திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 223 நாவேறு பா மணத்த (சுவாமிமலை) Thiruppugazh 223 nAvERupAmaNaththa (swAmimalai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தானான தான தத்த தானான தான தத்த தானான தான தத்த ...... தனதான ......... பாடல் ......... நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து நாலாறு நாலு பற்று ...... வகையான நாலாரு மாக மத்தி னூலாய ஞான முத்தி நாடோறு நானு ரைத்த ...... நெறியாக நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க நேராக வாழ்வ தற்கு ...... னருள்கூர நீடார்ஷ டாத ரத்தின் மீதேப ராப ரத்தை நீகாணெ னாவ னைச்சொ ...... லருள்வாயே சேவேறு மீசர் சுற்ற மாஞான போத புத்தி சீராக வேயு ரைத்த ...... குருநாதா தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு தீராகு காகு றத்தி ...... மணவாளா காவேரி நேர்வ டக்கி லேவாவி பூம ணத்த காவார்சு வாமி வெற்பின் ...... முருகோனே கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி காமாரி வாமி பெற்ற ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... நாவேறு பாம ணத்த ... நாவினில் இருந்து வெளிப்படும் பாமலர்களின் நறுமணம் கமழும் பாதாரமே நினைத்து ... பாதத் தாமரைகளையே நினைத்து, நாலாறு நாலு பற்று வகையான ... (4..ஐ 6..ஆல் பெருக்கி வந்த 24..ம் 4..ம் சேர்ந்த) 28* சிவ சம்பந்தத்தை உடையதும், நாலாரும் ஆகமத்தின் ... சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு பாதங்கள்** பொருந்தினவாயும் உள்ள சிவாகம நூலாய ஞான முத்தி ... நூல்களில் கூறப்பட்டுள்ள ஞான முத்தி நெறியே நாடோறு நானு ரைத்த நெறியாக ... நாள் தோறும் நான் அனுஷ்டிக்கும் நெறியாகவும், நீவேறெ னாதிருக்க ... நீ வேறு என்றில்லாமல் நான்வேறெ னாதிருக்க ... நான் வேறு என்றில்லாமல், ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றுபட்ட நிலையில், நேராக வாழ்வதற்குன் அருள்கூர ... நேர்பட்டு வாழ்வதற்கு உன் கிருபை பெருகி, நீடு ஆர் ஷடாதரத்தின் மீதே ... பெருமை பொருந்திய ஆறு ஆதாரங்களையும் கடந்து ஹஸ்ராரத்தில்*** பராபரத்தை நீகாணென ... பெரிய பொருள்கட்கெல்லாம் பெரிய பொருளான சிவத்தை நீ காண்பாயாக என்று ஆவனைச்சொல் அருள்வாயே ... அந்த ஐக்கிய வசனத்தை உபதேசித்து அருள்வாயாக. சேவேறும் ஈசர் சுற்ற ... நந்தியின் மீது ஏறுகின்ற ஈசராம் சிவனார் உன்னை வலம் வர, மாஞான போத புத்தி ... சிறந்த ஞான உபதேசத்தை சீராகவே உரைத்த குருநாதா ... செம்மையாகவே சொன்ன குருநாதனே, தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு ... பகைவர்களாம் தேவர்களின் நாட்டைச் சுட்டழித்த அசுரர்கள் சாகும்படி வெட்டிய தீரா குகா குறத்தி மணவாளா ... தீரனே, குகனே, குறத்தி வள்ளியின் மணவாளனே, காவேரி நேர்வடக்கிலே வாவி பூம ணத்த ... காவேரி ஆற்றின் நேர் வடக்கில் தடாகங்களில் மலர்கள் மணக்கும் கா ஆர் சுவாமி வெற்பின் முருகோனே ... சோலைகள் சூழ்ந்த சுவாமிமலையில் எழுந்தருளிய முருகக் கடவுளே, கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி ... கரு மேகத்து நிற மேனியுடைய மகா காளி, என்றும் இளையாள், சக்தி, காமாரி வாமி பெற்ற பெருமாளே. ... காமனை எரித்தவரின் இடதுபக்கம் உள்ள பார்வதி பெற்ற பெருமாளே. |
* 28 சிவாகமங்கள் பின்வருமாறு: | |||
காமிகம் யோசகம் சிந்தியம் காரணம் அசிதம் தீப்தம் சூக்ஷ்மம் | சகச்சிரம் அஞ்சுமான் சுப்ரபேதம் விஷயம் நிச்வாசம் ஸ்வயாம்புவம் ஆக்னேயம் | வீரம் ரெளரவம் மகுடம் விமலம் சந்திரஞானம் முகவிம்பம் புரோற்கீதம் | லலிதம் சித்தம் சந்தானம் சர்வோக்தம் பாரமேஸ்வரம் கிரணம் வாதூளம் |
** நான்கு பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு: 1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'. 2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'. 3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'. 4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. . . . சிவஞான சித்தியார் சூத்திரம். |
*** ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. | ||||||
ஆதாரம் மூலாதாரம் சுவாதிஷ்டானம் மணிபூரகம் அநாகதம் விசுத்தி ஆக்ஞா பிந்து சக்கரம் (துவாதசாந்தம், ஸஹஸ்ராரம், பிரமரந்திரம்) | இடம் குதம் கொப்பூழ் மேல்வயிறு இருதயம் கண்டம் புருவத்தின் நடு கபாலத்தின் மேலே | பூதம் மண் அக்கினி நீர் காற்று ஆகாயம் மனம் | வடிவம் 4 இதழ் கமலம் முக்கோணம் 6 இதழ் கமலம் லிங்கபீடம் நாற் சதுரம் 10 இதழ் கமலம் பெட்டிப்பாம்பு நடு வட்டம் 12 இதழ் கமலம் முக்கோணம் கமல வட்டம் 16 இதழ் கமலம் ஆறு கோணம் நடு வட்டம் 3 இதழ் கமலம் 1008 இதழ் கமலம் | அக்ஷரம் ஓம் ந(கரம்) ம(கரம்) சி(கரம்) வ(கரம்) ய(கரம்) | தலம் திருவாரூர் திருவானைக்கா திரு(வ) அண்ணாமலை சிதம்பரம் திருக்காளத்தி காசி (வாரணாசி) திருக்கயிலை | கடவுள் விநாயகர் பிரமன் திருமால் ருத்திரன் மகேசுரன் சதாசிவன் சிவ . சக்தி ஐக்கியம் |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.531 pg 1.532 pg 1.533 pg 1.534 WIKI_urai Song number: 220 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
'திருத்தணி' திரு சாமிநாதன் 'ThiruththaNi' Thiru SAminAthan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 223 - nAvERu pA maNaththa (SwAmimalai) nAvERu pAmaNaththa pAdhAra mEninaindhu nAl ARu nAlu patru ...... vagaiyAna nAlArum Agamaththin nUlAya nyAna muththi nALdhOru nAn uraiththa ...... neRiyAga neevER enAdh irukka nAn vER enAdhirukka nErAga vazhvadhaRkun ...... aruLkUra needAr shadAdharaththin meedhE parAparaththai nee kAN enA anaichchol ...... aruLvAyE sEvERum eesar sutra mA nyAna bOdha budhdhi seerAgavE uraiththa ...... gurunathA thErArgaL nAdu sutta sUrArgaL mALa vettu dheerA guhA kuRaththi ...... maNavALA kAvEri nEr vadakkilE vAvi pU maNaththa kavAr suvAmi veRpin ...... murugOnE kAr pOlu mEni petra mAkALi vAlai saththi kAmAri vAmi petra ...... perumALE. ......... Meaning ......... nAvERu pAmaNaththa pAdhAra mEninaindhu: I am thinking only about Your lotus feet carrying the fragrance of the flowery poems emanating from my tongue. nAl ARu nAlu patru vagaiyAna nAlArum Agamaththin: There are twenty-eight* types of Saiva scriptures (AgamAs) which mingle with four phases** which interpret the method to attain nUlAya nyAna muththi: Liberation and Eternal Bliss as directed by those scriptures; nALdhOru nAn uraiththa neRiyAga: and that is the method I would like to practise everyday. neevER enAdh irukka nAn vER enAdhirukka: Just so that there is no difference between You and me, a state in which the JeevAthma and ParamAthma have merged nErAga vazhvadhaRkun aruLkUra: and to lead a straightforward life by Your grace, needAr shadAdharaththin meedhE: I want to transcend the great Kundalini ChakrAs*** (Six transcendental zones) and go one step higher to SahasrAram; parAparaththai nee kAN enA: there, You said, I could see SivA who is superior to all things supreme. anaichchol aruLvAyE: I want to hear from You that great - expression denoting Unity between SivA and Sakthi. sEvERum eesar sutra: When SivA, who mounts on the Bull, Nandi, went around You praying, mA nyAna bOdha budhdhi: the greatest Knowledge contained in the Vedas seerAgavE uraiththa gurunathA: was preached by You expertly, Oh Great Master! thErArgaL nAdu sutta sUrArgaL mALa vettu: You slashed to death the asuras who burnt the land of DEvAs. dheerA guhA kuRaththi maNavALA: Oh valorous One, GuhA, You married VaLLi, the damsel of KuRavAs. kAvEri nEr vadakkilE vAvi pU maNaththa: On the northern bank of River KAveri, there are tanks with fragrant flowers kavAr suvAmi veRpin murugOnE: and plenty of groves at SwAmimalai, which is Your abode, Muruga. kAr pOlu mEni petra mAkALi vAlai saththi: MahA KALi, with dark cloud's complexion, Ever young Sakthi, kAmAri vAmi petra perumALE.: and who dwells on the left side of SivA (who burnt down Manmathan) - that PArvathi delivered You as Her Son, Oh Great One! |
* The 28 Siva AgamAs are: | |||
kAmigam yOchagam sindhiyam kAraNam achidham dheeptham sUkshmam | sahasram anjumAn suprabEdham vishayam nisvAsam swayambhuvam AagnEyam | veeram rauravam makudam vimalam chandhragnAnam mugavimbam purORgeetham | lalitham sidhdham sandhAnam sarvOktham pAramEswaram kiraNam vAdhULam |
** The four methods of worship are: 1. sariyai: Worship through service in temples such as doing penance, washing the floor, lighting the lamps, maintaining the flower garden, plucking the flowers for offering, making of garlands, singing of hymns, decorating the deities etc. This is known as 'dhAdha mArgam - sAlOkam'. 2. kiriyai: Worship, both inwardly and externally, of a God with a form through daily offerings (pUjA) and with several pUjA materials. This is called 'puthra mArgam - sameepam'. 3. yOgam: Inward worship only of a formless God by control of senses, holding the oxygen in the inhaled air and letting it through the six centres of 'kuNdalini chakrA' after understanding each state fully, experiencing the flow of nectar in the 'Lunar zone' between the eyebrows and letting it seep throughout the body and meditating on the full effulgence. This is 'sakha mArgam - sArUbam'. 4. gnAnam: Ceasing all external and internal activities, this method consists of worshipping through the medium of intellect alone, seeking the True Knowledge. This is 'san mArgam - sAyujyam'. |
*** The names of the chakrA centres, the deities, the elements, the zones of the body where they are located, the shape of the chakrAs, the description of the flowers in the chakrAs, the letters of the ManthrA governing them and the temple-towns representing them are given in the following chart: | ||||||
ChakrA mUlAthAram swAthishtAnam maNipUragam anAgatham visudhdhi AgnyA Bindu chakkaram (DhwAdhasAntham, SahasrAram, Brahma-ranthiram) | Body Zone Genitals Belly-button Upper belly Heart Throat Between the eyebrows Over the skull | Element Earth Fire Water Air Sky Mind | Shape 4-petal lotus Triangle 6-petal lotus Lingam Square 10-petal lotus cobra in box central circle 12-petal lotus Triangle lotus circle 16-petal lotus Hexagon central circle 3-petal lotus 1008-petal lotus | Letter Om na ma si va ya | Temple ThiruvArUr ThiruvAnaikkA Thiru aNNAmalai Chidhambaram ThirukkALaththi VaranAsi (kAsi) Mt. KailAsh | Deity VinAyagar BrahmA Vishnu RUdhran MahEswaran SathAsivan Siva-Sakthi Union |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |