திருப்புகழ் 1001 இலகி யிருகுழை  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1001 ilagiirukuzhai  (common)
Thiruppugazh - 1001 ilagiirukuzhai - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

......... பாடல் .........

இலகி யிருகுழை கிழிகயல் விழியினு
     மிசையி னசைதரு மொழியினு மருவமர்
          இருள்செய் குழலினு மிடையினு நடையினு ...... மநுராக

இனிமை தருமொரு இதழினு நகையினு
     மிளைய ம்ருகமத தனகுவ டழகினு
          மியலு மயல்கொடு துணிவது பணிவது ...... தணியாதே

குலவி விரகெனு மளறிடை முழுகிய
     கொடிய நடலைய னடமிட வருபிணி
          குறுகி யிடஎம னிறுதியி லுயிரது ...... கொடுபோநாள்

குனகி யழுபவர் அயர்பவர் முயல்பவர்
     குதறு முதுபிண மெடுமென வொருபறை
          குணலை யிடஅடு சுடலையில் நடவுத ...... லினிதோதான்

மலையில் நிகரில தொருமலை தனையுடல்
     மறுகி யலமர அறவுர முடுகிய
          வலிய பெலமிக வுடையவ னடையவு ...... மதிகாய

மவுலி யொருபது மிருபது கரமுடன்
     மடிய வொருசரம் விடுபவபன் மதகரி
          மடுவில் முறையிட வுதவிய க்ருபைமுகில் ...... மதியாதே

அலகை யுயிர்முலை யமுதுசெய் தருளிய
     அதுல னிருபத மதுதனி லெழுபுவி
          யடைய அளவிட நெடுகிய அரிதிரு ...... மருகோனே

அவுண ருடலம தலமர அலைகட
     லறவு மறுகிட வடகுவ டனகிரி
          யடைய இடிபொடி படஅயில் விடவல ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இலகி இரு குழை கிழி கயல் விழியினும் ... விளங்குகின்ற
காதிலுள்ள குண்டலங்களை கிழித்துத் தாக்கும் கயல் மீன் போன்ற
கண்ணிலும்,

இசையின் அசை தரு மொழியினும் மரு அமர் இருள் செய்
குழலினும் இடையினும் நடையினும்
... இன்னிசை போல அசைந்து
எழும் பேச்சிலும், வாசனை உள்ள இருண்ட கூந்தலிலும், இடுப்பிலும்,
நடையிலும்,

அநுராக இனிமை தரும் ஒரு இதழினும் நகையினும் ... காம
ஆசையைத் தரும் இன்பம் கொடுக்கும் வாயிதழிலும், சிரிப்பிலும்,

இளைய ம்ருகமத தன குவடு அழகினும் ... முதிராத, கஸ்தூரி
அணிந்த, மலை போன்ற மார்பகத்தின் அழகிலும்,

இயலும் மயல் கொடு துணிவது பணிவது தணியாதே ... ஏற்படும்
மோகத்துடன் நான் துணிந்து ஈடுபட்டு இவ்வேசையருக்குப் பணிவது
குறையாமல்,

குலவி விரகு எனு அளறிடை முழுகிய கொடிய நடலையன் ...
பொழுது போக்கி, தந்திரச் செயல்களாகிய சேற்றில் மூழ்கிய பொல்லாத்
துன்பத்துக்கு ஆளானவனாகிய என்னிடம்,

நடமிட வரு பிணி குறுகியிட எமன் இறுதியில் உயிரது கொடு
போ நாள்
... தாண்டவம் இட எழுகின்ற நோய்களெல்லாம் வந்து அணுக,
முடிவில் யமன் என் உயிரைக் கொண்டு போகும் அந்த நாளில்,

குனகி அழுபவர் அயர்பவர் முயல்பவர் குதறு முது பிணம்
எடும் என
... அன்புச் சொற்களைச் சொல்லி அழுபவர்களும், சோர்வுற்று
இருப்பவர்களும், ஈமச் சடங்குகளைச் செய்ய முயற்சி செய்பவர்களும்,
(நேரமாகி விட்டது) குலைந்து அழுகிப் போகும் பிணத்தை எடுங்கள்
என்று கூற,

ஒரு பறை குணலை இட அடு சுடலையில் நடவுதல் இனிதோ
தான்
... அப்போது ஈமப் பறை ஒலிக்க, (உடலை எரித்து) அழிக்கின்ற
சுடு காட்டில் ஏகுதல் நல்லதாகுமோ?

மலையில் நிகர் இலது ஒரு மலை தனை உடல் மறுகி அலமர
அற உரம் முடுகிய வலிய பெல மிக உடையவன்
...
மலைகளுக்குள் தனக்கு ஒப்பில்லாததான ஒரு மேரு மலையை உடல்
கலங்கி வேதனைப்பட, மிக்க திடத்தைக் காட்டி எடுக்க முயன்றவனும்,
வன்மைப் பலத்தை நிரம்ப உடையவனுமான ராவணன்

அடையவும் அதிகாய மவுலி ஒருபதும் இருபதும் கரமுடன்
மடிய ஒரு சரம் விடுபவன்
... போரில் எதிர்த்து வரவும், அவனுடைய
பெருத்ததான உடலும், முடிகள் ஒரு பத்தும் இருபது கைகளுடன் அற்று
விழ ஒப்பற்ற அம்பைச் செலுத்தியவனாகிய ராமன்,

மத கரி மடுவில் முறை இட உதவிய க்ருபைமுகில் ...
கஜேந்திரன் என்ற யானை மடுவில் (முதலை வாய்ப்பட்டு) அழைத்த
போது உதவிய கருணை நிரம்பிய மேக வண்ணன்,

மதியாதே அலகை உயிர் முலை அமுது செய்து அருளிய
அதுலன்
... தன்னை மதிக்காமல் வந்த பெண் பேய் பூதனையின் உயிரை
முலைப் பாலுடன் உண்டு போக்கி அருளிய ஒப்பில்லாதவன்,

இரு பதம் அது தனில் எழு புவி அடைய அளவிட நெடுகிய
அரி திரு மருகோனே
... தனது இரு திருவடிகளால் ஏழுலகங்கள்
யாவையும் அளக்க ஓங்கி வளர்ந்தவனும் ஆகிய திருமாலின் அழகிய
மருகனே,

அவுணர் உடலம் அது அலமர அலை கடல் அறவும் மறுகிட ...
அசுரர்களுடைய உடல்கள் வேதனைப்படவும், அலை வீசும் கடல்
மிகவும் கலங்கவும்,

வட குவடு அன்ன கிரி அடைய இடி பொடிபட அயில் விட
வல பெருமாளே.
... வடக்கே உள்ள மேருமலை போன்ற கிரெளஞ்ச
மலை முழுவதும் இடிபட்டுப் பொடியாகவும் வேலாயுதத்தைச் செலுத்திய
பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.32  pg 3.33  pg 3.34  pg 3.35 
 WIKI_urai Song number: 1004 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1001 - ilagi irukuzhai (common)

ilaki yirukuzhai kizhikayal vizhiyinu
     misaiyi nasaitharu mozhiyinu maruvamar
          iruLsey kuzhalinu midaiyinu nadaiyinu ...... manurAka

inimai tharumoru ithazhinu nakaiyinu
     miLaiya mrukamatha thanakuva dazhakinu
          miyalu mayalkodu thuNivathu paNivathu ...... thaNiyAthE

kulavi virakenu maLaRidai muzhukiya
     kodiya nadalaiya nadamida varupiNi
          kuRuki yidaema niRuthiyi luyirathu ...... kodupOnAL

kunaki yazhupavar ayarpavar muyalpavar
     kuthaRu muthupiNa medumena vorupaRai
          kuNalai yidaadu sudalaiyil nadavutha ...... linithOthAn

malaiyil nikarila thorumalai thanaiyudal
     maRuki yalamara aRavura mudukiya
          valiya pelamika vudaiyava nadaiyavu ...... mathikAya

mavuli yorupathu mirupathu karamudan
     madiya vorusaram vidupavan mathakari
          maduvil muRaiyida vuthaviya krupaimukil ...... mathiyAthE

alakai yuyiarmulai yamuthusey tharuLiya
     athula nirupatha mathuthani lezhupuvi
          yadaiya aLavida nedukiya arithiru ...... marukOnE

avuNa rudalama thalamara alaikada
     laRavu maRukida vadakuva danakiri
          yadaiya idipodi padaayil vidavala ...... perumALE.

......... Meaning .........

ilaki iru kuzhai kizhi kayal vizhiyinum: In their kayal-fish-like eyes that streak up to the elegant ears and collide piercingly with the swinging studs,

isaiyin asai tharu mozhiyinum maru amar iruL sey kuzhalinum idaiyinum nadaiyinum: in their moving speech that is musical, in their fragrant and dark hair, in their waist and gait,

anurAka inimai tharum oru ithazhinum nakaiyinum: in their voluptuous and blissful lips and their smile,

iLaiya mrukamatha thana kuvadu azhakinum: and in their youthful, beautiful and mountain-like bosom smeared with the paste of musk,

iyalum mayal kodu thuNivathu paNivathu thaNiyAthE: I felt enchanted; with deep passion, I dared to indulge in the pleasure offered by these whores and ran their errands in an unabashed manner;

kulavi viraku enu aLaRidai muzhukiya kodiya nadalaiyan: I whiled away my time and drowned myself in the muddy slush of their manipulation; I fell a miserable victim to their terrible acts;

nadamida varu piNi kuRukiyida eman iRuthiyil uyirathu kodu pO nAL: I was infested with many diseases which danced about all over my body; ultimately, on the day when Yaman, God of Death, came down to snatch my life,

kunaki azhupavar ayarpavar muyalpavar kuthaRu muthu piNam edum ena: many people assembled crying and saying kind words about me; many remained in a depressed state; some people made an effort to carry out the funeral rites; some others yelled saying "It is about time we take this rotting corpse away";

oru paRai kuNalai ida adu sudalaiyil nadavuthal inithO thAn: at that time, funeral drums were beaten aloud; am I destined to be carried to the cremation ground like this to be consumed by fire?

malaiyil nikar ilathu oru malai thanai udal maRuki alamara aRa uram mudukiya valiya pela mika udaiyavan: With great physical stress and displaying his mighty valour, He tried to lift the unique mountain MEru, nonpareil among all the mountains;

adaiyavum athikAya mavuli orupathum irupathum karamudan madiya oru saram vidupavan: when that RAvaNan confronted Him in the battlefield, He wielded a matchless arrow that severed His huge body, knocking down his ten heads and twenty arms; He is that great RAmA;

matha kari maduvil muRai ida uthaviya krupaimukil: when the elephant GajEndran screamed for help from the pond (where the crocodile had grabbed its feet), He came to its rescue; He is the compassionate Lord with the hue of dark cloud;

mathiyAthE alakai uyir mulai amuthu seythu aruLiya athulan: He is the incomparable Lord (Krishnan) who devoured her life along with the breast-fed milk of the she-devil, PUthanai, who came to Him in utter disregard;

iru patham athu thanil ezhu puvi adaiya aLavida nedukiya ari thiru marukOnE: He assumed a humongous form in order to fully measure the seven worlds with His two feet; He is Lord VishNu, and You are His handsome nephew, Oh Lord!

avuNar udalam athu alamara alai kadal aRavum maRukida: Making the bodies of the demons shudder with pain, agitating the wavy seas,

vada kuvadu anna kiri adaiya idi podipada ayil vida vala perumALE.: and shredding into pieces the entire mountain of Krouncha comparable in size to Mount MEru in the North, You wielded Your spear, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1001 ilagi irukuzhai - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]