திருப்புகழ் 244 உடலி னூடு  (திருத்தணிகை)
Thiruppugazh 244 udalinUdu  (thiruththaNigai)
Thiruppugazh - 244 udalinUdu - thiruththaNigaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

......... பாடல் .........

உடலி னூடு போய்மீளு முயிரி னூடு மாயாத
     உணர்வி னூடு வானூடு ...... முதுதீயூ

டுலவை யூடு நீரூடு புவியி னூடு வாதாடு
     மொருவ ரோடு மேவாத ...... தனிஞானச்

சுடரி னூடு நால்வேத முடியி னூடு மூடாடு
     துரிய வாகு லாதீத ...... சிவரூபம்

தொலைவி லாத பேராசை துரிச றாத வோர்பேதை
     தொடுமு பாய மேதோசொ ...... லருள்வாயே

மடல றாத வாரீச அடவி சாடி மாறான
     வரிவ ரால்கு வால்சாய ...... அமராடி

மதகு தாவி மீதோடி யுழவ ரால டாதோடி
     மடையை மோதி யாறூடு ...... தடமாகக்

கடல்பு காம காமீனை முடுகி வாளை தான்மேவு
     கமல வாவி மேல்வீழு ...... மலர்வாவிக்

கடவுள் நீல மாறாத தணிகை காவ லாவீர
     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

உடலி னூடு போய்மீளும் உயிரி னூடு ... உடலுக்கு உள்ளும்,
உடலில் சென்று மீளுகின்ற உயிருக்குள்ளும்,

மாயாத உணர்வினூடு வானூடு முதுதீயூடு ... அழியாத
உணர்ச்சியுள்ளும், ஆகாயத்துள்ளும், முற்றிய தீக்குள்ளும்,

உலவையூடு நீரூடு புவியினூடு ... காற்றினுள்ளும், நீரின் உள்ளும்,
மண்ணினுள்ளும்,

வாதாடும் ஒருவரோடு மேவாத ... சமயவாதம் புரிகின்ற
எவரிடத்திலும் காணக்கிடைக்காத

தனிஞானச் சுடரினூடு ... ஒப்பற்ற ஞான ஒளியினுக்குள்ளும்,

நால்வேத முடியினூடும் ஊடாடு ... நான்கு வேத உச்சியிலும்
ஊடாடுகின்றதும்,

துரிய ஆகுல அதீத சிவரூபம் ... துரிய* நிலையில் இருப்பதும்,
துன்பங்கள் கடந்த நிலையில் உள்ளதுமாகிய சிவ ரூபத்தை,

தொலைவிலாத பேராசை துரிசு அறாத வோர்பேதை ...
முடிவற்ற பேராசையும் குற்றமும் நீங்காத ஓர் மூடனாகிய அடியேன்

தொடுமுபாயம் ஏதோசொல் அருள்வாயே ... அடைவதற்கு உரிய
வழி எதுவோ, அந்த உபதேச மொழியைச் சொல்லி வழிகாட்டி
அருள்வாயாக.

மடல் அறாத வாரீச அடவி சாடி ... இதழ்கள் நீங்காத தாமரைப்
பூவின்காட்டை அழித்து,

மாறான வரி வரால் குவால் சாய அமராடி ... தனக்குப் பகையான
வரிபடர்ந்த வரால் மீன்கள் தோற்றுப்போய் பின்வாங்கும்படி போர் புரிந்து,

மதகு தாவி மீதோடி ... செல்லும் வழியில் இருந்த நீர்பாயும் மதகைத்
தாண்டி மேலே ஓடி,

உழவரால் அடாது ஓடி ... வயலில் உழும் உழவர்கள் தன்னை
வருத்தாதபடி தப்பி ஓடி,

மடையை மோதி யாறூடு தடமாக ... வழியில் உள்ள நீர்
மடைகளைத் தாக்கி, ஆற்றின் வழியிலே சென்று,

கடல்புகா மகாமீனை முடுகி ... கடலில் புகுந்து, அங்குள்ள பெரிய
மீனை விரட்டித் தாக்கி,

வாளை தான்மேவு கமல வாவி மேல்வீழு ... வாளை மீன் தான்
இருந்த தாமரைக்குளத்தில் வந்து வீழும்

மலர்வாவி ... (இத்தனை பெருமையை உடைய) மலர்ச் சுனையில்**

கடவுள் நீல மாறாத தணிகை காவலா வீர ... தெய்வமணம்
உள்ள நீலோத்பல மலர் மலர்வது என்றும் தவறாத திருத்தணிகைக்குக்
காவலனே, வீரனே,

கருணை மேருவே தேவர் பெருமாளே. ... கருணையில் மேரு மலை
போன்றவனே, தேவர்களின் பெருமாளே.


* துரியை என்பது ஜாக்ரம் (விழிப்பு), சொப்பனம் (கனவு), சுழுத்தி (உறக்கம்)
என்ற மூன்று நிலைகளையும் கடந்த நிலையாகும்.


** திருத்தணியின் தாமரைக்குளத்தில் இருக்கும் வாளை மீனின் ஆற்றல்,
'மடல் அறாத' முதல் 'மலர்வாவி' வரை உள்ள ஆறு அடிகளில், கூறப்படுகிறது.
முருகனின் தம்பியும் தூதுவரும் ஆன வீரபாகுத் தேவர் தூதுசெல்லும் வழியில்
அரக்கர்களைக் கொன்று, கடல்நடுவில் உள்ள வீரமஹேந்திரம் சென்று போர்
புரிந்து வெற்றியுடன் மீண்டு வந்ததையும் இது குறிப்பால் காட்டுகின்றது.
- கந்த புராணம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.653  pg 1.654  pg 1.655  pg 1.656  pg 1.657  pg 1.658 
 WIKI_urai Song number: 272 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 244 - udali nUdu (thiruththaNigai)

udalinUdu pOymeeLum uyirinUdu mAyAdha
     uNarvinUdu vAnUdu mudhu ...... theeyUd

ulavai Udu neerUdu buviyinUdu vAdhAdum
     oruvarOdu mEvAdha thani ...... nyAnac

sudarinUdu nAl vEdha mudiyinUdu mUdAdu
     thuriya vAku lAtheetha ...... siva rUpam

tholaivilAdha pErAsai thurisaRAdha OrpEdhai
     thodum upAya mEdhO sol ...... aruLvAyE

madal aRAdha vAreesa adavi sAdi mARAna
     varivarAl kuvAl sAya ...... amarAdi

madhaku thAvi meedhOdi uzhavarAl adAdhOdi
     madaiyai mOdhi ARUdu ...... thadamAga

kadal pugA mahA meenai mudugi vALai thAn mEvu
     kamala vAvi mEl veezhu ...... malarvAvi

kadavuL neela mARAdha thaNigai kAvalA veera
     karuNai mEruvE dhEvar ...... perumALE.

......... Meaning .........

udalinUdu pOymeeLum uyirinUdu: It is inside the body; It is inside the life that gets in and out of the body;

mAyAdha uNarvinUdu vAnUdu mudhu theeyUdu: It is in the imperishable consciousness; It is in the Sky; It is in the fierce Fire;

ulavai Udu neerUdu buviyinUdu: It is in the Air, the Water and the Earth.

vAdhAdum oruvarOdu mEvAdha thani nyAnac sudarinUdu: It is in the unique glow of Wisdom that can never be perceived by religious fanatics arguing among themselves;

nAl vEdha mudiyinUdu mUdAdu: It is intermingled in the crests of the four VEdAs (Scriptures);

thuriya vAku lAtheetha siva rUpam: It is the Vision of SivA that is above the thuriya* stage and beyond all miseries.

tholaivilAdha pErAsai thurisaRAdha OrpEdhai: I am a stupid fool, incapable of severing my endless desires and blemishes;

thodum upAya mEdhO sol aruLvAyE: is there any way for me to behold that vision and will You kindly teach me that way?

madal aRAdha vAreesa adavi sAdi: It swam into the forest of fully bloomed lotus flowers and destroyed the forest;

mARAna varivarAl kuvAl sAya amarAdi: It fought with and drove away the hostile crowd of striped varAl fish;

madhaku thAvi meedhOdi uzhavarAl adAdhOdi: It jumped over all barricades in water, escaping the attack by peasants working in the fields;

madaiyai mOdhi ARUdu thadamAga: It collided with the barriers on the way and swam along the current in the river;

kadal pugA mahA meenai mudugi: upon entering the sea, It confronted the large fish and chased them away;

vALai thAn mEvu kamala vAvi mEl veezhu: It is the unique VALai fish that returned triumphantly to its home, the lotus pond.**

malarvAvi kadavuL neela mARAdha thaNigai kAvalA veera: That lotus pond, where a blue lily with divine fragrance blossoms daily without fail, is in ThiruththaNigai protected by You, Oh valorous One!

karuNai mEruvE dhEvar perumALE.: You are compassionate like the Mount MEru! You are the Lord of the Celestials, Oh Great One!


* Thuriya stage is beyond the three stages, namely, waking (jAgratha), dreaming (swapna) and sleeping (sushupthi).


** In the six lines beginning from "madal aRAdha" and ending in "malar vAvi", the poet describes a powerful VALai fish in the lotus pond of ThiruththaNigai. The VALai symbolises VeerabAhu, the younger brother and messenger of Lord MurugA, who went on MurugA's mission, killing all the hostile demons on the way, reaching the island of VeeramahEndram of SUran and returning triumphantly - Kandha PurANam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 244 udali nUdu - thiruththaNigai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]