திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1018 கற்பார் மெய் (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1018 kaRpArmei (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தத்தானத் தாத்தத் தனதன தத்தானத் தாத்தத் தனதன தத்தானத் தாத்தத் தனதன ...... தனதான ......... பாடல் ......... கற்பார்மெய்ப் பாட்டைத் தவறிய சொற்பாகைக் காட்டிப் புழுகொடு கஸ்தூரிச் சேற்றைத் தடவிய ...... இளநீரைக் கட்சேலைக் காட்டிக் குழலழ கைத்தோளைக் காட்டித் தரகொடு கைக்காசைக் கேட்டுத் தெருவினில் ...... மயில்போலே நிற்பாருக் காட்பட் டுயரிய வித்தாரப் பூக்கட் டிலின்மிசை நெட்டூரக் கூட்டத் தநவர ...... தமுமாயும் நெட்டாசைப் பாட்டைத் துரிசற விட்டேறிப் போய்ப்பத் தியருடன் நெக்கோதிப் போற்றிக் கழலிணை ...... பணிவேனோ வெற்பால்மத் தாக்கிக் கடல்கடை மைச்சாவிக் காக்கைக் கடவுளை விட்டார்முக் கோட்டைக் கொருகிரி ...... யிருகாலும் விற்போலக் கோட்டிப் பிறகொரு சற்றேபற் காட்டித் தழலெழு வித்தார்தத் வார்த்தக் குருபர ...... னெனவோதும் பொற்பாபற் றாக்கைப் புதுமலர் பெட்டேயப் பாற்பட் டுயரிய பொற்றோளிற் சேர்த்துக் கருணைசெ ...... யெனமாலாய்ப் புட்கானத் தோச்சிக் கிரிமிசை பச்சேனற் காத்துத் திரிதரு பொற்பூவைப் பேச்சுக் குருகிய ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... கற்பு ஆர் மெய்ப் பாட்டைத் தவறிய சொல் பாகைக் காட்டி ... கற்பு நிறைந்த மெய்யான நிலையினின்றும் தவறிய வழியில் செல்லும் சொற்களின் வெல்லப் பாகைப் போன்ற இனிப்பைக் காட்டி, புழுகொடு கஸ்தூரிச் சேற்றைத் தடவிய இள நீரைக் கண் சேலைக் காட்டி குழல் அழகைத் தோளைக் காட்டி ... புனுகு சட்டம், கஸ்தூரி இவைகளின் கலவை பூசப்பட்ட இள நீர் போன்ற மார்பகங்களையும், சேல் மீன் போன்ற கண்ணையும் காட்டி, கூந்தலின் அழகையும், தோள்களையும் காட்டி, தரகொடு கைக் காசைக் கேட்டுத் தெருவினில் மயில் போலே நிற்பாருக்கு ஆட்பட்டு ... மத்தியில் தரகர் வைத்துப் பேசி கையிலுள்ள பொருள் கேட்டு, தெருவில் மயில் நிற்பது போல் நிற்கும் வேசியர்களுக்கு நான் அடிமைப் பட்டு, உயரிய வித்தாரப் பூக்கட்டிலின் மிசை நெட்டூ ஊரக் கூட்டத்து அநவரதமு(ம்) மாயும் நெட்டாசைப் பாட்டை ... உயர்ந்ததும் அழகு நிறைந்ததுமானக் கட்டிலின் மேல் நீண்ட நேரம் மேலே ஊர்ந்து அசைவுறும் அந்தப் புணர்ச்சியில் எப்போதும் அழிகின்ற நீண்ட ஆசை அனுபவத்தை, துரிசு அற விட்டு ஏறிப் போய்ப் பத்தியருடன் நெக்கு ஓதிப் போற்றி கழல் இணை பணிவேனோ ... குற்றம் நீங்கும்படி விட்டு விலகிப் போய், உன்னிடம் பக்தி கொண்டுள்ள அடியார்களுடன் சேர்ந்து உன்னை நெகிழ்ந்து பாடிப் போற்ற உன் திருவடிகளைப் பணியும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமோ? வெற்பால் மத்தாக்கிக் கடல் கடை மைச்சு ஆவிக் காக்கைக் கடவுளை விட்டார் முக்கோட்டைக்கு ஒரு கிரி இரு காலும் வில் போலக் கோட்டி ... மந்தர மலையையே மத்தாக அமைத்து திருப்பாற்கடலைக் கடைந்து, கறு நிறம் கொண்டு உயிர்களைக் காக்கின்ற கடவுள் திருமாலின்* திருவிளையாட்டால் தர்மவழியைப் பின்பற்றாது (சிவ பூஜையை) விடடவர்களாகிய திரிபுரத் தலைவர் மூவர்களின் மும்மதிலுக்கும் மேம்பட்ட ஒப்பற்ற மேரு மலையின் இரண்டு முனைப் பக்கங்களையும் வில்லை வளைப்பது போல வளைத்து, பிறகு ஒரு சற்றே பல் காட்டி தழல் எழு வித்தார் தத்வார்த்தக் குருபரன் என ஓதும் பொற்பா ... பின்பு ஒரு சிறிது புன்னகை செய்து நெருப்பு மூள வைத்த சிவ பெருமானுக்கு, உண்மைப் பொருளை உபதேசித்த குரு பர மூர்த்தி என்று சொல்லப்படுகின்ற அழகனே, பற்றாக்கை புது மலர் பெட்டு ஏயப் பாற்பட்டு உயரிய பொன் தோளில் சேர்த்துக் கருணை செய் என மாலாய் ... அம்புத் திரள் கட்டும் கயிற்றினின்று (மன்மதன்) தன் மலர்ப் பாணங்களை விரைவாக எய்ய, (அந்த அம்புகளால் காம வசத்தில்) அகப்பட்டு, பெருமை பொருந்திய (உனது) அழகிய தோளில் (என்னை) அணைந்து அருள் புரிவாயாக என்று (வள்ளியிடம் கூறி) ஆசை பூண்டவனாய், புள் கானத்து ஓச்சிக் கிரி மிசை பச்சேனல் காத்துத் திரி தரு பொன் பூவை பேச்சுக்கு உருகிய பெருமாளே. ... பறவைகளை தினைப்புனத்தில் ஓட்டி, வள்ளிமலை மீது பசுமையான தினைப் பயிர்களைக் காத்துத் திரிந்த அழகிய பூப் போன்ற வள்ளியின் பேச்சுக்கு மனம் உருகிய பெருமாளே. |
* திரிபுராதிகள் சிவ பூஜையை விட்டால் ஒழிய அவர்களை வெல்ல முடியாதென உணர்ந்த திருமால் பல அற்புதங்களைக் காட்டி அசுரர்களை மயக்கிச் சிவ பூஜையைக் கைவிடச் செய்தார். அதன் பின்னரே திரிபுரம் எரிந்தது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.74 pg 3.75 pg 3.76 pg 3.77 pg 3.78 pg 3.79 WIKI_urai Song number: 1021 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 1018 - kaRpAr mei (common) thaththAnath thAththath thanathana thaththAnath thAththath thanathana thaththAnath thAththath thanathana ...... thanathAna ......... Song ......... kaRpArmeyp pAttaith thavaRiya soRpAkaik kAttip puzhukodu kasthuraic chEtRaith thadaviya ...... iLaneeraik katchElaik kAttik kuzhalazha kaiththOLaik kAttith tharakodu kaikkAsaik kEttuth theruvinil ...... mayilpOlE niRpAruk kAtpat tuyariya viththArap pUkkat tilinmisai nettUrak kUttath thanavara ...... thamumAyum nettAsaip pAttaith thurisaRa vittERip pOyppath thiyarudan nekkOthip pOtRik kazhaliNai ...... paNivEnO veRpAlmath thAkkik kadalkadai maicchAvik kAkkaik kadavuLai vittArmuk kOttaik korukiri ...... yirukAlum viRpOlak kOttip piRakoru satREpaR kAttith thazhalezhu viththArthath vArththak kurupara ...... nenavOthum poRpApat RAkkaip puthumalar pettEyap pARpat tuyariya potROLiR sErththuk karuNaise ...... yenamAlAyp putkAnath thOcchik kirimisai pacchEnaR kAththuth thiritharu poRpUvaip pEcchuk kurukiya ...... perumALE. ......... Meaning ......... kaRpu Ar meyp pAttaith thavaRiya sol pAkaik kAtti: These women who tread away from the chaste and truthful path offer their sugary words that are sweet like the molten jaggery; puzhukodu kasthUric chEtRaith thadaviya iLa neeraik kaN sElaik kAtti kuzhal azhakaith thOLaik kAtti: they show off their bosom looking like tender coconuts, smeared with a paste of civet and musk, and their sEl-fish-like eyes along with their beautiful hair and shoulders; tharakodu kaik kAsaik kEttuth theruvinil mayil pOlE niRpArukku Atpattu: employing a broker as the middle-man they negotiate and grab all the belongings of their suitors; these whores stand at the street-corner posing like a peacock, and I have been ensnared by them; uyariya viththArap pUkkattilin misai nettU Urak kUttaththu anavarathamu(m) mAyum nettAsaip pAttai: climbing their high and beautiful cot, I have always experienced prolonged copulation and in order that my indulgence in that transient carnal pleasure thurisu aRa vittu ERip pOyp paththiyarudan nekku Othip pOtRi kazhal iNai paNivEnO: and the blemish attached to it leave me, I have to associate myself with Your devotees and, along with them, ardently sing Your glory; will I ever be fortunate to prostrate at Your hallowed feet? veRpAl maththAkkik kadal kadai maicchu Avik kAkkaik kadavuLai vittAr mukkOttaikku oru kiri iru kAlum vil pOlak kOtti: He erected Mount MantharA as the churning rod and churned the milky ocean; He is the black-complexioned Lord who protects all lives; that Lord VishNu played a trick* by means of which the three Leaders of Thiripuram treaded away from the righteous path (of offering worship to Lord SivA); He took the mount MEru as a bow, stronger than the fortress walls of Thiripuram, and bent its two ends like one would bend a bow, piRaku oru satRE pal kAtti thazhal ezhu viththAr thathvArththak kuruparan ena Othum poRpA: and then merely smiled a little and set fire to Thiripuram; He is Lord SivA, and You preached to that SivA the True Principle coming as His Great Master, Oh Handsome One! patRAkkai puthu malar pettu Eyap pARpattu uyariya pon thOLil sErththuk karuNai sey ena mAlAy: From the quiver holding all the arrows of flowers, Manmathan (God of Love) wielded the arrows briskly making You love-lorn, and You pleaded to VaLLi with immense passion, saying "Kindly hug me with Your eminent shoulders"; puL kAnaththu Occhik kiri misai pacchEnal kAththuth thiri tharu pon pUvai pEcchukku urukiya perumALE.: She was guarding by running around the fertile millet-field on Mount VaLLimalai by chasing away the birds; to the sweet speech of that flower-like belle, VaLLi, You melt Your heart, Oh Great One! |
* The leaders of Thiripuram used to perform worship of Lord SivA everyday. Unless their worship was interrupted, they could never be beaten. Lord VishNu knew about this and played several tricks on the Thiripura kings making them forsake the Siva Puja. Only thereafter, Thiripuram could be burnt down. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |