திருப்புகழ் 120 இலகுகனி மிஞ்சு  (பழநி)
Thiruppugazh 120 ilagukaniminju  (pazhani)
Thiruppugazh - 120 ilagukaniminju - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தந்த தனதனன தந்த
     தனதனன தந்த ...... தனதான

......... பாடல் .........

இலகுகனி மிஞ்சு மொழியிரவு துஞ்சு
     மிருவிழியெ னஞ்சு ...... முகமீதே

இசைமுரல்சு ரும்பு மிளமுலைய ரும்பு
     மிலகியக ரும்பு ...... மயலாலே

நிலவிலுடல் வெந்து கரியஅல மந்து
     நெகிழுமுயிர் நொந்து ...... மதவேளால்

நிலையழியு நெஞ்சி லவர்குடிபு குந்த
     நினைவொடுமி றந்து ...... படலாமோ

புலவினைய ளைந்து படுமணிக லந்து
     புதுமலர ணிந்த ...... கதிர்வேலா

புழுகெழம ணந்த குறமகள்கு ரும்பை
     பொரமுகையு டைந்த ...... தொடைமார்பா

பலநிறமி டைந்த விழுசிறைய லர்ந்த
     பருமயில டைந்த ...... குகவீரா

பணைபணிசி றந்த தரளமணி சிந்து
     பழநிமலை வந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இலகு கனி மிஞ்சு(ம்) மொழி இரவு துஞ்சும் இரு விழி என்
நஞ்சு(ம்)
... கனிந்த பழத்தின் சுவைக்கும் மேம்பட்ட பேச்சும், இரவில்
தூங்கும் இரண்டு கண்கள் என்னும் விஷமும்,

முகம் மீதே இசை முரல் சுரும்பு(ம்) இளமுலை அரும்பு(ம்) ...
முகத்தின் மேல் (முகத்தை மலரென்று நினைத்து) இசை ஒலிக்கும்
வண்டும், இளம் மார்பகங்களாகிய மொட்டுக்களும்,

இலகிய கரும்பும் மயலாலே ... கரும்பைப் போல் விளங்கும் தோளும்
(கொண்ட என் மகள்) காம மயக்கம் கொண்டு,

நிலவில் உடல் வெந்து கரிய அலமந்து நெகிழும் உயிர்
நொந்து
... நிலவின் குளிர்ச்சியும் சூடாக எரிக்க, கரு நிறம் அடைந்து,
வேதனைப்பட்டு, நெகிழ்ச்சியுறும் உயிர் நொந்தும்,

மத வேளால் நிலை அழியு(ம்) நெஞ்சில் அவர் குடி புகுந்த
நினைவொடும் இறந்து படலாமோ
... மன்மதன் காரணமாக, தனது
நிலை அழிந்து போகும் மனதில், அவளது தலைவர் குடி புகுந்த
நினைவு ஒன்றையே கொண்டு இவள் இறந்து படுதல் நீதியாகுமோ?

புலவினை அளைந்து படு மணி கலந்து புது மலர் அணிந்த
கதிர் வேலா
... புலாலை மிகவும் குதறிக் கலந்ததும், ஒலிக்கின்ற
மணியுடனே புதிய மலர்களைத் தரித்ததுமான, ஒளி வீசும் வேலை
ஏந்தியவனே.

புழுகு எழ மணந்த குற மகள் குரும்பை பொர முகை உடைந்த
தொடை மார்பா
... புனுகு நறு மணம் வீச குற மகள் வள்ளியின்
குரும்பை போன்ற மார்பகங்கள் தாக்குதலால் மொட்டு விரிந்த மலர்
மாலை அணிந்த மார்பனே,

பல நிறம் இடைந்த விழு சிறை அலர்ந்த பரு மயில் அடைந்த
குக வீரா
... பல நிறங்கள் நெருங்கியதாய், சிறப்பான சிறகுகள் பரந்து
ஒளிரும் பருத்த மயிலை வாகனமாக அடைந்துள்ள குக வீரனே,

பணை பணி சிறந்த தரள மணி சிந்து பழநி மலை வந்த
பெருமாளே.
... வேலைப்பாட்டுக்கு ஏற்ற சிறந்த முத்து மணிகளை
மூங்கில்கள் உதிர்க்கும் பழநி மலையில் வந்து அமர்ந்துள்ள பெருமாளே.


இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய்
கூறுவதுபோல அமைந்தது. நிலவு, மன்மதன் முதலியவை தலைவனின்
பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.396  pg 1.397  pg 1.398  pg 1.399 
 WIKI_urai Song number: 164 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 120 - ilagukani minju (pazhani)

ilakukani minju mozhiyiravu thunju
     miruvizhiye nanju ...... mukameethE

isaimuralsu rumpu miLamulaiya rumpu
     milakiyaka rumpu ...... mayalAlE

nilaviludal venthu kariyaala manthu
     nekizhumuyir nonthu ...... mathavELAl

nilaiyazhiyu nenji lavarkudipu kuntha
     ninaivodumi Ranthu ...... padalAmO

pulavinaiya Lainthu padumaNika lanthu
     puthumalara Nintha ...... kathirvElA

puzhukezhama Nantha kuRamakaLku rumpai
     poramukaiyu daintha ...... thodaimArpA

palaniRami daintha vizhusiRaiya larntha
     parumayila daintha ...... gukaveerA

paNaipaNisi Rantha tharaLamaNi sinthu
     pazhanimalai vantha ...... perumALE.

......... Meaning .........

ilaku kani minju(m) mozhi iravu thunjum iru vizhi en nanju(m): Her speech is sweeter than a ripe fruit; her two eyes, trying to sleep at night, are like poison;

mukam meethE isai mural surumpu(m) iLamulai arumpu(m): around her face, beetles keep on humming (mistaking the face for a flower); her young bosom is like a bud;

ilakiya karumpum mayalAlE: and her soft shoulders are like sugarcane; this daughter of mine is in a trance of passion;

nilavil udal venthu kariya alamanthu nekizhum uyir nonthu: even the cool moonlight is scorching her body; the colour of her skin has turned black; she is feeling miserable and sinking due to debilitation;

matha vELAl nilai azhiyu(m) nenjil avar kudi pukuntha ninaivodum iRanthu padalAmO: because of Manmathan (God of Love) who haunts her, she is losing her mind; is it fair that she should die thinking about her Lord, the sole occupant in her mind?

pulavinai aLainthu padu maNi kalanthu puthu malar aNintha kathir vElA: You hold in Your hand the dazzling spear that has pierced plenty of flesh and that is adorned with jingling bells and fresh flowers!

puzhuku ezha maNantha kuRa makaL kurumpai pora mukai udaintha thodai mArpA: The buds in the garland on Your chest blossom due to the hugging impact of the budding bosom of VaLLi, the damsel of the KuRavAs, exuding the fragrance of musk!

pala niRam idaintha vizhu siRai alarntha paru mayil adaintha guka veerA: With its famous multi-coloured and dense plumes, the huge peacock has become Your vehicle, Oh valorous GuhA!

paNai paNi siRantha tharaLa maNi sinthu pazhani malai vantha perumALE.: The choicest pearls and gems, worthy of fine workmanship, are shed by the bamboo trees in Mount Pazhani, which is Your abode, Oh Great One!


This song is based on the Nayaka-Nayaki Bhavam, where the poet, assuming the heroine's mother's role, expresses the pang of separation from the hero, Murugan.
The moonlight and the God of Love Manmathan are a few of the things that aggravate the agony of separation.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 120 ilagukani minju - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]