பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 முருகவேள் திருமுறை 17- திருமுறை வெற்பால்மத் தாக்கிக் கடல்கடை f மைச்சாவிக் + காக்கைக் கடவுளை விட்டார்முக் கோட்டைக் கொருகிரி யிருகாலும். விற்போலக் கோட்டிப் பிறகொரு சற்றேயற் காட்டித் தழலெழு வித்தார்தத் வார்த்தக் x குருபர னெனவோதும்,

  • கடல் கடைந்த வரலாறு - பாடல் 509- பக்கம் 162

1 மைச்சு - மைத்து என்பதன் திரிபு. மைத்து - கறுத்து - மைத்திருள் கூர்ந்த மனமாக திர' மணிமேகலை 12.85 திருமால் நிறம் கறுத்தது. கடல் கடைந்த பொழுது எழுந்த ஆலகால விஷவேகத்தால் திருமாலின் வெள்ளை நிறம் கறுத்தது. அவரும் களியவன்' எனப் பேர் பெற்றார். 'வருகனல் வல்விஷம் தாக்கி மாயவன் வெண்ணிற மேனி கருகினன்; அன்றுதொடங்கிக் களியனெனப்பெயர் பெற்றான்" - காஞ்சிப் புராணம் . மணிகண்டீச - 19. விஷம் தாக்குமுன் திருமால் வெள்ளை நிறத்தினர் என்பது - "மலைதனக் கிறகு கண்டேன் மால் வெள்ளை நிறமுங் கண்டேன்" எனவரும் பாடலிலும் காணலாம். வச்சிர மணி நிறம் முருக்கி நீல வண்ணமே ஆக்கியது' - கந்த புரா 6.13.331

  1. காக்கைக் கடவுளை விட்டார்.

திரிபுரத்தில் இருந்த அசுரர்கள் சிவ பூஜையை விட்டால் ஒழிய அவர்களை வெல்ல முடியாதென உணர்ந்த திருமால் - புத்த ஆசாரியராகவும் நாரதர் அவர் மாணாக்கராகவும் போந்து பலவித அற்புதங்களைக் காட்டி, அசுரர்களை மயக்கிச் சிவ பூஜையைக் கைவிடச் செய்தனர்; ஆனால் திரிபுரங்களுக்குத் தலைவராயிருந்த மூவர் மாத்திரம் திருமாலின் மாயைக்கு உட்படாது சிவ பூஜை நெறியிலேயே ஒழுகினர். திருமாலின் மாயைக்குச் சிக்காமல் அவரை விலக்கி விட்டார்களாதலின் "காக்கைக் கடவுளை விட்டார்" என்றது அத்திரிபுரத் தலைவர் மூவரைக் குறிக்கும்; நாரதர் திருமாலிடம் கூறுவது: