திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 224 நிலவினிலே (சுவாமிமலை) Thiruppugazh 224 nilavinilE (swAmimalai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதன தான தந்த தனதன தான தந்த தனதன தான தந்த ...... தனதான ......... பாடல் ......... நிலவினி லேயி ருந்து வகைமல ரேதெ ரிந்து நிறைகுழல் மீத ணிந்து ...... குழைதாவும் நிகரறு வேலி னங்கள் வரிதர வாச கங்கள் நினைவற வேமொ ழிந்து ...... மதனூலின் கலபம னோக ரங்க ளளவற வேபு ரிந்து கனியித ழேய ருந்தி ...... யநுராகக் கலவியி லேமு யங்கி வனிதையர் பால்ம யங்கு கபடனை யாள வுன்ற ...... னருள்கூராய் உலகமொ ரேழு மண்ட ருலகமு மீசர் தங்கு முயர்கயி லாய மும்பொன் ...... வரைதானும் உயிரொடு பூத மைந்து மொருமுத லாகி நின்ற உமையரு ளால்வ ளர்ந்த ...... குமரேசா குலைபடு சூர னங்க மழிபட வேலெ றிந்த குமரக டோர வெங்கண் ...... மயில்வாழ்வே கொடுமுடி யாய்வ ளர்ந்து புயனிலை போலு யர்ந்த குருமலை மீத மர்ந்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... நிலவினிலே இருந்து வகை மலரே தெரிந்து நிறை குழல் மீது அணிந்து ... நிலவில் இருந்து எடுத்தது போன்று வகைவகையான மலர்களைத் தெரிந்து எடுத்து நிறைந்துள்ள கூந்தலின் மேல் அணிந்து, குழை தாவும் நிகர் அறு வேல் இனங்கள் வரிதர வாசகங்கள் நினைவு அறவே மொழிந்து ... காதின் குண்டலங்கள் அளவும் பாய்கின்ற, உவமை இல்லாத வேல்கள் போன்ற கண்களின் ரேகைகள் விளங்க, மொழிகள் இன்னது பேசுகின்றோம் என்ற நினைவே இல்லாமல் பேச, மத(ன்) நூலின் கலப மனோகரங்கள் அளவு அறவே புரிந்து கனி இதழே அருந்தி ... மன்மதனின் காம சாஸ்திரத்தில் கூறப்பட்ட கலகலப்பான லீலைகள் கணக்கில்லாமல் செய்து, கனி போன்ற வாயிதழ் ஊறலைப் பருகி, அநுராகக் கலவியிலே முயங்கி வனிதையர் பால் மயங்கு(ம்) கபடனை ஆள உன்றன் அருள் கூராய் ... காமப் பற்று மிக்க புணர்ச்சியிலே ஈடுபட்டுப் பொருந்தி, விலைமாதர்களிடத்தே மயக்கம் உறும் கபடனாகிய என்னை ஆட்கொள்ள உனது திருவருளைத் தந்து அருளுக. உலகம் ஓர் ஏழும் அண்டர் உலகமும் ஈசர் தங்கும் உயர் கயிலாயமும் பொன் வரை தானும் ... ஏழு உலகமும், தேவர் உலகமும், சிவ பெருமான் தங்கும் உயர்ந்த கயிலாயமும், பொன் மலையாகிய மேருவும், உயிரொடு பூதம் ஐந்தும் ஒரு முதலாகி நின்ற உமை அருளால் வளர்ந்த குமரேசா ... உயிர்களும், ஐந்து பூதங்களும் ஆக எல்லாமாக ஒரு முதற் பொருளாகி நின்ற பார்வதியின் திருவருளால் வளர்ந்த குமரேசனே, குலை படு சூரன் அங்கம் அழிபட வேல் எறிந்த குமர கடோர வெம் கண் மயில் வாழ்வே ... பதறிய சூரனுடைய உடல் அழியும்படி வேலைச் செலுத்திய குமரனே, மிக்க கடிய பலம் வாய்ந்த மயில் மீது வாழ்பவனே, கொடு முடியாய் வளர்ந்து புயல் நிலை போல் உயர்ந்த குரு மலை மீது அமர்ந்த பெருமாளே. ... மலைச் சிகரமாய் விளங்கி மேகம் தங்கும் இடம் போல் உயர்ந்த சுவாமி மலையின் மீது அமர்ந்த பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.533 pg 1.534 WIKI_urai Song number: 221 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 224 - nilavinilE (SwAmimalai) nilavini lEyi runthu vakaimala rEthe rinthu niRaikuzhal meetha Ninthu ...... kuzhaithAvum nikaraRu vEli nangaL varithara vAsa kangaL ninaivaRa vEmo zhinthu ...... mathanUlin kalapama nOka ranga LaLavaRa vEpu rinthu kaniyitha zhEya runthi ...... yanurAkak kalaviyi lEmu yangi vanithaiyar pAlma yangu kapadanai yALa vunRa ...... naruLkUrAy ulakamo rEzhu maNda rulakamu meesar thangu muyarkayi lAya mumpon ...... varaithAnum uyirodu pUtha mainthu morumutha lAki ninRa umaiyaru LAlva Larntha ...... kumarEsA kulaipadu cUra nanga mazhipada vEle Rintha kumaraka dOra vengaN ...... mayilvAzhvE kodumudi yAyva Larnthu puyanilai pOlu yarntha kurumalai meetha marntha ...... perumALE. ......... Meaning ......... nilavinilE irunthu vakai malarE therinthu niRai kuzhal meethu aNinthu: The assortment of flowers adorning their dense hair appears as if they have been selectively plucked from the moon; kuzhai thAvum nikar aRu vEl inangaL varithara vAsakangaL ninaivu aRavE mozhinthu: their matchless spear-like eyes, running up to the swinging ear-studs, shine with bright rays; their speech is incoherent as if they do not know what they are talking about; matha(n) nUlin kalapa manOkarangaL aLavu aRavE purinthu kani ithazhE arunthi: they perform countless erotic acts described in the text book of love written by Manmathan (God of Love); imbibing the fruity saliva oozing from their lips, anurAkak kalaviyilE muyangi vanithaiyar pAl mayangu(m) kapadanai ALa unRan aruL kUrAy: and enchanted by these whores, I have been indulging in passionate union with them; kindly take charge of me, this treacherous person, by blessing me graciously! ulakam Or Ezhum aNdar ulakamum eesar thangum uyar kayilAyamum pon varai thAnum: The seven worlds, the celestial land, Mount KailAsh, the abode of Lord SivA, the golden Mount MEru, uyirodu pUtham ainthum oru muthalAki ninRa umai aruLAl vaLarntha kumarEsA: all lives and the five elements were all preceded by the primordial Goddess PArvathi, and You were reared by Her grace, Oh Lord KumarA! kulai padu cUran angam azhipada vEl eRintha kumara kadOra vem kaN mayil vAzhvE: The astounded demon SUran was destroyed when Your spear pierced his body, Oh KumarA! You mount with relish the strong and powerful peacock, Oh Lord! kodu mudiyAy vaLarnthu puyal nilai pOl uyarntha kuru malai meethu amarntha perumALE.: The peak of the Mount SwAmimalai is so tall that the clouds hang over it, and You are seated in this place, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |