திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 191 முருகு செறிகுழல் முகில் (பழநி) Thiruppugazh 191 muruguseRikuzhalmugil (pazhani) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான ......... பாடல் ......... முருகு செறிகுழல் முகிலென நகில்நறு முளரி முகையென இயலென மயிலென முறுவல் தளவென நடைமட வனமென ...... இருபார்வை முளரி மடலென இடைதுடி யதுவென அதர மிலவென அடியிணை மலரென மொழியு மமுதென முகமெழில் மதியென ...... மடமாதர் உருவ மினையன எனவரு முருவக வுரைசெய் தவர்தரு கலவியி னிலவிய வுலையின் மெழுகென வுருகிய கசடனை ...... யொழியாமல் உவகை தருகலை பலவுணர் பிறவியி னுவரி தனிலுறு மவலனை யசடனை உனது பரிபுர கழலிணை பெறஅருள் ...... புரிவாயே அரவ மலிகடல் விடமமு துடனெழ அரிய யனுநரை யிபன்முத லனைவரும் அபய மிகவென அதையயி லிமையவ ...... னருள்பாலா அமர்செய் நிசிசர ருடலவை துணிபட அவனி யிடிபட அலைகடல் பொடிபட அமரர் சிறைவிட அடலயில் நொடியினில் ...... விடுவோனே பரவு புனமிசை யுறைதரு குறமகள் பணைகொ ளணிமுலை முழுகுப னிருபுய பணில சரவணை தனில்முள ரியின்வரு ...... முருகோனே பரம குருபர எனுமுரை பரசொடு பரவி யடியவர் துதிசெய மதிதவழ் பழநி மலைதனி லினிதுறை யமரர்கள் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... முருகு செறி குழல் முகில் என நகில் நறு முளரி முகை என இயல் என மயில் என முறுவல் தளவு என நடை மட அ(ன்)னம் என ... வாசனை மிகுந்த கூந்தல் மேகம் எனவும், மார்பகங்கள் நறுமணமுள்ள தாமரை எனவும், சாயல் மயில் எனவும், பற்கள் முல்லை எனவும், நடை மடப்பம் பொருந்திய அன்னத்தின் நடை எனவும், இரு பார்வை முளரி மடல் என இடை துடி அது என அதரம் இலவு என அடி இணை மலர் என மொழியும் அமுது என முகம் எழில் மதி என மட மாதர் ... இரண்டு கண்களும் தாமரை இதழ்கள் எனவும், இடை உடுக்கையே எனவும், வாய் இதழ் இலவ மலர் எனவும், இரண்டு அடிகளும் மலர் எனவும், பேச்சு அமுதம் எனவும், முகம் அழகிய சந்திரன் எனவும், அழகிய (விலை) மாதர்களின் உருவம் இனையன என வரும் உருவக உரை செய்து அவர் தரு கலவியினில் அவிய உலையின் மெழுகு என உருகிய கசடனை ... உருவங்களை இவை இவை என்று உருவகப் படுத்திப் புகழ்ந்து, அவர்கள் கொடுக்கும் புணர்ச்சி இன்பத்தில் பொருந்த, உலையில் இடப்பட்ட மெழுகைப் போல் உருகிய குற்றவாளியாகிய என்னை ஒழியாமல் உவகை தரு கலை பல உணர் பிறவியில் உவரி தனில் உறும் அவலனை அசடனை உனது பரிபுர கழல் இணை பெற அருள் புரிவாயே ... எப்போதும் இன்பம் தரும் பல விதமான கலைகளையும் உணருதற்கு, பிறவிக் கடலில் கிடக்கும் இந்தக் கீழானவனுக்கு, மூடனுக்கு உனது சிலம்பணிந்த திருவடி இணைகளை பெறுவதற்கு அருள் புரிவாயாக. அரவம் மலி கடல் விடம் அமுதுடன் எழ அரி அயனு(ம்) நரை இபன் முதல் அனைவரும் அபயம் மிக என அதை அயில் இமையவன் அருள்பாலா ... ஒலி மிகுந்த கடலில் அமுதத்துடன் விஷமும் தோன்ற, திருமாலும், பிரமனும், (ஐராவதம் என்ற) வெள்ளை யானையை உடைய இந்திரன் முதலான எல்லாரும் அடைக்கலம் என மிகவும் ஓலமிட, அந்த விஷத்தை உண்ட கயிலை மலை தேவனாகிய சிவபெருமான் அருளிய குழந்தையே. அமர் செய் நிசிசரர் உடல் அவை துணி பட அவனி இடி பட அலை கடல் பொடி பட அமரர் சிறைவிட அடல் அயில் நொடியினில் விடுவோனே ... போர் செய்த அசுரர்களின் உடல்கள் துணிக்கப்பட்டு விழ, பூமி இடியுண்ண, அலை கடல் பொடிபட, தேவர்கள் சிறையினின்று மீள, சக்தி வேலை ஒரு நொடிப் பொழுதில் செலுத்தியவனே, பரவும் புனம் மிசை உறை தரு குற மகள் பணை கொள் அணி முலை முழுகு பன்னிரு புய பணில சரவணை தனில் முளரியில் வரு முருகோனே ... போற்றிச் சென்ற தினைப்புனத்தின் மீது இருந்த குறப் பெண்ணாகிய வள்ளியின் பருத்த, அழகிய மார்பகங்களில் முழுகிய பன்னிரண்டு தோளனே, சங்குகள் விளையும் சரவண மடுவில் தாமரையில் எழுந்தருளிய முருகனே, பரம குருபர எனும் உரை பரசொடு பரவி அடியவர் துதி செய மதி தவழ் பழநி மலை தனில் இனிது உறை அமரர்கள் பெருமாளே. ... மேலானவனே குருபரனே என்னும் புகழ் மொழிகளால் போற்றி செய்து வணங்கி அடியார்கள் துதிக்க, திங்கள் தவழும் பழனி மலையில் இனிதாக உறைகின்றவனே, தேவர்கள் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.326 pg 1.327 pg 1.328 pg 1.329 WIKI_urai Song number: 133 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 191 - murugu seRikuzhal mugil (pazhani) muruku cheRikuzhal mukilena nakilnaRu muLari mukaiyena iyalena mayilena muRuval thaLavena nadaimada vanamena ...... irupArvai muLari madalena idaithudi yathuvena athara milavena adiyiNai malarena mozhiyu mamuthena mukamezhil mathiyena ...... madamAthar uruva minaiyana enavaru muruvaka vuraisey thavartharu kalaviyi nilaviya vulaiyin mezhukena vurukiya kasadanai ...... yozhiyAmal uvakai tharukalai palavuNar piRaviyi nuvari thaniluRu mavalanai yasadanai unathu paripura kazhaliNai peRaaruL ...... purivAyE arava malikadal vidamamu thudanezha ariya yanunarai yipanmutha lanaivarum apaya mikavena athaiyayi limaiyava ...... naruLbAlA amarsey nisisara rudalavai thuNipada avani yidipada alaikadal podipada amarar siRaivida adalayil nodiyinil ...... viduvOnE paravu punamisai yuRaitharu kuRamakaL paNaiko LaNimulai muzhukupa nirupuya paNila saravaNai thanilmuLa riyinvaru ...... murukOnE parama gurupara enumurai parasodu paravi yadiyavar thuthiseya mathithavazh pazhani malaithani linithuRai yamararkaL ...... perumALE. ......... Meaning ......... muruku cheRi kuzhal mukil ena nakil naRu muLari mukai ena iyal ena mayil ena muRuval thaLavu ena nadai mada a(n)nam ena: "Their fragrant hair is like the cloud; their bosom is like the sweet-smelling lotus; their appearance is like that of the peacock; their gait is like that of the young swan; iru pArvai muLari madal ena idai thudi athu ena atharam ilavu ena adi iNai malar ena mozhiyum amuthu ena mukam ezhil mathi ena mada mAthar: their two eyes are like the petals of the lotus; their slender waist is like the hand-drum; the lips on their mouth are red like the ilavam (silk-cotton) flower; their two feet are like flowers; their speech is like the nectar; their face is like the moon" - uruvam inaiyana ena varum uruvaka urai seythu avar tharu kalaviyinil aviya ulaiyin mezhuku ena urukiya kasadanai: thus I have been comparing their organs and praising them in order to indulge in the bliss of coital pleasure they offer; I am a sinner who has melted like the wax in a furnace; ozhiyAmal uvakai tharu kalai pala uNar piRaviyil uvari thanil uRum avalanai asadanai unathu paripura kazhal iNai peRa aruL purivAyE: in order that I comprehend the many art forms that bring forth elation at all times, and to salvage this debased chap in me from drowning in the sea of birth, kindly grant this fool the grace to attain Your hallowed feet, adorned with anklets, Oh Lord! aravam mali kadal vidam amuthudan ezha ari ayanu(m) narai ipan muthal anaivarum apayam mika ena athai ayil imaiyavan aruLbAlA: From the boisterous seas, AlakAla poison emerged along with the divine nectar; Lord VishNu, Brahma, Indra who mounts the white elephant (AirAvatham) and others screamed and surrendered to Him seeking refuge; that poison was imbibed by Lord SivA of Mount KailAsh; You are His dear child, Oh Lord! amar sey nisisarar udal avai thuNi pada avani idi pada alai kadal podi pada amarar siRaivida adal ayil nodiyinil viduvOnE: The bodies of the warring demons were severed, the earth was thunder-struck, the wavy seas were shattered to dust and the celestials were freed from their prison as You wielded the powerful spear in the matter of a second, Oh Lord! paravum punam misai uRai tharu kuRa makaL paNai koL aNi mulai muzhuku panniru puya paNila saravaNai thanil muLariyil varu murukOnE: You reached the field of millet, full of praise for VaLLi, the damsel of the KuRavAs, and drowned Yourself on her huge bosom with Your twelve broad shoulders; You emerged from the lotus in the SaravaNa Pond where conches are abundant, Oh MurugA! parama gurupara enum urai parasodu paravi adiyavar thuthi seya mathi thavazh pazhani malai thanil inithu uRai amararkaL perumALE.: As Your devotees worship You praising "Oh Supreme Lord! Oh Great Master!", You are seated with relish in Mount Pazhani, over which the moon hovers, Oh Lord! You are the Lord of the celestials, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |