திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1010 அரிசன பரிச (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1010 arisanaparisa (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதன தனதன தந்த தானன தனதன தனதன தந்த தானன தனதன தனதன தந்த தானன ...... தனதான ......... பாடல் ......... அரிசன பரிசஅ லங்க்ரு தாம்ருத கலசமு மதனுய ரம்பொன் மாமுடி யதுமென இளைஞர்கள் நெஞ்சு மாவியு ...... மொருகோடி அடைபடு குடயுக ளங்க ளாமென ம்ருகமத களபம ணிந்த சீதள அபிநவ கனதன மங்கை மாருடன் ...... விளையாடி இரவொடு பகலொழி வின்றி மால்தரு மலைகட லளறுப டிந்து வாயமு தினிதென அருளஅ ருந்தி யார்வமொ ...... டிதமாகி இருவரு மருவிய ணைந்து பாழ்படு மருவினை யறவும றந்து னீள்தரு மிணைமல ரடிகள்நி னைந்து வாழ்வது ...... மொருநாளே சுரர்குல பதிவிதி விண்டு தோலுரி யுடைபுனை யிருடிக ளண்ட ரானவர் துதிசெய எதிர்பொர வந்த தானவ ...... ரடிமாள தொலைவறு மலகையி னங்க ளானவை நடமிட நிணமலை துன்ற வேயதில் துவரிது புளியிது தொய்ந்த தீதிது ...... இதுவீணால் பருகுத லரியது கந்த தீதிது உளதென குறளிகள் தின்று மேதகு பசிகெட வொருதனி வென்ற சேவக ...... மயில்வீரா பகிரதி சிறுவவி லங்க லூடுறு குறமகள் கொழுநப டர்ந்து மேலெழு பருவரை யுருவஎ றிந்த வேல்வல ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... அரிசன(ம்) பரிச அலங்க்ருத அம்ருத கலசமும் மதன் உயர் அம் பொன் மா முடியதும் என ... மஞ்சள் பூசியுள்ள, அலங்காரமான அமிர்த கலசம் என்றும், மன்மதனுடைய சிறந்த பொன் கிரீடம் என்றும் சொல்லும்படியாய், இளைஞர்கள் நெஞ்சும் ஆவியும் ஒரு கோடி அடை படு குட யுகளங்களாம் என ம்ருக மத களபம் அணிந்த சீதள அபி நவ கன தன மங்கைமாருடன் விளையாடி ... இளைஞர்களுடைய மனமும் உயிரும் ஒரு கோடிக் கணக்கில் வந்து அடைபடுவதான குடங்கள் போன்ற இரண்டு என்று சொல்லும்படியாய், கஸ்தூரிக் கலவையை அணிந்துள்ள, குளிர்ச்சி உள்ள, புதுமை வாய்ந்த கனத்த மார்பகங்களை உடைய விலைமாதர்களுடன் லீலைகள் புரிந்து, இரவொடு பகல் ஒழிவின்றி மால் தரும் அலை கடல் அளறு படிந்து வாய் அமுது இனிது என அருள அருந்தி ஆர்வமொடு இதமாகி ... இரவும் பகலும் ஓய்வே இல்லாமல் மோகத்தைத் தரும் காமக் கடலாகிய சேற்றில் படிந்து, வாயிதழ் ஊறல் இனிக்கும் என்று தர பருகி, அன்பும் இன்பமும் பூண்டு, இருவரும் மருவி அணைந்து பாழ்படும் அருவினை அறவும் மறந்து உன் நீள் தரும் இணை மலர் அடிகள் நினைந்து வாழ்வதும் ஒரு நாளே ... இருவரும் பொருந்தி அணைந்து பாழாவதற்கு இடமாகும், வினைக்கு இடமான செயலை அடியோடு மறந்து, உனது ஒளி பொருந்திய இரண்டு திருவடிகளையும் நினைந்து வாழ்வதான ஒரு நாள் எனக்குக் கிடைக்குமோ? சுரர் குலபதி விதி விண்டு தோல் உரி உடை புனை இருடிகள் அண்டர் ஆனவர் துதி செய எதிர் பொர வந்த தானவர் அடி மாள ... தேவர்கள் குலத்துக்குத் தலைவனான இந்திரன், பிரமன், திருமால், மற்றும் (மான்) தோல் உரியை ஆடையாக அணிந்த முனிவர்களும், தேவர்களும் தோத்திரம் செய்ய, எதிர்த்துப் போர் புரிய வந்த அசுரர்கள் அடியோடு இறந்து பட, தொலைவு அறும் அலகை இனங்கள் ஆனவை நடமிட நிண மலை துன்றவே ... சோர்வு இல்லாத பேய்க் கூட்டங்கள் கூத்தாடும்படியாக மாமிச மலை நிரம்ப அவைகளுக்குக் கிடைக்க, அதில் துவர் இது புளி இது தொய்ந்தது ஈது இது இது வீணால் பருகுதல் அரியது உகந்தது ஈது இது உளது என குறளிகள் தின்று மேதகு பசி கெட ஒரு தனி வென்ற சேவக மயில் வீரா ... அங்ஙனம் கிடைத்த மாமிசத்தில் துவர்ப்புள்ள பாகம் இது, புளிப்பான பாகம் இது, கட்டியாய் உறைந்து போன பாகம் இது, இது கெட்டுப் போனது, உண்பதற்கு உபயோகம் அற்றது, உண்ணத் தகுந்தது இங்கே உள்ளது என்று கூறி பூத பிசாசுகள் உண்டு மிக்க பசி தீரும்படியாக, ஒப்பற்ற தனித்த நிலையில் வெற்றி கொண்ட பராக்ரம மயில் வீரனே, பகிரதி சிறுவ விலங்கல் ஊடுறு குறமகள் கொழுந படர்ந்து மேல் எழு பரு வரை உருவ எறிந்த வேல் வல பெருமாளே. ... கங்கையின் புதல்வனே, மலையில் வாசம் செய்யும் குறப் பெண்ணாகிய வள்ளியின் கணவனே, அகன்று மேலே ஓங்கி வளர்ந்த பெரிய கிரவுஞ்ச மலையை ஊடுருவும்படி செலுத்திய வேலாயுதத்தை ஏந்த வல்ல பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.58 pg 3.59 pg 3.60 pg 3.61 WIKI_urai Song number: 1013 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 1010 - arisana parisa (common) arisana parisaa langru thAmrutha kalasamu mathanuya rampon mAmudi yathumena iLainjarkaL nenju mAviyu ...... morukOdi adaipadu kudayuka Langa LAmena mrukamatha kaLapama Nintha seethaLa apinava kanathana mangai mArudan ...... viLaiyAdi iravodu pakalozhi vinRi mAltharu malaikada laLaRupa dinthu vAyamu thinithena aruLaa runthi yArvamo ...... dithamAki iruvaru maruviya Nainthu pAzhpadu maruvinai yaRavuma Ranthu neeLtharu miNaimala radikaLni nainthu vAzhvathu ...... morunALE surarkula pathivithi viNdu thOluri yudaipunai yirudika LaNda rAnavar thuthiseya ethirpora vantha thAnava ...... radimALa tholaivaRu malakaiyi nanga LAnavai nadamida niNamalai thunRa vEyathil thuvarithu puLiyithu thoyntha theethithu ...... ithuveeNAl parukutha lariyathu kantha theethithu uLathena kuRaLikaL thinRu mEthaku pasikeda voruthani venRa sEvaka ...... mayilveerA pakirathi siRuvavi langa lUduRu kuRamakaL kozhunapa darnthu mElezhu paruvarai yuruvae Rintha vElvala ...... perumALE. ......... Meaning ......... arisana(m) parisa alangrutha amrutha kalasamum mathan uyar am pon mA mudiyathum ena: Smeared with turmeric, they looked like decorated jugs of nectar, comparable to the great golden crown of Manmathan (God of Love); iLainjarkaLa nenjum Aviyum oru kOdi adai padu kuda yuLakangaLAm ena mruka matha kaLapam aNintha seethaLa api nava kana thana mangaimArudan viLaiyAdi: those two pot-like heavy, cool and novel breasts, wearing the paste of musk, appeared to be the repository of millions of hearts and lives of young men; making love to the whores bestowed with such bosom, iravodu pakal ozhivinRi mAl tharum alai kadal aLaRu padinthu vAy amuthu inithu ena aruLa arunthi Arvamodu ithamAki: I have been indulging in the sludge of passionate sea, night and day, without a break, imbibing their proffered saliva deemed to be sweet, making love and enjoying that bliss; iruvarum maruvi aNainthu pAzhpadum aruvinai aRavum maRanthu un neeL tharum iNai malar adikaL ninainthu vAzhvathum oru nALE: will there be a day in my life when I completely forget the act of ruining myself by uniting both bodies in embrace which is the source of my bad deed and begin to think about Your bright and hallowed feet? surar kulapathi vithi viNdu thOl uri udai punai irudikaL aNdar Anavar thuthi seya ethir pora vantha thAnavar adi mALa: Indra, the leader of the celestials, Brahma, Lord VishNu, many sages wearing the deer-hide to cover themselves and several celestials joined together in saying prayers to You when the confronting demons who came to fight with You were annihilated; tholaivu aRum alakai inangaL Anavai nadamida niNa malai thunRavE: the tireless gang of devils danced around their prize, namely, the mountain of flesh; athil thuvar ithu puLi ithu thoynthathu eethu ithu ithu veeNAl parukuthal ariyathu ukanthathu eethu ithu uLathu ena kuRaLikaL thinRu mEthaku pasi keda oru thani venRa sEvaka mayil veerA: many fiends analysed the mound of flesh declaring which part is astringent, which is sour, which has become hardened as a solid, which portion got spoiled, which is not edible and which portion is worth devouring; they were all relieved of their tremendous hunger when You singularly fought and triumphed uniquely, Oh Mighty and Valorous One, mounting the peacock! pakirathi siRuva vilangal UduRu kuRamakaL kozhuna padarnthu mEl ezhu paru varai uruva eRintha vEl vala perumALE.: Oh Child of BhAgeerathi (Gangai)! You are the Consort of VaLLi, the damsel of the KuRavAs residing in the mountain! The broad, tall and huge mountain KrounchA, was pierced by Your spear, and You have the ability to hold that powerful Spear in Your hand, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |