திருப்புகழ் 1021 வினைத் திரளுக்கு  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1021 vinaiththiraLukku  (common)
Thiruppugazh - 1021 vinaiththiraLukku - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்ததனத் தனத்ததனத்
     தனத்ததனத் தனத்ததனத்
          தனத்ததனத் தனத்ததனத் ...... தனதான

......... பாடல் .........

வினைத்திரளுக் கிருப்பெனவித்
     தகப்படவிற் சலப்பிலமிட்
          டிசைக்குமிடற் குடிற்கிடைபுக் ...... கிடுமாய

விளைப்பகுதிப் பயப்பளவுற்
     றமைத்ததெனக் கருத்தமைவிற்
          சகப்பொருள்மெய்க் குறப்பருகக் ...... கருதாதே

எனக்கெதிரொப் பிசைப்பவரெத்
     தலத்துளரெச் சமர்த்தரெனப்
          புறத்துரையிட் டிகழ்ச்சியினுற் ...... றிளையாதுன்

எழிற்கமலத் திணைக்கழலைத்
     தமிழ்ச்சுவையிட் டிறப்பறஎய்த்
          திடக்கருணைத் திறத்தெனைவைத் ...... தருள்வாயே

சினத்தைமிகுத் தனைத்துலகத்
     திசைக்கருதிக் கடற்பரவித்
          திடத்தொடதிர்த் தெதிர்த்திடலுற் ...... றிடுசூரன்

சிரத்துடன்மற் புயத்தகலத்
     தினிற்குருதிக் கடற்பெருகச்
          சிறப்புமிகத் திறத்தொடுகைத் ...... திடும்வேலா

கனத்தமருப் பினக்கரிநற்
     கலைத்திரள்கற் புடைக்கிளியுட்
          கருத்துருகத் தினைக்குளிசைத் ...... திசைபாடி

கனிக்குதலைச் சிறுக்குயிலைக்
     கதித்தமறக் குலப்பதியிற்
          களிப்பொடுகைப் பிடித்தமணப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வினைத் திரளுக்கு இருப்பு என வித்தகப் படவில் ... வினைக்
கூட்டங்களுக்கு இருப்பிடமாகும் அதிசயமான ஓடத்தில்

சல(ம்) பிலம் இட்டு இசைக்கும் மிடல் குடிற்கு இடை புக்கு
இடும் மாய
... நீர் கொண்ட குகை வைத்துக் கட்டப்பட்டுள்ள, வலிமை
மிக்க உடலினுள் புகுந்துள்ள இந்த மாயம்,

விளைப் பகுதிப் பயப்பு அளவுற்று அமைத்தது எனக் கருத்து
அமைவில்
... விளையும் (வாழ் நாள்) பாகம் பயப்படும் கணக்காக
அமைக்கப்பட்டதென்ற கருத்தின் நினைவில்

சகப் பொருள் மெய்க்கு உறப் பருகக் கருதாதே ... உலகத்தில்
உள்ள பொருள்களின் மெய்ம்மைக்கு ஏற்ப அனுபவிப்பதற்கு எண்ணாமல்,

எனக்கு எதிர் ஒப்ப இசைப்பவர் எத்தலத்து உளர் எச்சமர்த்தர்
என
... எனக்கு எதிராக நிகரென்று சொல்ல வல்லவர் எந்தப் பூமியில்
இருக்கின்றார்கள், எந்தச் சாமர்த்தியசாலிகள் உள்ளார்கள் என்று

புறத்து உரை இட்டு இகழ்ச்சியின் உற்று இளையாது ...
வெளியே கர்வமாகப் பேசி, பிறரை இகழ்ச்சி கூறியே நான் இளைத்துப்
போகாமல்,

உன் எழில் கமலத்து இணைக் கழலைத் தமிழ்ச் சுவை இட்டு
இறப்பு அற எய்த்திட
... உனது அழகிய தாமரை போன்ற இரண்டு
திருவடிகளை தமிழ்ச் சுவை பொருந்தும்படி வாழ்த்தி, நான் சாகாத
நிலையைப் பெற்றிட,

கருணைத் திறத்து என வைத்து அருள்வாயே ... உனது கருணை
வழியில் என்னைச் சேர்ப்பித்து அருள் புரிவாயாக.

சினத்தை மிகுத்து அனைத்து உலகத் திசைக் கருதிக் கடல்
பரவித் திடத்தொடு அதிர்த்து எதிர்த்திடல் உற்றிடு சூரன்
...
கோபம் மிகுந்து, உலகின் எல்லாத் திசைகளையும் வெல்லக் கருதி, தன்
அதிகாரத்தைக் கடல் அளவும் பரப்பி, வலிமையுடன் யாவரையும் நடுங்கச்
செய்து எதிர்த்தவனாகிய சூரனுடைய

சிரத்துடன் மற் புயத்து அகலத்தினில் குருதிக் கடல் பெருகச்
சிறப்பு மிகத் திறத்தொடு உகைத்திடும் வேலா
...
தலையினின்றும், மல் யுத்தத்துக்கு ஏற்ற அகலமான மார்பிலிருந்தும்,
ரத்தம் கடல் போல் பெருகி ஓடும்படியாக, புகழ் மிகுந்த சாமர்த்தியத்துடன்
வேலைச் செலுத்திய தலைவனே,

கனத்த மருப்பு இனக் கரி நல் கலைத் திரள் கற்புடைக் கிளி
உள் கருத்து உருக
... கனமான தந்தங்களை உடைய யானைக்
கூட்டமும், அழகிய மான் கூட்டமும், சொல்லுவதைக் கற்க வல்ல கிளிக்
கூட்டமும் தத்தம் உள்ளம் உருக,

தினைக்குள் இசைத்து இசை பாடி கனிக் குதலைச் சிறுக்
குயிலை
... தினைப்புனத்தில் பொருந்திய முறையில் பண் அமைத்து
ராகங்களைப் பாடியவளாகிய, பழச் சுவையையும் மழலை மொழியையும்
கொண்ட சிறிய குயில் போன்ற வள்ளியை,

கதித்த மறக் குலப் பதியில் களிப்பொடு கைப் பிடித்த மணப்
பெருமாளே.
... அங்கு இருந்த வேடர் கூட்டத்தினர்களின் ஊரில்
மகிழ்ச்சியுடன் கரங்களைப் பற்றிய மணவாளப் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.84  pg 3.85  pg 3.86  pg 3.87 
 WIKI_urai Song number: 1024 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1021 - vinaith thiraLukku (common)

vinaiththiraLuk kiruppenavith
     thakappadaviR calappilamit
          tisaikkumidaR kudiRkidaipuk ...... kidumAya

viLaippakuthip payappaLavut
     Ramaiththathenak karuththamaiviR
          cakapporuLmeyk kuRapparukak ...... karuthAthE

enakkethirop pisaippavareth
     thalaththuLarec camarththarenap
          puRaththuraiyit tikazhcchiyinut ...... RiLaiyAthun

ezhiRkamalath thiNaikkazhalaith
     thamizhcchuvaiyit tiRappaRaeyth
          thidakkaruNaith thiRaththenaivaith ...... tharuLvAyE

sinaththaimikuth thanaiththulakath
     thisaikkaruthik kadaRparavith
          thidaththodathirth thethirththidalut ...... RiducUran

siraththudanmaR puyaththakalath
     thiniRkuruthik kadaRperukac
          ciRappumikath thiRaththodukaith ...... thidumvElA

kanaththamarup pinakkarinaR
     kalaiththiraLkaR pudaikkiLiyut
          karuththurukath thinaikkuLisaith ...... thisaipAdi

kanikkuthalaic ciRukkuyilaik
     kathiththamaRak kulappathiyiR
          kaLippodukaip pidiththamaNap ...... perumALE.

......... Meaning .........

vinaith thiraLukku iruppu ena viththakap padavil: In a unique boat that is the seat of a host of past deeds,

sala(m) pilam ittu isaikkum midal kudiRku idai pukku idum mAya: is the strong body, with built-in caverns filled with water, into which body this delusion has entered;

viLaip pakuthip payappu aLavutRu amaiththathu enak karuththu amaivil: having regard to the scary account of the remaining portion of life (days of survival),

sakap poruL meykku uRap parukak karuthAthE: rather than enjoying the things of the world based on their face values,

enakku ethir oppa isaippavar eththalaththu uLar ecchamarththar ena puRaththu urai ittu: I have been outwardly challenging with arrogance "Is there anyone in any world to equal me? Is there any smart one to match me?"

ikazhcchiyin utRu iLaiyAthu: without growing weaker by ridiculing other people,

un ezhil kamalaththu iNaik kazhalaith thamizhc cuvai ittu iRappu aRa eyththida: I would like to attain an immortal state by praising in chaste Tamil language the glory of Your hallowed lotus feet!

karuNaith thiRaththu ena vaiththu aruLvAyE: Kindly keep me in Your path of compassion!

sinaththai mikuththu anaiththu ulakath thisaik karuthik kadal paravith thidaththodu athirththu ethirththidal utRidu: In an excessive rage, he wanted to conquer the worlds in all the directions and extended his reign also over the seas; he confronted everyone making them shudder at his might;

cUran siraththudan maR puyaththu akalaththinil kuruthik kadal perukac ciRappu mikath thiRaththodu ukaiththidum vElA: from that SUran's head and from his broad chest, capable of many a wrestling bout, blood gushed out like sea when You wielded Your famous spear skillfully, Oh Lord!

kanaththa maruppu inak kari nal kalaith thiraL kaRpudaik kiLi uL karuththu uruka: The herds of elephants with hefty ivory tusks, the flock of beautiful deers and the bunch of parrots capable of learning whatever is taught to them - all were simply moved to the point of a melting heart

thinaikkuL isaiththu isai pAdi kanik kuthalais siRuk kuyilai: when VaLLi in the millet-field sang nicely, having set the songs to melodious tunes; she is herself like a little cuckoo with the taste of fruits lingering in her sweet and prattling mouth;

kathiththa maRak kulap pathiyil kaLippodu kaip pidiththa maNap perumALE.: You held her hands happily in matrimony in VaLLimalai, the abode of the tribe of hunters, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1021 vinaith thiraLukku - common


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]