திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 110 அவனிதனிலே (பழநி) Thiruppugazh 110 avanidhanilE (pazhani) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதனன தான தந்த தனதனன தான தந்த தனதனன தான தந்த ...... தனதான ......... பாடல் ......... அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய் அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய் சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர் திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல் தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய் மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை மணிமுடியின் மீத ணிந்த ...... மகதேவர் மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த மலைமகள்கு மார துங்க ...... வடிவேலா பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து படியதிர வேந டந்த ...... கழல்வீரா பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து பழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... அவனிதனிலே பிறந்து ... இந்த பூமியிலே பிறந்து மதலை எனவே தவழ்ந்து ... குழந்தை எனத் தவழ்ந்து அழகு பெறவே நடந்து ... அழகு பெறும் வகையில் நடை பழகி இளைஞோனாய் ... இளைஞனாய் அருமழலையே மிகுந்து ... அரிய மழலைச் சொல்லே மிகுந்து வர குதலை மொழியே புகன்று ... குதலை மொழிகளே பேசி அதிவிதம் அதாய் வளர்ந்து ... அதிக விதமாக வயதுக்கு ஒப்ப வளர்ந்து பதினாறாய் ... வயதும் பதினாறு ஆகி, சிவகலைகள் ஆகமங்கள் ... சைவ நூல்கள், சிவ ஆகமங்கள், மிகவுமறை ஓதும் அன்பர் ... மிக்க வேதங்களை ஓதும் அன்பர்களுடைய திருவடிகளே நினைந்து துதியாமல் ... திருவடிகளையே நினைந்து துதிக்காமல், தெரிவையர்கள் ஆசை மிஞ்சி ... மாதர்களின் மீது ஆசை மிகுந்து வெகுகவலை யாய்உழன்று ... அதன் காரணமாக மிக்க கவலையுடன் அலைந்து திரியும் அடியேனை ... திரிகின்ற அடியேனை, உன்றன் அடிசேராய் ... உனது திருவடிகளில் சேர்க்க மாட்டாயா? மவுன உபதேச சம்பு ... சும்மா இரு என்ற மெளன உபதேசம் செய்த சம்பு, மதியறுகு வேணி தும்பை ... பிறைச்சந்திரன், அறுகம்புல், கங்கை, தும்பைப்பூ மணிமுடியின் மீதணிந்த மகதேவர் ... தன் மணி முடியின் மேலணிந்த மகாதேவர், மனமகிழவே அணைந்து ... மனமகிழும்படி அவரை அணைத்துக்கொண்டு ஒருபுறமதாகவந்த ... அவரது இடப்புறத்தில் வந்தமர்ந்த மலைமகள் குமார ... பார்வதியின் குமாரனே துங்க வடிவேலா ... பரிசுத்தமும் கூர்மையும் உடைய வேலினை உடையவனே பவனி வரவே உகந்து ... இவ்வுலகைச் சுற்றிவரவே ஆசை கொண்டு மயிலின் மிசையே திகழ்ந்து ... மயிலின் மேல் ஏறி விளங்கி படி அதிரவே நடந்த ... பூமி அதிரவே வலம் வந்த கழல்வீரா ... வீரக் கழல் அணிந்த வீரனே பரம பதமே செறிந்த ... மோட்ச வீட்டில் பொருந்தி நின்று முருகன் எனவே உகந்து ... முருகன் என விளங்கி பழனிமலை மேல் அமர்ந்த பெருமாளே. ... பழனிமலையில் வீற்ற பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.340 pg 1.341 WIKI_urai Song number: 138 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திரு பொ. சண்முகம் Thiru P. Shanmugam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திரு சம்பந்தம் குருக்கள் Thiru P. Sambandam Gurukkal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
'பழநி' திரு சண்முக சுந்தரம் 'Pazhani' Thiru ShaNmugasundara DhEsigar பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 110 - avanidhanilE (pazhani) avanithani lEpi Randhu madhalaiena vEtha vazhndhu azhagupeRa vEna dandhu ...... iLainyOnAy arumazhalai yEmi gundhu kudhalaimozhi yEpu gandru athividhama dhAyva Larndhu ...... padhinARAy sivakalaigaL Aga mangaL migavumaRai Odhum anbar thiruvadiga LEni naindhu ...... thudhiyAmal therivaiyarkaL Asai minji vegukavalai yAyu zhandru thiriyumadi yEnai undRan ...... adisErAy mavunaupa dhEsa sambu madhiyaRugu vENi thumbai maNimudiyin meedha Nindha ...... magadhEvar manamagizha vEya Naindhu orupuRama dhAga vandha malaimagaLku mAra thunga ...... vadivElA bavanivara vEyu gandhu mayilinmisai yEthi gazhndhu padiyadhira vEna dandha ...... kazhalveerA paramapadha mEse Rindha muruganena vEyu gandhu pazhanimalai mEla marndha ...... perumALE. ......... Meaning ......... avanithani lEpi Randhu: Having taken birth in this world, madhalai enavE thavazhndhu: crawling as a kid, azhagu peRavE na dandhu: having walked about in a beautiful way, iLainyOnAy: I became a youth; arumazhalaiyE migundhu: babbling all childish pranks, kudhalai mozhiyE pugandru: uttering sweet-nothings, athividham adhAy vaLarndhu: I grew up in so many ways padhinARAy: and reached the age of 16. sivakalaigaL AgamangaL: SivA's scriptures - SivA AgamAs (rules of worship) migavumaRai Odhum anbar: and a lot of VEdic scriptures - Your devotees chant these; thiruvadigaLE ninaindhu thudhiyAmal: I never praised their holy feet nor prostrated before them. therivaiyarkaL Asai minji: I was overwhelmed by lust for women; vegukavalai yAy uzhandru: I was grief-stricken thiriyum adiyEnai: and rambled here and there, the lowly me. undran adisErAy: Will You lift me unto Your holy feet? mavuna upadhEsa sambu: Samba SivA, who preached 'silence' (as Dakshinamurthy), with madhiyaRugu vENi thumbai: moon, aRugam (cynodon) grass, Ganga river and thumbai (leucas) flower, maNimudiyin meedh aNindha magadhEvar: adorning His Great matted hair, that Mahadeva, manamagizhavE aNaindhu: was embraced joyfully orupuRama dhAga vandha: and His left side was concorporated malaimagaL: The Daughter of the Mountain (PArvathi); (as ArdhanAri) kumAra: You are her Son, and thunga vadivElA: You possess the pure and sharp Spear! bavani varavE ugandhu: Desirous of circumambulating the entire earth, mayilin misaiyE thigazhndhu: You mounted the Peacock padi adhiravE nadandha: and as You went around, the whole earth trembled! kazhalveerA: Oh warrior, You are the brave one, with the anklet! parama padhamE seRindha: You are fully present at the Heavenly Abode (MOkshA) murugan enavE ugandhu: and are known as Murugan; and You chose pazhanimalai mEl amarndha: the Mount of Pazhani as Your abode, perumALE.: Oh, Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |