திருப்புகழ் 151 கொந்துத் தரு  (பழநி)
Thiruppugazh 151 kondhuththaru  (pazhani)
Thiruppugazh - 151 kondhuththaru - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்தத் தனதன தனனா தனனா
     தந்தத் தனதன தனனா தனனா
          தந்தத் தனதன தனனா தனனா ...... தனதான

......... பாடல் .........

கொந்துத் தருகுழ லிருளோ புயலோ
     விந்தைத் தருநுதல் சிலையோ பிறையோ
          கொஞ்சிப் பயில்மொழி அமுதோ கனியோ ...... விழிவேலோ

கொங்கைக் குடமிரு கரியோ கிரியோ
     வஞ்சிக் கொடியிடை துடியோ பிடியோ
          கொங்குற் றுயரல்கு லரவோ ரதமோ ...... எனுமாதர்

திந்தித் திமிதிமி திமிதா திமிதோ
     தந்தித் திரிகட கிடதா எனவே
          சிந்திப் படிபயில் நடமா டியபா ...... விகள்பாலே

சிந்தைத் தயவுகள் புரிவே னுனையே
     வந்தித் தருள்தரு மிருசே வடியே
          சிந்தித் திடமிகு மறையா கியசீ ...... ரருள்வாயே

வெந்திப் புடன்வரு மவுணே சனையே
     துண்டித் திடுமொரு கதிர்வே லுடையாய்
          வென்றிக் கொருமலை யெனவாழ் மலையே ...... தவவாழ்வே

விஞ்சைக் குடையவர் தொழவே வருவாய்
     கஞ்சத் தயனுட னமரே சனுமே
          விந்தைப் பணிவிடை புரிபோ தவர்மே ...... லருள்கூர்வாய்

தொந்திக் கணபதி மகிழ்சோ தரனே
     செங்கட் கருமுகில் மருகா குகனே
          சொந்தக் குறமகள் கணவா திறல்சேர் ...... கதிர்காமா

சொம்பிற் பலவள முதிர்சோ லைகள்சூழ்
     இஞ்சித் திருமதிள் புடைசூ ழருள்சேர்
          துங்கப் பழநியில் முருகா இமையோர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கொந்துத் தரு குழல் இருளோ புயலோ ... பூங்கொத்துக்கள்
உள்ள கூந்தல் இருட்டோ, மேகமோ?

விந்தைத் தரு நுதல் சிலையோ பிறையோ ... விசித்திரமான
நெற்றி வில்லோ, பிறைச் சந்திரனோ?

கொஞ்சிப் பயில் மொழி அமுதோ கனியோ விழி வேலோ ...
கொஞ்சிப் பேசும் பேச்சு அமுதமோ அல்லது பழமோ? கண்
வேலாயுதமோ?

கொங்கைக் குடம் இரு கரியோ கிரியோ ... மார்பகங்களாகிய
குடங்கள் இரண்டு யானைகளோ, மலைகளோ?

வஞ்சிக் கொடி இடை துடியோ பிடியோ ... வஞ்சிக் கொடி
போன்ற இடுப்பு உடுக்கையோ, ஒரு பிடியில் அடங்குவதோ?

கொங்கு உற்று உயர் அல்குல் அரவோ ரதமோ எனு மாதர் ...
வாசனை கொண்டு உயர்ந்த பெண்குறி பாம்போ, ரதமோ என்று
உவமை கூறத் தக்க விலைமாதர்கள்.

திந்தித் திமிதிமி திமிதா திமிதோ தந்தித் திரிகிட கிடதா
எனவே சிந்து இப்படி பயில் நடமாடிய பாவிகள் பால்
...
திந்தித் திமிதிமி திமிதா திமிதோ தந்தித் திரிகிட கிடதா என்ற
ஒலியுடன் சிந்து எனப்படும் இசைப் பாடல்களை இவ்வண்ணம்
பயின்று நடனம் செய்கின்ற பாவியர்களாகிய வேசியரிடத்தே

சிந்தைத் தயவுகள் புரிவேன் உனையே வந்தித்து அருள்
தரும் இரு சேவடியே சிந்தித்திட மிகு மறையாகிய சீர்
அருள்வாய்
... மனம் அன்பு கூர்ந்த செயல்களைச் செய்பவனாகிய
அடியேன் உன்னையே வணங்கி திருவருளைப் பாலிக்கும் உனது
இரண்டு திருவடிகளை தியானிக்க சிறந்த ரகசியமாகிய உபதேசப்
பொருளை அருள்வாயாக.

வெந்திப்புடன் வரும் அவுண ஈசனையே துண்டித்திடும்
ஒரு கதிர் வேல் உடையாய் வென்றிக்கு ஒரு மலை என
வாழ் மலையே தவ வாழ்வே
... உடை வாள், அம்பராத்தூணி
முதலிய கட்டுக்களுடன் போருக்கு வந்த அசுரர் தலைவனாகிய
சூரபத்மனை வெட்டிய ஒப்பற்ற ஒளி வீசும் வேலை உடையவனே,
வெற்றிக்கு ஒரு மலை இவன் என்று சொல்லும்படி வாழ்கின்ற
ஞானமலையே, தவ சீலர்களுக்கு வாழ்வே,

விஞ்சைக்கு உடையவர் தொழவே வருவாய் கஞ்சத்து
அயனுடன் அமர ஈசனுமே விந்தைப் பணிவிடை புரி
போது அவர்மேல்அருள் கூர்வாய்
... ஞான வித்தைக்கு
உரியவர்கள் தொழும்படி வருபவனே, தாமரை மலர் மீது உறையும்
பிரம தேவரும் இந்திரனும் அழகிய திருத் தொண்டுகள்
செய்யும்போது அவர்கள்பால் மிகுதியாக அருள் சுரப்பவனே,

தொந்திக் கணபதி மகிழ் சோதரனே செம் கண் கரு
முகில் மருகா குகனே சொந்தக் குற மகள் கணவா திறல்
சேர் கதிர் காமா
... தொந்தியை உடைய கணபதி மகிழும் தம்பியே,
சிவந்த கண்களை உடைய, மேகம் போன்ற கரிய, திருமாலின்
மருகனே, உனக்குச் சொந்தமான குறப் பெண் வள்ளியின்
கணவனே, திறமை வாய்ந்த கதிர் காமத்தில் உறைபவனே,

சொம்பில் பல வனம் முதிர் சோலைகள் சூழ் இஞ்சித்
திரு மதிள் புடை சூழ் அருள் சேர் துங்கப் பழநியில்
முருகா இமையோர் பெருமாளே.
... அழகு வாய்ந்த பல
வனங்கள் நிறைந்த, சோலைகள் சூழ்ந்துள்ள, கோட்டையும்
அழகிய மதில்களும் அருகில் சுற்றியிருந்து அருள் பாலிப்பதும்
பெருமை வாய்ந்ததுமான பழனி மலை மேல் வீற்றிருக்கும்
முருகனே, தேவர்களின் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.366  pg 1.367  pg 1.368  pg 1.369 
 WIKI_urai Song number: 151 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 151 - kondhuth tharu (pazhani)

konthuth tharukuzha liruLO puyalO
     vinthaith tharunuthal silaiyO piRaiyO
          konjip payilmozhi amuthO kaniyO ...... vizhivElO

kongaik kudamiru kariyO kiriyO
     vanjik kodiyidai thudiyO pidiyO
          kongut Ruyaralku laravO rathamO ...... enumAthar

thinthith thimithimi thimithA thimithO
     thanthith thirikada kidathA enavE
          sinthip padipayil nadamA diyapA ...... vikaLpAlE

sinthaith thayavukaL purivE nunaiyE
     vanthith tharuLtharu mirusE vadiyE
          sinthith thidamiku maRaiyA kiyasee ...... raruLvAyE

venthip pudanvaru mavuNE sanaiyE
     thuNdith thidumoru kathirvE ludaiyAy
          venRik korumalai yenavAzh malaiyE ...... thavavAzhvE

vinjaik kudaiyavar thozhavE varuvAy
     kanjath thayanuda namarE sanumE
          vinthaip paNividai puripO thavarmE ...... laruLkUrvAy

thonthik kaNapathi makizhsO tharanE
     sengat karumukil marukA gukanE
          sonthak kuRamakaL kaNavA thiRalsEr ...... kathirkAmA

sompiR palavaLa muthirsO laikaLcUzh
     injith thirumathiL pudaicU zharuLsEr
          thungap pazhaniyil murukA imaiyOr ...... perumALE.

......... Meaning .........

konthuth tharu kuzhal iruLO puyalO: "Is their hair, adorned with bunches of flowers, darkness itself, or a dark cloud?

vinthaith tharu nuthal silaiyO piRaiyO: Is their wonderful forehead a bow, or the crescent-moon?

konjip payil mozhi amuthO kaniyO vizhi vElO: Is their prattling sweet speech the nectar itself, or a fruit? Are their eyes spears?

kongaik kudam iru kariyO kiriyO : Are their pot-like breasts two elephants, or mountains?

vanjik kodi idai thudiyO pidiyO: Is their vanji-creeper-like (rattan reed) waist a hand-drum, or something that could be held in a grip?

kongu utRu uyar alkul aravO rathamO enu mAthar: Is their fragrant and lofty genital a hood of the serpent or a chariot?" - such comparisons abound about these women.

thinthith thimithimi thimithA thimithO thanthith thirikida kidathA enavE sinthu ippadi payil nadamAdiya pAvikaL pAl: These sinful whores have practised dance against the background music of the variety known as sinthu to the meter "thinthith thimithimi thimithA thimithO thanthith thirikida kidathA";

sinthaith thayavukaL purivEn unaiyE vanthiththu aruL tharum iru sEvadiyE sinthiththida miku maRaiyAkiya seer aruLvAyE: I set my mind to perform acts of love with these whores; kindly make me worship You and meditate on Your two hallowed feet that shower grace upon me; for that, You have to teach me the great secret ManthrA which is the principle of Your preaching, Oh Lord!

venthippudan varum avuNa eesanaiyE thuNdiththidum oru kathir vEl udaiyAy venRikku oru malai ena vAzh malaiyE thava vAzhvE: The leader of the demons, SUran, came to war with all kinds of weapons like the sword, the knapsack containing the arrows etc.; that SUran was severed and destroyed by Your matchless and bright spear, Oh Lord! You are deemed as a mountain of triumph, Oh living mountain of Knowledge! You are the Treasure of the sages who have performed great penance!

vinjaikku udaiyavar thozhavE varuvAy kanjaththu ayanudan amara eesanumE vinthaip paNividai puri pOthu avarmElaruL kUrvAy: You come to be worshipped by those possessing the mystical and true knowledge, Oh Lord! When Lord Brahma, seated on the lotus, and Indra remain in Your adorable service, You bestow upon them Your abundant grace, Oh Lord!

thonthik kaNapathi makizh sOtharanE sem kaN karu mukil marukA gukanE sonthak kuRa makaL kaNavA thiRal sEr kathir kAmA: You are the pleasing younger brother of Lord GaNapathi, with a pot-belly! You are the nephew of Lord VishNu who has red eyes and a complexion like the black cloud. You are the consort of VaLLi, the damsel of the KuRavAs, who solely belongs to You! You are seated in the most resourceful town, KadhirgAmam, Oh Lord!

sompil pala vanam muthir sOlaikaL cUzh injith thiru mathiL pudai cUzh aruL sEr thungap pazhaniyil murukA imaiyOr perumALE.: This place has many beautiful forests, surrounded by groves and encircled by forts and fortress walls that are gracious; You are seated atop that famous Mount Pazhani, Oh MurugA! You are the Lord of the celestials, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 151 kondhuth tharu - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]