திருப்புகழ் 948 வனப்புற்றெழு  (திருப்புக்கொளியூர்)
Thiruppugazh 948 vanapputRezhu  (thiruppukkoLiyUr)
Thiruppugazh - 948 vanapputRezhu - thiruppukkoLiyUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்தத்தன தான தான தானன
     தனத்தத்தன தான தான தானன
          தனத்தத்தன தான தான தானன ...... தந்ததான

......... பாடல் .........

வனப்புற்றெழு கேத மேவு கோகிலம்
     அழைக்கப்பொரு மார னேவ தாமலர்
          மருத்துப்பயில் தேரி லேறி மாமதி ...... தொங்கலாக

மறுத்துக்கடல் பேரி மோத வேயிசை
     பெருக்கப்படை கூடி மேலெ ழாவணி
          வகுத்துக்கொடு சேம மாக மாலையில் ...... வந்துகாதிக்

கனக்கப்பறை தாய ளாவ நீள்கன
     கருப்புச்சிலை காம ரோவில் வாளிகள்
          களித்துப்பொர வாசம் வீசு வார்குழல் ...... மங்கைமார்கள்

கலைக்குட்படு பேத மாகி மாயும
     துனக்குப்ரிய மோக்ரு பாக ராஇது
          கடக்கப்படு நாம மான ஞானம ...... தென்றுசேர்வேன்

புனத்திற்றினை காவ லான காரிகை
     தனப்பொற்குவ டேயு மோக சாதக
          குனித்தப்பிறை சூடும் வேணி நாயகர் ...... நன்குமாரா

பொறைக்குப்புவி போலு நீதி மாதவர்
     சிறக்கத்தொகு பாசி சோலை மாலைகள்
          புயத்துற்றணி பாவ சூர னாருயிர் ...... கொண்டவேலா

சினத்துக்கடி வீசி மோது மாகட
     லடைத்துப்பிசி தாச னாதி மாமுடி
          தெறிக்கக்கணை யேவு வீர மாமனும் ...... உந்திமீதே

செனித்துச்சதுர் வேத மோது நாமனு
     மதித்துப்புகழ் சேவ காவி ழாமலி
          திருப்புக்கொளி யூரில் மேவு தேவர்கள் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

வனப்பு உற்று எழு கேத(ம்) மேவு(ம்) கோகிலம் அழைக்கப்
பொரு மாரன் ஏவ த(தா)ம் மலர்
... அழகு கொண்டு எழுகின்றதும்,
சோகத்தை விளைவிப்பதுமான குயில் கூவி அழைக்க, போரிடுவதற்கு
வந்த மன்மதன் தனது பாணங்களாகிய மலர் கொண்டு,

மருத்துப் பயில் தேரில் ஏறி மா மதி தொங்கலாக மறுத்துக்
கடல் பேரி மோதவே இசை பெருக்கப் படை கூடி மேல்
எழா
... தென்றற் காற்றாகிய தேரில் ஏறிக் கொண்டு, அழகிய சந்திரன்
வெண் குடையாக விளங்க, (அலைகள்) மாறி மாறி வரும் கடல் முரசப்
பறையாக மோத, (புல்லாங்குழலின்) இசையை பெருகச் செய்ய
சேனைகளாகிய மகளிர் கூடி, மேலெழுந்து புறப்பட்டு,

அணி வகுத்துக் கொ(ண்)டு சேமமாக மாலையில் வந்து
காதிக்கனக்கப் பறைதாய அளாவ நீள் கன காமர் கருப்பு
சிலை ஓ(ய்)வு இல் வாளிகள் களித்துப் பொர
... அணி வகுத்தது
போல நன்றாக மாலை நேரத்தில் வந்து கொல்லுவது போல, மிகுதியாக
பறை ஒலி விரிந்து பரவுதலாக, நீண்ட பெருமை வாய்ந்த அழகிய கரும்பு
வில் ஓய்தல் இல்லாது அம்புகளை மகிழ்ச்சியுடன் வீசி (என்னுடன்) போர்
செய்வதால்,

வாசம் வீசு வார் குழல் மங்கைமார்கள் கலைக்குள் படு பேதம் ஆகி
மாயும் அது உனக்குப் ப்ரியமோ கிருபாகரா இது கடக்கப்படு
நாமம் ஆன ஞானம் அது என்று சேர்வேன்
... நறுமணம் வீசும்
நீண்ட கூந்தலை உடைய மாதர்களின் ஆடையுள் அகப்பட்டு நான்
இறந்து போவது உனக்கு விருப்பம் தானோ? கருணாகரனே, இந்த என்
தலைவிதியைத் தாண்டிக் கடக்கக் கூடியதும், பெருமை பொருந்தியதும்
ஆகிய ஞான நிலையை நான் என்று கூடுவேன்?

புனத்தில் தினை காவலான காரிகை தனப் பொன் குவடு
ஏயும் மோக சாதக குனித்தப் பிறை சூடும் வேணி நாயகர் நல்
குமாரா
... தினைப் புனத்தில் காவல் புரிந்த பெண்ணாகிய வள்ளியின்
மார்பகங்களாகிய அழகிய மலையில் பொருந்திய ஆசையைக் கொண்ட
ஜாதகத்தை உடையவனே, வளைவுள்ள பிறையைச் சூடியுள்ள
சடையைக் கொண்ட சிவபெருமானுடைய நல்ல புதல்வனே,

பொறைக்குப் புவி போலும் நீதி மா தவர் சிறக்கத் தொகு
பாசி சோலை மாலைகள் புயத்து உற்று அணி பாவ சூரன்
ஆருயிர் கொண்ட வேலா
... பொறுமைக்கு பூமியைப் போலும்
இருந்து, தர்மநெறியில் நின்ற பெரிய தவசிகள் சிறந்து வாழ, நெருங்கிய
பசுமையான சோலைகளில் உள்ள மலர்களின் மாலைகளை புயத்தில்
அணிந்தவனும், பாவியுமாகிய சூரனுடைய அரிய உயிரைக் கவர்ந்த
வேலனே,

சினத்துக் கடி வீசி மோது(ம்) மா கடல் அடைத்துப் பிசித
அசன ஆதி மா முடி தெறிக்கக் கணை ஏவும் வீர மாமனும்
...
கோபித்து வேகமாக (அலைகளை) வீசி மோதுகின்ற பெரிய கடலை
அணையிட்டு அடைத்து, மாமிசம் உண்ணும் அரக்கர் முதல்வனான
ராவணனுடைய சிறந்த முடிகள் அற்று விழும்படி பாணத்தை ஏவிய வீரம்
பொருந்திய மாமனாகிய திருமாலும்,

உந்தி மீதே செனித்துச் சதுர் வேதம் ஓது நாமனு(ம்) மதித்துப்
புகழ் சேவகா
... அத்திருமாலின் கொப்பூழில் தோன்றி, நான் மறைகள்
ஓதும் பெருமை பொருந்திய பிரமனும் நன் மதிப்பு வைத்துப் புகழ்கின்ற
வலிமையாளனே,

விழா மலி திருப்புக்கொளியூரில் மேவும் தேவர்கள்
தம்பிரானே.
... திருவிழாக்கள் நிறைந்து பொலியும்
திருப்புக்கொளியூரில்* வீற்றிருப்பவனே, தேவர்கள் தம்பிரானே.


* திருப்புக்கொளியூர் அவிநாசிக்கு மிகச் சமீபத்தில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1323  pg 2.1324  pg 2.1325  pg 2.1326 
 WIKI_urai Song number: 952 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 948 - vanapputRezhu (thiruppukkoLiyUr)

vanapputRezhu kEtha mEvu kOkilam
     azhaikkapporu mAra nEva thAmalar
          maruththuppayil thEri lERi mAmathi ...... thongalAka

maRuththukkadal pEri mOtha vEyisai
     perukkappadai kUdi mEle zhAvaNi
          vakuththukkodu sEma mAka mAlaiyil ...... vanthukAthik

kanakkappaRai thAya LAva neeLkana
     karuppucchilai kAma rOvil vALikaL
          kaLiththuppora vAsam veesu vArkuzhal ...... mangaimArkaL

kalaikkutpadu pEtha mAki mAyuma
     thunakkupriya mOkru pAka rAithu
          kadakkappadu nAma mAna njAnama ...... thenRusErvEn

punaththitRinai kAva lAna kArikai
     thanappoRkuva dEyu mOka sAthaka
          kuniththappiRai cUdum vENi nAyakar ...... nankumArA

poRaikkuppuvi pOlu neethi mAthavar
     siRakkaththoku pAsi sOlai mAlaikaL
          puyaththutRaNi pAva cUra nAruyir ...... koNdavElA

sinaththukkadi veesi mOthu mAkada
     ladaiththuppisi thAsa nAthi mAmudi
          theRikkakkaNai yEvu veera mAmanum ...... unthimeethE

seniththucchathur vEtha mOthu nAmanu
     mathiththuppukazh sEva kAvi zhAmali
          thiruppukkoLi yUril mEvu thEvarkaL ...... thambirAnE.

......... Meaning .........

vanappu utRu ezhu kEtha(m) mEvu(m) kOkilam azhaikkap poru mAran Eva tha(a)m malar: It soars up in the sky beautifully; it is the cuckoo that creates meloncholy while cooing aloud; Manmathan, God of Love, has come to wage a war wielding His flowery arrows;

maruththup payil thEril ERi mA mathi thongalAka maRuththuk kadal pEri mOthavE isai perukkap padai kUdi mEl ezhA: He mounts the chariot of the southerly breeze under the shade of the moon that serves as the white, royal umbrella; in the background, the waves of the sea repeatedly lash the shore making the sound of the drum; His army of maids plays the flute to provide the music with its tempo building up;

aNi vakuththuk ko(N)du sEmamAka mAlaiyil vanthu kAthikkanakkap paRaithAya aLAva neeL kana kAmar karuppu silai O(y)vu il vALikaL kaLiththup pora: He marches with His fleet and arrives in the early evening determined to kill; the beating of the drums intensifies and the sound reverberates everywhere; His tall, pretty and famous bow of sugarcane wields, with relish, the arrows on me ceaselessly as if to wage a war;

vAsam veesu vAr kuzhal mangaimArkaL kalaikkuL padu pEtham Aki mAyum athu unakkup priyamO kirupAkarA ithu kadakkappadu nAmam Ana njAnam athu enRu sErvEn: (because of that war,) I am left to die buried inside the attire of the whores whose hair is long and fragrant; is this what You wish, Oh Lord? When will I ever attain the illustrious state of knowledge that would enable me to bypass this fate of mine?

punaththil thinai kAvalAna kArikai thanap pon kuvadu Eyum mOka sAthaka kuniththap piRai cUdum vENi nAyakar nal kumArA: Your horoscope is such that Your desire is fulfilled, namely, hugging the beautiful and mountain-like bosom of VaLLi, the damsel who guarded the millet-field! You are the great son of Lord SivA who wears the crooked and crescent moon on His matted hair!

poRaikkup puvi pOlum neethi mA thavar siRakkath thoku pAsi sOlai mAlaikaL puyaththu utRu aNi pAva cUran Aruyir koNda vElA: Those eminent sages known for their penance were like the earth for their forebearance; they were able to prosper, remaining steadfast in the righteous path, because You took the precious life of the sinful demon SUran who adorned his shoulders with closely-strung garlands of flowers plucked from the fresh groves, Oh Lord with the Spear!

sinaththuk kadi veesi mOthu(m) mA kadal adaiththup pisitha asana Athi mA mudi theRikkak kaNai Evum veera mAmanum: He blocked the vast and angry sea that lashed the shore with rapid waves by building a bridge across it; the renowned and crowned heads of RAvaNan, the leader of the demons who devour flesh, were all severed by the arrows wielded by Him; He is Lord VishNu, Your valorous uncle;

unthi meethE seniththuc chathur vEtham Othu nAmanu(m) mathiththup pukazh sEvakA: He, along with Lord Brahma, who emerged from His belly, and who is famous for His dexterity in chanting the four VEdAs, hold Your valour in the highest esteem and praise You, Oh Lord!

vizhA mali thiruppukkoLiyUril mEvum thEvarkaL thambirAnE.: You are seated in this town, ThiruppukoLiyUr* which is famous for many temple-festivals; and You are the Lord of the celestials, Oh Great One!


* ThiruppukoLiyUr is located near the town, AvinAsi.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 948 vanapputRezhu - thiruppukkoLiyUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]