திருப்புகழ் 1039 சாவா மூவா வேளே  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1039 sAvAmUvAvELE  (common)
Thiruppugazh - 1039 sAvAmUvAvELE - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

mp3
 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானா தானா தானா தானா
     தானா தானத் ...... தனதான

......... பாடல் .........

சாவா மூவா வேளே போல்வாய்
     தாளா வேனுக் ...... கருள்கூருந்

தாதா வேஞா தாவே கோவே
     சார்பா னார்கட் ...... குயிர்போல்வாய்

ஏவால் மாலே போல்வாய் காரே
     போல்வா யீதற் ...... கெனையாள்கொண்

டேயா பாடா வாழ்வோர் பாலே
     யான்வீ ணேகத் ...... திடலாமோ

பாவா நாவாய் வாணீ சார்வார்
     பாரா வாரத் ...... துரகேசப்

பாய்மீ தேசாய் வார்கா ணாதே
     பாதா ளாழத் ...... துறுபாதச்

சேவா மாவூர் கோமான் வாழ்வே
     சீமா னேசெச் ...... சையமார்பா

சேயே வேளே பூவே கோவே
     தேவே தேவப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சாவா மூவா வேளே போல்வாய் ... சாதல் இல்லாதவனும், மூத்தல்
இல்லாதவனும், மன்மதனைப் போல் என்றும் இளையவனாகவும்
விளங்குவாய்,

தாள் ஆவேனுக்கு அருள் கூரும் தாதாவே ஞாதாவே
கோவே
... உனது காலின் கீழ்ப்பட்ட எனக்கு அருள் சுரக்கும்
கொடையாளியே, அறிவு மிக்கவனே, தலைவனே,

சார்பு ஆனார்கட்கு உயிர் போல்வாய் ... உன்னைச் சார்ந்து
நிற்பவர்களுக்கு உயிர் போல் விளங்குபவனே,

ஏவால் மாலே போல்வாய் காரே போல்வாய் ஈதற்கு எனை
ஆள் கொண்டு
... பாணத்தைச் செலுத்துவதில் திருமாலையே நீ
நிகர்ப்பாய், என்னை ஆண்டு கொண்டு எனக்குக் கொடுக்கும் திறத்தில்
மேகத்துக்கு ஒப்பாவாய் (எனக் கூறி)

ஏயா பாடா வாழ்வோர் பாலே யான் வீணே கத்திடலாமோ ...
செல்வர்களைப் பொருந்தி அடைந்து, இத்தகைய பாடல்களைக் கேட்டு
வாழ்தலே குறிக்கோளாக இருப்பவர்களிடம், நானும் வீணாகக்
கூச்சலிடுதல் நன்றோ?

பாவா நாவாய் வாணீ சார்வார் ... பாடல்களாக நாவிடத்தே
பொருந்தும் சரஸ்வதியைச் சார்ந்துள்ள பிரமனும்,

பாராவாரத்து உரகேச பாய் மீதே சாய்வார் காணாதே ...
பாற்கடலில் நாகராஜனாகிய ஆதிசேஷன் என்ற படுக்கை மீது துயில்
கொள்ளும் திருமாலும் தம்மைக் காண முடியாதபடி,

பாதாள ஆழத்து உறு பாத சே ஆம் மா ஊர் கோமான்
வாழ்வே
... பாதாள ஆழத்தில் உற்ற திருவடியை உடையவரும்,
ரிஷபமாகிய நந்தியை வாகனமாகக் கொண்டு செலுத்தும் அரசருமாகிய,
சிவபிரான் பெற்ற செல்வமே,

சீமானே செச்சைய மார்பா ... செல்வப் பிரபுவே, வெட்சி மாலை
அணிந்த மார்பனே,

சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் பெருமாளே. ...
சிவகுமாரனே, செவ்வேளே, அழகனே, தலைவனே, தேவர்களின்
பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.118  pg 3.119 
 WIKI_urai Song number: 1042 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1039 - sAvA mUvA vELE (common)

sAvA mUvA vELE pOlvAy
     thALA vEnuk ...... karuLkUrum

thAthA vEnjA thAvE kOvE
     sArpA nArkat ...... kuyirpOlvAy

EvAl mAlE pOlvAy kArE
     pOlvA yeethaR ...... kenaiyALkoN

dEyA pAdA vAzhvOr pAlE
     yAnvee NEkath ...... thidalAmO

pAvA nAvAy vANee sArvAr
     pArA vArath ...... thurakEsap

pAymee thEsAy vArkA NAthE
     pAthA LAzhath ...... thuRupAtha

sEvA mAvUr kOmAn vAzhvE
     seemA nEcec ...... caiyamArpA

sEyE vELE pUvE kOvE
     thEvE thEvap ...... perumALE.

......... Meaning .........

sAvA mUvA vELE pOlvAy: "You are immortal! You are beyond ageing and are ever youthful! You are like Manmathan (God of Love)!

thAL AvEnukku aruL kUrum thAthAvE njAthAvE kOvE: You are the great benefactor, gracious and compassionate to the lowly me prostrating at your feet! You are the most learned, Oh master!

sArpu AnArkatku uyir pOlvAy: You are like the life for all those depending on you!

EvAl mAlE pOlvAy: In archery, You are like Lord VishNu!

kArE pOlvAy eethaRku enai AL koNdu: In protecting me and giving alms, You are like the dark showering cloud!" - with such words of adulation,

EyA pAdA vAzhvOr pAlE yAn veeNE kaththidalAmO: I approached the rich people, whose mission in life was to listen to such flattering songs; I simply wasted my lungs. Was it worthwhile?

pAvA nAvAy vANee sArvAr: She is Saraswathi who is ensconced on the tongues that sing poems; Her consort is BrahmA;

pArAvAraththu urakEsa pAy meethE sAyvAr kANAthE: on the milky ocean, over the King of serpents, AdhisEshan, serving as the coiled-bed, He reclines; He is Lord VishNu; inaccessible to both of them (BrahmA and VishNu),

pAthALa Azhaththu uRu pAtha sE Am mA Ur kOmAn vAzhvE: He held His feet in the deepest part of the PAthaLA (the lowest of the seven lower nether-worlds); He mounts and drives His vehicle, Nandi, the sacred bull; He is the great Lord SivA, and You are His Treasure!

seemAnE ceccaiya mArpA: Oh rich and noble Lord! You wear the garland of vetchi flowers on Your chest!

sEyE vELE pUvE kOvE thEvE thEvap perumALE.: You are the son of that Lord SivA! You are the reddish God of Love! You are the handsome king! Oh Lord, You are the God of all the celestials, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

mp3
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1039 sAvA mUvA vELE - common


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]