திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 122 உலகபசு பாச (பழநி) Thiruppugazh 122 ulagapasupAsa (pazhani) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதனன தான தந்த ...... தனதான தனதனன தான தந்த ...... தனதான ......... பாடல் ......... உலகபசு பாச தொந்த ...... மதுவான உறவுகிளை தாயர் தந்தை ...... மனைபாலர் மலசலசு வாச சஞ்ச ...... லமதாலென் மதிநிலைகெ டாம லுன்ற ...... னருள்தாராய் சலமறுகு பூளை தும்பை ...... யணிசேயே சரவணப வாமு குந்தன் ...... மருகோனே பலகலைசி வாக மங்கள் ...... பயில்வோனே பழநிமலை வாழ வந்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... உலகபசு பாச தொந்தம் அதுவான ... உலகத்தில் உயிர், பாசம் இவை சம்பந்தப்பட்ட உறவுகிளை தாயர் தந்தை மனைபாலர் ... உற்றோரும், சுற்றத்தாரும், தாய், தந்தை, மனைவி, மக்கள், மலசல சுவாச சஞ்சலம் அதால் ... மல, மூத்திர, மூச்சு முதலிய உபாதைகளால் என் மதிநிலை கெடாமல் ... எனது புத்திநிலை கெடாதவாறு உன்றன் அருள்தாராய் ... உனது திருவருளைத் தந்தருள்வாயாக. சலம் அறுகு பூளை தும்பை ... கங்கை நீர், அறுகம்புல், பூளைச்செடியின் பூ, தும்பைப் பூ அணிசேயே ... இவைகளை அணியும் சிவபெருமானின் குமாரனே, சரவணபவா முகுந்தன் மருகோனே ... சரவணபவனே, திருமாலின் மருமகனே, பலகலை சிவாகமங்கள் பயில்வோனே ... பல கலைகளாலும், சிவாகமங்களாலும் புகழப்படுவோனே, பழநிமலை வாழ வந்த பெருமாளே. ... பழனிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.340 pg 1.341 pg 1.342 pg 1.343 WIKI_urai Song number: 139 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
'பழநி' திரு சண்முக சுந்தரம் 'Pazhani' Thiru ShaNmugasundara DhEsigar பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திருமதி காந்திமதி சந்தானம் Mrs Kanthimathy Santhanam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுகந்திஸ்ரீ Ms Sughandhisri K. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 122 - ulagapasu pAsa (pazhani) ulagapasu pAsa thondham ...... adhuvAna uRavukiLai thAyar thandhai ...... manaibAlar malajalasu vAsa sancha ...... lamadhAlen madhinilaike dAma lundhan ...... aruLthArAy jalamarugu pULai thumbai ...... aNisEyE saravanaba vAmu kundhan ...... marugOnE palakalaisi vAga mangaL ...... payilvOnE pazhanimalai vAzha vandha ...... perumALE. ......... Meaning ......... ulaga pasu pAsa thondham adhuvAna: In this world, attachment to life, relationship and bondage to uRavu kiLai thAyar thandhai manai bAlar: kith and kin, father, mother, wife and children lead to worries. mala jala suvAsa sanchalam adhAle: Physical discomforts such as excretion of faeces, urination, breathing and the like also haunt me. en madhi nilai kedAmal undhan aruL thArAy: Lest I am affected by these and lose my mind, Your Grace is what I request from You. jalamarugu pULai thumbai aNi sEyE: You are the son of SivA who adorns His tresses with river Ganga, aRugam (cynodon) grass, pULai (Indian laburnum) flower and thumbai (leucas) flower. saravanabavA mukundhan marugOnE: Oh SaravanabhavA, the nephew of Mukunda (Vishnu). palakalai sivAgamangaL payilvOnE: You are praised by several artistic creations and Siva AgamAs (Saivite scriptures). pazhani malai vAzha vandha perumALE.: You have chosen as Your abode, Mount Pazhani, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |