திருப்புகழ் 767 ஒய்யா ரச்சிலை  (சீகாழி)
Thiruppugazh 767 oiyArachchilai  (seegAzhi)
Thiruppugazh - 767 oiyArachchilai - seegAzhiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தய்யா தத்தன தானன தானன
     தய்யா தத்தன தானன தானன
          தய்யா தத்தன தானன தானன ...... தனதான

......... பாடல் .........

ஒய்யா ரச்சிலை யாமென வாசனை
     மெய்யா ரப்பணி பூஷண மாலைக
          ளுய்யா நற்கலை யேகொடு மாமத ...... விதமாகி

ஒவ்வா ரிப்படி யோரென வேயிரு
     கையா ரக்கணை மோதிர மேய்பல
          வுள்ளார் செப்பிட ஏமுற நாளிலு ...... முடல்பேணிச்

செய்வா ரிப்படி யேபல வாணிப
     மிய்யா ரிற்பண மேயொரு காசிடை
          செய்யார் சற்பனை காரர்பி சாசரு ...... னடிபேணாச்

செய்வா ரிற்படு நானொரு பாதகன்
     மெய்யா எப்படி யோர்கரை சேர்வது
          செய்யா யற்புத மேபெற வோர்பொரு ...... ளருள்வாயே

மையா ரக்கிரி யேபொடி யாய்விட
     பொய்சூ ரப்பதி யேகெட வானவர்
          வையாய் பொற்சர ணாஎன வேதொழ ...... விடும்வேலா

வையா ளிப்பரி வாகன மாகொளு
     துவ்வா ழிக்கட லேழ்மலை தூளிசெய்
          மைபோ லக்கதி ரேய்நிற மாகிய ...... மயில்வாழ்வே

தெய்வா னைக்கர சேகுற மான்மகிழ்
     செய்யா முத்தமி ழாகர னேபுகழ்
          தெய்வீ கப்பர மாகுரு வேயென ...... விருதூதத்

திய்யா ரக்கழு வேறிட நீறிடு
     கையா அற்புத னேபிர மாபுர
          செய்கா ழிப்பதி வாழ்முரு காசுரர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஒய்யாரச் சிலையாம் என வாசனை மெய் ஆரப் பணி பூஷண
மாலைகள் உய்யா நற் கலையே கொடு மா மத இதமாகி
...
அலங்காரமான சிலை உருவம் என்று சொல்லும்படி, நறுமணம் உடலில்
நிரம்ப, அணி ஆபரண மாலைகளைச் சுமந்து, நல்ல ஆடையை அணிந்து,
மிக்க காம இன்பம் கொடுப்பவர் ஆகி,

ஒவ்வார் இப்படியோர் எனவே இரு கை ஆரக் கணை
மோதிரம் ஏய் பல உள்ளார்
... தமக்கு ஒப்பாகமாட்டார் இந்த பூமியில்
உள்ளோர் என்று சொல்லும்படியாக இரு கைகளிலும் முத்திரை மோதிரம்
பல அணிந்தவர்களாய்,

செப்பிட ஏம் உற நாளிலும் உடல்பேணிச் செய்வார் இப்படியே
பல வாணிபம்
... சொல்லப்போனால், கலக்கம் உறும் மாதவிடாய்
நாட்களிலும் தம் உடலை விரும்பிப் பாதுகாத்து இப்படியே பல வியாபாரம்
செய்வார்கள்.

இய்யார் இல் பணமே ஒரு காசு இடை செய்யார் சற்பனைகாரர்
பிசாசர் உ(ன்)னடி பேணாச் செய்வாரில் படு நான் ஒரு
பாதகன்
... பணத்தைத் தானமாகக் கொடாதவர்கள். ஒரு காசு அளவு
கூட வெளிவிடார்கள். வஞ்சனை செய்பவர்கள். பிசாசு போன்றவர்கள்.
(தமது வேசைத்தொழிலைச்) செய்பவர்கள் கூட்டத்தில் உன்
திருவடியைப் போற்றாது அகப்பட்ட நான் ஒரு பாவி.

மெய்யா எப்படி ஓர் கரை சேர்வது செய்யா அற்புதமே பெற ஓர்
பொருள் அருள்வாயே
... உண்மையாக எப்படி ஒரு கரை நான்
சேர்வது? செந்நிற வேளே, அற்புதம் ஆகும் வண்ணம் அந்த ஒப்பற்ற
பொருளை எனக்கு உபதேசித்து அருள்வாயாக.

மை ஆர் அக் கிரியே பொடியாய் விட பொய் சூர் அப்பதியே
கெட வானவர் வையாய் பொன் சரணா எனவே தொழ விடும்
வேலா
... இருள் சூழ்ந்த கிரெளஞ்ச மலை பொடிபட்டுக் கீழே விழவும்,
பொய் நிறைந்த அசுரர்களின் தலைவனான சூரனுடைய ஊர் அழியவும்,
தேவர்கள் எங்களை நல்ல நிலையில் வைத்தருள்வாய், அழகிய
பாதங்களை உடையவனே என்று வேண்டி வணங்க வேலாயுதத்தைச்
செலுத்திய வீரனே,

வையாளிப் பரி வாகன மா கொளு துவ்வு ஆழிக் கடல் ஏழ்
மலை தூளி செய் மை போலக் கதிர் ஏய் நிறமாகிய மயில்
வாழ்வே
... சவாரிக்கு உதவும் வாகனமாக குதிரை போன்ற மயிலைக்
கொண்ட வாழ்வே, (அகத்தியரால்) உண்ணப்பட்ட ஆழமான ஏழு
கடல்கள், ஏழு மலைகள் ஆகியவை கலக்கமுற, பசுமை நிறம் கொண்ட
ஒளி பொருந்திய மயில் மேல் வரும் செல்வமே,

தெய்வ யானைக்கு அரசே குற மான் மகிழ் செய்யா முத்தமிழ்
ஆகரனே புகழ் தெய்வீகப் பரமா குருவே என விருது ஊத
...
தேவயானைக்கு நாயகனே, குறப் பெண் வள்ளி மகிழ்கின்ற செந்நிறம்
உடையவனே, முத்தமிழுக்கு இருப்பிடமானவனே, புகழ் நிரம்பிய
தெய்வீகம் பொருந்திய பரம் பொருளே, சிறந்த குருவே என்று வெற்றிச்
சின்னங்கள் ஊத,

திய்யார் அக் கழு ஏறிட நீறு இடு கையா அற்புதனே மா புர
செய் காழிப் பதி வாழ் முருகா சுரர் பெருமாளே.
... தீயராகிய
சமணர்கள் அந்தக் கழுவில் ஏறும்படி திருநீற்றைப் பரப்பியிட்ட
(திருஞானசம்பந்தராக வந்த) திருக்கரத்தனே, அற்புதமானவனே,
பிரமாபுரம் என்னும் பெயர் பெற்றதும், வயல்கள் சூழ்ந்ததுமான
சீகாழியில்* வீற்றிருக்கும் முருகனே, தேவர்கள் பெருமாளே.


* சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.
சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்.


சீகாழிக்கு உரிய பெயர்கள்:

சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம்,

பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம்,

வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன்
                  பூஜித்த தலம்,

தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால்
                  இப் பெயர் வந்தது,

பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம்,

சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு
                  கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம்,

புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக்
                  கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம்,

சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம்,

கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில்
                  பெற்று, அது நீங்கப் பூசித்த தலம்,

வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம்,

கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம்,

முதுநகர் - ,

புகலி -
            ... என்பன.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.853  pg 2.854  pg 2.855  pg 2.856 
 WIKI_urai Song number: 771 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 767 - oiyA rachchilai (seegAzhi)

oyyA racchilai yAmena vAsanai
     meyyA rappaNi pUshaNa mAlaika
          LuyyA naRkalai yEkodu mAmatha ...... vithamAki

ovvA rippadi yOrena vEyiru
     kaiyA rakkaNai mOthira mEypala
          vuLLAr seppida EmuRa nALilu ...... mudalpENic

cheyvA rippadi yEpala vANipa
     miyyA riRpaNa mEyoru kAsidai
          seyyAr saRpanai kArarpi sAsaru ...... nadipENAc

cheyvA riRpadu nAnoru pAthakan
     meyyA eppadi yOrkarai sErvathu
          seyyA yaRputha mEpeRa vOrporu ...... LaruLvAyE

maiyA rakkiri yEpodi yAyvida
     poycU rappathi yEkeda vAnavar
          vaiyAy poRchara NAena vEthozha ...... vidumvElA

vaiyA Lippari vAkana mAkoLu
     thuvvA zhikkada lEzhmalai thULisey
          maipO lakkathi rEyniRa mAkiya ...... mayilvAzhvE

theyvA naikkara sEkuRa mAnmakizh
     seyyA muththami zhAkara nEpukazh
          theyvee kappara mAguru vEyena ...... viruthUthath

thiyyA rakkazhu vERida neeRidu
     kaiyA aRputha nEpira mApura
          seykA zhippathi vAzhmuru kAsurar ...... perumALE.

......... Meaning .........

oyyArac chilaiyAm ena vAsanai mey Arap paNi pUshaNa mAlaikaL uyyA naR kalaiyE kodu mA matha ithamAki: Looking like a decorated statuette, with fragrance permeating through the entire body, wearing jewels and chains of precious gems and excellent attire, these women are set to offer erotic pleasure;

ovvAr ippadiyOr enavE iru kai Arak kaNai mOthiram Ey pala uLLAr: as if there is none in the world who could be compared to them, they wear several rings with the royal seal on the fingers of both hands;

seppida Em uRa nALilum udalpENic cheyvAr ippadiyE pala vANipam: so to speak, in order to maintain and nourish their body, they carry on many a trade of flesh even on those bothersome days of menstruation;

iyyAr il paNamE oru kAsu idai seyyAr saRpanaikArar pisAsar u(n)nadi pENAc cheyvAril padu nAn oru pAthakan: they never give money by way of charity; they never let out even a coin from their clutch; they are treacherous; they are possessed by fiend; having been trapped in the company of these professional whores, I remain a sinner without offering worship to Your hallowed feet.

meyyA eppadi Or karai sErvathu seyyA aRputhamE peRa Or poruL aruLvAyE: When will I reach the shore in reality? Oh reddish Lord, kindly preach to me that matchless and wonderful Principle of True Knowledge!

mai Ar ak kiriyE podiyAy vida poy cUr appathiyE keda vAnavar vaiyAy pon charaNA enavE thozha vidum vElA: As Mount Krouncha surrounded by darkness was shattered to pieces, as the town of SUran, the leader of the demons full of lies, was destroyed and as the celestials fell at Your feet beseeching "Oh Lord with hallowed feet, kindly rescue us and restore our Kingdom", You wielded Your Spear, Oh Valorous One!

vaiyALip pari vAkana mA koLu thuvvu Azhik kadal Ezh malai thULi sey mai pOlak kathir Ey niRamAkiya mayil vAzhvE: Oh Treasure, You mount the peacock that serves as ride-worthy horse; the seven seas and the seven hills which were all swallowed in a gulp (by Sage Agasthiyar) became agitated when You flew mounting that greenish and bright peacock, Oh Lord!

theyva yAnaikku arasE kuRa mAn makizh seyyA muththamizh AkaranE pukazh theyveekap paramA guruvE ena viruthu Utha: The triumphant trumpets were blown aloud acclaiming "You are the Consort of DEvayAnai; You are the reddish Lord in whose company VaLLi, the damsel of the KuRavAs, delights; You are the seat of all the three branches of Tamil; You are the Supreme Lord filled with fame and divinity; Oh Great Master!"

thiyyAr ak kazhu ERida neeRu idu kaiyA aRputhanE mA pura sey kAzhip pathi vAzh murukA surar perumALE.: (Coming as ThirugnAna Sambandhar) You sent the wicked samaNAs to the gallows and distributed the holy ash with Your hallowed hand, Oh Lord! Oh Wonderful One! You are seated in SeekAzhi*, known as BrahmApuram and surrounded by paddy fields, Oh MurugA! You are the Lord of the celestials, Oh Great One!


* SeegAzhi is 11 miles south of Chidhambaram.
It is the place of birth of one of the Saivite Quartets, ThirugnAna SambandhAr.


The various names of SeekAzhi are as follows:

1. VENupuram: The shrine where Indra named VENu worshipped to overcome his fear of a demon, GajamugA.
2. Thiruppukali: It is the place of refuge for the celestials who were terrified by the demon SUran.
3. Venguru: It is the shrine where Brahaspathi (Jupiter) worshipped.
4. PUntharAy: It is the shrine where Earth and ThArai worshipped.
5. Sirapuram: When the nectar was distributed by Lord VishNu to the celestials, Rahu and KEthu stealthily came as
     DEvAs and were beheaded by VishNu; at this shrine, they worshipped and got their heads back.
6. PuRavam: At this shrine a sage PrajApathi came in the disguise of a pigeon and offered his flesh as a sacrifice
     to save the king.
7. SaNpai: Sage DurvAsA, known as Sanpaimuni, worshipped at this shrine.
8. SeekAzhi: A serpent named KALi worshipped at this shrine.
9. Kochchai: Sage ParAsara was cursed by other sages and developed a stench all over his body which was removed
     after his worship at this shrine.
10. Kazhumalam: This is a shrine where all the sins of souls are washed away.
11. Piramapuram: This is a shrine where Lord Brahma offered worship.
12. ThONipuram: This shrine had the distinction of floating like a boat during the devastating flood at the end
     of the aeons.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 767 oiyA rachchilai - seegAzhi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]