திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 201 அவாமருவு (சுவாமிமலை) Thiruppugazh 201 avAmaruvu (swAmimalai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனாதன தனாதன தனாதன தனாதன தனாதனன தானந் ...... தனதானா ......... பாடல் ......... அவாமரு வினாவசு தைகாணும டவாரெனு மவார்கனலில் வாழ்வென் ...... றுணராதே அராநுக ரவாதையு றுதேரைக திநாடும றிவாகியுள மால்கொண் ...... டதனாலே சிவாயவெ னுநாமமொ ருகாலுநி னையாததி மிராகரனை வாவென் ...... றருள்வாயே திரோதம லமாறும டியார்கள ருமாதவர் தியானமுறு பாதந் ...... தருவாயே உவாவினி யகானுவி னிலாவும யில்வாகன முலாசமுட னேறுங் ...... கழலோனே உலாவுத யபாநுச தகோடியு ருவானவொ ளிவாகுமயில் வேலங் ...... கையிலோனே துவாதச புயாசல ஷடாநந வராசிவ சுதாஎயினர் மானன் ...... புடையோனே சுராதிப திமாலய னுமாலொடு சலாமிடு சுவாமிமலை வாழும் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... அவாமருவு இ(ன்)னா ... ஆசை ஏற்படுத்துகின்ற துன்பம் விளைவதற்கு வசுதை ... மண்ணாசையும், காணுமடவாரெனும் ... விரும்பிப் பார்க்கின்ற இளம் மாதர்கள் என்ற பெண்ணாசையும் காரணமாம். அவார்கனலில் வாழ்வென்றுணராதே ... அவர்களுடன் வாழ்க்கை நெருப்பின் மேல் வாழ்வு என்றுணராமல் அராநுகர வாதையுறு தேரைகதி ... பாம்பின் வாயில் அகப்பட்டு துன்பமுறு தவளையின் கதி அடைந்த நாடும் அறிவாகி ... அந்நிலையிலும் இன்பத்தை நாடும் அறிவுடையவனாகி உளம் மால்கொண்டு அதனாலே ... உள்ளத்தில் மயக்கம் கொண்டு அதன் காரணமாக சிவாயவெனு நாமமொருகாலும் நினையாத ... சிவாய என்ற திருமந்திரத்தை ஒருபோதும் நினைக்காத திமிர ஆகரனை ... அஞ்ஞான இருளுக்கு இருப்பிடமாக உள்ள அடியேனை, வாவென்று அருள்வாயே ... உன் திருவடியில் சேர்ந்து இன்புற வருக என்றழைத்து அருள்வாயாக. திரோத மலமாறும் அடியார்கள் ... உன்னை மறத்தல் என்ற குற்றம் இல்லாத மெய்யடியார்களாலும், அருமாதவர் தியானமுறு ... அரிய பெரிய தவ முனிவர்களாலும் தியானம் செய்யப்படும் பாதந் தருவாயே ... உன் திருவடிகளைத் தந்தருள்வாயாக. உவா இனிய கானுவில் நிலாவும் ... இளமைமிகுந்து, இனிய கானகத்தில் ஒளிவீசித் திரியும் மயில்வாகனம் ... மயிலை வாகனமாகக் கொண்டு, உலாசமுடன் ஏறுங் கழலோனே ... அதன்மீது குதூகலத்துடன் ஏறும் வீரக் கழலோனே, உலா உதயபாநு சதகோடி உருவான ... வானில் உலாவும் உதய சூரியர்கள் நூறு கோடி கூடினாற்போல ஒளிவாகும் அயில் வேல் அங்கையிலோனே ... ஒளிபடைத்த அழகிய கூர் வேல் திருக்கரத்துள்ளோனே, துவாதச புயாசல ... பன்னிரண்டு மலைபோன்ற புயங்களை உடையவனே, ஷடாநந வரா சிவசுதா ... ஆறுமுகக் கடவுளே, சிறந்தவனே, சிவனின் சேயே, எயினர் மான் அன்புடையோனே ... வேடர் குலத்து மான் போன்ற வள்ளியிடம் அன்புடையவனே, சுராதிபதி மால் அயனு மாலொடு ... தேவேந்திரனும், திருமாலும், பிரம்மனும் அன்போடு சலாமிடு* ... வணக்கம் செய்கின்ற சுவாமிமலை வாழும் பெருமாளே. ... சுவாமிமலையில் வாழ்கின்ற பெருமாளே. |
* 'சலாம்' என்ற முகம்மதியர்களின் உருதுச் சொல்லை இங்கு சுவாமிகள் பயன்படுத்துகிறார். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.501 pg 1.502 pg 1.503 pg 1.504 WIKI_urai Song number: 207 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 201 - avAmaruvu (SwAmimalai) avA maruvinA vasudhai kANu madavArenum avArkanalil vAzhven ...... druNarAdhE arA nugara vAdhaiyuRu thErai gathi nAdum aRivAgiyuLa mAl koN ...... dadhanAlE sivAyavenu nAmam orukAlu ninaiyAdha thimirAkaranai vAven ...... draruLvAyE thirOdha malamARum adiyArgaL arumAthavar dhiyAnamuRu pAdhan ...... tharuvAyE uvAviniya kAnuvi nilAvu mayil vAganam ulAsamudan ERung ...... kazhalOnE ulA udhaya bAnu sathakOdi uruvAna oLivAgu mayil vElang ...... kaiyilOnE dhuvAdhasa buyAchala shadAnana varA siva suthA eyinar mAnan ...... budaiyOnE surAdhipathi mAl ayanu mAlodu salAmidu suvAmimalai vAzhum ...... perumALE. ......... Meaning ......... avA maruvinA: Desire leads to distress. vasudhai kANu madavArenum: Urge to possess landed property and lust for women avArkanalil vAzhven druNarAdhE: make life a fiery inferno; without realizing this fact, arA nugara vAdhaiyuRu thErai gathi: I suffer like a frog caught in the mouth of a snake! nAdum aRivAgiyuLa mAl koN dadhanAlE: Seeking pleasure even in that state has caused delusion in my mind; and sivAyavenu nAmam orukAlu ninaiyAdha: not contemplating even once the name of SivA, thimirAkaranai: I was consumed by the darkness of ignorance. vAven draruLvAyE: Will You still kindly welcome me to come and rejoice at Your feet? thirOdha malamARum adiyArgaL: Your devotees who are free from the fault of forgetting You, arumAthavar dhiyAnamuRu pAdhan tharuvAyE: and the sages performing rare penances, constantly meditate upon Your holy feet which I too seek. uvAviniya kAnuvi nilAvu mayil vAganam: Your chariot is the youthful peacock, roaming bright and brisk in the forest ulAsamudan ERung kazhalOnE: and You mount it with pleasure, displaying victorious anklets on Your feet. ulA udhaya bAnu sathakOdi uruvAna: Dazzling like a million suns rising in the sky oLivAgum ayil vElang kaiyilOnE: is the brilliant sharp spear on Your hand! dhuvAdhasa buyAchala: You have twelve shoulders looking like mountains! shadAnana varA siva suthA: You have six faces! You are great! You are the son of Lord SivA! eyinar mAnan budaiyOnE: You are the lover of the deer-like VaLLi, the damsel of the hunter-tribe! surAdhipathi mAl ayanu mAlodu salAmidu*: IndrA, the King of DEvAs, Vishnu and BrahmA salute You! suvAmimalai vAzhum perumALE.: You have Your abode at SwAmimalai, Oh Great One! |
* 'salAm' is an Urdu word meaning 'greeting' used by Moghuls whose contemporary was our SwAmigaL. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |