திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 189 மூல மந்திரம் (பழநி) Thiruppugazh 189 mUlamandhiram (pazhani) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தான தந்தன தான தந்தன தான தந்தன தான தந்தன தான தந்தன தான தந்தன ...... தனதான ......... பாடல் ......... மூல மந்திர மோத லிங்கிலை யீவ திங்கிலை நேய மிங்கிலை மோன மிங்கிலை ஞான மிங்கிலை ...... மடவார்கள் மோக முண்டதி தாக முண்டப சார முண்டப ராத முண்டிடு மூக னென்றொரு பேரு முண்டருள் ...... பயிலாத கோல முங்குண வீன துன்பர்கள் வார்மை யும்பல வாகி வெந்தெழு கோர கும்பியி லேவி ழுந்திட ...... நினைவாகிக் கூடு கொண்டுழல் வேனை யன்பொடு ஞான நெஞ்சினர் பாலி ணங்கிடு கூர்மை தந்தினி யாள வந்தருள் ...... புரிவாயே பீலி வெந்துய ராலி வெந்தவ சோகு வெந்தமண் மூகர் நெஞ்சிடை பீதி கொண்டிட வாது கொண்டரு ...... ளெழுதேடு பேணி யங்கெதி ராறு சென்றிட மாற னும்பிணி தீர வஞ்சகர் பீறு வெங்கழு வேற வென்றிடு ...... முருகோனே ஆல முண்டவர் சோதி யங்கணர் பாக மொன்றிய வாலை யந்தரி ஆதி யந்தமு மான சங்கரி ...... குமரேசா ஆர ணம்பயில் ஞான புங்கவ சேவ லங்கொடி யான பைங்கர ஆவி னன்குடி வாழ்வு கொண்டருள் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... மூல மந்திரம் ஓதல் இங்கிலை ... மூல மந்திரமாகிய ஆறெழுத்தை (சரவணபவ) ஓதுவது என்பது என்னிடத்தில் கிடையாது. ஈவது இங்கிலை நேயம் இங்கிலை ... கொடுத்தல் என்பதும் அன்பு என்பதும் என்னிடம் கிடையாது. மோனம் இங்கிலை ஞானம் இங்கிலை ... மெளனநிலை என்பதோ ஞானம் என்பதோ இங்கே கிடையாது. மடவார்கள் மோகம் உண்டு ... பெண்களின் மேல் மோகம் என்பது உண்டு. அதி தாகம் உண்டு ... அந்த மோகத்தில் அதிக வேட்கை உண்டு. அபசாரம் உண்டு ... அவ்வேட்கையினால் செய்த குற்றங்கள் உண்டு. அப ராதம் உண்டு ... அக்குற்றங்களுக்காக நான் படவேண்டிய தண்டனையும் உண்டு. இடு மூகன் என்றொரு பேரும் உண்டு ... எல்லோரும் எனக்கு இட்ட மூகன் (கீழ்மகன்) என்ற பெயரும் உண்டு. அருள் பயிலாத கோலமும் ... அருளில் பயிற்சி இல்லாத விளையாட்டுக்கோலமும், குண வீன துன்பர்கள் வார்மையும் ... குணக்கேடான துன்புறுத்துவோரின் கெட்ட ஒழுக்கமும் பல வாகி ... வெகுவாகப் பெருகி, வெந்தெழு கோர கும்பியிலே விழுந்திட நினைவாகி ... வெந்து எழுகின்ற கோரமான கும்பி* என்ற நரகத்தில் விழுவதற்கான நினைவு கொண்டு, கூடு கொண்(டு) உழல்வேனை ... இந்தக் கூடாகிய உடலைச் சுமந்து திரிகின்ற என்னை அன்பொடு ஞான நெஞ்சினர்பால் இணங்கிடு ... அன்புடன் ஞான உள்ளம் படைத்த பெரியோருடன் சேரும் கூர்மை தந்தினி யாள வந்தருள் புரிவாயே ... புத்தி கூர்மையைத் தந்து இனி என்னை ஆண்டருள்வாயாக. பீலி வெந்(து) உயர் ஆலி வெந்து ... மயிற் பீலி வெந்து, உயர்ந்துள்ள கமண்டல நீரும் கொதித்து** அவ் அசோகு வெந்து ... (நோயைக் குறைக்க வீசிய) அசோகக் கொழுந்தும் வெந்து, அமண் மூகர் நெஞ்சிடை பீதி கொண்டிட ... (அந்த அவமானத்தால்) ஊமைகள் போல் வாய் அடைத்த சமணர்கள் நெஞ்சிலே பயம் அடையுமாறு வாது கொண்டு அருள் எழுது ஏடு ... அவர்களோடு வாது செய்து (அந்தணர் வாழ்க என்று) அருள்வாக்கு எழுதப்பட்ட ஏடு பேணி அங்கு எதிர் ஆறு சென்றிட ... யாவரும் போற்ற அங்கு எதிர் ஏறி வைகை ஆற்றில் செல்லவும், மாறனும்பிணி தீர ... பாண்டிய மன்னனும் (திருநீற்றின் மகிமையால்) நோய் தீர்ந்து நலம் பெறவும், வஞ்சகர் பீறு வெங்கழு வேற ... வஞ்சகச் சமணரும் உடல்கிழிய கழுமரத்தில் ஏறவும், வென்றிடு முருகோனே ... வெற்றி கொண்ட திருஞானசம்பந்தராக அவதரித்த முருகப் பெருமானே, ஆல முண்டவர் சோதி யங்கணர் ... நஞ்சை உண்டவரும், முச்சுடர்களை அழகிய முக்கண்களில் ஏற்றவரும், பாக மொன்றிய வாலை ... ஆகிய சிவபெருமானின் பாகத்தில் பொருந்திய குமரி, அந்தரி ஆதி யந்தமுமான சங்கரி ... பராகாச வடிவி, முதலும் முடிவுமாக நிற்கும் சங்கரியின் குமரேசா ... புதல்வனான குமரக் கடவுளே, ஆரணம்பயில் ஞான புங்கவ ... வேதங்கள் போற்றிப் பயில்கின்ற ஞான குருவே, சேவலங்கொடியான பைங்கர ... அழகிய சேவற்கொடியை ஏந்திய திருக்கரத்தனே, ஆவினன்குடி வாழ்வு கொண்டருள் பெருமாளே. ... திரு ஆவினன்குடியில் வாழ்வு கொண்டருளும் பெருமாளே. |
* கும்பி என்பது ஏழு நரகங்களில் ஒன்று. பாவிகளைக் குயவரது சூளையில் இட்டு வாட்டும் நரகம். |
** சமணர்கள் பாண்டியனின் நோயைத் தணிக்க மயிற்பீலி, கமண்டல நீர், அசோகக் கொழுந்து முதலிய பொருட்களால் முயன்று தோல்வியடைந்த கதை இங்கு குறிப்பிடப்படுகிறது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.258 pg 1.259 pg 1.260 pg 1.261 WIKI_urai Song number: 103 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 189 - mUla mandhiram (pazhani) mUla mandhiram Odhal ingilai eeva dhingilai nEya mingilai mOna mingilai nyAnam ingilai ...... madavArgaL mOgam uNdadhi dhAga muNdapa chAra muNdapa rAdha muNdidu mUkan endroru pErum uNdaruL ...... payilAdha kOla munguNa veena thunbargaL vArmai yumpala vAgi vendhezhu gOra kumbiyi lEvi zhundhida ...... ninaivAgi kUdu koNduzhal vEnai anbodu nyAna nenjinar pAli Nangidu kUrmai thandhini ALa vandharuL ...... purivAyE peeli venthuya rAli vendhava sOgu vendhamaN mUgar nenjidai beethi kondida vAdhu koNdaruL ...... ezhudhEdu pENi angedhir ARu sendRida mARa numpiNi theera vanjagar peeRu vengkazhu ERa vendRidu ...... murugOnE Alam uNdavar jOthi ankaNar bAgam ondriya vAlai anthari Adhi anthamum Ana sankari ...... kumarEsA Ara Nampayil nyAna pungava sEva lankodi yAna painkara Avi nankudi vAzhvu koNdaruL ...... perumALE. ......... Meaning ......... mUla mandhiram Odhal ingilai: I never chant Your basic ManthrA (SaravaNabhava). eevadhingilai nEyamingilai: I do not give alms nor do I show any kindness. mOnamingilai nyAnam ingilai: I do not meditate silently nor do I have any knowledge. madavArgaL mOgam uNdu: There is in me plenty of lust for women; adhidhAgamuNd apachAramuNdu: there is the deep passion because of that lust which leads me to commit several sins; aparAdhamuNdu: and I have to face severe punishment for those sins. idu mUkan endroru pErum uNdu: People have begun to call me the scum. aruL payilAdha kOlamun guNaveena thunbargaL vArmaiyum palavAki: Lacking any grace, I acted like a playboy in the bad company of immoral rogues and became useless in several ways. vendhezhu gOra kumbiyilE vizhundhida ninaivAgi: My destination was perhaps the burning inferno in the hell known as Kumbi*. kUdu koNdu uzhalvEnai: I was roaming aimlessly with this shell of a body. anbodu nyAna nenjinar pAl iNangidu: You have to make me join the company of people with wisdom and loving heart. kUrmai thandhini ALa vandharuL purivAyE: You must make my mind sharp, and from now on, it is Your turn to look after me graciously. peeli venthuyarAli vendhava sOgu venthu: (When ChamaNas tried to cure PANdiyan who was sick), their peacock feather was burnt, their sacred water in the kamaNdalu (kettle-shaped jar) boiled and the asoka tree leaves (used to pacify the patient) were also burnt; and amaN mUgar nenjidai beethi kondida: the ChamaNas got scared and were left dumbfounded due to the humiliation they suffered (at the hands of ThirugnAna SambandhAr). vAdhu koNdaruL ezhudhEdu pENi angu edhir ARu sendrida: When ThirugnAna Sambandhar led the debate, he floated a palm leaf, with words of blessing written on them, on the Vaigai River against the current; mARanum piNi theera: the Pandya King also recovered fully from his illness (due to Sambandhar's holy ash); vanjagar peeRu veng kazhu ERa: and the devious ChamaNas were sent to the gallows and their bodies pierced! vendridu murugOnE: Such was Your victory Oh MurugA, (when You came as ThirugnAna SambandhAr)! Alam uNdavar jOthi ankaNar: SivA, who imbibed poison for the good of all, and who has the Sun, the Moon and the Fire God Agni as His three eyes, bAgam ondriya vAlai: and on whose left side BAlAmbal (PArvathi) is concorporate; anthari Adhi anthamum Ana sankari: She occupies the Cosmic Sky, and She is the One who is the Origin and who is also the End, and that Sankari kumarEsA: delivered You as Her Son, Oh KumarEsA. AraNam payil nyAna pungava: The VEdAs (scriptures) worship You as the Wisest Master! sEvalan kodiyAna painkara: You hold in Your divine hand the rooster as Your staff! Avinan kudi vAzhvu koNdaruL perumALE.: You have Your abode at ThiruvAvinankudi, Oh Great One! |
* Kumbi is one of the seven hells where the sinner is sent to the oast (oven) and his body roasted. |
The seven hells are: kUdAsalam, kumbipAkam, aLLal, athOkathi, Arvam, pUthi and chenthu (pingalam). |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |