திருப்புகழ் 1060 பருதியாய்ப் பனி  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1060 parudhiyAippani  (common)
Thiruppugazh - 1060 parudhiyAippani - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தாத்தன தனன தாத்தன
     தானா தானா தானா தானா ...... தனதான

......... பாடல் .........

பருதி யாய்ப்பனி மதிய மாய்ப்படர்
     பாராய் வானாய் நீர்தீ காலா ...... யுடுசாலம்

பலவு மாய்ப்பல கிழமை யாய்ப் பதி
     னாலா றேழா மேனா ளாயே ...... ழுலகாகிச்

சுருதி யாய்ச்சுரு திகளின் மேற்சுட
     ராய்வே தாவாய் மாலாய் மேலே ...... சிவமான

தொலைவி லாப்பொரு ளிருள்பு காக்கழல்
     சூடா நாடா ஈடே றாதே ...... சுழல்வேனோ

திருத ராட்டிர னுதவு நூற்றுவர்
     சேணா டாள்வா னாளோர் மூவா ...... றினில்வீழத்

திலக பார்த்தனு முலகு காத்தருள்
     சீரா மாறே தேரூர் கோமான் ...... மருகோனே

குருதி வேற்கர நிருத ராக்ஷத
     கோபா நீபா கூதா ளாமா ...... மயில்வீரா

குலிச பார்த்திப னுலகு காத்தருள்
     கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பருதியாய்ப் பனி மதியமாய்ப் படர் பாராய் ... சூரியனாகி,
குளிர்ந்த சந்திரனாகி, பரந்த பூமியாகி,

வானாய் நீர்தீ காலாய் உடுசாலம் பலவு மாய் ... ஆகாயமாகி,
நீராகி, நெருப்பாகி, காற்றாகி, விந்தையான நக்ஷத்திரங்களாகி, மற்றும்
பலவுமாகி,

பல கிழமையாய்ப் பதினால் ஆறேழா மேல் நாளாய் ... ஞாயிறு
முதலிய பல கிழமைகளுமாகி, 14+6+7 ஆகிய 27 சிறந்த
நக்ஷத்திரங்களாகி,

ஏழுலகாகிச் சுருதியாய்ச் சுருதிகளின் மேற்சுடராய் ... ஏழு
உலகங்களாகி, வேதமாகி, வேதங்களுக்கு மேற்பட்ட ஒளிப் பொருளாகி,

வேதாவாய் மாலாய் மேலே சிவமான ... பிரமனாகி, திருமாலாகி,
இவர்களுக்கு மேற்பட்ட மங்கலப் பொருளானதும்,

தொலைவிலாப் பொருள் இருள்புகாக்கழல் ... அழிவு என்பதே
இல்லாததான பரம்பொருளின், அஞ்ஞான இருள் என்பதே புகமுடியாத
அந்தத் திருவடியை

சூடா நாடா ஈடேறாதே சுழல்வேனோ ... முடிமேற் சூடாமலும்,
நாடாமலும் வாழ்வு ஈடேறாமல் வீணாகத் திரிவேனோ?

திருத ராட்டிரன் உதவு நூற்றுவர் ... திருதராஷ்டிரன் பெற்ற
துரியோதனாதி நூறு பேரும்

சேண் நாடாள்வான் நாளோர் மூவாறினில் வீழ ... வீரசுவர்க்க
நாட்டை ஆளும்படியாக பதினெட்டே நாட்களில் போர்க்களத்தில்
மாண்டு விழவும்,

திலக பார்த்தனும் உலகு காத்தருள் ... சிறந்த அர்ச்சுனனும்
உலகை ஆண்டு காத்தருளுகின்ற

சீரா மாறே தேரூர் கோமான் மருகோனே ... சீருடன் வாழுமாறு
அவனது தேரில் சாரதியாக இருந்து செலுத்தின பெருமான் திருமாலின்
மருகனே,

குருதி வேற்கர ... அசுரர்களின் ரத்தத்தில் தோய்ந்த வேலைக்
கரத்திலே ஏந்தியவனே,

நிருத ராக்ஷத கோபா ... அரக்கர்களாம் ராட்சதர்களின் மீது கோபம்
கொண்டவனே,

நீபா கூதாளா மா மயில்வீரா ... கடப்ப மாலையையும், கூதளப்பூ
மாலையையும் அணிந்தவனே, அழகிய மயில் வீரனே,

குலிச பார்த்திபன் உலகு காத்தருள் ... வஜ்ராயுதத்தை ஏந்திய
அரசன் இந்திரனின் தேவலோகத்தைக் காத்தருளின

கோவே தேவே வேளே வானோர் பெருமாளே. ... தலைவனே,
தேவனே, முருகவேளே, தேவர்களின் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.160  pg 3.161  pg 3.162  pg 3.163 
 WIKI_urai Song number: 1063 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1060 - parudhiyAip pani (common)

paruthi yAyppani mathiya mAyppadar
     pArAy vAnAy neerthee kAlA ...... yuducAlam

palavu mAyppala kizhamai yAyp pathi
     nAlA REzhA mEnA LAyE ...... zhulakAki

curuthi yAyccuru thikaLin mERcuda
     rAyvE thAvAy mAlAy mElE ...... sivamAna

tholaivi lApporu LiruLpu kAkkazhal
     chUdA nAdA eedE RAthE ...... suzhalvEnO

thirutha rAttira nuthavu nUtRuvar
     sENA dALvA nALOr mUvA ...... Rinilveezhath

thilaka pArththanu mulaku kAththaruL
     seerA mARE thErUr kOmAn ...... marukOnE

kuruthi vERkara nirutha rAkshatha
     kOpA neepA kUthA LAmA ...... mayilveerA

kulija pArththipa nulaku kAththaruL
     kOvE thEvE vELE vAnOr ...... perumALE.

......... Meaning .........

paruthiyAyp pani mathiyamAyp padar pArAy: It is the sun; It is the cool moon; It is the wide earth;

vAnAy neerthee kAlAy uducAlam palavu mAy: It is the sky, the water, the fire, the air, the wonderful stars and many other things;

pala kizhamaiyAy: It takes the form of all the days of the week (beginning with Sunday);

pathinAlA REzhA mEnA LAyEzhulakAki: It comes as the distinguished stars, numbering 27 (14+6+7); It pervades as the seven worlds;

curuthi yAyccuru thikaLin mERcudarAy: It is the VedA (scripture); It is the light that shines on top of the VEdAs;

vE thAvAy mAlAy mElE sivamAna: It is BrahmA; It is Vishnu; It is the auspicious substance above all of them;

tholaivi lApporu LiruLpu kAkkazhal: It is an immortal object, unaffected by the darkness of ignorance; It is Your holy feet;

chUdA nAdA eedE RAthE suzhalvEnO: why should I wander about without wearing Your feet on my head and seeking them feet and lead an unfulfilled life?

thirutha rAttira nuthavu nUtRuvar: The hundred sons (starting from Duryodhana) sired by DhirutharAshtran

sENA dALvA nALOr mUvA Rinilveezhath: fell down dead and were sent to rule the heaven in a war that lasted eighteen days;

thilaka pArththanu mulaku kAththaruL seerA mARE: the famous PaNdava, Arjunan, was given the honour of ruling the world and protecting it

thErUr kOmAn marukOnE: by Krishna, the King, who drove his chariot; and You are that Krishna's nephew!

kuruthi vERkara: You hold in Your hand the Spear that has bathed in the blood of the enemies!

nirutha rAkshatha kOpA: You showed Your rage against the demons and rAkshasAs!

neepA kUthA LAmA mayilveerA: You wear the garlands made of kadappa and kUthALa flowers! You mount the peacock, Oh valorous One!

kulija pArththipa nulaku kAththaruL: You protect the world ruled by IndrA who holds the weapon, Vajra!

kOvE thEvE vELE vAnOr perumALE.: Oh Lord, You are God MurugavEL and the Lord of the celestials, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1060 parudhiyAip pani - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]