திருப்புகழ் 145 குரம்பை மலசலம்  (பழநி)
Thiruppugazh 145 kurambaimalasalam  (pazhani)
Thiruppugazh - 145 kurambaimalasalam - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனந்த தனதன தனதன தனதன
     தனந்த தனதன தனதன தனதன
          தனந்த தனதன தனதன தனதன ...... தனதான

......... பாடல் .........

குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு
     எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி
          குலைந்த செயிர்மயிர் குருதியொ டிவைபல ...... கசுமாலக்

குடின்பு குதுமவ ரவர்கடு கொடுமையர்
     இடும்ப ரொருவழி யிணையிலர் கசடர்கள்
          குரங்க ரறிவிலர் நெறியிலர் மிருகணை ...... விறலான

சரம்ப ருறவனை நரகனை துரகனை
     இரங்கு கலியனை பரிவுறு சடலனை
          சவுந்த ரிகமுக சரவண பதமொடு ...... மயிலேறித்

தழைந்த சிவசுடர் தனையென மனதினில்
     அழுந்த வுரைசெய வருமுக நகையொளி
          தழைந்த நயனமு மிருமலர் சரணமு ...... மறவேனே

இரும்பை வகுளமொ டியைபல முகில்பொழி
     லுறைந்த குயிலளி யொலிபர விடமயி
          லிசைந்து நடமிடு மிணையிலி புலிநகர் ...... வளநாடா

இருண்ட குவடிடி பொடிபட வெகுமுக
     டெரிந்து மகரமொ டிசைகரி குமுறுக
          இரைந்த அசுரரொ டிபபரி யமபுரம் ...... விடும்வேளே

சிரம்பொ னயனொடு முநிவர்க ளமரர்கள்
     அரம்பை மகளிரொ டரகர சிவசிவ
          செயம்பு வெனநட மிடுபத மழகியர் ...... குருநாதா

செழும்ப வளவொளி நகைமுக மதிநகு
     சிறந்த குறமக ளிணைமுலை புதைபட
          செயங்கொ டணைகுக சிவமலை மருவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

குரம்பை மல(ம்) சலம் வழுவளு நிணமொடு ... சிறு குடிலாகிய
இந்த வீடு - உள்ளே இருப்பது மலமும், மூத்திரமும், கெட்ட
வழுவழுப்பான கொழுப்பும்,

எலும்பு அணி சரி தசை இரல் குடல் ... எலும்பும், அடுக்காகச்
சரிந்துள்ள தசைகளும், ஈரலும், குடலும்,

நெதி குலைந்த செயிர் மயிர் குருதியொடு ... முறையின்றி
சிக்குற்ற மயிர்களும், இரத்தம் முதலியவைகளுடன்,

இவை பல கசுமாலம் ... இவற்றோடு கெட்ட அழுக்குகள்
நிறைந்ததுமான,

குடின் புகுதும் அவர் ... இந்த வீட்டில் (உடலில்) ஐவர் (ஐம்புலன்கள்)
குடி புகுந்துள்ளனர்.

அவர் கடு கொடுமையர் ... அவர்கள் மிகவும் கடுமையான
கொடுங்குணத்தினர்.

இடும்பர் ஒரு வழி இணை இலர் ... அகந்தை கொண்டவர்கள்.
ஒரு வழியில் போகாதவர்கள்.

கசடர்கள் குரங்கர் அறிவிலர் நெறி இலர் ... குற்றம் உடையவர்கள்.
குரங்கு போல் சேட்டை செய்பவர்கள். அறிவில்லாதவர்கள். நன்னெறியில்
ஒழுகாதவர்கள்.

மிருகணை விறல் ஆனசரம்பர் ... மிருகத் தன்மை உடைய வலிமை
வாய்ந்தவர்கள். விஷம் போன்ற குணம் உடையவர்கள்.

உறவனை நரகனை துரகனை ... (இத்தகையோர்களுடன்) நட்பு
உடையவனை, நரகம் புகுகின்றவனை, குதிரை போல் மிக வேகமாகச்
செல்லும் மனத்தை உடையவனை,

இரங்கு கலியனை பரிவு உறு சடலனை ... அழுது ஏங்கும்
வறியவனை, துன்பத்துக்கு உறைவிடமாகிய உடல்மேல் அன்பு
கொண்டவனுமாகிய என்னை,

சவுந்தரிக முக சரவண பதமொடு மயிலேறி ... அழகிய
முகத்தவனே, சரவணப் பொய்கையில் தோன்றியவனே, நீ அழகோடு
மயிலின் மீது ஏறி வந்து,

தழைந்த சிவ சுடர் தனை என் மனதினில் ... செழிப்புடன்
பூரித்த சிவ ஒளியை என்னுடைய மனதில்

அழுந்த உரை செய வரு முக நகை ஒளி ... அழுந்தும்படி நன்றாக
ஓதி உபதேசிக்கும் பொருட்டு வந்த திருமுகச் சிரிப்பு பூத்த ஒளியையும்,

தழைந்த நயனமும் இரு மலர் சரணமும் மறவேனே ... குளிர்ந்த
கண்களையும், உனது மலர் போன்ற இரண்டு திருவடிகளையும் நான்
மறவேன்.*

இரும்பை வகுளமொடு இயை பல முகில் பொழில் ... இலுப்ப
மரங்களும் மகிழ மரங்களும் நிறைந்து இவைகளின் மேல் பல
மேகங்கள் தங்கும் சோலைகளில்

உறைந்த குயில் அளி ஒலி பரவிட ... வசிக்கின்ற குயில்களும்
வண்டுகளும் இனிமையான ஒலிகளைப் பரப்ப,

மயில் இசைந்து நடமிடும் இணையிலி புலி நகர் வள நாடா ...
மயில்கள் அந்த இசைக்கு ஒத்து நடமிடுகின்ற இணை இல்லாத
சிதம்பரம் என்னும் வளப்பம் பொருந்திய நாட்டுக்கு உரியவனே.

இருண்ட குவடு இடி பொடிபட ... இருள் சூழ்ந்த கிரெளஞ்ச
மலை இடிந்து பொடியாக,

வெகு முகடு எரிந்து மகரம் ... பல மலைகளும் பொடிபட, மகர
மீன்கள் உறையும் கடல் தீப்பற்றிக்கொள்ள,

ஒள் திசை கரி குமுறுக ... ஒளி பெற்ற எட்டு திசைகளில் உள்ள
யானைகளும் கலங்கிப் பிளிற,

இரைந்த அசுரரொடு இப பரி யமபுரம் விடும் வேளே ...
ஆர்ப்பரித்து வந்த அசுரர்களோடு (அவர்களுடைய) யானை,
குதிரை முதலிய படைகளையும் யம லோகத்துக்கு அனுப்பிய
தலைவனே,

சிரம் பொன் அயனொடு முநிவர்கள் அமரர்கள் ... உயர்ந்த
பொன் நிறம் கொண்ட பிரமனும், முனிவர்களும், தேவர்களும்,

அரம்பை மகளிர் ஒடு அரகர சிவ சிவ செயம்பு என ... அரம்பை
மகளிரும் அரகர, சிவசிவ, சுயம்பு மூர்த்தியே என்று புகழ,

நடம் இடு பதம் அழகியர் குரு நாதா ... நடனம் செய்கின்ற
திருவடி அழகாக அமையப்பெற்ற சிவபெருமானுக்கு குருநாதனே,

செழும் பவள ஒளி நகை முக மதி நகு ... செழித்த பவளம்
போன்ற, நிலவைப் பழித்துச் சிரிக்கும் மலர்ந்த முகமும்,

சிறந்த குற மகள் இணை முலை புதை பட ... சிறப்புடன்
அமைந்த குறப் பெண்ணாகிய வள்ளியின் இரு மார்பகங்களும்
அழுந்தும் வண்ணம்

செயம் கொடு அணை குக ... வெற்றி கொண்டு அவளை
அணைத்த குகனே,

சிவ மலை மருவிய பெருமாளே. ... பழனி மலையில்
வீற்றிருக்கும் பெருமாளே.


* இப்பாடலில் அருணகிரியார் முருகதரிசனத்துக்கு நன்றி செலுத்துகிறார்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.284  pg 1.285  pg 1.286  pg 1.287 
 WIKI_urai Song number: 113 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 145 - kurambai malasalam (pazhani)

kurambai malajalam vazhuvaLu niNamodu
     elumbu aNisari dhasaiyiral kudalnedhi
          kulaindha seyirmayir kurudhiyo divaipala ...... kasumAla

kudinpu gudhumavar avarkadu kodumaiyar
     idumbar oru azhi iNaiyilar kasadargaL
          kurangar aRivilar neRiyilar mirugaNai ...... viRalAna

sarambar uRavanai naraganai thuraganai
     irangu kaliyanai parivuRu sadalanai
          savundha rikamuka saravaNa padhamodu ...... mayilERi

thazhaindha sivasudar thanaiena manadhinil
     azhundha uraiseya varumuga nagaiyoLi
          thazhaindha nayanamum irumalAr charaNamum ...... maRavEnE

irumbai vaguLamo diyaipala mugilpozhil
     uRaindha kuyilaLi olipara vidamayil
          isaindhu nadamidum iNaiyili pulinagar ...... vaLanAdA

iruNda kuvadidi podipada vegumuka
     derindhu makaramo disaikari kumuRuga
          iraindha asuraro dibapari yamapuram ...... vidumvELE

sirampon ayanodu munivargaL amarargaL
     arambai magaLiro darahara sivasiva
          seyambu venanada midupadham azhagiyar ...... gurunAthA

sezhumpa vaLaoLi nagaimuka madhinagu
     siRandha kuRamagaL iNaimulai pudhaipada
          jeyanko daNaiguha sivamalai maruviya ...... perumALE.

......... Meaning .........

kurambai malajalam vazhu vaLu niNamodu: This is a small cottage containing - faeces, urine, stinking and slimy fatty flesh,

elumbu aNisari dhasaiyiral kudal: bones, muscles set up in a sliding series, liver, intestines,

nedhi kulaindha seyirmayir kurudhiyodu: tangled hair in disarray and blood;

ivaipala kasumAla: in addition, it is filled up with filthy muck;

kudin pugudhum avar avar kadu kodumaiyar: in this dwelling (namely, the body), five people (sensory organs) have taken residence; they are extremely evil people;

idumbar oru vazhi iNaiyilar kasadargaL: they are very arrogant; they do not have a goal in life; they are sullied;

kurangar aRivilar neRiyilar: they are mischievous like the monkey; they do not have any intellect nor do they tread the righteous path;

mirugaNai viRalAna sarambar: they display their brutal strength; and they are venomous.

uRavanai naraganai thuraganai: I am an associate of such people! I am sliding towards hell. My mind gallops fast like a race horse.

irangu kaliyanai parivuRu sadalanai: I am a miserable and poor wretch. I have tremendous attachment to this body, the source of all miseries.

savundharika muka saravaNa padhamodu mayilERi: Oh Lord with a handsome face, who emerged from the SaravaNa Pond, kindly mount Your peacock elegantly

thazhaindha sivasudar thanai ena manadhinil: and come to imprint the rich effulgence of SivA on my heart

azhundha uraiseya varumuga nagaiyoLi: and firmly preach to me with Your bright beaming face.

thazhaindha nayanamum irumalAr charaNamum maRavEnE: That face, Your cool eyes and Your two hallowed feet like the lotus will never leave my memory!*

irumbai vaguLamo diyaipala mugil pozhil: On top of the ilumbai and magizha trees of the grove, clouds settle;

uRaindha kuyil aLi oli paravida: the cuckoos and beetles living in this grove broadcast sweet musical notes;

mayil isaindhu nadamidum iNaiyili pulinagar vaLanAdA: and peacocks dance to that music in this grove, situated in the unique and fertile land of PuliyUr (Chidhambaram), Your abode!

iruNda kuvadidi podipada: The dark mountain of Krouncha was shattered to pieces;

vegumuka derindhu makaram: many other mountains were crushed into dust; the sea full of sharks caught fire;

od isaikari kumuRuga: the elephants guarding the eight cardinal directions howled in agitation;

iraindha asurarod ibapari yamapuram vidum vELE: and the invading masses of demons' armies, consisting of elephants, horses and soldiers, were all packed away to the land of Yaman (God of Death) by You, Oh Leader!

siram pon ayanodu munivargaL amarargaL: BrahmA, with a great complexion of gold, many sages, DEvAs,

arambai magaLiro darahara sivasiva seyambuvena: and the celestial girls together praised Him, saying "Harahara, Siva, Siva, Oh Self-Emerging Lord"

nadamidu padham azhagiyar gurunAthA: and that Great Dancer with lovely feet, Lord SivA, worshipped You as His Master!

sezhum pavaLa oLi nagaimuka madhi nagu: Her coral-like reddish face jeers at the bright moon;

siRandha kuRamagaL: She is the great damsel of the KuRavAs, called VaLLi;

iNaimulai pudhai pada jeyankodu aNai guha: Oh GuhA! You embrace Her triumphantly and tightly so that Her bosom crush Your chest!

sivamalai maruviya perumALE.: You are seated in Sivamalai (Pazhani), Oh Great One!


* This is the thankful acknowledgement by AruNagirinAthar for the vision of Murugan.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 145 kurambai malasalam - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]