திருப்புகழ் 1024 ஏடுமலர் உற்ற  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1024 EdumalarutRa  (common)
Thiruppugazh - 1024 EdumalarutRa - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானதன தத்த தானதன தத்த
     தானதன தத்த ...... தனதான

......... பாடல் .........

ஏடுமல ருற்ற ஆடல்மத னுய்க்கு
     மேவதுப ழிக்கும் ...... விழியாலே

ஏதையும ழிக்கு மாதர்தம யக்கி
     லேமருவி மெத்த ...... மருளாகி

நாடுநகர் மிக்க வீடுதன மக்கள்
     நாரியர்கள் சுற்ற ...... மிவைபேணா

ஞானவுணர் வற்று நானெழுபி றப்பும்
     நாடிநர கத்தில் ...... விழலாமோ

ஆடுமர வத்தை யோடியுடல் கொத்தி
     யாடுமொரு பச்சை ...... மயில்வீரா

ஆரணமு ரைக்கு மோனகவி டத்தில்
     ஆருமுய நிற்கு ...... முருகோனே

வேடுவர்பு னத்தில் நீடுமித ணத்தில்
     மேவியகு றத்தி ...... மணவாளா

மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி
     மீளவிடு வித்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஏடுமலர் உற்ற ஆடல் மதன் உய்க்கும் ஏ(ய் அ)து பழிக்கும்
விழியாலே
... இதழ்களை உடைய மலர்ப் பாணங்களைக் கொண்டு
போர் புரியும் மன்மதன் செலுத்தும் அம்பையும் தமது கொடுமைத்திறத்தால்
வென்று பழிக்கவல்ல கண்களாலே,

ஏதையும் அழிக்கு(ம்) மாதர் தம் மயக்கிலே மருவி மெத்த
மருளாகி
... எல்லாப் பொருள்களையும் அழிக்கவல்ல மாதர்களின்
மயக்கு என்பதிலே நான் சிக்கி, மிகவும் காம மயக்கம் பூண்டு,

நாடு நகர் மிக்க வீடு தன மக்கள் நாரியர்கள் சுற்றம் இவை
பேணா
... என் நாட்டையும், நகரையும், நிறைந்த வீடுகளையும்,
செல்வத்தையும், பெண்களையும், குழந்தைகளையும், சுற்றத்தாரையும்
பேணி நின்று விரும்பி,

ஞானஉணர்வு அற்று நான் எழு பிறப்பும் நாடி நரகத்தில்
விழலாமோ
... ஞான உணர்ச்சியே இல்லாமல், ஏழுவகையான
பிறப்புக்களையே* தேடி நின்று நரகத்தில் விழலாமோ?

ஆடும் அரவத்தை ஓடி உடல் கொத்தி ஆடும் ஒரு பச்சை
மயில்வீரா
... படம் எடுத்து ஆடும் பாம்பைக் கண்டதும் ஓடி, அதன்
உடலைக் கொத்தி நடனம் புரிகின்ற ஒப்பற்ற பச்சை மயில் வீரனே,

ஆரணம் உரைக்கு(ம்) மோன அக இடத்தில் ஆரும் உ(ய்)ய
நிற்கு(ம்) முருகோனே
... வேதங்கள் கூறும் மெளனத்தை
உட்கொண்ட நிலையில் சகல உயிர்களும் வாழ நிற்கின்ற முருகனே,

வேடுவர் புனத்தில் நீடும் இதணத்தில் மேவிய குறத்தி
மணவாளா
... வேடர்களின் தினைப்புனத்தில் நீண்ட பரண்மீது
வீற்றிருந்த குறத்தி வள்ளியின் மணவாளனே,

மேலசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த
பெருமாளே.
... முன்பு அசுரர்கள் காவலில் இட்ட தேவர்களின்
சிறையை நீக்கி, அத்தேவர்களை மீள்வித்த பெருமாளே.


* ஏழு வகையான பிறப்பு:

தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.92  pg 3.93 
 WIKI_urai Song number: 1027 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam

Song 1024 - Edumalar utRa (common)

Edumala rutRa Adalmatha nuykku
     mEvathupa zhikkum ...... vizhiyAlE

Ethaiyuma zhikku mAtharthama yakki
     lEmaruvi meththa ...... maruLAki

nAdunakar mikka veeduthana makkaL
     nAriyarkaL sutRa ...... mivaipENA

njAnavuNar vatRu nAnezhupi Rappum
     nAdinara kaththil ...... vizhalAmO

Adumara vaththai yOdiyudal koththi
     yAdumoru pacchai ...... mayilveerA

AraNamu raikku mOnakavi daththil
     Arumuya niRku ...... murukOnE

vEduvarpu naththil needumitha Naththil
     mEviyaku Raththi ...... maNavALA

mElasura ritta thEvarsiRai vetti
     meeLavidu viththa ...... perumALE.

......... Meaning .........

Edumalar utRa Adal mathan uykkum E(y a)thu pazhikkum vizhiyAlE: The eyes of those whores surpass the cruelty of the arrows shot by the warring God of Love (Manmathan) who uses petalled flowers as weapon;

Ethaiyum azhikku(m) mAthar tham mayakkilE maruvi meththa maruLAki: their delusory tactics are capable of destroying anything; being ensnared by them, I was consumed by passion;

nAdu nakar mikka veedu thana makkaL nAriyarkaL sutRam ivai pENA: I became attached to my country, hometown, rich houses, wealth, women and relatives;

njAnauNarvu atRu nAn ezhu piRappum nAdi narakaththil vizhalAmO: without any quest for true knowledge, I have been seeking seven* kinds of births to willingly fall into hell; how can I do that?

Adum aravaththai Odi udal koththi Adum oru pacchai mayilveerA: It runs after the serpent with a raised hood and dances after biting the snake's body; it is the matchless green peacock mounted by You, Oh valorous One!

AraNam uraikku(m) mOna aka idaththil Arum u(y)ya niRku(m) murukOnE: It is the state of tranquility praised by the VEdAs, and You prevail there for the uplift of all lives, Oh MurugA!

vEduvar punaththil needum ithaNaththil mEviya kuRaththi maNavALA: She sat on an elongated and raised platform in the millet-field of the hunters; She is VaLLi, the damsel of the KuRavAs, and You are her consort!

mElasurar itta thEvar siRai vetti meeLa viduviththa perumALE.: You severed the shackles of the celestials previously imprisoned by the demons and freed them from captivity, Oh Great One!


* The seven kinds of birth:

celestial, human, animal, bird, amphibian and reptile, aquatic life and plant life.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1024 Edumalar utRa - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]