திருப்புகழ் 1031 காதில் ஓலை  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1031 kAdhilOlai  (common)
Thiruppugazh - 1031 kAdhilOlai - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தான தனத்தம் தான தான தனத்தம்
     தான தான தனத்தம் ...... தனதான

......... பாடல் .........

காதி லோலை கிழிக்குங் காம பாண விழிக்குங்
     கான யாழின் மொழிக்கும் ...... பொதுமாதர்

காணொ ணாத இடைக்கும் பூணு லாவு முலைக்குங்
     காதில் நீடு குழைக்கும் ...... புதிதாய

கோதி லாத கருப்பஞ் சாறு போல ருசிக்குங்
     கோவை வாய முதுக்குந் ...... தணியாமல்

கூரு வேனொ ருவர்க்குந் தேடொ ணாத தொரர்த்தங்
     கூடு மாறொ ருசற்றுங் ...... கருதாயோ

பூதி பூஷ ணர்கற்பின் பேதை பாகர் துதிக்கும்
     போத தேசி கசக்ரந் ...... தவறாதே

போக பூமி புரக்குந் த்யாக மோக குறப்பெண்
     போத ஆத ரவைக்கும் ...... புயவீரா

சோதி வேலை யெடுத்தன் றோத வேலை யில்நிற்குஞ்
     சூத தாரு வும்வெற்பும் ...... பொருகோவே

சூரர் சேனை யனைத்துந் தூளி யாக நடிக்குந்
     தோகை வாசி நடத்தும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

காதில் ஓலை கிழிக்கும் காம பாண விழிக்கும் ... விலை மகளிர்
காதில் அணிந்துள்ள ஓலை வரைக்கும் பாய்ந்து கிழிக்கின்றனவும்,
மன்மதனின் அம்பை ஒத்தவையுமான கண்களுக்கும்,

கான யாழின் மொழிக்கும் பொதுமாதர் காண ஒணாத
இடைக்கும் பூண் உலாவு முலைக்கும்
... இசையை எழுப்பும் யாழ்
போன்ற பேச்சுக்கும், வேசிகளின் பார்க்க அரிதான நுண்ணிய
இடுப்புக்கும், ஆபரணங்கள் அசைந்தாடும் மார்பகத்துக்கும்,

காதில் நீடு குழைக்கும் புதிது ஆய கோது இலாத கருப்பஞ்
சாறு போல ருசிக்கும் கோவை வாய் அமுதுக்கும்
தணியாமல்
... காதில் நீண்டு தொங்கும் குண்டலங்களுக்கும், அதிசயம்
விளைவிக்கத் தக்க, (சக்கை, தோல் முதலிய) குற்றம் இல்லாத கரும்பின்
சாறு போல இனிக்கும் கொவ்வைப் பழம் போன்ற சிவந்த வாயிடத்து
ஊறும் ஊறலுக்கும் அடங்காமல்,

கூருவேன் ஒருவர்க்கும் தேட ஒணாதது ஒர் அர்த்தம்
கூடுமாறு ஒரு சற்றும் கருதாயோ
... (காமம்) மிக்கெழுதலைக்
கொண்டவனாகிய நான் யாராலும் தேடிக் காண முடியாததான ஒப்பற்ற
(பேரின்பப்) பொருளைக் கண்டு அடையும்படி, ஒரு சிறிதளவாவது நீ
மனதில் நினைக்க மாட்டாயோ?

பூதி பூஷணர் கற்பின் பேதை பாகர் துதிக்கும் போத தேசிக ...
விபூதியை அலங்காரமாகக் கொள்ளுபவர், கற்பொழுக்கம் நிறைந்த
பேதையாகிய பார்வதி தேவியைப் பாகத்தில் கொண்டவர் ஆகிய
சிவபெருமான் போற்றும் ஞான தேசிகனே,

சக்ரம் தவறாதே போக பூமி புரக்கும் த்யாக ... விதித்த நீதியில்
தவறாத வண்ணம் சுவர்க்க லோகத்தைக் காத்தருளும் தியாக சீலனே,

மோக குறப் பெண் போத ஆதர(ம்) வைக்கும் புய வீரா ... உன்
ஆசைக்கு உரிய குறப் பெண்ணாகிய வள்ளி நின்பால் வந்து அடைய
அன்பு வைத்த புய வீரனே,

சோதி வேலை எடுத்து அன்று ஓத வேலையில் நிற்கும் சூத
தாருவும் வெற்பும் பொரு கோவே
... பேரொளி வீசும்
வேலாயுதத்தை எடுத்து, அன்று அலை வீசும் கடலில் (மறைந்து) நிற்கும்
மாமரமாகிய சூரனுடனும், (அவனுக்கு அரணாயிருந்த) எழு
கிரியுடனும் சண்டை செய்த தலைவனே,

சூரர் சேனை அனைத்தும் தூளியாக நடிக்கும் தோகை வாசி
நடத்தும் பெருமாளே.
... சூரர்களுடைய படை யாவும் பொடியாகும்படி
நடனம் செய்யும் மயிலாகிய குதிரையை நடத்திச் சென்ற பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.102  pg 3.103 
 WIKI_urai Song number: 1034 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1031 - kAdhil Olai (common)

kAthi lOlai kizhikkum kAma pANa vizhikkum
     kAna yAzhin mozhikkum ...... pothumAthar

kANo NAtha idaikkum pUNu lAvu mulaikkum
     kAthil needu kuzhaikkum ...... puthithAya

kOthi lAtha karuppanj chARu pOla rusikkum
     kOvai vAya muthukkun ...... thaNiyAmal

kUru vEno ruvarkkun thEdo NAtha thorarththam
     kUdu mARo ruchatRung ...... karuthAyO

pUthi pUsha NarkaRpin pEthai pAkar thuthikkum
     pOtha thEsi kasakran ...... thavaRAthE

pOka pUmi purakkun thyAka mOka kuRappeN
     pOtha Atha ravaikkum ...... puyaveerA

sOthi vElai yeduththan ROtha vElai yilniRkum
     cUtha thAru vumveRpum ...... porukOvE

cUrar sEnai yanaiththum thULi yAka nadikkum
     thOkai vAsi nadaththum ...... perumALE.

......... Meaning .........

kAthil Olai kizhikkum kAma pANa vizhikkum: The eyes, resembling the arrows of Manmathan (God of Love), that reach up to and tear the ears of the whores wearing earstuds,

kAna yAzhin mozhikkum pothumAthar kANa oNAtha idaikkum pUN ulAvu mulaikkum: their speech sounding like the music of the yAzh (a string instrument), the slender and imperceptible waist of the whores, their breasts bedecked with swaying jewels,

kAthil needu kuzhaikkum puthithu Aya kOthu ilAtha karuppanj chARu pOla rusikkum kOvai vAy amuthukkum thaNiyAmal: their long and swinging earstuds and the wonderful nectar that sprouts from their reddish mouth like kovvai-fruit, tasting like unblemished juice of sugarcane (free from scum or skin) have not been able to satiate me;

kUruvEn oruvarkkum thEda oNAthathu or arththam kUdumARu oru satRum karuthAyO: I have been obsessed with a swelling passion; will You not kindly consider, in the least, letting me attain the matchless (blissful) state that is beyond the reach of anyone?

pUthi pUshaNar kaRpin pEthai pAkar thuthikkum pOtha thEsika: He wears the holy ash on His body as an adornment; on His left side the unblemished maid PArvathi is concorporate; and that Lord SivA praises You as His master, full of True Knowledge!

sakram thavaRAthE pOka pUmi purakkum thyAka: You protect the celestial world in accordance with the stipulated code, Oh Lord of great sacrifices!

mOka kuRap peN pOtha Athara(m) vaikkum puya veerA: You loved VaLLi, Your favourite damsel of the KuRavAs, to such an extent that she united with You, Oh Lord with valorous shoulders!

sOthi vElai eduththu anRu Otha vElaiyil niRkum cUtha thAruvum veRpum poru kOvE: You picked up Your bright spear and wielded it in the wavy sea fighting with the demon SUran, hiding there as a mango tree, and with the seven hills which served (as a fortress for SUran), Oh Lord!

cUrar sEnai anaiththum thULiyAka nadikkum thOkai vAsi nadaththum perumALE.: You mounted the horse-like peacock which danced so fiercely as to shatter the entire armies of the demons, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1031 kAdhil Olai - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]