திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 240 அரகர சிவன் அரி (திருத்தணிகை) Thiruppugazh 240 aragarasivanari (thiruththaNigai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதன தனதன தனதன தனதன தனதன தனதன ...... தனதான ......... பாடல் ......... அரகர சிவனரி அயனிவர் பரவிமு னறுமுக சரவண ...... பவனேயென் றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில் அநலென எழவிடு ...... மதிவீரா பரிபுர கமலம தடியிணை யடியவர் உளமதி லுறவருள் ...... முருகேசா பகவதி வரைமகள் உமைதர வருகுக பரமன திருசெவி ...... களிகூர உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை உரைதரு குருபர ...... வுயர்வாய உலகம னலகில வுயிர்களு மிமையவ ரவர்களு முறுவர ...... முநிவோரும் பரவிமு னநுதின மனமகிழ் வுறவணி பணிதிகழ் தணிகையி ...... லுறைவோனே பகர்தரு குறமகள் தருவமை வநிதையு மிருபுடை யுறவரு ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... அரகர சிவன் ... பாவங்களைப் போக்கவல்ல சிவனும், அரிஅயனிவர் ... திருமாலும், பிரம்மாவும், ஆகிய இம்மூவரும் பரவி முன் ... போற்றி நின்று உனது முன்னிலையில் அறுமுக சரவண பவனே ... ஆறுமுகனே, சரவணபவனே, என்று அநுதின மொழிதர ... என்று கூறி நாள்தோறும் துதிக்க, அசுரர்கள் கெட ... சூரன் முதலிய அசுரர்கள் அழியுமாறு அநலென எழ ... அக்கினி போல எழும்பிய அயில்விடும் அதிவீரா ... வேலினை விடுத்த வீர மூர்த்தியே, பரிபுர கமலமது ... வீரச் சிலம்பு அணிந்த, தாமரை மலர் போன்ற அடியிணை யடியவர் ... உன் திருவடிகளை உன் அடியார்களின் உளமதில் உற ... உள்ளத்தில் பொருந்துமாறு அருள் முருகேசா ... அருள்செய்யும் முருகக் கடவுளே. பகவதி வரைமகள் உமை ... மலையரசன் மகளாக வந்த பகவதியின் உமாதேவி தர வருகுக ... அருளினால் வந்த குகனே, பரமன திருசெவி களிகூர ... சிவனின் இருசெவிகளும் மகிழும்படி உரைசெயு மொருமொழி ... யாவரும் புகழும் ஒப்பற்ற மொழியாகிய பிரணவ முடிவதை ... பிரணவ மந்திரத்தின் முடிவுப்பொருளை உரைதரு குருபர ... உபதேசித்த மேலான குருவே, உயர்வாய உலக மன் ... உயர்ந்த இவ்வுலகில் வாழும் அலகில வுயிர்களும் ... எண்ணற்ற உயிர்களும் இமையவர் அவர்களும் ... தேவர்களும் உறுவர முநிவோரும் ... பெருந்தவ சிரேஷ்டரான முனிவர்களும் பரவிமுன் ... உன் முன்னேவணங்கி துதி செய்து, அநுதின மனமகிழ் வுற ... நாள்தோறும் மனம் மகிழ்ச்சி அடையுமாறு அணி பணிதிகழ் ... அழகியதும், வாசுகி என்ற நாகம் வழிபட்டதுமாகிய* தணிகையில் உறைவோனே ... திருத்தணிகைத் தலத்தில் வாழ்பவனே, பகர்தரு குறமகள் ... புகழ்வாய்ந்த குறப்பெண் வள்ளியும், தருவமை வநிதையும் ... கற்பகத்தருவின் கீழே வளர்ந்த தேவயானையும், இருபுடை யுறவரு பெருமாளே. ... இருபுறமும் பொருந்த வந்த பெருமாளே**. |
* பாற்கடல் கடைந்தபோது வாசுகி என்ற நாகம் கயிறாக உதவியது. அதனால் புண்பட்ட நோய் நீங்க, வாசுகி திருத்தணிகைக்கு வந்து முருகனைப் பூஜிக்க நோய் தணிந்த வரலாறு இங்கு கூறப்பட்டுள்ளது. |
** வள்ளியும் தேவயானையும் வலமும் இடமுமாக விளங்க முருகன் திருத்தணியில் வீற்றிருக்கிறான். வள்ளி = இச்சாசக்தி, தேவயானை = ஞானசக்தி. |
இப்பாடல் துதிமயமானது. வேண்டுதல் ஒன்றும் இல்லாதது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.649 pg 1.650 pg 1.651 pg 1.652 WIKI_urai Song number: 270 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திரு சம்பந்தம் குருக்கள் Thiru P. Sambandam Gurukkal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
'திருத்தணி' திரு சாமிநாதன் 'ThiruththaNi' Thiru SAminAthan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 240 - aragara sivan ari (thiruththaNigai) arahara sivanari ayanivar paravimun aRumuga saravaNa ...... bavanE endru anudhina mozhithara asurargaL keda ayil anal ena ezhavidum ...... athi veerA paripura kamalama dhadiyiNai adiyavar uLamadhil uRa aruL ...... murugEsA bagavathi varai magaL umai thara varu guha paramana dhiru sevi ...... kaLikUra urai seyum oru mozhi piraNava mudivadhai urai tharu gurupara ...... uyarvAya ulagaman alagila uyirgaLum imaiyavar avargaLu muRuvara ...... munivOrum paravi mun anudhina manamagizh uRavaNi paNi thigazh thaNigaiyil ...... uRaivOnE pagartharu kuRamagaL tharu amai vanidhaiyum irupudai uRavaru ...... perumALE. ......... Meaning ......... arahara sivanari ayanivar: The Trinity of SivA (remover of sins), Vishnu and BrahmA paravimun: prostrate before You, aRumuga saravaNa bavanE endru: praying "Oh Shanmukha, Saravanabhava" - anudhina mozhithara: they chant like this everyday. asurargaL keda ayil anal ena ezhavidum athi veerA: You throw the fiery spear to destroy all the demons (asuras), Oh Great Warrior! paripura kamalama dhadiyiNai adiyavar: Your devotees hold in esteem Your lotus feet (that wear the anklets of valour) uLamadhil uRa aruL murugEsA: in their hearts by Your grace, Oh Murugesa! bagavathi varai magaL umai thara varu guha: Oh GuhA, You are the son of Bhagavathi, the great daughter of Mount of HimavAn. paramana dhiru sevi kaLikUra: SivA's both ears were filled with joy when urai seyum oru mozhi piraNava mudivadhai urai tharu gurupara: You interpreted to Him the meaning of the rare PraNava ManthrA (OM) which is cherished by all, Oh Great Master! ulagaman alagila uyirgaLum: All those countless animate beings in this world, imaiyavar avargaLu muRuvara munivOrum: along with DEvAs and Sages paravi mun anudhina manamagizh: bow and happily offer worship to You everyday. aNi paNi thigazh thaNigaiyil uRaivOnE: You reside at lovely ThiruththaNigai which was also worshipped by the Great Serpent VAsuki*. pagartharu kuRamagaL: The famous damsel of KuRavAs, namely VaLLi, tharu amai vanidhaiyum: and the maiden, DEvayAnai, who was reared under the KaRpaga Tree, irupudai uRavaru perumALE.: flank You on both sides**, Oh Great One! |
* When the Great Milky Ocean was churned, the Serpent VAsuki served as the rope. The soreness in its body due to churning was unbearable, and VAsuki came to ThiruththaNigai to worship Lord MurugA who removed its pain. |
** VaLLi and DEvayAnai are the two consorts on both sides of Murugan at ThiruththaNigai. VaLLi on the right side is 'ichchAsakthi' (Desire) and DEvayAnai on the left side is 'gnAnasakthi' (Knowledge). |
This song is all worship sans petition of any kind. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |