திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1028 காதி மோதி (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1028 kAdhimOdhi (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தான தான தானான தானத் ...... தனதான ......... பாடல் ......... காதி மோதி வாதாடு நூல்கற் ...... றிடுவோருங் காசு தேடி யீயாமல் வாழப் ...... பெறுவோரும் மாதுபாகர் வாழ்வே யெனாநெக் ...... குருகாரும் மாறி லாத மாகால னூர்புக் ...... கலைவாரே நாத ரூப மாநாத ராகத் ...... துறைவோனே நாக லோக மீரேழு பாருக் ...... குரியோனே தீதி லாத வேல்வீர சேவற் ...... கொடியோனே தேவ தேவ தேவாதி தேவப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... காதி மோதி வாதாடு ... எதிர்த்துப் பேசியும், தாக்கியும், வாதம் செய்யவல்ல நூல்கற்றிடுவோரும் ... நூல்களைக் கற்றவர்களும், காசு தேடி யீயாமல் ... பொருளைத் தேடிவைத்து ஒருவருக்கும் கொடாது வாழப் பெறுவோரும் ... வாழ்க்கை நடத்துபவர்களும், மாதுபாகர் வாழ்வே யெனா ... பார்வதிபாகன் சிவபிரானது செல்வமே என்று நெக்குருகாரும் ... உன்னை நினைந்து உள்ளம் உருகாதவர்களும், மாறிலாத மாகாலனூர் ... தர்மநெறி மாறாத பெரும் யமதர்மபுரிக்கு புக்கலைவாரே ... புகுந்து பிறந்து புகுந்து அலைச்சல் உறுவார்கள். நாத ரூப ... இசை உருவத்தோனே, மாநாதர் ஆகத்து உறைவோனே ... மகாதேவர் சிவனின் உள்ளத்தில் வீற்றிருப்போனே, நாகலோக மீரேழு பாருக்கு ... சுவர்க்க லோகம் ஆகிய பதினான்கு உலகங்களுக்கும்* உரியோனே ... உரிமைக்காரனாக விளங்குவோனே, தீதி லாத வேல்வீர ... தீமையே செய்யாத வேல் ஏந்தும் வீரனே, சேவற்கொடியோனே ... சேவலைக் கொடியாக உயர்த்தியவனே, தேவ தேவ ... தேவ தேவனே, தேவாதி தேவப் பெருமாளே. ... தேவாதி தேவர்களுக்கெல்லாம் பெருமாளே. |
* 14 உலகங்கள் பின்வருமாறு: கீழ் உலகங்கள் ஏழு: அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், ரசாதலம், பாதாளம். மேல் உலகங்கள் ஏழு: பூலோகம், புவலோகம், சுவலோகம், ஜனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்தியலோகம். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.98 pg 3.99 pg 3.100 pg 3.101 WIKI_urai Song number: 1031 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
கௌமாரம் குழுவினர் The Kaumaram Team பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'சிங்கப்பூர்' செல்வி சுபாஷினி Singapore B. Subhashini பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 1028 - kAdhi mOdhi (common) kAdhi mOdhi vAdhAdu nUl ...... katriduvOrung kAsu thEdi yeeyAmal vAzhap ...... peRuvOrum mAdhupAgar vAzhvEenA ...... nekkurugArum mARilAdha mAkAlanUr ...... pukkalaivArE nAdha rUpa mA nAtha rAgath ...... uRaivOnE nAgalOkam eerEzhu pAruk ...... uriyOnE theedhilAdha vEl veera sEvaR ...... kodiyOnE dhEva dhEva dhEvAdhi dhEvap ...... perumALE. ......... Meaning ......... kAdhi mOdhi vAdhAdu nUl katriduvOrung: People who study books which turn them into fiercely bickering and fighting debaters, kAsu thEdi yeeyAmal vAzhap peRuvOrum: people who earn wealth but spend their lives tight fisted without giving alms, and mAdhupAgar vAzhvEenA nekkurugArum: people whose hearts do not melt in praising You as the Treasure of SivA who has PArvathi by His side - all these mARilAdha mAkAlanUr pukkalaivArE: will wander about going back and forth to the place of the Death-God (Yaman) who never discriminates. nAdha rUpa: You are the form of Divine Music! mA nAtha rAgath uRaivOnE: You are cherished in the heart of the Greatest Deva, namely SivA! nAgalOkam eerEzhu pAruk uriyOnE: You reside in all the fourteen worlds*, including Heaven. theedhilAdha vEl veera: You hold the Spear that can never do any harm. sEvaR kodiyOnE: You have hoisted Your flag of the Rooster. dhEva dhEva: You are the God of all Gods! dhEvAdhi dhEvap perumALE.: You are the Super Lord, Oh Great One! |
* The 14 worlds are as follows: 7 Upper Worlds: bUlOgam, bhuvarlOgam, suvarlOgam, janalOgam, thabOlOgam, mahAlOgam and sathyalOgam. 7 Lower Worlds: athalam, vithalam, suthalam, tharAthalam, mahAthalam, rasAthalam and pAthAlam. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |