திருப்புகழ் 236 விடமும் வடிவேலும்  (சுவாமிமலை)
Thiruppugazh 236 vidamumvadivElum  (swAmimalai)
Thiruppugazh - 236 vidamumvadivElum - swAmimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தான தனதன தந்தன
     தனதனன தான தனதன தந்தன
          தனதனன தான தனதன தந்தன ...... தனதான

......... பாடல் .........

விடமும்வடி வேலு மதனச ரங்களும்
     வடுவுநிக ரான மகரநெ டுங்குழை
          விரவியுடன் மீளும் விழிகளு மென்புழு ...... கதுதோயும்

ம்ருகமதப டீர பரிமள குங்கும
     மணியுமிள நீரும் வடகுல குன்றமும்
          வெருவுவன பார புளகத னங்களும் ...... வெகுகாம

நடனபத நூபு ரமுமுகில் கெஞ்சிட
     மலர்சொருகு கேச பரமுமி லங்கிய
          நளினமலர் சோதி மதிமுக விம்பமும் ...... அனநேராம்

நடையுநளிர் மாதர் நிலவுதொ ழுந்தனு
     முழுதுமபி ராம அரிவய கிண்கிணெ
          னகையுமுள மாதர் கலவியி னைந்துரு ...... கிடலாமோ

வடிவுடைய மானு மிகல்கர னுந்திக
     ழெழுவகைம ராம ரமுநிக ரொன்றுமில்
          வலியதிறல் வாலி யுரமுநெ டுங்கட ...... லவையேழும்

மறநிருதர் சேனை முழுதுமி லங்கைமன்
     வகையிரவி போலு மணியும லங்க்ருத
          மணிமவுலி யான வொருபதும் விஞ்சிரு ...... பதுதோளும்

அடைவலமு மாள விடுசர அம்புடை
     தசரதகு மார ரகுகுல புங்கவன்
          அருள்புனைமு ராரி மருகவி ளங்கிய ...... மயிலேறி

அடையலர்கள் மாள வொருநிமி டந்தனி
     லுலகைவல மாக நொடியினில் வந்துயர்
          அழகியசு வாமி மலையில மர்ந்தருள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

விடமும் வடிவேலும் மதன சரங்களும் வடுவு நிகரான மகர
நெடும் குழை விரவி உடன் மீளும் விழிகளும்
... நஞ்சும் கூரிய
வேலும் மன்மதனுடைய பாணங்களும் மாவடுவையும் ஒத்தனவாய்,
மகர மீன் போன்ற நீண்ட குண்டலங்களுடன் கலந்து, உடனே
மீளும் கண்களும்,

மென் புழுகு அது தோயும் ம்ருகமத படீர பரிமள குங்குமம்
அணியும் இள நீரும் வட குல குன்றமும் வெருவுவன பார
புளகித தனங்களும்
... மென்மை வாய்ந்த புனுகு சட்டம் கலந்த
கஸ்தூரி, சந்தனம், மணமுள்ள செஞ்சாந்து அணிந்துள்ள, இள நீர்
போன்றனவும், வடக்கே உள்ள சிறந்த மேரு மலை போன்றனவும்,
அச்சம் தரத் தக்கனவும், பாரமுள்ளனவும், புளகம் பூண்டுள்ளனவும்
ஆகிய மார்பகங்களும்,

வெகு காம நடன பத நூபுரமு(ம்) முகில் கெஞ்சிட மலர்
சொருகு கேச ப(பா)ரமும் இலங்கிய நளின மலர் சோதி
மதி முக விம்பமும்
... மிக்க காமத்தை எழுப்பும் நடனம் செய்கின்ற
பாதங்களில் அணிந்துள்ள சிலம்பும், மேகமும் (இதன் கரு நிறத்துக்கு
எந்த மூலை என்று) கெஞ்சும்படி கறுத்தும் மலர் சொருகப்பட்ட
கூந்தல் பாரமும், விளங்கும் தாமரை மலர் போன்று நிலவொளி வீசும்
முகச் சோதியும்,

அ(ன்)ன நேராம் நடையு(ம்) நளிர் மாதர் நிலவு தொழும் தனு
முழுதும் அபிராம அரி வய கிண்கிண் என நகையும் உ(ள்)ள
மாதர் கலவியில் நைந்து உருகிடலாமோ
... அன்னப் பறவைக்கு
ஒப்பான நடை அழகும், குளிர்ந்த அழகிய சந்திரனும் தொழுகின்ற
உடல் முழுமையும் உள்ள அழகும், சிலம்பின் உட்பரலின் மணிகள்
கிண் கிண் என ஒலிக்கும் சிரிப்பும் கொண்ட விலைமாதர்களுடைய
சேர்க்கையில் நான் உள்ளம் வாடி உருகுதல் நன்றோ?

வடிவுடைய மானும் இகல் கரனும் திகழ் எழு வகை மரா
மரமும் நிகர் ஒன்றும் இல் வலிய திறல் வாலி உரமும் நெடும்
கடல் அவை ஏழும் மற நிருதர் சேனை முழுதும்
... அழகுடைய
(மாரீசன் என்னும்) பொன்மானும், பகைத்து வந்த கரன் என்னும்
அரக்கனும், விளங்கிய ஏழு வகையான மரா மரங்களும், ஒப்பு
ஒன்றுமே இல்லாத வலிமை வாய்ந்த வாலி என்னும் குரங்கு
அரசனின் மார்பும், பெரிய ஏழு கடல்களும், வீரமுள்ள அசுரர்களின்
படைகள் முழுதும்,

இலங்கை மன் வகை இரவு போலும் அணியும் அலங்க்ருத
மணி மவுலியான ஒரு பதும் விஞ்சு இரு பது தோளும் அடை
வலமும் மாள
... இலங்கை அரசன் ராவணனுடைய சிறப்புற்ற சூரியன்
போல் ஒளி வீசி அணிந்த அலங்காரமான ரத்ன கிரீடம் விளங்கும்
தலைகள் பத்தும், மேம்பட்டு விளங்கும் இருபது தோள்களும்,
அடைந்திருந்த வலிமையையும் (இவை எல்லாம்) மாண்டு ஒடுங்க,

விடு சர அம்பு உடை தசரத குமார ரகு குல புங்கவன் அருள்
புனை முராரி மருக
... ஏவிய போர் அம்பைக் கொண்ட தசரத
மன்னனுடைய மகனும் ரகு குலத்தைச் சேர்ந்த மேலானவனும், அருள்
பாலிக்கும் (ராமனுமாகிய) திருமாலின் மருகனே,

விளங்கிய மயில் ஏறி அடையலர்கள் மாள ஒரு நிமிடம் தனில்
உலகை வலமாக நொடியினில் வந்து உயர் அழகிய சுவாமி
மலையில் அமர்ந்து அருள் பெருமாளே.
... விளங்குகின்ற மயிலில்
மீது ஏறி ஒரு நிமிட நேரத்தில் பகைவர்கள் இறக்கும்படி, உலகை
வலமாக நொடிப் பொழுதில் வந்து, சிறந்த அழகிய சுவாமி மலையில்
அமர்ந்து அருளிய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.553  pg 1.554  pg 1.555  pg 1.556 
 WIKI_urai Song number: 231 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 236 - vidamum vadivElum (swAmimalai)

vidamumvadi vElu mathanasa rangaLum
     vaduvunika rAna makarane dunguzhai
          viraviyudan meeLum vizhikaLu menpuzhu ...... kathuthOyum

mrukamathapa deera parimaLa kunguma
     maNiyumiLa neerum vadakula kundRamum
          veruvuvana pAra puLakatha nangaLum ...... vekukAma

nadanapatha nUpu ramumukil kenjida
     malarsoruku kEsa paramumi langiya
          naLinamalar sOthi mathimuka vimpamum ...... ananErAm

nadaiyunaLir mAthar nilavutho zhunthanu
     muzhuthumapi rAma arivaya kiNkiNe
          nakaiyumuLa mAthar kalaviyi nainthuru ...... kidalAmO

vadivudaiya mAnu mikalkara nunthika
     zhezhuvakaima rAma ramunika ronRumil
          valiyathiRal vAli yuramune dumkada ...... lavaiyEzhum

maRaniruthar sEnai muzhuthumi langaiman
     vakaiyiravi pOlu maNiyuma langrutha
          maNimavuli yAna vorupathum vinjiru ...... pathuthOLum

adaivalamu mALa vidusara ampudai
     thasarathaku mAra rakukula pungavan
          aruLpunaimu rAri marukavi Langiya ...... mayilERi

adaiyalarkaL mALa vorunimi danthani
     lulakaivala mAka nodiyinil vanthuyar
          azhakiyasu vAmi malaiyila marntharuL ...... perumALE.

......... Meaning .........

vidamum vadivElum mathana sarangaLum vaduvu nikarAna makara nedum kuzhai viravi udan meeLum vizhikaLum: Their eyes are comparable to poison, the sharp spear, the arrows of Manmathan (God of Love), and the baby-mango; they impinge on the long and swinging ear-studs that look like makara fish and instantly return to position;

men puzhuku athu thOyum mrukamatha padeera parimaLa kungumam aNiyum iLa neerum vada kula kundRamum veruvuvana pAra puLakitha thanangaLum: their weighty, intimidating and exhilarated breasts, that are smeared with a paste of fragrant and red vermillion mixed with a soft balm of civet, musk and sandalwood powder, look like tender coconuts and the famous Mount MEru in the North;

veku kAma nadana patha nUpuramu(m) mukil kenjida malar soruku kEsa pa(a)ramum ilangiya naLina malar sOthi mathi muka vimpamum: the anklets on their dancing feet are highly provocative; the black tuft of their hair on which flowers are bedecked put the dark cloud to shame (as its hue is no where near the black colour of the hair); their face, looking like a prominent lotus, is radiant like the moonlight;

a(n)na nErAm nadaiyu(m) naLir mAthar nilavu thozhum thanu muzhuthum apirAma ari vaya kiNkiN ena nakaiyum u(L)La mAthar kalaviyil nainthu urukidalAmO: their gait is elegant like that of the swan; the beauty of their entire body is something that is worshipped even by the cool and gorgeous moon; the jingling sound of the beads embedded in their anklets matches with their smile; why am I melting away and feeling miserable, longing for union with such whores?

vadivudaiya mAnum ikal karanum thikazh ezhu vakai marA maramum nikar onRum il valiya thiRal vAli uramum nedum kadal avai Ezhum maRa niruthar sEnai muzhuthum: The beautiful and golden deer (in whose disguise came the demon MAreechan), the confronting demon known as Karan, the distinguished and unique seven sAl trees (marAmaram), the huge chest of matchless and mighty monkey-king called VAli, the seven vast seas, the entire armies of the valiant demons,

ilangai man vakai iravu pOlum aNiyum alangrutha maNi mavuliyAna oru pathum vinju iru pathu thOLum adai valamum mALa: the ten heads of King RAvaNan of LankA, which were adorned with exquisite crowns, embedded with gems and radiating like the sun, his twenty eminent shoulders and all the accumulated strength and valour were all destroyed and trimmed down

vidu sara ampu udai thasaratha kumAra raku kula pungavan aruL punai murAri maruka: when He wielded an arrow in the war; He is the son of King Dasaratha, hailing from the prominent lineage of Raghu, and the compassionate Lord, RAmA (Lord VishNu); and You are His nephew, Oh Lord!

viLangiya mayil ERi adaiyalarkaL mALa oru nimidam thanil ulakai valamAka nodiyinil vanthu uyar azhakiya suvAmi malaiyil amarnthu aruL perumALE.: Mounting the renowned peacock, You went around the world killing all the enemies instantly and returned in a moment to take Your seat in this beautiful place, SwAmimalai, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 236 vidamum vadivElum - swAmimalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]