திருப்புகழ் 163 தகர நறுமலர்  (பழநி)
Thiruppugazh 163 thagaranaRumalar  (pazhani)
Thiruppugazh - 163 thagaranaRumalar - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

......... பாடல் .........

தகர நறுமலர் பொதுளிய குழலியர்
     கலக கெருவித விழிவலை படவிதி
          தலையி லெழுதியு மனைவயி னுறவிடு ...... வதனாலே

தனயர் அனைமதர் மனைவியர் சினெகிதர்
     சுரபி விரவிய வகையென நினைவுறு
          தவன சலதியின் முழுகியெ யிடர்படு ...... துயர்தீர

அகர முதலுள பொருளினை யருளிட
     இருகை குவிசெய்து ளுருகிட வுருகியெ
          அரக ரெனவல னிடமுற எழிலுன ...... திருபாதம்

அருள அருளுடன் மருளற இருளற
     கிரண அயில்கொடு குருகணி கொடியொடு
          அழகு பெறமர கதமயில் மிசைவர ...... இசைவாயே

சிகர குடையினி னிரைவர இசைதெரி
     சதுரன் விதுரனில் வருபவ னளையது
          திருடி யடிபடு சிறியவ னெடியவன் ...... மதுசூதன்

திகிரி வளைகதை வசிதநு வுடையவ
     னெழிலி வடிவின னரவுபொன் முடிமிசை
          திமித திமிதிமி யெனநட மிடுமரி ...... மருகோனே

பகர புகர்முக மதகரி யுழைதரு
     வனிதை வெருவமுன் வரஅருள் புரிகுக
          பரம குருபர இமகிரி தருமயில் ...... புதல்வோனே

பலவின் முதுபழம் விழைவுசெய் தொழுகிய
     நறவு நிறைவயல் கமுகடர் பொழில்திகழ்
          பழநி மலைவரு புரவல அமரர்கள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தகர நறு மலர் பொதுளிய குழலியர் ... மயிர்ச் சாந்தும், மணமுள்ள
மலர்களும் நிறைந்த கூந்தலுடைய (விலை) மகளிரின்

கலக கெருவித விழி வலை பட விதி தலையில் எழுதியும் ...
குழப்பம் தரும் கர்வம் மிக்க கண் வலையில் படும்படியாக தலையில்
விதியால் எழுதப்பட்டும்,

மனைவி இல் உறவிடு அதனாலே ... மனைவியோடு கூடிய இல்லற
வாழ்க்கையில் இருக்க வேண்டி அமைந்தபடியால்,

தனயர் அ(ன்)னை தமர் மனைவியர் சினெகிதர் சுரபி விரவிய
வகை என நினைவு உறு
... மக்கள், தாய், சுற்றத்தார், மனைவியர்,
நண்பர்கள், பசு முதலிய பல வகையான சிந்தனை ஏற்பட,

தவனம் சலதியில் முழுகியே இடர் படு துயர் தீர ... ஆசைக்
கடலில் மூழ்கி துன்பம் உறுகின்ற துயரம் நீங்க,

அகர முதல் உள பொருளினை அருளிட ... அகர எழுத்தை
முதலாகக் கொண்ட (அ+உ+ம் = ஓம் என்ற) பிரணவப் பொருளை
(நீ) உபதேசிக்க,

இரு கை குவி செய்து உள் உருகிட உருகியெ ... இரண்டு
கைகளையும் குவித்து மனம் உருகி உருகி,

அரகர என வலன் இடம் உற எழில் உனது இரு பாதம் ...
ஹர ஹர எனக் கூறி உனது வலப் புறத்தும் இடப் புறத்தும் இருந்து,
உன்னுடைய அழகிய இரண்டு திருவடிகளை

அருள அருளுடன் மருள் அற இருள் அற ... நீ தந்து அருளவும்,
அங்ஙனம் பெற்ற அருள் ஆசியினால் என் மயக்கம் நீங்க,
அஞ்ஞானமும் அகல,

கிரண அயில் கொடு குருகு அணி கொடியொடு ... ஒளி வீசும்
வேலும், கோழிக் கொடியும் விளங்க,

அழகு பெற மரகத மயில் மிசை வர இசைவாயே ... அழகாக
பச்சை நிற மயிலின் மீதில் வர நீ இசைந்தருளுக.

சிகர குடையினில் நிரை வர இசை தெரி சதுரன் ... கோவர்த்தன
மலையாகிய குடையின் கீழே பசுக் கூட்டம் வந்து சேர குழல் இசையை
வாசித்துக் காட்டிய சமர்த்தன்,

விதுரன் இல் வருபவன் ... விதுரனுடைய வீட்டுக்கு விரும்பி
(விருந்து செய்ய) வந்தவன்*,

அளை அது திருடி அடி படு சிறியவன் நெடியவன் மது
சூதன்
... வெண்ணெயைத் திருடி அடிபட்ட சிறிய குழந்தை,
(திரிவிக்ர ரூபம் கொண்ட) பெரியவன், மது என்ற அசுரனைக்
கொன்றவன்,

திகிரி வளை கதை வசி தநு உடையவன் ... சக்கரம், சங்கு,
தண்டம், வாள், வில் (முதலிய ஐந்து ஆயுதங்களை) உடையவன்,

எழிலி வடிவினன் அரவு பொன் முடி மிசை ... மேக நிறம்
கொண்டவன், காளிங்கன் என்னும் பாம்பின் அழகிய
பணாமுடியின் மேல்

திமித திமி திமி என நடம் இடும் அரி மருகோனே ... திமித
திமி திமி என்ற பல ஒலிகளுடன் நடனம் செய்கின்ற திருமாலின்
மருகனே,

பகர புகர் முக மத கரி ... அழகிய, புள்ளியைக் கொண்ட
முகத்தை உடைய, மதம் கொண்ட யானையாகிய கணபதியை,

உழை தரு வனிதை வெருவ முன் வர அருள் புரி குக ...
மான் பெற்ற மங்கையாகிய வள்ளி அஞ்சும்படி (யானை உருவில்)
முன்னே வரச் செய்தருளிய குகனே,

பரம குரு பர இமகிரி தரு மயில் புதல்வோனே ... மேலானவனே,
குருபரனே, இமவான் பயந்தருளிய மயில் போன்ற உமையின் மகனே,

பலவின் முது பழம் விழைவு செய்து ஒழுகிய நறவு நிறை
வயல்
... பலாவின் பழுத்த பழத்தினின்று கனிந்து ஒழுகிய தேன்
நிறைந்த வயல்களும்,

கமுகு அடர் பொழில் திகழ் பழநி மலை வரும் புரவல
அமரர்கள் பெருமாளே.
... கமுகு மரங்களும் அடர்ந்த சோலைகள்
விளங்கும் பழனி மலையில் எழுந்தருளி உள்ள அரசே, தேவர்களின்
பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.324  pg 1.325  pg 1.326  pg 1.327 
 WIKI_urai Song number: 132 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 163 - thagara naRumalar (pazhani)

thakara naRumalar pothuLiya kuzhaliyar
     kalaka keruvitha vizhivalai padavithi
          thalaiyi lezhuthiyu manaivayi nuRavidu ...... vathanAlE

thanayar anaimathar manaiviyar sinekithar
     surapi viraviya vakaiyena ninaivuRu
          thavana salathiyin muzhukiye yidarpadu ...... thuyartheera

akara muthaluLa poruLinai yaruLida
     irukai kuviseythu Lurukida vurukiye
          araka renavala nidamuRa ezhiluna ...... thirupAtham

aruLa aruLudan maruLaRa iruLaRa
     kiraNa ayilkodu kurukaNi kodiyodu
          azhaku peRamara kathamayil misaivara ...... isaivAyE

sikara kudaiyini niraivara isaitheri
     sathuran vithuranil varupava naLaiyathu
          thirudi yadipadu siRiyava nediyavan ...... mathucUthan

thikiri vaLaikathai vasithanu vudaiyavan
     ezhili vadivinan aravupon mudimisai
          thimitha thimithimi yenanada midumari ...... marukOnE

pakara pukarmuka mathakari yuzhaitharu
     vanithai veruvamun vara aruL purikuka
          parama gurupara imakiri tharumayil ...... puthalvOnE

palavin muthupazham vizhaivusey thozhukiya
     naRavu niRaivayal kamukadar pozhilthikazh
          pazhani malaivaru puravala amararkaL ...... perumALE.

......... Meaning .........

thakara naRu malar pothuLiya kuzhaliyar: The hair of these whores with henna was fragrant with scented flowers;

kalaka keruvitha vizhi valai pada vithi thalaiyil ezhuthiyum: it was destined that I was to be ensnared by their disturbing and arrogant eyes;

manaivi il uRavidu athanAlE: but still I had to remain in marital life with my wife;

thanayar a(n)nai thamar manaiviyar sinekithar surapi viraviya vakai ena ninaivu uRu: and, therefore, the thoughts of my children, mother, relatives, wives, friends, cattle and others occupied my mind.

thavanam salathiyil muzhukiyE idar padu thuyar theera: To end the misery arising out of my drowning in the sea of desires,

akara muthal uLa poruLinai aruLida: You have to teach me the significance of the PraNava ManthrA commencing with the letter 'A' (A+U+M = AUM = OM);

iru kai kuvi seythu uL urukida urukiye: as my two hands are united in worship, with my heart melting and softening,

arakara ena valan idam uRa ezhil unathu iru pAtham aruLa: and as I pray loudly "Hara, Hara" remaining either side of Yours, kindly grant me Your hallowed feet!

aruLudan maruL aRa iruL aRa: With Your gracious blessings, my delusion and ignorance will be removed;

kiraNa ayil kodu kuruku aNi kodiyodu azhaku peRa marakatha mayil misai vara isaivAyE: with the dazzling Spear in Your hand, the staff displaying the Rooster in another hand, kindly consent to give me Your vision, mounted on the beautiful emerald-green peacock!

sikara kudaiyinil nirai vara isai theri sathuran: He is an expert flautist who played the flute under the Mount GOvardhan where herds of cow gathered;

vithuran il varupavan: He came to Vithuran's home as a guest*;

aLai athu thirudi adi padu siRiyavan nediyavan mathu cUthan: He is the little kid who stole butter and got a beating for that; He assumed the gigantic shape of a tall one (Thrivikraman); He destroyed the demon called Madhu;

thikiri vaLai kathai vasi thanu udaiyavan: He holds five kinds of weapons, namely, the disc, the conch-shell, the mace, the sword and the bow;

ezhili vadivinan aravu pon mudi misai thimitha thimi thimi ena nadam idum ari marukOnE: He is of the hue of dark cloud; He danced upon the beautiful hood of the serpent KALingan to the meter of "Dhimitha Dhimi Dhimi"; He is Lord VishNu, and You are His nephew!

pakara pukar muka matha kari uzhai tharu vanithai veruva mun vara aruL puri kuka: Once, Ganapathi, came, charging with rage, as a beautiful elephant, with a pretty dotted face, scaring VaLLi, the damsel delivered by a deer; it was upon Your request, Oh GuhA!

parama kuru para imakiri tharu mayil puthalvOnE: Oh Supreme Lord and the Great Master! You are the son of the peacock-like PArvathi, the daughter of Mount HimavAn!

palavin muthu pazham vizhaivu seythu ozhukiya naRavu niRai vayal: The fields in this place are filled with honey seeping from the ripe jack fruits;

kamuku adar pozhil thikazh pazhani malai varum puravala amararkaL perumALE.: and there are many betelnut trees in the dense groves of Mount Pazhani, which is Your abode, Oh King! You are the Lord of the celestials, Oh Great One!


* Vithuran is the younger brother of ThirutharAshtiran and PANdu, the Kings of the Kuru Dynasty. When Krishna went to DuryOdhanan's palace as the messenger of the PANdavAs, rather than staying as a guest to the Royal Palace, He went as a guest of the simple home of Vithuran and ate the peel of a plantain as feast.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 163 thagara naRumalar - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]