திருப்புகழ் 203 ஆனாத பிருதி  (சுவாமிமலை)
Thiruppugazh 203 AnAdhapirudhi  (swAmimalai)
Thiruppugazh - 203 AnAdhapirudhi - swAmimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானான தனதனத் தான தனதன
     தானான தனதனத் தான தனதன
          தானான தனதனத் தான தனதன ...... தந்ததான

......... பாடல் .........

ஆனாத பிருதிவிப் பாச நிகளமும்
     மாமாய விருளுமற் றேகி பவமென
          வாகாச பரமசிற் சோதி பரையைய ...... டைந்துளாமே

ஆறாறி னதிகமக் க்ராய மநுதினம்
     யோகீச ரெவருமெட் டாத பரதுரி
          யாதீத மகளமெப் போது முதயம ...... நந்தமோகம்

வானாதி சகலவிஸ்த் தார விபவரம்
     லோகாதி முடிவுமெய்ப் போத மலரயன்
          மாலீச ரெனுமவற் கேது விபுலம ...... சங்கையால்நீள்

மாளாத தனிசமுற் றாய தரியநி
     ராதார முலைவில்சற் சோதி நிருபமு
          மாறாத சுகவெளத் தாணு வுடனினி ...... தென்றுசேர்வேன்

நானாவி தகருவிச் சேனை வகைவகை
     சூழ்போது பிரபலச் சூரர் கொடுநெடு
          நாவாய்செல் கடலடைத் தேறி நிலைமையி ...... லங்கைசாய

நாலாறு மணிமுடிப் பாவி தனையடு
     சீராமன் மருகமைக் காவில் பரிமள
          நாவீசு வயலியக் கீசர் குமரக ...... டம்பவேலா

கானாளு மெயினர்தற் சாதி வளர்குற
     மானோடு மகிழ்கருத் தாகி மருடரு
          காதாடு முனதுகட் பாண மெனதுடை ...... நெஞ்சுபாய்தல்

காணாது மமதைவிட் டாவி யுயவருள்
     பாராயெ னுரைவெகுப் ப்ரீதி யிளையவ
          காவேரி வடகரைச் சாமி மலையுறை ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

ஆனாத பிருதிவிப் பாச நிகளமும் ... நீங்குதற்கு அரிய
மண்ணாசை என்ற விலங்கும்,

மாமாய இருளும் அற்று ... பெரும் மயக்கத்தைத் தரும் ஆணவம்
என்ற இருளும் ஒழிந்து,

ஏகி பவமென ... ஒன்றுபட்ட தன்மை என்று கூறும்படியாக,

ஆகாசபரமசிற் சோதி ... வானம் போல் பரந்த பெரிய ஞான
ஜோதியான

பரையை அடைந்து உளாமே ... பராசக்தியை அடைந்து நினைப்பு
எதுவும் இன்றி,

ஆறாறின் அதிகம் அக்க்ராயம் ... முப்பத்தாறு மேலான
தத்துவங்களுக்கு* அப்பால் முதன்மையானதாய்,

அநுதினம் யோகீசர் எவரும் எட்டாத ... என்றும் யோகீசர் எவர்க்கும்
எட்டாததான

பரதுரிய அதீதம் அகளம் ... பெரிய துரிய** நிலைக்கும் மேம்பட்டதாய்,
உருவம் இல்லாததாய்,

எப்போதும் உதயம் அநந்தமோகம் ... எப்போதும் தோன்றி
நிற்பதாய், அளவற்ற வசீகரம் வாய்ந்ததாய்,

வானாதி சகலவிஸ்த்தார விபவரம் ... வான் முதலிய எல்லாமாய்
விரிவான உயிர்ப்பொருளாய்,

லோகாதி முடிவுமெய்ப் போத ... உலகத்தின் முதலாகவும்
முடிவாகவும் விளங்குவதாய், உண்மை அறிவாய்,

மலரயன் மாலீச ரெனுமவற்கு ... தாமரையான் பிரமன், திருமால்,
சிவபிரான் என்ற மும்மூர்த்திகளுக்கும்

ஏது விபுலம் ... மூலகாரணமாக விளங்கும் பெருமை வாய்ந்ததாய்,

அசங்கையால் நீள் ... சந்தேகம் இன்றி நீடூழிகாலம்

மாளாத தன் நிசமுற்றாயது ... இறப்பின்றி தானே
மெய்த்தன்மைத்தாக இருப்பதாய்,

அரியநிராதாரம் ... அரியதாய், மற்ற ஒன்றையும் சாராததாய்,

உலைவு இல்சற் சோதி ... அழிவின்றி சத்திய ஜோதியாகத்
துலங்குவதாய்,

நிருபமும் ... உருவம் ஏதும் இல்லாததாய்,

மாறாத சுகவெ(ள்)ளத் தாணுவுடன் ... மாறுதல் இல்லாது விளங்கும்
இன்ப வெள்ளமான சிவத்துடன்

இனிதென்றுசேர்வேன் ... யான் இனிமையாக என்றைக்கு
இணைவேன்?

நானாவித கருவிச் சேனை ... பல்விதமான ஆயுதங்கள் (கத்தி, வில்,
வாள் முதலியவை) தாங்கிய சேனைகள்

வகைவகை சூழ்போது ... விதவிதமாக சூழ்ந்து வர,

பிரபலச் சூரர் ... பிரசித்தி பெற்ற வீரர்களுடன்,

கொடுநெடு நாவாய்செல் கடலடைத்து ... பெரும் கப்பல்கள்
செல்லும் சமுத்திரத்தை அணைகட்டிக் கடந்து,

ஏறி நிலைமை யிலங்கைசாய ... அக்கரை சென்று, நிலைத்திருந்த
இலங்கையை வீழ்த்தி,

நாலாறு மணிமுடிப் பாவி தனை ... பத்து மணிமுடிகளைத் தரித்த
பாவியாகிய ராவணனை

அடு சீராமன் மருக ... வதைத்த ஸ்ரீராமனின் மருகனே,

மைக் காவில் பரிமள நாவீசு வயலி ... இருண்ட சோலைகளில்
நறுமணம் நன்றாக வீசும் வயலூரில் வீற்றுள்ள

அக்கீசர் குமர கடம்ப வேலா ... அக்னீஸ்வரருடைய*** குமாரனே,
கடப்பமலர் அணிந்தவனே, வேலாயுதனே,

கானாளும் எயினர்தற் சாதி வளர் ... காட்டை ஆளும் வேட்டுவர்
குலத்திலே வளர்ந்த

குறமானோடு மகிழ்கருத் தாகி ... குறமானாகிய வள்ளியோடு
மகிழ்வதற்கு எண்ணம் கொண்டு,

மருள் தரு காதாடும் உனது கண் பாணம் ... மருட்சியைத்
தருகின்றதும், காதுவரை நீண்டதுமான உனது கண்களிலிருந்து வரும்
பாணமானது

எனதுடை நெஞ்சுபாய்தல் காணாது ... என்னுடைய நெஞ்சினில்
பாய்வதை நீகாணாமல் இருக்கின்றாய்,

மமதைவிட்டு ஆவி யுயவருள் பாராய் ... உன் செருக்கை விடுத்து
என்னுயிர் உய்ய அருள்வாயாக

எனுரைவெகுப் ப்ரீதி யிளையவ ... என்றெல்லாம் வள்ளியிடம்
உரைத்து மிக்க அன்புடன் சேர்ந்த இளையவனே,

காவேரி வடகரைச் சாமி மலையுறை தம்பிரானே. ... காவேரியின்
வடகரையினுள்ள சுவாமிமலைத் தலத்தில் எழுந்தருளிய தனிப் பெரும்
தலைவனே.


* 96 தத்துவங்கள் பின்வருமாறு:

36 பரதத்துவங்கள் (அகநிலை):
ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.

ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை):
மண், தீ, நீர், காற்று, வெளி.

ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை):
வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.


** துரியம் என்பது ஜாக்கிரம், சுழுத்தி, சொப்பனம் ஆகிய
மூன்று நிலைகட்கும் அப்பால் உள்ள நிலை.


*** வயலூரில் உள்ள சிவமூர்த்திக்குப் பெயர் அக்னீஸ்வரர்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.505  pg 1.506  pg 1.507  pg 1.508 
 WIKI_urai Song number: 209 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 203 - AanAdha pirudhivi (SwAmimalai)

AnAdha pirudhivip pAsa nigaLamum
     mAmAya iruLu matrEgi bavamena
          AkAsa parama siRjOthi paraiyai ...... adaindhuLAmE

ARARin adhikam agrAyam anudhinam
     yOgeesar evarum ettAdha para thuri
          yAtheetham akaLam eppOdhum udhayam ...... anantha mOgam

vAnAdhi sakala visthAra vibavaram
     lOkAdhi mudivu mey bOdha malarayan
          mAleesar enum avaRkEdhu vipulam ...... asangaiyAlneeL

mALAdha thanisam utrAya dhariya
     nirAdhAra mulaivil saRjOthi nirupamu
          mARAdha sukaveLa thANu udan ini ...... dhendrusErvEn

nAnA vidha karuvi sEnai vagai vagai
     sUzh pOdhu pirabala sUrar kodunedu
          nAvAy sel kadal adaiththERi nilaimai ...... ilangai sAya

nAlARu maNi mudi pAvi thanaiyadu
     seerAman maruga maikkAvil parimaLa
          nAveesu vayali akkeesar kumara ...... kadamba vElA

kAnALum eyinar naR jAthi vaLar kuRa
     mAnOdu magizh karuththAgi marudaru
          kAdhAdum unadhu katbANam enadhudai ...... nenju pAydhal

kANAdhu mamadhai vittAvi uya aruL
     pArAy enurai vegup preethi iLaiyava
          kAvEri vadakarai sAmi malai uRai ...... thambirAnE.

......... Meaning .........

AnAdha pirudhivip pAsa nigaLamum: The insatiable greed for land is binding me like chains around my wrists;

mAmAya iruLum atru: and arrogance is like a huge delusive spell around me; and I want both of them broken.

Egi bavamena: I want to mingle with It as one;

AkAsa parama siRjOthi: It is that light, which is Supreme Knowledge, spread like the wide sky; and

paraiyai adaindhuLAmE: It is also known as ParAsakthi, my goal, after reaching which my thinking should cease.

ARARin adhikam agrAyam: It is above the thirty-six tenets* (ThathvAs), presiding over them.

anudhinam yOgeesar evarum ettAdha: The experts in yOgA meditating daily have never realised It.

para thuriyAtheetham akaLam: It is beyond the supreme ThuriyA** stage. It is without any shape.

eppOdhum udhayam anantha mOgam: It is for ever rising (never setting). It is extremely enchanting.

vAnAdhi sakala visthAra vibavaram: It is the extensive life in all the elements beginning with the wide sky.

lOkAdhi mudivu mey bOdha: It is the beginning and the end of the universe. It is the True Knowledge.

malarayan mAleesar enum avaRkku: For the Trinity of BrahmA, Vishnu and SivA,

Edhu vipulam: It has the distinction of being their fundamental cause.

asangaiyAlneeL mALAdha thanisam utrAyadhu: Doubtless, It shall remain immortal and as the only Truth.

ariya nirAdhAram: It is the rarest One. It is absolutely independent.

ulaivil saRjOthi: It is indestructible. It is self-luminous as the Torch of Truth.

nirupamum: It is formless.

mARAdha sukaveLa thANu: It is changeless. It is a perennial flood of bliss known as ThANu (SivA).

udan ini dhendrusErvEn: When will I be able to unite with It?

nAnA vidha karuvi: A variety of weapons (like swords, spears, bows and arrows) were used

sEnai vagai vagai sUzh pOdhu pirabala sUrar kodu: by several armies led by great warriors (from Kishkintha).

nedunAvAy sel kadal adaiththERi: They built a bridge (to LankA) across the sea in which large ships sailed.

nilaimai ilangai sAya: When they reached the other side, the mighty country LankA fell.

nAlARu maNi mudi pAvi thanaiyadu: The evil king RavaNA, with ten crowns, was killed by

seerAman maruga: SriRAman; and You are His nephew!

maikkAvil parimaLa nAveesu vayali: In the shady groves of VayalUr, there is a pleasant fragrance wafting through;

akkeesar kumara: and the presiding deity at VayalUr, Lord AgnEswar***, delivered You as His Son!

kadamba vElA: You wear garlands of kadamba flowers and hold Your spear in hand!

kAnALum eyinar naR jAthi vaLar: She grew up among the hunters who inhabit and rule the forests;

kuRamAnOdu magizh karuththAgi: You desired to rejoice in the company of VaLLi, that damsel of KuRavAs, saying

marudaru kAdhAdum unadhu katbANam: "The scary arrows from your eyes, stretching up to your ears,

enadhudai nenju pAydhal kANAdhu: are piercing my heart; and you are indifferent to my suffering.

mamadhai vittAvi uya aruL pArAy: I pray that you give up your pride and spare my life graciously!"

enurai vegup preethi iLaiyava: This moving statement was made to VaLLi by You with abundant love, Oh Young One!

kAvEri vadakarai sAmi malai uRai thambirAnE.: You chose as Your abode, SwAmimalai, on the northern banks of river KAvEri, Oh unique Lord!


* The 96 thathvAs (tenets) are as follows:

36 ParathathvAs (internal, Superior Tenets): 'AathmA' (soul) thathvAs 24, 'vidhyA' (knowledge) thathvAs 7, 'siva' thathvAs 5.

5 Elements (external, with five aspects each making 25): Earth, Fire, Water, Air, Cosmos.

35 Other thathvAs (external): 'vAyus' (gases) 10, nAdis (kundalinis) 10, karmAs 5, ahangkAram (ego) 3, gunAs (character) 3, vAkku (speech).


** ThuriyA stage is above the three stages, namely, JAgra (awakened), Swapna (dream) and Sushukthi (sleep).


*** Lord SivA in VayalUr is named AgnEswar.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 203 AnAdha pirudhi - swAmimalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]