திருப்புகழ் 227 பலகாதல் பெற்றிட  (சுவாமிமலை)
Thiruppugazh 227 palakAdhalpetRida  (swAmimalai)
Thiruppugazh - 227 palakAdhalpetRida - swAmimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதான தத்ததன தனதான தத்த
     தனதான தத்ததன ...... தனதான

......... பாடல் .........

பலகாதல் பெற்றிடவு மொருநாழி கைக்குளொரு
     பலனேபெ றப்பரவு ...... கயவாலே

பலபேரை மெச்சிவரு தொழிலேசெ லுத்தியுடல்
     பதறாமல் வெட்கமறு ...... வகைகூறி

விலகாத லச்சைதணி மலையாமு லைச்சியர்கள்
     வினையேமி குத்தவர்கள் ...... தொழிலாலே

விடமேகொ டுத்துவெகு பொருளேப றித்தருளும்
     விலைமாதர் பொய்க்கலவி ...... யினிதாமோ

மலையேயெ டுத்தருளு மொருவாள ரக்கனுடல்
     வடமேரெ னத்தரையில் ...... விழவேதான்

வகையாவி டுத்தகணை யுடையான்ம கிழ்ச்சிபெறு
     மருகாக டப்பமல ...... ரணிமார்பா

சிலகாவி யத்துறைக ளுணர்வோர்ப டித்ததமிழ்
     செவியார வைத்தருளு ...... முருகோனே

சிவனார்த மக்குரிய வுபதேச வித்தையருள்
     திருவேர கத்தில்வரு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பல காதல் பெற்றிடவும் ஒரு நாழிகைக்குள் ஒரு பலனே
பெறப் பரவு கயவாலே
... பல பேர்களுடைய காதலைப் பெற்றிடவும்
ஒரு நாழிகைப் பொழுதுக்குள் ஒரு பலனைப் பெற வேண்டியும் சூழ்ச்சி
செய்யும் களவுச் செயலாலே,

பல பேரை மெச்சி வரு தொழிலே செலுத்தி உடல் பதறாமல்
வெட்கம் அறு வகை கூறி
... பல பேர்களை மெச்சி வருகின்ற
தொழில்களையே நடத்தி உடல் பதறுதல் இல்லாமல் வெட்கம்
அற்றவகையில் பேசி,

விலகாத லச்சை தணி மலையாம் முலைச்சியர்கள்
வினையே மிகுத்தவர்கள்
... இயற்கையில் நீங்காத நாணம்
தணிந்த, மலை போன்ற மார்பகத்தைக் காட்டி பொது மகளிர் தங்கள்
தொழிலில் மிகவும் சாமர்த்தியமாக ஈடுபடுபவர்கள்.

தொழிலாலே விடமே கொடுத்து வெகு பொருளே பறித்து
அருளும் விலைமாதர் பொய்க் கலவி இனிதாமோ
... விஷத்தைக்
(குடிக்கக்) கொடுத்து (காமுகரின்) எல்லாப் பொருளையும் அபகரிக்கும்
விலை மகளிர்களின் பொய்யான கலவி இன்பம் இனிமை ஆகுமோ?

மலையே எடுத்து அருளும் ஒரு வாள் அரக்கன் உடல் வட
மேரு எனத் தரையில் விழவேதான்
... (கயிலை) மலையை
எடுத்தவனும், ஒப்பற்ற வாளை ஏந்திய அரக்கனும் ஆகிய ராவணனுடைய
உடல் வடக்கே உள்ள மேருவே விழுந்தது என்னும்படி தரையில் விழவே,

வகையா விடுத்த கணை உடையான் மகிழ்ச்சி பெறு மருகா
கடப்ப மலர் அணி மார்பா
... தக்க விதத்தில் செலுத்திய அம்பை
உடையவனாகிய ராமனாகிய திருமால் மகிழும் மருகனே, கடப்ப
மாலையை அணிந்த மார்பனே,

சில காவியத் துறைகள் உணர்வோர் படித்த தமிழ் செவியார
வைத்து அருளும் முருகோனே
... சில காவிய நூல்களின் உண்மைப்
பொருளை அறிந்த அறிஞர்கள் ஓதிய தமிழை செவிகுளிர ஏற்றருளும்
முருகனே,

சிவனார் தமக்குரிய உபதேச வித்தை அருள் திருவேரகத்தில்
வரும் பெருமாளே.
... சிவ பெருமானுக்கு உரிய உபதேச மூல
மந்திரத்தை அருளி, சுவாமி மலையில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.537  pg 1.538  pg 1.539  pg 1.540 
 WIKI_urai Song number: 224 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 227 - palakAthal petRida (SwAmimalai)

palakAthal petRidavu morunAzhi kaikkuLoru
     palanEpe Rapparavu ...... kayavAlE

palapErai mecchivaru thozhilEse luththiyudal
     pathaRAmal vetkamaRu ...... vakaikURi

vilakAtha lacchaithaNi malaiyAmu laicchiyarkaL
     vinaiyEmi kuththavarkaL ...... thozhilAlE

vidamEko duththuveku poruLEpa RiththaruLum
     vilaimAthar poykkalavi ...... yinithAmO

malaiyEye duththaruLu moruvALa rakkanudal
     vadamEre naththaraiyil ...... vizhavEthAn

vakaiyAvi duththakaNai yudaiyAnma kizhcchipeRu
     marukAka dappamala ...... raNimArpA

silakAvi yaththuRaika LuNarvOrpa diththathamizh
     seviyAra vaiththaruLu ...... murukOnE

sivanArtha makkuriya vupathEsa viththaiyaruL
     thiruvEra kaththilvaru ...... perumALE.

......... Meaning .........

pala kAthal petRidavum oru nAzhikaikkuL oru palanE peRap paravu kayavAlE: Soliciting love from many people, they scheme to derive benefit within a matter of few minutes by resorting to treacherous action of deceit;

pala pErai mecchi varu thozhilE seluththi udal pathaRAmal vetkam aRu vakai kURi: they carry on the profession of flattering many a man and speak without shame in a way that should normally make their body shudder;

vilakAtha lacchai thaNi malaiyAm mulaicchiyarkaL vinaiyE mikuththavarkaL: they are the least bashful and are without any natural shyness; and, exhibiting their mountain-like bosom, these whores excel in their tricks of trade.

thozhilAlE vidamE koduththu veku poruLE paRiththu aruLum vilai mAthar poyk kalavi inithAmO: How can the delusory union with these whores be sweet when they grab all the belongings (of their suitors) by offering poison (to imbibe)?

malaiyE eduththu aruLum oru vAL arakkan udal vada mEru enath tharaiyil vizhavEthAn: He is the one who lifted Mount KailAsh; he is the demon RAvaNan who held a unique sword; his body fell to the floor as if the Mount MEru in the north fell down

vakaiyA viduththa kaNai udaiyAn makizhcchi peRu marukA kadappa malar aNi mArpA: when Lord RAmA wielded His arrow accurately; You are the nephew of that Lord VishNu who is elated by You; on Your chest You wear the garland of kadappa flowers!

sila kAviyath thuRaikaL uNarvOr padiththa thamizh seviyAra vaiththu aruLum murukOnE: You graciously accept with relish the Tamil songs rendered by the scholars who have researched into some epics and realised their inner meaning, Oh Lord MurugA!

sivanAr thamakkuriya upathEsa viththai aruL thiruvErakaththil varum perumALE.: You kindly preached to Lord SivA the PraNava ManthrA meant for Him, and took Your seat in SwAmimalai, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 227 palakAdhal petRida - swAmimalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]