திருப்புகழ் 167 திடமிலி சற்குணமிலி  (பழநி)
Thiruppugazh 167 thidamilisaRtguNamili  (pazhani)
Thiruppugazh - 167 thidamilisaRtguNamili - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனனத் தனதனனத் தனதனனத் ...... தனதான
     தனதனனத் தனதனனத் தனதனனத் ...... தனதான

......... பாடல் .........

திடமிலிசற் குணமிலிநற் றிறமிலியற் ...... புதமான
     செயலிலிமெய்த் தவமிலிநற் செபமிலிசொர்க் ...... கமுமீதே

இடமிலிகைக் கொடையிலிசொற் கியல்பிலிநற் ...... றமிழ்பாட
     இருபதமுற் றிருவினையற் றியல்கதியைப் ...... பெறவேணும்

கெடுமதியுற் றிடுமசுரக் கிளைமடியப் ...... பொரும்வேலா
     கிரணகுறைப் பிறையறுகக் கிதழ்மலர்கொக் ...... கிறகோடே

படர்சடையிற் புனைநடனப் பரமர்தமக் ...... கொருபாலா
     பலவயலிற் றரளநிறைப் பழநிமலைப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

திடமிலி ... உன் அருளில் ஈடுபடும் உறுதி இல்லாதவன் யான்,

சற் குணமிலி ... நல்ல குணங்கள் ஏதும் இல்லாதவன் யான்,

நற் றிறமிலி ... தொண்டுகள் செய்வதற்கு ஆற்றல் இல்லாதவன் யான்,

அற்புதமான செயலிலி ... வியக்கத்தக்க அரும் செயலைச்
செய்யாதவன் யான்,

மெய்த் தவமிலி ... மெய்யறிவோடு கூடிய தவம் ஒன்றும் செய்யாதவன்
யான்,

நற் செபமிலி ... நன்மையை நல்கும் ஜபம் ஏதும் செய்யாதவன் யான்,

சொர்க்கமுமீதே இடமிலி ... சொர்க்க உலகத்தில் இடம்பெறத் தகுதி
இல்லாதவன் யான்,

கைக் கொடையிலி ... கரங்களால் ஒரு தானமும் கொடுத்தறியாதவன்
யான்,

சொற்கு இயல்பிலி நற்றமிழ் பாட ... உன்னை நல்ல
தமிழ்ப்பாடலால் பாடுதற்கு ஏற்ற சொல்வன்மை இல்லாதவன்
யான், (இத்தகைய குறைபாடுகள் உள்ள அடியேன்)

இருபதமுற்று ... உனது இரண்டு திருவடிகளையும் அடைந்து

இருவினையற்று ... நல்வினை, தீவினை ஆகிய இருவினைகளும்
தீர்ந்து

இயல்கதியைப் பெறவேணும் ... உயர்ந்த முக்தி நிலையைப் பெற்று
உய்ய வேண்டும்.

கெடுமதியுற்றிடும் அசுர ... தீய புத்தியே உடையவர்களாகிய
அசுரர்களது

கிளைமடியப் பொரும்வேலா ... வம்சமே அழியுமாறு போர் புரிந்த
வேலனே,

கிரணகுறைப் பிறை ... ஒளிபடைத்த இளம்பிறைச் சந்திரன்,

அறுகு அக்கு இதழ் மலர் கொக்கிறகோடே ... அறுகம்புல்,
ருத்திராக்ஷம், வில்வ இதழ், கொன்றை மலர், கொக்கின் இறகு
முதலியவற்றை

படர்சடையிற் புனை ... விரிந்த சடைமுடியில் தரித்துக்
கொண்டிருப்பவரும்

நடனப் பரமர்தமக்கொருபாலா ... ஆனந்தத் தாண்டவம்
புரிபவருமான பரமசிவன் பெற்ற ஒப்பற்ற குமாரனே,

பலவயலிற் றரளநிறை ... குறையின்றிப் பயன் தரும் வயல்களில்
முத்துக்கள் நிறைந்த

பழநிமலைப் பெருமாளே. ... பழநி மலையில் எழுந்தருளிய
பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.434  pg 1.435 
 WIKI_urai Song number: 180 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 167 - thidamili saRtguNamili (pazhani)

thidamilisaR guNamilinat RiRamiliyaR buthamAna
     seyalilimeyth thavamilinaR jepamilisork kamumeedhE

idamilikai kodaiyilisoR kiyalbilinat RamizhpAda
     irupadhamut Riruvinaiyat Riyalgadhiyaip peRavENum

kedumadhiyut Ridumasura kiLaimadiyap porumvElA
     kiraNakuRaip piRaiyaRugak kidhazhmalarkok kiRagOdE

padarsadaiyil punainadanap paramarthamak korubAlA
     palavayalil tharaLaniRaip pazhanimalaip perumALE.

......... Meaning .........

thidamili: I do not have the commitment to worship You;

saRguNamili: I do not possess any virtue whatsoever;

natRiRamili: I do not have the capacity to serve You;

aRbuthamAna seyalili: I am incapable of creating any miracle;

meyththavamili: I have no experience of having done any true penance;

naRjepamili: I have never chanted sincerely in my life;

sorgamumeedhE idamili: I have not reserved any seat for myself in the heaven;

kaikodaiyili: My hands do not know what alms-giving is all about;

soR kiyalbili naR thamizh pAda: I do not possess the word power to sing good Tamil songs; (Despite all these deficiencies in myself)

irupadhamut RiruvinaiyatRu: I desire to reach Your two feet and rid myself of the bondage from my good and bad deeds.

iyal gadhiyai peRavENum: I also want You to grant me the blissful liberated state!

kedu madhiutRidum asura kiLai madiya: To annihilate the dynasties of all wicked asuras,

porum vElA: You fought with Your Spear!

kiraNa kuRaip piRai aRugak kidhazh malar kokkiRagOdE padar sadaiyil punai: One who wears on His spread-out tresses the bright crescent moon, aRugam (cynodon) grass, rudrAksha beads, vilvam (bael) leaves, kondRai (Indian laburnum) flower and the feather from the crane;

nadana paramar: One who is Supreme and One who blissfully dances the Cosmic Dance -

thamak korubAlA: He is none other than SivA who has delivered You as His unique son!

pala vayalil tharaLa niRai: In the fertile and productive fields, there are plenty of pearls available

pazhani malai perumALE.: on the Mount of Pazhani, which is Your abode, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 167 thidamili saRtguNamili - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]