திருப்புகழ் 1057 குடரும் நீர் கொழு  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1057 kudarumneerkozhu  (common)
Thiruppugazh - 1057 kudarumneerkozhu - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தாத்தன தனன தாத்தன
     தனன தாத்தன ...... தந்ததான

......... பாடல் .........

குடரு நீர்க்கொழு மலமு மீத்தொரு
     குறைவி லாப்பல ...... என்பினாலுங்

கொடிய நோய்க்கிட மெனவு நாட்டிய
     குடிலி லேற்றுயி ...... ரென்றுகூறும்

வடிவி லாப்புல மதனை நாட்டிடு
     மறலி யாட்பொர ...... வந்திடாமுன்

மதியு மூத்துன தடிக ளேத்திட
     மறுவி லாப்பொருள் ...... தந்திடாதோ

கடிய காட்டக முறையும் வேட்டுவர்
     கருதொ ணாக்கணி ...... வெங்கையாகிக்

கழைசெய் தோட்குற மயிலை வேட்டுயர்
     களவி னாற்புணர் ...... கந்தவேளே

முடுகி மேற்பொரு மசுர ரார்ப்பெழ
     முடிய வேற்கொடு ...... வென்றவீரா

முடிவி லாத்திரு வடிவை நோக்கிய
     முதிய மூர்த்திகள் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

குடரும் நீர் கொழு மலமும் ஈந்து ஒரு குறைவு இலாப் பல
என்பினாலும்
... குடலையும், நீரையும், கொழுப்பையும், மலத்தையும்
வைத்து, ஒரு குறைவும் இல்லாதனவுமான பல எலும்புகளாலும்

கொடிய நோய்க்கு இடம் எனவு(ம்) நாட்டிய குடிலில் ஏற்று
உயிர் என்று கூறும்
... பொல்லாத நோய்களுக்கு இருப்பிடம்
என்னும்படி ஏற்படுத்தப்பட்ட குடிசையாகிய உடலில் ஏற்றப்பட்ட உயிர்
என்று சொல்லப்படும்

வடிவு இலாப் புலம் அதனை நா(ட்)டிடு மறலி ஆள் பொர
வந்திடா முன்
... உருவம் இல்லாததான ஒரு நுண்மையான பொருளை
நாடி வருகின்ற யமதூதர்கள் போரிட வருவதற்கு முன்பு,

மதியும் மூத்து உனது அடிகள் ஏத்திட மறுவு இலாப் பொருள்
தந்திடாதோ
... (என்) அறிவும் முதிர்ச்சி அடைந்து உனது
திருவடிகளை நான் போற்றிப் பணிய, குற்றமில்லாத உண்மைப்
பொருளை எனக்கு உதவி செய்யலாகாதோ?

கடிய காட்டகம் உறையும் வேட்டுவர் கருத ஒணா கணி
வெங்கை ஆகி
... கொடிய காட்டிடையே வாசம் செய்யும் வேடர்களுக்கு
(இந்த விதமாக வந்தது என்று) எண்ண முடியாதபடி, கணி என்று
சொல்லப்படும் வேங்கை மரமாகி,

கழை செய் தோள் குற மயிலை வேட்டு உயர் களவினால்
புணர் கந்த வேளே
... மூங்கில் போன்ற தோள்களை உடைய
குறக்குல மயிலாகிய வள்ளியை விரும்பி, சிறந்த களவியல் வழியாக
அணைந்த கந்த வேளே,

முடுகி மேல் பொரும் அசுரர் ஆர்ப்பு எழ முடிய வேல் கொடு
வென்ற வீரா
... விரைவில் எதிர் வந்து மேல் விழுந்து சண்டை செய்யும்
அசுரர்களின் பேரொலி எழ, அவர்கள் யாவரையும் வேல் கொண்டு வெற்றி
கொண்ட வீரனே,

முடிவு இலாத் திருவடிவை நோக்கிய முதிய மூர்த்திகள்
தம்பிரானே.
... முடிவே இல்லாத உன் விசுவ ரூபத்தை தரிசித்த பழங்
கடவுளர்களாகிய அயன், அரி, பிரமன் என்னும் மூவர்க்கும் தம்பிரானே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.154  pg 3.155  pg 3.156  pg 3.157 
 WIKI_urai Song number: 1060 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1057 - kudarum neer kozhu (common)

kudaru neerkkozhu malamu meeththoru
     kuRaivi lAppala ...... enpinAlum

kodiya nOykkida menavu nAttiya
     kudili lEtRuyi ...... renRukURum

vadivi lAppula mathanai nAttidu
     maRali yAtpora ...... vanthidAmun

mathiyu mUththuna thadika LEththida
     maRuvi lApporuL ...... thanthidAthO

kadiya kAttaka muRaiyum vEttuvar
     karutho NAkkaNi ...... vengaiyAkik

kazhaisey thOtkuRa mayilai vEttuyar
     kaLavi nARpuNar ...... kanthavELE

muduki mERporu masura rArppezha
     mudiya vERkodu ...... venRaveerA

mudivi lAththiru vadivai nOkkiya
     muthiya mUrththikaL ...... thambirAnE.

......... Meaning .........

kudarum neer kozhu malamum eenthu oru kuRaivu ilAp pala enpinAlum: Assembling the intestines, water, fat, and faeces along with many impeccable bones,

kodiya nOykku idam enavu(m) nAttiya kudilil EtRu uyir enRu kURum: this cottage of body is built to be a seat of terrible diseases; upon it is laden what is called "life",

vadivu ilAp pulam athanai nA(t)tidu maRali AL pora vanthidA mun: which is a shapeless minute thing sought after by the messengers of Yaman (the God of Death); before they come fighting to grab that life,

mathiyum mUththu unathu adikaL Eththida maRuvu ilAp poruL thanthidAthO: will my mind mature for me to prostrate at Your hallowed feet and will You not kindly grant me the blemishless true knowledge?

kadiya kAttakam uRaiyum vEttuvar karutha oNA kaNi vengai Aki: The hunters who lived in the dreadful jungle could not make out how the neem tree came there as You came in the disguise of that tree;

kazhai sey thOL kuRa mayilai vEttu uyar kaLavinAl puNar kantha vELE: You loved VaLLi, with soft bamboo-like shoulders, who was the peacock-like damsel of the KuRavAs and embraced her through a surreptitious pursuit, Oh Lord KandhA!

muduki mEl porum asurar Arppu ezha mudiya vEl kodu venRa veerA: The demons came swiftly and confronted You aggressively in the war, making a loud noise, and You conquered them all by wielding Your spear, Oh valorous One!

mudivu ilAth thiruvadivai nOkkiya muthiya mUrththikaL thambirAnE.: You gave the vision of Your universal and gigantic form to the old trinity of BrahmA, VishNu and SivA, and You are the Lord of all the three, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1057 kudarum neer kozhu - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]