திருப்புகழ் 206 எந்தத் திகையினும்  (சுவாமிமலை)
Thiruppugazh 206 endhaththigaiyinum  (swAmimalai)
Thiruppugazh - 206 endhaththigaiyinum - swAmimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்தத் தனதன தனதன தனதன
     தந்தத் தனதன தனதன தனதன
          தந்தத் தனதன தனதன தனதன ...... தனதான

......... பாடல் .........

எந்தத் திகையினு மலையினு முவரியி
     னெந்தப் படியினு முகடினு முளபல
          எந்தச் சடலமு முயிரியை பிறவியி ...... னுழலாதே

இந்தச் சடமுட னுயிர்நிலை பெறநளி
     னம்பொற் கழலிணை களில்மரு மலர்கொடு
          என்சித் தமுமன முருகிநல் சுருதியின் ...... முறையோடே

சந்தித் தரஹர சிவசிவ சரணென
     கும்பிட் டிணையடி யவையென தலைமிசை
          தங்கப் புளகித மெழஇரு விழிபுனல் ...... குதிபாயச்

சம்பைக் கொடியிடை விபுதையி னழகுமு
     னந்தத் திருநட மிடுசர ணழகுற
          சந்தச் சபைதனி லெனதுள முருகவும் ...... வருவாயே

தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி
     தந்தத் தனதன டுடுடுடு டமடம
          துங்கத் திசைமலை யுவரியு மறுகச ...... லரிபேரி

துன்றச் சிலைமணி கலகல கலினென
     சிந்தச் சுரர்மல ரயன்மறை புகழ்தர
          துன்புற் றவுணர்கள் நமனுல குறவிடு ...... மயில்வேலா

கந்தச் சடைமுடி கனல்வடி வடலணி
     யெந்தைக் குயிரெனு மலைமகள் மரகத
          கந்தப் பரிமள தனகிரி யுமையரு ...... ளிளையோனே

கஞ்சப் பதமிவர் திருமகள் குலமகள்
     அம்பொற் கொடியிடை புணரரி மருகநல்
          கந்தப் பொழில்திகழ் குருமலை மருவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

எந்தத் திகையினு மலையினும் உவரியின் எந்தப் படியினும் ...
எந்தத் திசையிலும், மலையிலும், கடலின் கரையில் உள்ள எந்தப்
பூமியிலும்,

முகடினும் உளபல எந்தச் சடலமும் உயிரியை பிறவியின்
உழலாதே
... வீட்டுக் கூரையிலும், வசிக்கும் பலவகையான எந்த
உயிரோடு சார்ந்த பிறப்புக்களிலும் நான் மீண்டும் உழன்று திரியாமல்,

இந்தச் சடமுடன் உயிர்நிலை பெற ... இந்த உடலில்
இருக்கும்பொழுதே என் உயிர் நிலைபெறுவதற்காக,

நளினம்பொற் கழலிணைகளில் மருமலர்கொடு ... தாமரை
போன்ற அழகிய உனது திருவடிகளில் மணமுள்ள மலர் கொண்டு,

என்சித் தமுமனம் உருகிநல் சுருதியின் முறையோடே ... என்
சித்தமும், மனமும் உருகி சிறந்த வேதங்களில் சொல்லப்பட்ட முறைப்படி

சந்தித்து அரஹர சிவசிவ சரணென ... உன்னைச் சந்தித்து,
ஹரஹர, சிவசிவ, சரணம் என்று நான்

கும்பிட் டிணையடி யவையென தலைமிசை தங்க ... கும்பிட்டு,
உன் இணை அடிகள் என் தலைமிசை பொருந்த,

புளகித மெழஇரு விழிபுனல் குதிபாய ... என் உடல் புளகாங்கிதம்
அடைய, என் இரு கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் அருவி போல்
குதித்துப் பாய,

சம்பைக் கொடியிடை விபுதையின் அழகுமுன் ... மின்னற் கொடி
போன்ற இடையுடைய தேவதையாம் தேவயானையின் அழகு முன்னே
விளங்க,

அந்தத் திருநடமிடு சரண் அழகுற ... திரு நடனம் இடும் உன்
திருவடிகள் அழகுடன் பொலிய,

சந்தச் சபைதனில் எனதுளம் உருகவும் வருவாயே ... இந்த
அழகான சபையில் எனது உள்ளம் உருகுமாறு வந்தருள்வாயாக.

தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி தந்தத் தனதன டுடுடுடு
டமடம
... தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி தந்தத் தனதன டுடுடுடு
டமடம என்ற தாளத்துக்கு

துங்கத் திசைமலை யுவரியு மறுக சலரி பேரி துன்ற ... உயர்ந்த
திசைகளும், மலைகளும், கடல்களும் கலங்கும்படியாக சல்லரியும்
(ஜாலரா), பேரி என்ற கொட்டும் நெருங்கி ஒலிக்க,

சிலைமணி கலகல கலினென ... முழங்கும் மணி கலகல கலினென
சப்திக்க,

சிந்தச் சுரர்மலர் அயன்மறை புகழ்தர ... தேவர்கள் மலர் மாரி
பொழிய, பிரமன் வேதம் ஓதிப் புகழ,

துன்புற்று அவுணர்கள் நமனுலகு உற விடும் அயில்வேலா ...
அசுரர்கள் துன்பம் அடைந்து யமன் உலகை அடையுமாறு செலுத்திய
கூரிய வேலாயுதனே,

கந்தச் சடைமுடி கனல்வடிவு அடலணி ... வாசமிக்க
ஜடாமுடியையும், நெருப்புப் போன்ற நிறமுள்ள உருவத்தையும்,
வெற்றியையும் கொண்ட

எந்தைக்கு உயிரெனு மலைமகள் ... எம் தந்தையாம் சிவபிரானுக்கு
உயிர் போன்ற மலைமகள்,

மரகத கந்தப் பரிமள தனகிரி யுமையருள் இளையோனே ...
மரகதப் பச்சை வடிவழகி, சந்தன மணம் வீசு மார்பினை உடையவளாகிய
உமாதேவி அருளிய இளையவனே,

கஞ்சப் பதமிவர் திருமகள் குலமகள் ... தாமரை மலர்ப் பீடத்தில்
ஏறி அமர்ந்துள்ள திருமகள், குலமகள்,

அம்பொற் கொடியிடை புணர் அரி மருக ... அழகிய பொற்கொடி
போன்ற இடையை உடைய லக்ஷ்மி தேவியை மணந்துள்ள
திருமாலின் மருகனே,

நல் கந்தப் பொழில்திகழ் குருமலை மருவிய பெருமாளே. ...
நறுமணம் வீசும் சோலைகள் விளங்கும் குருமலை என்ற சுவாமிமலையில்
வீற்றிருக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.507  pg 1.508  pg 1.509  pg 1.510 
 WIKI_urai Song number: 210 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Ms Sughandhisri K.
சுகந்திஸ்ரீ

Ms Sughandhisri K.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 206 - endhath thigaiyinum (SwAmimalai)

endhath thigaiyinum malaiyinum uvariyin
     endhap padiyinu mukadinum uLa pala
          endha chadalamum uyiriyai piRaviyin ...... uzhalAdhE

indhach chadamudan uyir nilai pera naLi
     nam poR kazhal iNaigaLil maru malar kodu
          en chiththamu manamurugi nalsurudhiyin ...... muRaiyOdE

sandhith arahara sivasiva saraNena
     kumbit iNaiyadi avaiyena thalai misai
          thangap puLakitham ezha iruvizhi punal ...... kudhi pAya

champaik kodiyidai vibudhaiyin azhagu
     mun andhath thirunadamidu charaN azhaguRa
          sandha sabai thanil enadhuLam urugavum ...... varuvAyE

thondhath thiguguda thaguguda dimidimi
     thandhath thanathana dudududu damadama
          thungath dhisai malai uvariyu maRuga ...... salari bEri

thundra silaimaNi galagala galinena
     sindha surar malarayan maRai pugazh thara
          thunbut ravuNargaL namanula guRavidu ...... mayil vElA

gandha sadaimudi kanal vadi vadalaNi
     endhaik kuyirenu malai magaL marakatha
          gandhap parimaLa dhanagiri umai aruL ...... iLaiyOnE

kanjap padhamivar thirumagaL kulamagaL
     ampoR kodiyidai puNarari maruga nal
          kandhap pozhil thigazh gurumalai maruviya ...... perumaLE.

......... Meaning .........

endhath thigaiyinum malaiyinum uvariyin endhap padiyinu: In any cardinal direction, or any mountain, or any land abutting a sea,

mukadinum uLa pala endha chadalamum uyiriyai piRaviyin uzhalAdhE: or under any roof, whatever life exists in any body, I do not want to be born again and suffer.

indhach chadamudan uyir nilai pera: In order to stabilise my life in this very body,

naLinam poR kazhal iNaigaLil maru malar kodu: (I want to prostrate) at Your holy lotus feet, by offering fragrant flowers,

en chiththamu manamurugi nalsurudhiyin muRaiyOdE: with my intellect and mind totally molten, and in accordance with the methods stipulated in the great scriptures;

sandhith arahara sivasiva saraNena: seeing Your vision, I shall chant "Hara Hara, Siva, Siva, I surrender to You",

kumbit iNaiyadi avaiyena thalai misai thanga: worshipping Your hallowed feet so that they are firmly placed on my head,

puLakitham ezha iruvizhi punal kudhi pAya: enthralling my body and senses, with tears gushing out of my eyes like a waterfall.

champaik kodiyidai vibudhaiyin azhagumun: DEvayAnai, the beautiful damsel with a waist like lightning, is seated in Your front

andhath thirunadamidu charaN azhaguRa: while You dance delightfully with Your charming feet!

sandha sabai thanil enadhuLam urugavum varuvAyE: Kindly come to this august congregation simply to melt my heart!

thondhath thiguguda thaguguda dimidimi
thandhath thanathana dudududu damadama:
(To the sound of the above meter)

thungath dhisai malai uvariyu maRuga salari bEri thundra: the great directions, the mountains and the seas vibrated with the chiming of sallari (JAlra - metallic hand-cymbals) and beating of bEri (a kind of drum);

silaimaNi galagala galinena: the ringing bells made a noise like "gala gala galin";

sindha surar malarayan maRai pugazh thara: the celestials showered flowers and BrahmA chanted the VEdAs in praise of You;

thunbut ravuNargaL namanula guRavidu mayil vElA: and the demons were scathed and sent to the land of the God of Death (Yaman) as You hurled the Spear, Oh Lord!

gandha sadaimudi kanal vadi vadalaNi: He has a fragrant tress, the body of the hue of fire and a symbol of victory;

endhaik kuyirenu malai magaL: He is our Lord SivA whose life-like consort is PArvathi, the daughter of HimavAn;

marakatha gandhap parimaLa dhanagiri umai aruL iLaiyOnE: She has an emerald-green complexion and fragrant bosoms; That UmAdEvi delivered You as Her Younger child!

kanjap padhamivar thirumagaL kulamagaL: She mounts the lotus to have Her seat; She is the Goddess of Wealth; She is of a great lineage;

ampoR kodiyidai puNarari maruga: She has a beautiful creeper-like waist; that Lakshmi is married to Vishnu; and You are their nephew!

nal kandhap pozhil thigazh gurumalai maruviya perumaLE.: This mountain has sweet-scented groves; and You reside here in Gurumalai (SwAmimalai), Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 206 endhath thigaiyinum - swAmimalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]