திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1037 வாதந் தலைவலி (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1037 vAdhanthalaivali (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தானந் தனதன தானந் தனதன தானந் தனதன ...... தனதான ......... பாடல் ......... வாதந் தலைவலி சூலம் பெருவயி றாகும் பிணியிவை ...... யணுகாதே மாயம் பொதிதரு காயந் தனின்மிசை வாழுங் கருவழி ...... மருவாதே ஓதம் பெறுகடல் மோதுந் திரையது போலும் பிறவியி ...... லுழலாதே ஓதும் பலஅடி யாருங் கதிபெற யானுன் கழலிணை ...... பெறுவேனோ கீதம் புகழிசை நாதங் கனிவொடு வேதங் கிளர்தர ...... மொழிவார்தம் கேடின் பெருவலி மாளும் படியவ ரோடுங் கெழுமுத ...... லுடையோனே வேதந் தொழுதிரு மாலும் பிரமனு மேவும் பதமுடை ...... விறல்வீரா மேல்வந் தெதிர்பொரு சூரன் பொடிபட வேல்கொண் டமர்செய்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... வாதம் தலை வலி சூலம் பெரு வயிறு ... வாத சம்பந்தமான நோய்கள், தலைவலி, சூலை நோய், மகோதரம் என்ற வயிற்றில் நீர் தேக்கம், ஆகும் பிணி இவை அணுகாதே ... ஆகிய நோய்களாகிய இவை ஒன்றும் என்னை அணுகாமலும், மாயம் பொதி தரு காயம் தனின் மிசை வாழும் கரு வழி மருவாதே ... மாயை நிரம்பி உள்ள உடல் கொண்டு வாழும்படி கருவின் வழியில் மீண்டும் என்னைச் சேர்க்காமலும், ஓதம் பெறு கடல் மோதும் திரை அதுபோலும் பிறவியில் உழலாதே ... வெள்ளமாய் நிறைந்து நிற்கும் கடலில் மேலும் மேலும் வீசுகின்ற அலைகள் போல் பல பிறப்புக்களில் நான் அலைச்சல் உறாமல், ஓதும் பலஅடியாருங் கதிபெற ... உன் திருப்புகழை ஓதும் பல அடியார்களும் நற்கதி அடையவும், யான் உன் கழல் இணை பெறுவேனோ ... நான் உனது இரண்டு திருவடிகளையும் பெறுவேனோ? கீதம் புகழ் இசை நாதம் கனிவோடு ... இசை இன்பமும், உன் புகழைச் சொல்லும் ஓசை இன்பமும், பக்தியோடு வேதம் கிளர் தர மொழிவார் தம் ... வேத வாக்கியங்களை நன்கு விளங்கும்படி ஓதுபவர்களுடைய கேடின் பெரு வலி மாளும் படி அவரோடும் கெழுமுதல் உடையோனே ... கேட்டினை விளைவிக்கும் ஊழ்வினையின் திண்மை அவர்களைப் பீடிக்காது ஒழியும்படி அவர்களோடு எப்போதும் பொருந்தி உடனிருந்து காக்கும் திருவருளை உடையவனே, வேதம் தொழு திரு மாலும் பிரமனும் ... வேதங்கள் தொழுகின்ற திருமாலும், பிரமனும் மேவும் பதம் உடை விறல் வீரா ... விரும்பிப் போற்றும் திருவடிகளை உடைய வெற்றி வீரனே, மேல் வந்து எதிர்பொரு சூரன் பொடிபட ... மேலெழுந்து வந்து போர் செய்த சூரன் பொடியாகும்படி, வேல் கொண்டு அமர்செய்த பெருமாளே. ... வேலாயுதத்தைக் கொண்டு சண்டை செய்த பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.114 pg 3.115 pg 3.116 pg 3.117 WIKI_urai Song number: 1040 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
Song 1037 - vAdhan thalaivali (common) vAthan thalaivali cUlam peruvayi RAkum piNiyivai ...... yaNukAthE mAyam pothitharu kAyan thaninmisai vAzhung karuvazhi ...... maruvAthE Otham peRukadal mOthum thiraiyathu pOlum piRaviyi ...... luzhalAthE Othum pala adi yArung kathipeRa yAnun kazhaliNai ...... peRuvEnO keetham pukazhisai nAthang kanivodu vEthang kiLarthara ...... mozhivArtham kEdin peruvali mALum padiyava rOdung kezhumutha ...... ludaiyOnE vEtham thozhuthiru mAlum piramanu mEvum pathamudai ...... viRalveerA mElvan thethirporu cUran podipada vElkoN damarseytha ...... perumALE. ......... Meaning ......... vAtham thalai vali cUlam peru vayiRu: Diseases caused by rheumatism, head ache, stomach ache, edema in the stomach (known as mahOdharam) Akum piNi ivai aNukAthE: and such ailments should not afflict me; mAyam pothi tharu kAyam thanin misai vAzhum karu vazhi maruvAthE: I do not want to be sent again to another womb by which I assume a different body filled up with delusion; Otham peRu kadal mOthum thirai athupOlum piRaviyil uzhalAthE: like the waves lashing again and again in the vast expanse of the sea, I do not want to be ravaged by repeated births; Othum pala adiyArung kathipeRa: in order that the devotees who praise Your glory are liberated, yAn un kazhal iNai peRuvEnO: will You bless me with Your two hallowed feet? keetham pukazh isai nAtham kanivOdu: With melodious music at a divine pitch and with complete devotion, vEtham kiLar thara mozhivAr: Your devotees chant vedic hymns with absolute clarity; tham kEdin peru vali mALum padi avarOdum kezhumuthal udaiyOnE: they are spared the impact of the afflicting destiny because You are always by their side protecting them with utmost compassion, Oh Lord! vEtham thozhu thiru mAlum piramanum: Lord Vishnu and BrahmA who are praised by the holy scriptures mEvum patham udai viRal veerA: prostrate at Your feet, Oh Victorious Warrior! mEl vanthu ethirporu cUran podipada: The aggressive and confronting demon SUran was smashed to pieces vEl koNdu amarseytha perumALE.: when You engaged in battle wielding Your Spear, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |