திருப்புகழ் 166 தலைவலி மருத்தீடு  (பழநி)
Thiruppugazh 166 thalaivalimaruththeedu  (pazhani)
Thiruppugazh - 166 thalaivalimaruththeedu - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தந்தான தானான தானதன
     தனதன தந்தான தானான தானதன
          தனதன தந்தான தானான தானதன ...... தனதான

......... பாடல் .........

தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்
     விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு
          சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி ...... யணுகாதே

தலமிசை யதற்கான பேரோடு கூறியிது
     பரிகரி யெனக்காது கேளாது போலுமவர்
          சரியும்வ யதுக்கேது தாரீர்சொ லீரெனவும் ...... விதியாதே

உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர்
     வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண
          முனதடி யினிற்சூட வேநாடு மாதவர்க ...... ளிருபாதம்

உளமது தரித்தேவி னாவோடு பாடியருள்
     வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ
          உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை ...... வரவேணும்

அலைகட லடைத்தேம காகோர ராவணனை
     மணிமுடி துணித்தாவி யேயான ஜானகியை
          அடலுட னழைத்தேகொள் மாயோனை மாமனெனு ...... மருகோனே

அறுகினை முடித்தோனை யாதார மானவனை
     மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம்
          அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும் ...... வருவோனே

பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை
     யிருசர ணவித்தார வேலாயு தாவுயர்செய்
          பரண்மிசை குறப்பாவை தோள்மேவ மோகமுறு ...... மணவாளா

பதுமவ யலிற்பூக மீதேவ ரால்கள் துயில்
     வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர்
          பழநிவ ருகற்பூர கோலாக லாவமரர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம் ... தலைவலி, வசிய
மருந்தால் வரும் நோய், மஞ்சட்காமாலை, ரத்தசோகை, ஜுரம்,

விழிவலி வறட்சூலை காயாசு வாசம் ... கண்வலி, வறள் என்ற
வயிற்றுவலி, காசநோய், மூச்சுப்பிடிப்பு,

வெகுசலமிகு விஷப்பாக மாயாவி காரபிணியணுகாதே ...
நீரிழிவு, கொடிய விஷ நோய்கள், உலகமாயையால் வரும்
விகாரமான பிணிகள் முதலியவை என்னை அணுகாதவண்ணம்,

தலமிசை யதற்கான பேரோடு கூறி ... பூமியில் அந்த நோய்கள்
நீங்குவதற்காக சில வைத்தியர்களிடம் சொல்லி,

யிது பரிகரி யெனக்காது கேளாது போலுமவர் ... இது
நீங்குவதற்குப் பரிகாரம் யாதெனக் கேட்டால், காது கேளாததுபோலச்
செல்பவர் சிலர்,

சரியும் வயதுக்கேது தாரீர்சொலீரெனவும் விதியாதே ...
சாகப்போகும் வயதாகிவிட்டதே உமக்கு, எவ்வளவு பணம் தருவீரெனக்
கேட்பவர் சிலர் என்று பிறர் கூறும்படியான விதியை என் தலையில்
எழுதாமல்,

உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர் ... ஊக்கக்குறைவு
இன்றி, விருப்பமுடன் பெரிய பூந்தோட்டத்தில் பூத்த மணமுள்ள
மலர்களை,

வகைவகை யெடுத்தே தொடா மாலிகாபரணம் ... விதவிதமாகப்
பறித்துத் தொடுத்து மாலை வகைகளில் ஆபரணங்கள் போல் அமைத்து

உனதடியி னிற்சூடவேநாடு மாதவர்கள் இருபாதம் ...
உன்னடியில் சூட்டுதற்கு விரும்பும் சிறந்த தவசிரேஷ்டர்களின் இரு
பாதங்களையும்

உளமது தரித்தே வினாவோடு பாடியருள் ... மனத்தினில்
தரித்தே, ஆய்ந்த அறிவுடன் பாடி, உன்னருளால்

வழிபட எனக்கே தயாவோடு தாளுதவ ... உன்னை
வழிபடுவதற்கு, என்மீது அன்பு கூர்ந்து, உன் திருவடிகளைத் தந்துதவ

உரகமது எடுத்தாடு மேகார மீதின்மிசை வரவேணும் ...
பாம்பைத் தூக்கி எறிந்து ஆடும் மயிலின் மீது வந்தருள வேண்டும்.

அலைகடல் அடைத்தே மகாகோர ராவணனை ... அலைகடலை
அணையிட்டு அடைத்து, மகா கோரமான ராவவணனுடைய

மணிமுடி துணித்து ஆவியேயான ஜானகியை ... மணிமுடிகளை
அறுத்துத்தள்ளி, உயிருக்கு ஒப்பான சீதாதேவியை

அடலுடன் அழைத்தேகொள் மாயோனை மாமனெனு
மருகோனே
... தன் தோள்வலியால் அழைத்துக்கொண்ட மாயவனான
திருமாலை மாமன்
என்று அழைக்கும் மருகனே,

அறுகினை முடித்தோனை யாதார மானவனை ... அறுகம்புல்லை
சடையில் முடித்தவனும், உயிர்கட்கெல்லாம் ஆதாரமானவனும்,

மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம் ... மழு, மான்
இவைகளை ஏந்தியவனும், மகா காளி வெட்கும்படியாக முன்னர்

அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும்
வருவோனே
... சபைதனிலே நடனம் ஆடியவனான சிவபிரானை,
சிறந்த தந்தையே என்றழைக்கவும் வந்தவனே,

பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை ... பல கலைகளைப்
படித்து ஓதும் கவிஞர்களின் நாவிலே வாசம் செய்கின்ற

இருசரண வித்தார வேலாயுதா ... இரு திருவடிகளை உடைய
வித்தகனே, வேலாயுதனே,

உயர்செய் பரண்மிசை குறப்பாவை ... உயரத்தில் கட்டப்பட்ட
பரணின் மீது இருந்த குறப்பெண் வள்ளியின்

தோள்மேவ மோகமுறு மணவாளா ... தோள்களைத் தழுவ மிக்க
ஆசை கொண்ட மணவாளனே,

பதுமவயலிற் பூகமீதே வரால்கள் துயில் வருபுனல்
பெருக்காறு
... தாமரை மலர்கின்ற வயலிலும், பாக்கு மரங்களின் மீதும்,
வரால் மீன்கள் உறங்கும்படி வரும் நீர்ப்பெருக்கை உடைய ஆறாகிய

காவேரி சூழவளர் பழநிவரு ... காவேரி சூழ விளங்கும் பழநியில்
எழுந்தருளிய,

கற்பூர கோலாகலா அமரர் பெருமாளே. ... பச்சைக் கற்பூர மணம்
கமழும் அலங்கார ஆடம்பரனே, தேவர்களின் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.362  pg 1.363  pg 1.364  pg 1.365 
 WIKI_urai Song number: 149 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 166 - thalaivali maruththeedu (pazhani)

thalaivali maruththeedu kAmAlai sOgaijuram
     vizhivali vaRatcUlai kAyAsu vAsamvegu
          chalamigu vishappAga mAyAvi kArapiNi ...... aNugAdhE

thalamisai adhaRkAna pErOdu kURiyidhu
     parikari enakkAdhu kELAdhu pOlumavar
          sariyumva yadhukkEdhu thAreerso leerenavum ...... vidhiyAdhE

ulaivaRa viruppAga neeLkAvin vAsamalar
     vagaivagai eduththE tho dAmAli kAbaraNam
          unadhadi yinilsUda vEnAdu mAdhavargaL ...... irupAdham

uLamadhu thariththEvi nAvOdu pAdiyaruL
     vazhipada enakkEdha yAvOdu thALudhava
          uragama dheduththAdu mEkAra meedhinmisai ...... varavENum

alaikadal adaiththEma hAgOra rAvaNanai
     maNimudi thuNiththAvi yEyAna jAnakiyai
          adaludan azhaiththEkoL mAyOnai mAmanenu ...... marugOnE

aRuginai mudiththOnai AdhAram Anavanai
     mazhuvuzhai pidiththOnai mAkaLi nANamunam
          avaidhanil nadiththOnai mAthAdhai yEenavum ...... varuvOnE

palakalai padiththOdhu pAvANar nAviluRai
     iruchara NaviththAra vElAyu dhAuyarsey
          paraNmisai kuRappAvai thOlmEva mOgamuRu ...... maNavALA

padhumava yaliRpUga meedhE varAlgaL thuyil
     varu punal perukkARu kAvEri sUzhavaLar
          pazhaniva rukaRpUra kOlAha lAamarar ...... perumALE.

......... Meaning .........

thalaivali maruththeedu kAmAlai sOgaijuram: Head ache, diseases caused by sorcery, jaundice, anaemia, fever,

vizhi vali vaRat sUlai kAyA suvAsam vegu: eye sickness, stomach ache known as vaRaL, tuberculosis, breathlessness,

chalamigu vishappAga mAyA vikAra piNi aNugAdhE: diabetes, several poisonous diseases and various peculiar ailments caused by worldly delusion - I did not want any of these to afflict me.

thalamisai adhaRkAna pErOdu kURi: For that purpose, I consulted many people in the medical field on the earth

yidhupari kari enak kAdhu kELAdhu pOlum avar: requesting them to suggest remedies; they turned a deaf ear to me.

sariyum vayadhukkEdhu thAreer soleer enavum vidhiyAdhE: Some people questioned the use of medicines at my advanced age and asked me as to how much I was prepared to pay; and I do not want to be destined to listen to such people.

ulaivaRa viruppAga neeLkAvin vAsa malar vagai vagai eduththE: Fragrant flowers of many varieties are plucked enthusiastically from large gardens

thodA mAlikAbaraNam unadhadiyinil sUdavE nAdu mAdhavargaL: and are festooned into many garlands by great ascetics to place them with pleasure as ornaments at Your feet;

irupAdham uLamadhu thariththE: I want to firmly place their feet in my heart

vinAvOdu pAdi aruL vazhipada: in order to intelligently sing Your glory and to pay obeisance.

enakkE dhayAvOdu thAL udhava: Kindly offer me Your hallowed feet

uragam adheduththAdu mEkAra meedhin misai varavENum: and come to me mounting the Peacock that dances after casting away the serpent!

alaikadal adaiththE: He built a bridge across the wavy seas;

mahAgOra rAvaNanai maNi mudi thuNiththu: He knocked down the crowned heads of the extremely hideous Ravana;

Avi yEyAna jAnakiyai adaludan azhaiththE koL: He rescued JAnaki, dear to Him as His life, through His prowess and took her home;

mAyOnai mAmanenu marugOnE: Oh MurugA, You address that mystic Rama (Vishnu) as Your Uncle!

aRuginai mudiththOnai AdhAram Anavanai: He wears the aRugam (cynodon) grass on His tresses; He is the basic cause of all lives;

mazhuvuzhai pidiththOnai: He holds a pick-axe and a deer in His arms;

mAkaLi nANamunam avaidhanil nadiththOnai: Once, on the stage, He danced so exquisitely that Mother KALi was put to shame;

mAthAdhaiyE enavum varuvOnE: You address that SivA as Your Great Father!

palakalai padiththOdhu pAvANar nAviluRai: On the tongues of poets who are well-versed with many arts,

irucharaNa viththAra vElAyudhA: Your hallowed feet prevail, Oh Wizard! You hold the Spear as Your weapon!

uyar sey paraNmisai kuRappAvai: The damsel of the KuRavAs is seated on the high guarding-plank in the millet field;

thOl mEva mOgamuRu maNavALA: You love to hug her shoulders, Oh Consort of VaLLi!

padhuma vayaliR pUga meedhE varAlgaL thuyil: The varAl fish sleep on the lotus in the field and on top of the betelnut trees;

varu punal perukkARu kAvEri sUzha: there is abundant water in the River KAveri which surrounds

vaLar pazhani varu kaRpUra kOlAhalA: the prosperous town of Pazhani, which is Your abode! You love to adorn Yourself with the fragrance of camphor!

amarar perumALE.: You are the Lord of the Celestials, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 166 thalaivali maruththeedu - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]