திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 119 இலகிய களப (பழநி) Thiruppugazh 119 ilagiyakaLaba (pazhani) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதன தனதன தந்த தானன தனதன தனதன தந்த தானன தனதன தனதன தந்த தானன ...... தனதான ......... பாடல் ......... இலகிய களபசு கந்த வாடையின் ம்ருகமத மதனைம கிழ்ந்து பூசியெ இலைசுருள் பிளவைய ருந்தி யேயதை ...... யிதமாகக் கலவியி லவரவர் தங்கள் வாய்தனி லிடுபவர் பலபல சிந்தை மாதர்கள் கசனையை விடுவது மெந்த நாளது ...... பகர்வாயே சிலைதரு குறவர்ம டந்தை நாயகி தினைவன மதனிலு கந்த நாயகி திரள்தன மதனில ணைந்த நாயக ...... சிவலோகா கொலைபுரி யசுரர்கு லங்கள் மாளவெ அயிலயி லதனையு கந்த நாயக குருபர பழநியி லென்று மேவிய ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... இலகிய களப சுகந்த வாடையின் ம்ருகமதம் அதனை மகிழ்ந்து பூசியெ ... விளங்குகின்ற சந்தனக் கலவைகளின் நறுமணம் வீச, கஸ்தூரியை (தம் மார்பில்) மகிழ்ச்சியுடன் பூசியும், இலை சுருள் பிளவை அருந்தியே அதை இதமாகக் கலவியில் அவர் அவர் தங்கள் வாய் தனில் இடுபவர் ... வெற்றிலைச் சுருளையும் பாக்கின் பிளவையும் உண்டு, அதை இன்பகரமான பேச்சுடன் புணர்ச்சியின் போது (தங்களிடம்) வந்துள்ள அவரவருடைய வாயில் இடுபவரும், பல பல சிந்தை மாதர்கள் கசனையை விடுவதும் எந்த நாள் அது பகர்வாயே ... பற்பல எண்ணங்களை உடைய விலைமாதர்கள் மீதுள்ள பற்றினை நான் விட்டு விடும் அந்த நாள் எது என்று சொல்லுவாயாக. சிலை தரு குறவர் மடந்தை நாயகி தினை வனம் அதனில் உகந்த நாயகி திரள் தனம் அதில் அணைந்த நாயக சிவலோகா ... (வள்ளி) மலை தந்த குறவர் மகளான வள்ளி நாயகி, தினைப் புனத்தில் நீ விருப்பம் கொண்ட நாயகியின் திரண்ட மார்பகங்களைத் தழுவிய நாயகனே, சிவலோகனே. கொலைபுரி அசுரர் குலங்கள் மாளவே அயில் அயில் அதனை உகந்த நாயக ... கொலைத் தொழிலைச் செய்யும் அசுரர் கூட்டத்தினர் மாண்டு அழியும்படி கூரிய வேலாயுதத்தை மகிழ்ந்து தோளில் ஏந்தும் நாயகனே, குருபர பழநியில் என்றும் மேவிய பெருமாளே. ... குரு மூர்த்தியே, பழனி மலையில் என்றும் விரும்பி வீற்றிருக்கும் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.394 pg 1.395 pg 1.396 pg 1.397 WIKI_urai Song number: 163 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
Song 119 - ilakiya kaLapa (pazhani) ilakiya kaLapasu kantha vAdaiyin mrukamatha mathanaima kizhnthu pUsiye ilaisuruL piLavaiya runthi yEyathai ...... yithamAkak kalaviyi lavaravar thangaL vAythani lidupavar palapala sinthai mAtharkaL kasanaiyai viduvathu mentha nALathu ...... pakarvAyE silaitharu kuRavarma danthai nAyaki thinaivana mathanilu kantha nAyaki thiraLthana mathanila Naintha nAyaka ...... sivalOkA kolaipuri yasurarku langaL mALave ayilayi lathanaiyu kantha nAyaka gurupara pazhaniyi lenRu mEviya ...... perumALE. ......... Meaning ......... ilakiya kaLapa sukantha vAdaiyin mrukamatham athanai makizhnthu pUsiye: As the fragrance of prominent sandalwood mixture permeates, these women smear (on their bosom) the paste of musk happily, ilai suruL piLavai arunthiyE athai ithamAkak kalaviyil avar avar thangaL vAy thanil idupavar: chew the betel leaves and the split-nut and insert the chewed stuff into the mouths of their suitors while talking sweetly during their carnal act; pala pala sinthai mAtharkaL kasanaiyai viduvathum entha nAL athu pakarvAyE: kindly tell me when I am going to give up hankering after these whores who are preoccupied with so many thoughts? silai tharu kuRavar madanthai nAyaki thinai vanam athanil ukantha nAyaki thiraL thanam athil aNaintha nAyaka sivalOkA: She is the damsel of the KuRavAs belonging to Mount VaLLimalai; she is VaLLi upon whom You doted in the millet field; You hugged the huge bosom of that VaLLi as her consort, Oh Lord of the land of SivA! kolaipuri asurar kulangaL mALavE ayil ayil athanai ukantha nAyaka: Killing the clan of the murderous demons, You wielded the sharp spear which You hold with relish on Your shoulders, Oh Lord! gurupara pazhaniyil enRum mEviya perumALE.: Oh Great Master, You are for ever happily seated in Pazhani, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |