திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 243 இருமலு ரோக (திருத்தணிகை) Thiruppugazh 243 irumalurOga (thiruththaNigai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதன தான தனதன தான தனதன தான ...... தனதான ......... பாடல் ......... இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி ...... விடமேநீ ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள மாலை ...... யிவையோடே பெருவயி றீளை யெரிகுலை சூலை பெருவலி வேறு ...... முளநோய்கள் பிறவிகள் தோறு மெனைநலி யாத படியுன தாள்கள் ...... அருள்வாயே வருமொரு கோடி யசுரர்ப தாதி மடியஅ நேக ...... இசைபாடி வருமொரு கால வயிரவ ராட வடிசுடர் வேலை ...... விடுவோனே தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி தருதிரு மாதின் ...... மணவாளா சலமிடை பூவி னடுவினில் வீறு தணிமலை மேவு ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... இருமலு ரோக முயலகன் வாதம் ... இருமல் என்ற நோய், முயலகன் என்ற வலிப்பு நோய், வாத நோய், எரிகுண நாசி விடமே நீரிழிவு ... எரியும் குணமுள்ள மூக்கு நோய், விஷ நோய்கள், நீரிழிவு நோய், விடாத தலைவலி சோகை ... நீங்காத தலைவலி, ரத்த சோகை, எழுகள மாலை யிவையோடே ... கழுத்தைச் சுற்றி உண்டாகும் மாலை போன்ற புண் இவற்றுடன், பெருவயி றீளை யெரிகுலை சூலை ... மகோதர நோய், நுரையீரலில் கோழை நோய், நெஞ்சு எரியும் நோய், தீராத வயிற்று வலி, பெருவலி வேறுமுளநோய்கள் ... ஆகிய பெரு வலியுடன் கூடிய பிற நோய்கள் பிறவிகள் தோறு மெனைநலி யாதபடி ... ஒவ்வொரு பிறவியிலும் என்னைப் பீடிக்காதபடி, உன தாள்கள் அருள்வாயே ... உன்னுடைய திருவடிகளைத் தந்தருள்வாயாக. வருமொரு கோடி யசுரர்பதாதி ... உன்னை எதிர்த்துவந்த கோடிக்கணக்கான அசுரர்களின் காலாட்படை மடியஅ நேக இசைபாடி வருமொரு கால வயிரவ ராட ... இறந்துபடவும், அனேக வீரப் பாட்டுக்களைப் பாடிக்கொண்டு வந்த ஓர் காலபைரவர் (சிவ பெருமான்) போர்க்களத்தில் நடனமாடவும், வடிசுடர் வேலை விடுவோனே ... கூரிய ஒளிவீசும் வேலைச் செலுத்தியவனே, தருநிழல் மீதிலுறைமுகிலூர்தி ... கற்பக விருட்சங்களின் நிழலில் வசிக்கும் மேக வாகனன் இந்திரன் தருதிரு மாதின் மணவாளா ... வளர்த்த அழகிய பெண் தேவயானையின் மணவாளனே, சலமிடை பூவின்நடுவினில் வீறு ... கடலால் சூழப்பட்ட இந்தப் புவியின் மத்தியில் சிறப்போடு விளங்கும் தணிமலை மேவு பெருமாளே. ... திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. |
இந்தப் பாடல் நோய் தீர்க்கும் திருமந்திரத் திருப்புகழ். பாராயணம் செய்வதற்கு உரியது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.623 pg 1.624 WIKI_urai Song number: 260 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
கௌமாரம் குழுவினர் The Kaumaram Team பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'சிங்கப்பூர்' செல்வி சுபாஷினி Singapore B. Subhashini பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
M.S. பாலஷ்ரவண்லக்ஷ்மி புதுச்சேரி M.S. Balashravanlakshmi Puducherry பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திருமதி வே. மாலதி, சென்னை Mrs. Malathi Velayudhan, Chennai பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 243 - irumalu rOka (thiruththaNigai) irumalu rOka muyalakan vAtha merikuNa nAsi ...... vidamEnee rizhivuvi dAtha thalaivali sOkai yezhukaLa mAlai ...... yivaiyOdE peruvayi ReeLai yerikulai chUlai peruvali vERu ...... muLanOykaL piRavikaL thORu menainali yAtha padiyuna thALkaL ...... aruLvAyE varumoru kOdi yasurarpa thAthi madiya anEka ...... isaipAdi varumoru kAla vayirava rAda vadisudar vElai ...... viduvOnE tharunizhal meethi luRaimuki lUrthi tharuthiru mAthin ...... maNavALA salamidai pUvi naduvinil veeRu thaNimalai mEvu ...... perumALE. ......... Meaning ......... irumalu rOka muyalakan vAtham: Acute cough, a kind of fits called muyalakan, rheumatic pain, erikuNa nAsi vidamE neerizhivu: burning nose, poisonous and toxic diseases, diabetes, vidAtha thalaivali sOkai: nagging head-ache, anaemia, ezhukaLa mAlai yivaiyOdE: blisters around the neck, and in addition, peruvayi ReeLai yerikulai chUlai: edema in the stomach, congestion in the lungs, heartburn, acute stomach ache, peruvali vERumuLanOykaL: and similar extremely painful diseases piRavikaL thORu menainali yAthapadi: should not afflict and debilitate me in every birth. una thALkaL aruLvAyE: For that, You must kindly grant me Your hallowed feet! varumoru kOdi yasurarpathAthi madiya: The millions of soldiers in the demons' armies advanced against You and died; anEka isaipAdi varumoru kAla vayirava rAda: and singing many songs praising the glory of the war, KAla Bhairavar (Lord SivA) came to the battlefield and danced; vadisudar vElai viduvOnE: when You hurled the sharp and shining Spear! tharunizhal meethiluRaimukilUrthi: IndrA, who rides the clouds and resides in the shade of wish-yielding KaRpaga trees of the Celestial land, tharuthiru mAthin maNavALA: brought up this lovely damsel, DEvayAnai, and You are her consort. salamidai pUvinnaduvinil veeRu: In this world, encircled by waters of the oceans, this place is renowned thaNimalai mEvu perumALE.: and is called Mount ThiruththaNigai, which is Your abode, Oh Great One! |
This song is known to cure diseases. It is worth memorising. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |