திருப்புகழ் 135 கலக வாள்விழி  (பழநி)
Thiruppugazh 135 kalagavALvizhi  (pazhani)
Thiruppugazh - 135 kalagavALvizhi - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தானன தானா தானா
     தனன தானன தானா தானா
          தனன தானன தானா தானா ...... தனதான

......... பாடல் .........

கலக வாள்விழி வேலோ சேலோ
     மதுர வாய்மொழி தேனோ பாலோ
          கரிய வார்குழல் காரோ கானோ ...... துவரோவாய்

களமு நீள்கமு கோதோள் வேயோ
     உதர மானது மாலேர் பாயோ
          களப வார்முலை மேரோ கோடோ ...... இடைதானும்

இழைய தோமலர் வேதா வானோ
     னெழுதி னானிலை யோவாய் பேசீ
          ரிதென மோனமி னாரே பாரீ ...... ரெனமாதர்

இருகண் மாயையி லேமூழ் காதே
     யுனது காவிய நூலா ராய்வே
          னிடர்ப டாதருள் வாழ்வே நீயே ...... தரவேணும்

அலைவி லாதுயர் வானோ ரானோர்
     நிலைமை யேகுறி வேலா சீலா
          அடியர் பாலரு ளீவாய் நீபார் ...... மணிமார்பா

அழகு லாவுவி சாகா வாகா
     ரிபமி னாள்மகிழ் கேள்வா தாழ்வா
          ரயலு லாவிய சீலா கோலா ...... கலவீரா

வலபை கேள்வர்பி னானாய் கானார்
     குறவர் மாதும ணாளா நாளார்
          வனச மேல்வரு தேவா மூவா ...... மயில்வாழ்வே

மதுர ஞானவி நோதா நாதா
     பழநி மேவுகு மாரா தீரா
          மயுர வாகன தேவா வானோர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கலக வாள் விழி வேலோ சேலோ ... கலகத்தை விளைவிக்கின்ற
ஒளி பெற்ற கண்கள் வேலாயுதமோ, சேல் மீனோ?

மதுர வாய் மொழி தேனோ பாலோ ... இனிய வாய்ச் சொல்
தேனோ, பாலோ?

கரிய வார் குழல் காரோ கானோ துவரோ வாய் ... கரு நிறமான
நீண்ட கூந்தல் மேகமோ, காடோ? வாய் பவளமோ?

களமும் நீள் கமுகோ தோள் வேயோ ... கழுத்து நீண்ட பாக்கு
மரமோ? தோள் மூங்கிலோ?

உதரமானது மால் ஏர் பாயோ ... வயிறானது திருமால் பள்ளி
கொண்ட அழகிய ஆல் இலையோ?

களப வார் முலை மேரோ கோடோ ... சந்தனக் கலவை பூசிய
கச்சணிந்த மார்பகம் மேரு மலையோ, யானைத் தந்தமோ?

இடை தானும் இழையதோ மலர் வேதாவானோன்
எழுதினான் இலையோ வாய் பேசீர்
... இடைதான் நூலோ,
தாமரை மேல் வீற்றிருக்கும் பிரம தேவன் இடையை
எழுதவில்லையோ? வாய் திறந்து பேசுங்கள்.

இது என மோனம் மினாரே பாரீர் என மாதர் ... இது என்ன
மெளனம் சாதிக்கின்றீர்கள், மின் போன்ற பெண்மணிகளே
பாருங்கள், என்று பேசி விலைமாதர்களுடைய

இரு கண் மாயையிலே மூழ்காதே உனது காவிய நூல்
ஆராய்வேன்
... இரண்டு கண்கள் என்னும் மாயைக் கடலில்
முழுகாமல், உன்னுடைய பிரபந்த நூல்களை ஆராய்வேன்.

இடர் படாது அருள் வாழ்வே நீயே தர வேணும் ... இடர்கள்
எவையும் என்னைப் பீடிக்காத வகையில் உனது திருவருள்
நிறைந்த வாழ்வைத் தந்தருள வேண்டும்.

அலைவு இலாது உயர் வானோர் ஆனோர் நிலைமையே
குறி வேலா சீலா
... அலைச்சல் இல்லாத வண்ணம், உயர்வு
பெற்ற தேவர்களின் நிலைமையைக் கண்காணிக்கும் வேலனே,
ஒழுக்கம் நிறைந்தவனே,

அடியவர் பால் அருள் ஈவாய் நீப ஆர் மணி மார்பா ...
அடியார்களுக்குத் திருவருள் பாலிப்பவனே, கடப்ப மாலை
அணிந்த அழகிய மார்பனே,

அழகு உலாவு விசாகா வாகு ஆர் இப மினாள் மகிழ்
கேள்வா
... அழகு பொலியும் முருகக் கடவுளே, கம்பீரம்
நிறைந்த (ஐராவதம் என்ற) யானையால் வளர்க்கப்பட்ட
மின்னலை ஒத்த தேவயானை மகிழ்கின்ற கணவனே,

தாழ்வார் அயல் உலாவிய சீலா கோலாகல வீரா ...
உன்னைப் பணிந்து தாழ்பவர்களுடைய அருகிலே உலாவும்
சீலனே, ஆடம்பர வீரனே,

வலபை கேள்வர் பின் ஆனாய் கான் ஆர் குறவர் மாது
மணாளா
... வல்லபையின் கணவராகிய விநாயகருடைய
தம்பியே, காட்டில் வசிக்கும் குறப் பெண்ணாகிய வள்ளியின்
கணவனே,

நாள் ஆர் வனச மேல் வரு தேவா மூவா மயில் வாழ்வே ...
புதிய தாமரை மீது எழுந்தருளி உள்ள தேவனே*, முதுமை
இல்லாத மயிலின் செல்வமே,

மதுர ஞான வினோதா நாதா பழநி மேவு குமாரா தீரா ...
இனிய ஞான வழிகளில் பொழுது போக்கும் நாதனே, பழனி
மலையில் வீற்றிருக்கும் குமாரனே, தீரனே,

மயுர வாகன தேவா வானோர் பெருமாளே. ... மயில் வாகன
தேவனே, தேவர்களின் பெருமாளே.


* முருகப் பெருமான் சரவணப் பொய்கையில் அழகிய தாமரை மலர் மீது அழகே
ஒரு வடிவாய் குழந்தை உருவாகத் தோன்றி அருளினார் என்பதைக் குறிக்கும்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.364  pg 1.365  pg 1.366  pg 1.367 
 WIKI_urai Song number: 150 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 135 - kalaga vALvizhi (pazhani)

kalaka vALvizhi vElO sElO
     mathura vAymozhi thEnO pAlO
          kariya vArkuzhal kArO kAnO ...... thuvarOvAy

kaLamu neeLkamu kOthOL vEyO
     uthara mAnathu mAlEr pAyO
          kaLapa vArmulai mErO kOdO ...... idaithAnum

izhaiya thOmalar vEthA vAnO
     nezhuthi nAnilai yOvAy pEsee
          rithena mOnami nArE pAree ...... renamAthar

irukaN mAyaiyi lEmUzh kAthE
     yunathu kAviya nUlA rAyvE
          nidarpa dAtharuL vAzhvE neeyE ...... tharavENum

alaivi lAthuyar vAnO rAnOr
     nilaimai yEkuRi vElA seelA
          adiyar pAlaru LeevAy neepAr ...... maNimArpA

azhaku lAvuvi sAkA vAkA
     ripami nALmakizh kELvA thAzhvA
          rayalu lAviya seelA kOlA ...... kalaveerA

valapai kELvarpi nAnAy kAnAr
     kuRavar mAthuma NALA nALAr
          vanasa mElvaru thEvA mUvA ...... mayilvAzhvE

mathura njAnavi nOthA nAthA
     pazhani mEvuku mArA theerA
          mayura vAkana thEvA vAnOr ...... perumALE.

......... Meaning .........

kalaka vAL vizhi vElO sElO: "Are those havoc-causing eyes spears or sEl fish?

mathura vAy mozhi thEnO pAlO: Is the sweet speech honey or milk?

kariya vAr kuzhal kArO kAnO thuvarO vAy: Is the dark hair a cloud or a forest? Is it mouth or coral?

kaLamum neeL kamukO thOL vEyO: Is the neck the long branch of betel-nut tree?

utharamAnathu mAl Er pAyO: Is the stomach the beautiful banyan leaf on which Lord VishNu slumbered?

kaLapa vAr mulai mErO kOdO: Is the bosom, smeared with sandal paste and covered by a blouse, Mount MEru or the ivory tusk of an elephant?

idai thAnum izhaiyathO malar vEthAvAnOn ezhuthinAn ilaiyO vAy pEseer: Is the waist merely a thread? Or did BrahmA, the Creator seated on the lotus, forget to draw the waistline? Why don't you speak up?

ithu ena mOnam minArE pAreer ena mAthar: Why do you keep silent, Oh girls who shine like lightning? Look up!" - so speaking to the whores,

iru kaN mAyaiyilE mUzhkAthE unathu kAviya nUl ArAyvEn: I am not prepared to drown in the sea of delusion created by their two eyes; instead, I propose to do a research on the texts and poems about You.

idar padAthu aruL vAzhvE neeyE thara vENum: Protecting me from all sufferings, kindly grant me a life filled with Your gracious blessing!

alaivu ilAthu uyar vAnOr AnOr nilaimaiyE kuRi vElA seelA: The great celestials are protected by You all the time from being tossed about, Oh Lord with the Spear! Oh Virtuous One!

adiyavar pAl aruL eevAy neepa Ar maNi mArpA: You bestow Your blessings upon Your devotees, Oh Lord with a hallowed chest adorned by the kadappa garland!

azhaku ulAvu visAkA vAku Ar ipa minAL makizh kELvA: Oh Handsome Lord MurugA! You are the consort of the lightning-like DEvayAnai, reared by the majestic and celestial elephant (AyrAvadham)!

thAzhvAr ayal ulAviya seelA kOlAkala veerA: For all those who prostrate at Your feet, You are always by their side, Oh Upright One! Your valour is magnificent!

valapai kELvar pin AnAy kAn Ar kuRavar mAthu maNALA: You are the younger brother of VinAyagA, the consort of Vallabhai! You are the consort of VaLLi, the damsel in the forest belonging to the KuRavA lineage!

nAL Ar vanasa mEl varu thEvA mUvA mayil vAzhvE: You are the deity that emerged on a fresh lotus*! You are the treasure of the peacock that never ages!

mathura njAna vinOthA nAthA pazhani mEvu kumArA theerA: You are the Lord that revels all the time in great pursuits of Knowledge! You have Your abode in Mount Pazhani, Oh KumArA, the Brave One!

mayura vAkana thEvA vAnOr perumALE.: Oh Lord, mounting the peacock as Your vehicle! You are the Lord of all the celestials, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 135 kalaga vALvizhi - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]