திருப்புகழ் 317 அரி அயன் புட்பி  (காஞ்சீபுரம்)
Thiruppugazh 317 ariaiyanputpi  (kAnjeepuram)
Thiruppugazh - 317 ariaiyanputpi - kAnjeepuramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான

......... பாடல் .........

அரியயன் புட்பிக் கக்குழு மிக்கொண்
     டமரர்வந் திக்கத் தட்டுரு வச்சென்
          றவுணரங் கத்தைக் குத்திமு றித்தங் ...... கொருகோடி

அலகைநின் றொத்தித் தித்திய றுத்தும்
     பலவியங் கொட்டச் சக்கடி கற்றந்
          தரியுடன் பற்றிக் குச்சரி மெச்சும் ...... படிபாடிப்

பரிமுகங் கக்கச் செக்கண்வி ழித்தும்
     பவுரிகொண் டெட்டுத் திக்கையு டைத்தும்
          படுகளம் புக்குத் தொக்குந டிக்கும் ...... படிமோதிப்

படைபொருஞ் சத்திப் பத்மநி னைத்துஞ்
     சரவணன் கச்சிப் பொற்பனெ னப்பின்
          பரவியுஞ் சித்தத் துக்குவ ரத்தொண் ...... டடைவேனோ

பெரியதண் செச்சைக் கச்சணி வெற்பும்
     சிறியவஞ் சிக்கொத் தெய்த்தநு சுப்பும்
          ப்ரிதியொழிந் தொக்கக் கைக்கிளை துத்தங் ...... குரலாதி

பிரிவில்கண் டிக்கப் பட்டவு ருட்டும்
     கமுகமுஞ் சிற்பச் சித்ரமு ருக்கும்
          பிரதியண் டத்தைப் பெற்றருள் சிற்றுந் ...... தியும்நீலக்

கரியகொண் டற்கொப் பித்தக துப்புந்
     திலதமுஞ் செப்பொற் பட்டமு முத்தின்
          கனவடங் கட்டப் பட்டக ழுத்துந் ...... திருவான

கருணையுஞ் சுத்தப் பச்சைவ னப்புங்
     கருதுமன் பர்க்குச் சித்திய ளிக்குங்
          கவுரியம் பைக்குப் புத்ரஎ வர்க்கும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அரி அயன் புட்பிக்கக் குழுமிக் கொண்டு அமரர் வந்திக்க ...
திருமாலும் பிரமனும் தங்கள் மலர்வாய் திறந்து தமது குறைகளை எடுத்துக்
கூற, ஒன்று சேர்ந்த தேவர்கள் வணங்கி நிற்க,

தட்டு உருவச் சென்று அவுணர் அங்கத்தைக் குத்தி முறித்து ...
ஊடுருவச் சென்று (உனது வேல்) அசுரர்களுடைய உடல்களைக்
குத்தியும், முறித்தும்,

அங்கு ஒரு கோடி அலகை நின்று ஒத்தித் தித்தி அறுத்தும் ...
அப்போது அவ்விடத்தில் ஒரு கோடி பேய்கள் நின்று தாளம் போட்டு
(தாம்) தித்தி என்ற தாள ஜதியைக் கூட்டியும்,

பல இயம் கொட்டச் சக்கடி கற்று ... பல விதமான இசைக்
கருவிகளை முழக்கி பரிகாசம் பேசியும்,

அந்தரியுடன் பற்றிக் குச்சரி மெச்சும்படி பாடி ... துர்க்கையுடன்
சேர்ந்து குச்சரி என்னும் ஒரு பண்ணை (குர்ஜரி என்ற ராகத்தை)
மெச்சி வியக்கும்படி பாடியும்,

பரி முகம் கக்கச் செக்கண் விழித்தும் ... வடவா முகாக்கினி போல்
தீயை வெளிப்படுத்தி சிவந்த கண்களை விழித்தும்,

பவுரி கொண்டு எட்டுத் திக்கை உடைத்தும் ... மண்டலமாய்
ஆடும் கூத்து வகையை ஆடி எட்டு திசைகளையும் அதிர்ச்சியுறச் செய்தும்,

படு களம் புக்குத் தொக்கு நடிக்கும்படி மோதி ... போர்க்களத்தில்
நுழைந்து ஒன்று சேர்ந்து நடனம் செய்யவும், (அசுரர்களைத்) தாக்கி,

படை பொரும் சத்திப் பத்ம நினைத்தும் ... எவ்விதமான
படைகளையும் பொருது வெற்றி பெற வல்ல சக்தி வேலை ஏந்தும் தாமரை
போன்ற திருக்கரங்களை தியானித்தும்,

சரவணன் கச்சி பொற்பன் எனப் பின் பரவியும் ... சரவணன்
என்றும் காஞ்சி நகரில் வாழும் அழகன் என்றும் பின்பு பலவாறு போற்றியும்

சித்தத்துக்கு வரத் தொண்டு அடைவேனோ ... (அத்தகைய பக்தி)
என் மனதில் உதிக்கும்படி, தொண்டு செய்யும் பேற்றை நான்
அடைவேனோ?

பெரிய தண் செச்சைக் கச்சு அணி வெற்பும் ... பெரிய, குளிர்ந்த
குங்குமக் குழம்பு கொண்ட கச்சை அணிந்த மலை போன்ற மார்பும்,

சிறிய வஞ்சிக் கொத்து எய்த்த நுசுப்பும் ... சிறிய வஞ்சிக் கொடி
போன்று இளைத்த இடையும்,

ப்ரிதி ஒழிந்து ஒக்கக் கைக்கிளை துத்தம் குரல் ஆதி பிரிவில்
கண்டு இக்கப்பட்ட உருட்டும் கமுகமும்
... விருப்பம் முழுதும்
ஒழிந்து ஓர் இசையில் தான் அதிக விருப்பம் என்று இல்லாமல் எல்லா
இசை வகைகளையும், கைக்கிளை, துத்தம்* முதலான இசைப் பிரிவுகளில்
பகிர்க்கப்பட்ட, புரளும் குரலிசையும், ஸ்வர பேதமும்,

சிற்பச் சித்ரம் உருக்கும் பிரதி அண்டத்தைப் பெற்று அருள்
சிற்று உந்தியும்
... சிற்ப நூல்களில் சொல்லப்பட்ட அழகிய உருக்கமான
நுண்கலையும், (இந்த ப்ரபஞ்சத்தின்) ஒவ்வொரு அண்டத்தையும்
பெற்றருளியதுமான சிறிய வயிறும்,

நீலக் கரிய கொண்டற்கு ஒப்பித்த கதுப்பும் ... இருண்ட கறுத்த
மேகத்துக்கு நிகரான கூந்தலும்,

திலகமும் செம் பொன் பட்டமும் முத்தின் கன வடம்
கட்டப்பட்ட கழுத்தும்
... நெற்றிப் பொட்டும், செம் பொன் பட்டமும்,
முத்தின் சிறந்த மாலை கட்டப்பட்ட கழுத்தும்,

திருவான கருணையும் சுத்தப் பச்சை வனப்பும் ... தெய்வத்
தன்மை வாய்ந்த கருணையும், சுத்தமான பச்சை நிற அழகும் உள்ளவளும்,

கருதும் அன்பர்க்குச் சித்தி அளிக்கும் கவுரி அம்பைக்கு புத்ர
எவர்க்கும் பெருமாளே.
... தியானிக்கும் அடியார்களுக்கு வீடு பேற்றை
அளிக்கும் அம்பிகையுமான கெளரி (பார்வதி) தேவிக்கு மகனே,
எல்லார்க்கும் பெருமாளே.


* தமிழின் ஏழிசைகள்:

குரல் (ஷட்ஜம்), துத்தம் (ரிஷபம்), கைக்கிளை (காந்தாரம்), உழை (மத்திமம்),
இளி (பஞ்சமம்), விளரி (தைவதம்), தாரம் (நிஷாதம்) என்பன.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.35  pg 2.36  pg 2.37  pg 2.38 
 WIKI_urai Song number: 459 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 317 - ari aiyan putpi (kAnjeepuram)

ariyayan putpik kakkuzhu mikkoN
     damararvan thikkath thatturu vacchen
          RavuNaran gaththaik kuththimu Riththan ...... gorukOdi

alakainin Roththith thiththiya Ruththum
     palaviyang kottac chakkadi katRan
          thariyudan patRik kucchari mecchum ...... padipAdip

parimukang kakkac chekkaNvi zhiththum
     pavurikoN dettuth thikkaiyu daiththum
          padukaLam pukkuth thokkuna dikkum ...... padimOthip

padaiporunj caththip pathmani naiththum
     saravaNan kacchip poRpane nappin
          paraviyum siththath thukkuva raththoN ...... dadaivEnO

periyathaN secchaik kacchaNi veRpum
     siRiyavan jikkoth theyththanu suppum
          prithiyozhin thokkak kaikkiLai thuththang ...... kuralAthi

pirivilkaN dikkap pattavu ruttum
     kamukamum siRpac chithramu rukkum
          pirathiyaN daththaip petRaruL sitRun ...... thiyumneelak

kariyakoN daRkop piththaka thuppum
     thilathamum ceppoR pattamu muththin
          kanavadang kattap pattaka zhuththum ...... thiruvAna

karuNaiyum suththap pacchaiva nappum
     karuthuman parkkuc chiththiya Likkum
          kavuriyam paikkup puthrae varkkum ...... perumALE.

......... Meaning .........

ari ayan putpikkak kuzhumik koNdu amarar vanthikka: VishNu and BrahmA opened their flower-like mouth and stated their grievance; all those celestials who had assembled there prostrated at Your feet;

thattu uruvac chenRu avuNar angaththaik kuththi muRiththu: piercing the bodies of the demons, Your spear stabbed and chopped them down;

angu oru kOdi alakai ninRu oththith thiththi aRuththum: at that time, millions of devils stood there clapping with their hands to the meter of "thAm thiththi";

pala iyam kottac chakkadi katRu: they also tuned up many musical instruments giggling jeeringly among themselves;

anthariyudan patRik kucchari mecchumpadi pAdi: they joined in chorus with DurgA DEvi singing the Raga Gurjari in the most astonishing way;

pari mukam kakkac chekkaN vizhiththum: they opened their reddish eyes wide and sparks of fire were emitted like the vadavA muka agni (the inferno that spreads from the north pole on the doom's day);

pavuri koNdu ettuth thikkai udaiththum: they danced the spiral dance (called pavuri) causing tremor in the eight directions;

padu kaLam pukkuth thokku nadikkumpadi mOthi: they landed en masse on the battlefield, all of them dancing together, and began to beat up the demons;

padai porum saththip pathma ninaiththum: they meditated upon Your hallowed lotus-hands which held the powerful spear capable of conquering any weapon;

saravaNan kacchi poRpan enap pin paraviyum: they worshipped You praising Your name in many ways as SaravaNan and the handsome Lord of KAnchipuram!

siththaththukku varath thoNdu adaivEnO: In order that I too could acquire that kind of devotion, will I be fortunate to serve You, Oh Lord?

periya thaN secchaik kacchu aNi veRpum: On Her large mountain-like bosom She wears tight blouse and applies cold paste of vermilion;

siRiya vanjik koththu eyththa nusuppum: Her slender waist is like the vanji (rattan reed) creeper;

prithi ozhinthu okkak kaikkiLai thuththam kural Athi pirivil kaNdu ikkappatta uruttum kamukamum: Her divine and vibrant voice never differentiates between many musical patterns, subdivided into shadjam, rishabam etc., (kaikkiLai, thuththam in Tamil Music*) nor does it show any preference to one kind of music; Her mastery in permutating the musical notes;

siRpac chithram urukkum pirathi aNdaththaip petRu aruL sitRu unthiyum: Her display of moving fine arts that is described in texts on the art of sculpture; Her petite and thin belly that has graciously delivered every planet in this universe;

neelak kariya koNdaRku oppiththa kathuppum: She has dark hair looking like dense black cloud;

thilakamum sem pon pattamum muththin kana vadam kattappatta kazhuththum: vermilion mark on Her forehead; reddish golden hair-band and pearl necklace adorning Her lovely neck;

thiruvAna karuNaiyum suththap pacchai vanappum: Divine compassion; and pure green complexion;

karuthum anparkkuc chiththi aLikkum kavuri ampaikku puthra evarkkum perumALE.: for all the devotees who meditate on Her, She offers liberation; and She is Mother Gowri (PArvathi), and You are Her son! You are the Lord of all, Oh Great One!


* The seven notes in Tamil Music are:

kural (shadjam), thuththam (rishapam), kaikkiLai (kAnthAram), uzhai (maththimam), iLi (panjamam), viLari (thaivatham) and thAram (nishAtham).

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 317 ari aiyan putpi - kAnjeepuram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]