திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1062 வருக வீட்டு எனும் (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1062 varugaveettuenum (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனன தாத்தன தனன தாத்தன தானா தானா தானா தானா ...... தனதான ......... பாடல் ......... வருக வீட்டெனும் விரகர் நேத்திரம் வாளோ வேலோ சேலோ மானோ ...... எனுமாதர் மனது போற்கரு கினகு வாற்குழல் வானோ கானோ மாயா மாயோன் ...... வடிவேயோ பருகு பாற்கடல் முருகு தேக்கிய பாலோ தேனோ பாகோ வானோ ...... ரமுதேயோ பவள வாய்ப்பனி மொழியெ னாக்கவி பாடா நாயே னீடே றாதே ...... யொழிவேனோ அருகு பார்ப்பதி யுருகி நோக்கவொ ரால்கீழ் வாழ்வார் வாழ்வே கோகோ ...... வெனஏகி அவுணர் கூப்பிட வுததி தீப்பட ஆகா சூரா போகா தேமீ ...... ளெனவோடிக் குருகு பேர்க்கிரி யுருவ வோச்சிய கூர்வே லாலே யோர்வா ளாலே ...... அமராடிக் குலிச பார்த்திப னுலகு காத்தருள் கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... வருக வீட்டு எனும் விரகர் நேத்திரம் வாளோ வேலோ சேலோ மானோ எனும் மாதர் ... எங்கள் வீட்டுக்கு வருக என்று அழைக்கும் சாமர்த்தியசாலிகளின் கண்கள் வாளோ, வேலாயுதமோ, சேல் மீனோ, மானோ என்னும்படியான விலைமாதர்களுடைய மனது போல் கருகின குவால் குழல் வானோ கானோ மாயா மாயோன் வடிவேயோ ... மனதைப் போன்று கருமை நிறமான அடர்ந்த கூந்தல் கரிய மேகமோ, காடோ, அழிவில்லாத திருமாலின் வடிவம் தானோ என்றும், பருகு பாற் கடல் முருகு தேக்கிய பாலோ தேனோ பாகோ வானோர் அமுதேயோ பவள வாய் பனி மொழி எனா ... உண்ணத்தக்க பாற்கடலில் உள்ளதும், நற்சுவை நிறைந்ததுமான பாலோ, தேனோ, வெல்லமோ, தேவர்களிடம் உள்ள அமுதம் தானோ பவளம் போல் சிவந்த வாயினின்று எழும் குளிர்ந்த பேச்சுக்கள் என்றும், கவி பாடா நாயேன் ஈடேறாதே ஒழிவேனோ ... பாட்டுக்களைப் பாடி அடி நாயாகிய நான் ஈடேறாமல் அழிந்து போவேனோ? அருகு பார்ப்பதி உருகி நோக்க ஒரு ஆல் கீழ் வாழ்வார் வாழ்வே ... அருகில் இருந்து பார்வதி மனம் கசிந்து உருகிக் கருதி நோக்க, ஒரு கல்லால மரத்தின் கீழே வீற்றிருப்பவராகிய சிவபிரானின் செல்வமே, கோகோ என ஏகி அவுணர் கூப்பிட உததி தீப் பட ... கோகோ என்று அசுரர்கள் அலறும்படி (போர்க்களத்துக்குச்) சென்று, அவர்கள் அலறிக் கூச்சலிடவும், கடல் தீப்பட்டு எரியவும், ஆகா சூரா போகாதே மீள் என ஓடி குருகு பேர்க் கிரி உருவ ஓச்சிய கூர் வேலாலே ஓர் வாளாலே அமர் ஆடி ... ஹா ஹா சூரனே, போகாதே, இப்படி மீண்டும் வா என்று அவன் பின் ஓடி, கிரெளஞ்சம் என்னும் பேரைக் கொண்ட மலையை ஊடுருவும்படி செலுத்திய கூரிய வேலாலும், ஒப்பற்ற வாளாலும் போர் செய்து, குலிச பார்த்திபன் உலகு காத்து அருள் கோவே ... வஜ்ராயுதம் ஏந்திய அரசனாகிய இந்திரனுடைய பொன்னுலகைக் காத்து அருளிய தலைவனே, தேவே வேளே வானோர் பெருமாளே. ... தேவனே, முருக வேளே, தேவர்களின் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.164 pg 3.165 WIKI_urai Song number: 1065 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
Song 1062 - varuga veettu enum (common) varuka veettenum virakar nEththiram vALO vElO sElO mAnO ...... enumAthar manathu pORkaru kinaku vARkuzhal vAnO kAnO mAyA mAyOn ...... vadivEyO paruku pARkadal muruku thEkkiya pAlO thEnO pAkO vAnO ...... ramuthEyO pavaLa vAyppani mozhiye nAkkavi pAdA nAyE needE RAthE ...... yozhivEnO aruku pArppathi yuruki nOkkavo rAlkeezh vAzhvAr vAzhvE kOkO ...... venaEki avuNar kUppida vuthathi theeppada AkA cUrA pOkA thEmee ...... LenavOdik kuruku pErkkiri yuruva vOcchiya kUrvE lAlE yOrvA LAlE ...... amarAdik kulisa pArththipa nulaku kAththaruL kOvE thEvE vELE vAnOr ...... perumALE. ......... Meaning ......... varuka veettu enum virakar nEththiram vALO vElO sElO mAnO enum mAthar: "Are the eyes of those scheming whores who invite people to their houses comparable to the sword, the spear, the sEl fish or the deer? manathu pOl karukina kuvAl kuzhal vAnO kAnO mAyA mAyOn vadivEyO: Is their dense hair, as black as their heart, comparable to the dark cloud, the forest or the immortal dark form of Lord VishNu Himself? paruku pAR kadal muruku thEkkiya pAlO thEnO pAkO vAnOr amuthEyO pavaLa vAy pani mozhi enA: Are the cool words spoken from their coral-like mouth comparable to the delectable and tasty milk from the milky ocean, or honey, or jaggery or the very nectar possessed by the celestials?" - so on and so forth, kavi pAdA nAyEn eedERAthE ozhivEnO: I, the lowly dog, have been composing several songs and going down the drain; am I to perish like this without salvation? aruku pArppathi uruki nOkka oru Al keezh vAzhvAr vAzhvE: He sits under a stony banyan tree being admired with a melting heart by PArvathi DEvi who sits beside Him; He is Lord SivA, and You are His Treasure, Oh Lord! kOkO ena Eki avuNar kUppida uthathi theep pada: The demons screamed raising a hue and cry as You went charging (into the battlefield); the sea caught fire and was in flames; AkA cUrA pOkAthE meeL ena Odi kuruku pErk kiri uruva Occhiya kUr vElAlE Or vALAlE amar Adi: chasing the demon SUran, You shouted "Hey, Hey, SUrA, do not run away; come back here"; the mountain named Krouncha was pierced by Your sharp spear; and You fought with Your matchless sword; kulisa pArththipan ulaku kAththu aruL kOvE: and the golden celestial land of King IndrA, who wields the mace called vajra, was protected by You, Oh Leader! thEvE vELE vAnOr perumALE.: Oh Lord MurugA! You are the Lord of the DEvAs, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |