திருப்புகழ் 125 ஓடி ஓடி  (பழநி)
Thiruppugazh 125 OdiOdi  (pazhani)
Thiruppugazh - 125 OdiOdi - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தான தனத்தன தத்தன
     தான தான தனத்தன தத்தன
          தான தான தனத்தன தத்தன ...... தனதான

......... பாடல் .........

ஓடி யோடி யழைத்துவ ரச்சில
     சேடி மார்கள் பசப்பஅ தற்குமு
          னோதி கோதி முடித்தவி லைச்சுரு ...... ளதுகோதி

நீடு வாச நிறைத்தஅ கிற்புழு
     கோட மீது திமிர்த்தத னத்தினில்
          நேச மாகி யணைத்தசி றுக்கிக ...... ளுறவாமோ

நாடி வாயும் வயற்றலை யிற்புன
     லோடை மீதி னிலத்ததி வட்கையி
          னாத கீத மலர்த்துளி பெற்றளி ...... யிசைபாடுங்

கோடு லாவி யமுத்துநி ரைத்தவை
     காவுர் நாட தனிற்பழ நிப்பதி
          கோதி லாத குறத்திய ணைத்தருள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஓடி ஓடி அழைத்து வரச் சில சேடிமார்கள் பசப்ப ...
இளைஞர்களை ஓடி ஓடி அழைத்துவரவும், சில தோழிகள் பசப்பு
மொழிகள் கூறி உபசரிக்கவும்,

அதற்குமுன் ஓதி கோதி முடித்த இலைச்சுருள் அது கோதி ...
அதற்கு முன்பு கூந்தலை வாரிச் சுருட்டி அழகாக முடிக்கவும்,
வெற்றிலைச் சுருளைத் திருத்தவும்,

நீடு வாச நிறைத்த அகிற்புழுகு ஓட மீது திமிர்த்த
தனத்தினில்
... நிறைந்த வாசனையை உடைய அகில், புனுகு முதலிய
நறுமணம் மிகுதியாகப் பூசப்பட்ட மார்பகங்களின் மீது

நேசமாகி அணைத்த சிறுக்கிகள் உறவாமோ ... ஆசை வைத்து
தழுவிக்கொள்ளும் பொது மகளிரின் உறவு ஓர் உறவாகுமோ?

நாடி வாயும் வயல் தலையில் புனல் ஓடை மீதி(ல்) நிலத்த
திவட்கையி(ல்)
... வளமை தானாகவே அமைந்த வயலிலும்,
நீரோடைகளிலும், இன்புறத்தக்க நிலப்பரப்பிலும்,

நாத கீத மலர்த்துளி பெற்று அளி இசைபாடும் ... வண்டுகள்
மலர்களிலிருந்த தேனை உண்டு நாத கீதத்தை இசைத்து இசைபாடும்,

கோடு உலாவிய முத்து நிரைத்தவை ... சங்குகள் உலாவும்,
முத்துக்கள் வரிசையாக விளங்கும்

காவுர் நாடு அதனில் பழநிப்பதி ... வைகாவூர் நாட்டினில்
பழநித் தலத்தில்,

கோதிலாத குறத்தி அணைத்து அருள் பெருமாளே. ...
குற்றமில்லாத வள்ளிப் பிராட்டியைத் தழுவி அருள் புரிகின்ற பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.370  pg 1.371  pg 1.372  pg 1.373 
 WIKI_urai Song number: 153 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 125 - Odi Odi (pazhani)

Odi yOdi yazhaiththuva racchila
     sEdi mArkaL pasappaa thaRkumu
          nOthi kOthi mudiththavi laicchuru ...... LathukOthi

needu vAsa niRaiththaa kiRpuzhu
     kOda meethu thimirththatha naththinil
          nEsa mAki yaNaiththasi Rukkika ...... LuRavAmO

nAdi vAyum vayatRalai yiRpuna
     lOdai meethi nilaththathi vatkaiyi
          nAtha keetha malarththuLi petRaLi ...... yisaipAdum

kOdu lAvi yamuththuni raiththavai
     kAvur nAda thaniRpazha nippathi
          kOthi lAtha kuRaththiya NaiththaruL ...... perumALE.

......... Meaning .........

Odi Odi azhaiththu varas sila sEdimArkaL pasappa: These whores run around to bring young men (to their place); some girl-friends of the whores accord insincere welcome with sweet talk;

athaRkumun Othi kOthi mudiththa ilaicchuruL athu kOthi: before that, they comb their hair and bind it into a beautiful bunch; they tidy up the rolled betel leaves neatly;

needu vAsa niRaiththa akiRpuzhuku Oda meethu thimirththa thanaththinil: on their bosom, excessively smeared with a strongly fragrant paste of incence and musk,

nEsamAki aNaiththa siRukkikaL uRavAmO: one gets a passionate fixation and hugs them; can the liaison with such whores be called a relationship at all?

nAdi vAyum vayal thalaiyil punal Odai meethi(l) nilaththa thivadkaiyi(l): In the paddy fields of this town that are naturally fertile, in the ponds and brooks and in the pleasant landscapes,

nAtha keetha malarththuLi petRu aLi isaipAdum: the beetles roam around humming musically after imbibing the nectar in the flowers;

kOdu ulAviya muththu niraiththavai: conch shells abound and rows of pearls are seen everywhere;

kAvur nAdu athanil pazhanippathi: this is the place called Pazhani in the country of VaikAvUr, where

kOthilAtha kuRaththi aNaiththu aruL perumALE.: You are seated, hugging the unblemished belle, VaLLi, and graciously blessing all, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 125 Odi Odi - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]