார் மறை ஓதும் வகையும்
மார்க்கமும் மறமும் மாய்த்திட வாறு ஆராயாதே
... காம மயக்கில்
மனம் முழுகி, மூங்கில் போன்ற இதமான தோள்களை உடைய
பெண்களைப் பற்றிய காம சாஸ்திரத்தைப் படிக்கும் குணத்தையும்,
அதிலேயே ஈடுபடம் மனப் போக்கையும், (அதனால் வரும்)
பாவத்தையும் போக்க வல்ல வழியை இன்னதென்று அறியாமல்,

போம் ஆறா திடம் தீரம் விறலும் மேல் பொலி அறிவும்
ஆக்கமும் வேறாய்
... போகின்ற (பழைய) வழியிலேயே நான் போய்,
மனோ திடமும், வலிமையும், வீரமும், மேம்பட்டு விளங்கும் அறிவும்,
செல்வமும் என்னை விட்டு விலகி,

நீர் ஏறாதே ஓர் மேடாய் வினை ஊடே விழுவினால் களை
எழும் அதால்
... நீர் ஏற முடியாத ஒரு மேடு எப்படியோ அப்படி என்
நிலை என் வினைகளுக்கு இடையே விழுவதால், (ஓயாது பிறப்பு
இறப்பு என்னும்) களைப்பு உண்டாவதால்,

பெரு வீரா பாராய் வீணே மேவாது எனை ஆளாய் ... பெரிய
வீரனே, என்னைக் கண் பார்த்து அருள்வாய், நான் வீணாக
இவ்வுலகில் காலம் கழிக்காமல் என்னை ஆண்டு அருள்வாயாக.

மறலி சாய்த்தவர் இறை பராக்ரம மால் காணாதே மாதோடே
வாழ்பவர் சேயே
... யமனை (காலால் உதைத்துச்) சாய்த்தவர்,
இறைவர், வீரம் பொருந்திய திருமாலாலும் காணப் படாதவராய்,
(தாய்) பார்வதியுடன் வாழ்பவரான சிவபெருமானின் குழந்தையே,

மறு இலா திருவடிகள் நாள் தோறும் வாயார் நாவால்
மாறாதே ஓதினர் வாழ்வே
... குற்றம் இல்லாத திருவடிகளை
தினமும் வாயார நாவால் தவறாமல் ஓதுபவர்களின் செல்வனே,

குறவர் கால் புன அரிவை தோள் கன கோடு ஆர் மார்பா ...
குறவர்களிடத்தே வளர்ந்த, தினைப் புனம் காத்த மாதாகிய வள்ளியின்
தோளும், பருத்த மலை போன்ற மார்பகங்களும் அணைந்த திருமார்பனே,

கூர் வேலாலே அசுரேசர் குலைய மா கடல் அதனில் ஓட்டிய
கோவே
... அசுரர்களின் தலைவர்களாகிய சூரன் முதலியோர்
அழிந்துபட, பெரிய கடலிடையே ஓட்டி விரட்டிய தலைவனே,

தேவே வேளே வானோர் பெருமாளே. ... தெய்வமே, செவ்வேளே,
தேவர்களின் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.166  pg 3.167 
 WIKI_urai Song number: 1066 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 1063 - maRali pORtsila (common)

maRali pORchila nayana vERkodu
     mAyA thOyA vEyAr thOLAr ...... maRaiyOthum

vakaiyu mArkkamu maRamu mAyththida
     vARA rAyA thEpO mARA ...... thidatheera

viRalu mERpoli aRivu mAkkamum
     vERAy neerE RAthOr mEdAy ...... vinaiyUdE

vizhuvi nARkaLai yezhuma thARperu
     veerA pArAy veeNE mEvA ...... thenaiyALAy

maRali sAyththava riRaipa rAkrama
     mAlkA NAthE mAthO dEvAzh ...... pavarsEyE

maRuvi lAththiru vadika NAttoRum
     vAyAr nAvAl mARA thEyO ...... thinarvAzhvE

kuRavar kARpuna arivai thOtkana
     kOdAr mArpA kUrvE lAlE ...... asurEsar

kulaiya mAkkada lathani lOttiya
     kOvE thEvE vELE vAnOr ...... perumALE.

......... Meaning .........

maRali pOl sila nayana vEl kodu: (As the whores attack) with spear-like eyes, comparable to the God of Death (Yaman),

mAyA thOyA vEy Ar thOLAr maRai Othum vakaiyum mArkkamum maRamum mAyththida vARu ArAyAthE: my mind sinks into a passionate delusion; without knowing how to get rid of my penchant for studying the erotic art about women with bamboo-like soft shoulders, to control my one-track mind and to eradicate the (resultant) sins,

pOm ARA thidam theeram viRalum mEl poli aRivum Akkamum vERAy: I carry on of my old path; my confidence, strength, valour, great intellect and wealth have all left me;

neer ERAthE Or mEdAy vinai UdE vizhuvinAl kaLai ezhum athAl: my condition, comparable to the raised ground up to which water never climbs, has fallen in the crack between my past deeds, weighed down by weariness (due to unending births and deaths); therefore,

peru veerA pArAy veeNE mEvAthu enai ALAy: Oh Great valorous One, kindly behold me with grace and take charge of me so that I do not waste my time away!

maRali sAyththavar iRai parAkrama mAl kANAthE mAthOdE vAzhpavar sEyE: He kicked down Yaman (with His foot); He is Lord Almighty beyond the comprehension of even the mighty Lord, VishNu; He lives with Mother PArvathi; You are the child of that Lord SivA!

maRu ilA thiruvadikaL nAL thORum vAyAr nAvAl mARAthE Othinar vAzhvE: You are the Treasure of all those devotees who say prayers enthusiastically everyday praising Your unblemished lotus feet!

kuRavar kAl puna arivai thOL kana kOdu Ar mArpA: You hugged with Your hallowed chest the shoulders and large mountain-like bosom of VaLLi, the damsel reared by the KuRavAs and the belle who guarded the millet field!

kUr vElAlE asurEsar kulaiya mA kadal athanil Ottiya kOvE: SUran, the leader of the demons, and others were all destroyed when You drove them deep into the large sea, Oh Lord!

thEvE vELE vAnOr perumALE.: Oh God Almighty, Oh reddish Lord, You are the leader of the celestials, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1063 maRali pORtsila - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]