திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 147 குழல் அடவி (பழநி) Thiruppugazh 147 kuzhaladavi (pazhani) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனன தனதன தனன தனதன தனன தனதன ...... தனதான ......... பாடல் ......... குழல டவிமுகில் பொழில்வி ரவில்நுதல் குமுத வதரமு ...... றுவலாரம் குழைம கரம்வளை மொழிகு யிலமுது குயமு ளரிமுகை ...... கிரிசூது விழிக யலயில்ப கழிவ ருணிகரு விளைகு வளைவிட ...... மெனநாயேன் மிகவ ரிவையரை அவநெ றிகள்சொலி வெறிது ளம்விதன ...... முறலாமோ கழல்ப ணியவினை கழல்ப ணியையணி கழல்ப ணியவருள் ...... மயில்வீரா கமலை திருமரு கமலை நிருதரு கமலை தொளைசெய்த ...... கதிர்வேலா பழனி மலைவரு பழநி மலைதரு பழநி மலைமுரு ...... கவிசாகா பரவு பரவைகொல் பரவை வணஅரி பரவு மிமையவர் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... குழல் அடவி முகில் பொழில் விர வில் நுதல் குமுத அதரம் முறுவல் ஆரம் ... பெண்களின் கூந்தல் காடு, மேகம் (போன்றது). நெற்றி வீரம் பொருந்திய வில். வாய் இதழ்கள் குமுத மலர். பற்கள் முத்துக்கள். குழை மகரம் வளை மொழி குயில் அமுது ... மகர மீன் வடிவம் பொருந்திய குண்டலம் தரித்துள்ள காது வள்ளிக் கொடி இலை போன்றது. பேச்சு குயில் போன்றும் அமுதம் போன்றும் இனியது. குய(ம்) முளரி முகை கிரி சூது ... மார்பகங்கள் தாமரை அரும்பையும், மலையையும், சூதாடும் கருவியையும் போன்றவை. விழி கயல் அயில் பகழி வருணி கரு விளை குவளை விடம் என நாயேன் ... கண்கள் கயல் மீன், வேல் என்றும், அம்பு, கடல், கரு விளை மலர், நீலோற்பல மலர், நஞ்சு என்றெல்லாம் உவமை கூறி, நாயேனாகிய அடியேன் மிக அரிவையரை அவ நெறிகள் சொ(ல்)லி வெறிது உளம் விதனம் உறலாமோ ... மிகவும் பெண்களை சிறிதும் பயனற்ற வழிகளில் வியந்துரைத்து வீணாக என் உள்ளம் விசனப்படலாமோ? கழல் ப(ண்)ணிய வினை கழல் பணியை அணி கழல் பணிய அருள் மயில் வீரா ... செய்த வினைகள் கழல (நீங்க), வீரக் கழலையும் தண்டை முதலிய ஆபரணங்களையும் அணிந்துள்ள திருவடிகளைப் பணியும்படி அருள் புரிவாயாக, மயில் வீரனே, கமலை திரு மருக மலை நிருதர் உக மலை தொளை செய்த கதிர் வேலா ... தாமரையில் வாழும் லக்ஷ்மியின் மருகனே, (கிரெளஞ்சம், எழு கிரி ஆகிய) மலைவாழ் அரக்கர்கள் அழிய அந்த மலைகளைத் தொளைத்த ஒளி வீசும் வேலனே, பழநி மலை வரு பழ நிமலை தரு பழநிமலை முருக விசாகா ... பழம் போன்றவளும், இமய மலையில் அவதரித்தவளும், பழமையுடைய நிமலையும் ஆகிய பார்வதி பெற்ற, பழநிமலைவாழ் முருகனே, விசாக மூர்த்தியே, பரவு பரவை கொல் பரவை வண அரி பரவும் இமையவர் பெருமாளே. ... பரந்துள்ள கடலில் மீது பாணத்தைச் செலுத்தி அடக்கிய கடல் நிறம் உடைய (ராமனாகிய) திருமால் போற்றும், தேவர்களின் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.426 pg 1.427 pg 1.428 pg 1.429 WIKI_urai Song number: 177 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 147 - kuzhal adavi (pazhani) kuzhala davimukil pozhilvi ravilnuthal kumutha vatharamu ...... RuvalAram kuzhaima karamvaLai mozhiku yilamuthu kuyamu Larimukai ...... kiricUthu vizhika yalayilpa kazhiva ruNikaru viLaiku vaLaivida ...... menanAyEn mikava rivaiyarai avane RikaLsoli veRithu Lamvithana ...... muRalAmO kazhalpa Niyavinai kazhalpa NiyaiyaNi kazhalpa NiyavaruL ...... mayilveerA kamalai thirumaru kamalai nirutharu kamalai thoLaiseytha ...... kathirvElA pazhani malaivaru pazhani malaitharu pazhani malaimuru ...... kavisAkA paravu paravaikol paravai vaNaari paravu mimaiyavar ...... perumALE. ......... Meaning ......... kuzhal adavi mukil pozhil vira vil nuthal kumutha atharam muRuval Aram: "The hair of the women is like the dense forest and the cloud; their forehead is like the mighty bow; their lips are like the petals of lily; their teeth are like pearls; kuzhai makaram vaLai mozhi kuyil amuthu: their ears, wearing the swaying studs of the shape of makara fish, are like the leaves of vaLLi creeper; their speech is sweet like the cuckoo's and the nectar; kuya(m) muLari mukai kiri cUthu: their bosom is like the lotus bud, the mountain and the gambling dice; vizhi kayal ayil pakazhi varuNi karu viLai kuvaLai vidam ena nAyEn: their eyes are comparable with kayal fish, spear, arrow, sea, black lily, blue lily and poison" - saying so on and so forth, I, the lowly dog, mika arivaiyarai ava neRikaL so(l)li veRithu uLam vithanam uRalAmO: keep on praising women excessively in the most futile ways; is it fair that my mind should thus feel miserable unnecessarily? kazhal pa(N)Niya vinai kazhal paNiyai aNi kazhal paNiya aruL mayil veerA: For the eradication of past deeds, kindly bless me to worship Your hallowed feet, adorned with anklets of valour and other jewels like thaNdai that embellish the ankles, Oh, Warrior mounting the Peacock! kamalai thiru maruka malai niruthar uka malai thoLai seytha kathir vElA: You are the nephew of Lakshmi seated on the lotus! Your sparklingly bright spear pierced through the mountains (Krouncha and the Seven Hills) and destroyed all the demons who lived there, Oh Lord! pazhani malai varu pazha nimalai tharu pazhanimalai muruka visAkA: She is Herself like a ripe fruit; She was born in the Mount HimAlayAs; She is primordial and without blemish; You are that PArvathi's son, Oh Lord of Mount Pazhani and of the Star VisAkhA! paravu paravai kol paravai vaNa ari paravum imaiyavar perumALE.: He wielded His arrow upon the wide sea and tamed it; He has the complexion of the sea; that Rama (Lord VisNu) worships You, Oh Great One and Lord of the celestials! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |