(இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு எனது முக்கியக் குறிப்பைப் படியுங்கள் - நன்றி).
(Please read my important note before using this website - Thank You).
திருப்புகழ் 109 அருத்தி வாழ்வொடு  (பழநி)
Thiruppugazh 109 aruththivAzhvodu  (pazhani)
Thiruppugazh - 109 aruththivAzhvodu - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
PDF அமைப்பு
in PDF

mp3 image
YouTube
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்த தானன தனதன தனதன ...... தனதான

......... பாடல் .........

அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியு ...... முறவோரும்
     அடுத்த பேர்களு மிதமுறு மகவொடு ...... வளநாடும்

தரித்த வூருமெ யெனமன நினைவது ...... நினையாதுன்
     தனைப்ப ராவியும் வழிபடு தொழிலது ...... தருவாயே

எருத்தி லேறிய இறையவர் செவிபுக ...... வுபதேசம்
     இசைத்த நாவின இதணுறு குறமக ...... ளிருபாதம்

பரித்த சேகர மகபதி தரவரு ...... தெய்வயானை
     பதிக்கொ ளாறிரு புயபழ நியிலுறை ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அருத்தி வாழ்வொடு ... ஆசையை விருத்தி செய்கின்ற இந்த
வாழ்க்கையில்,

தனகிய மனைவியும் ... சரசம் செய்யும் மனைவியும்

உறவோரும் அடுத்த பேர்களும் ... சுற்றத்தாரும், நண்பர்களும்,

இதமுறு மகவொடு ... இன்பம் நல்கும் குழந்தைகளும்,

வளநாடும் ... வாழ்கின்ற செழிப்பான நாடும்,

தரித்த வூரும் ... குடிபுகுந்த ஊரும்

மெய் எனமன நினைவது ... நிரந்தரம் என்று மனம் நினைக்கும்
பொய் எண்ணத்தை

நினையாது உன் த(ன்)னைப் பராவியும் ... நினைக்காமல்
உன்னையே நினைத்தும் துதித்தும்,

வழிபடு தொழிலது தருவாயே ... வழிபடுகின்றதுமான தொழிலை
எனக்கு நீ தர வேண்டும்.

எருத்தி லேறிய இறையவர் ... ரிஷபமாகிய நந்தியை வாகனமாகக்
கொண்டு ஏறிய சிவபெருமானின்

செவிபுக வுபதேசம் ... செவிக்குள் புகுமாறு வேத மந்திரத்தை உபதேசம்

இசைத்த நாவின ... மொழிந்தருளிய இனிய நாவினை உடையவனே,

இதணுறு குறமகள் இருபாதம் ... தினைப்புனத்தின் பரணில் இருந்த
வள்ளியின் இருபாதங்களையும்

பரித்த சேகர ... தாங்கிய திருமுடியை உடையவனே,

மகபதி தரவரு தெய்வயானை ... தேவேந்திரன் செய்த தவத்தினால்
அவதரித்த தேவயானை

பதிக்கொள் ஆறிரு புய ... கணவனாகக் கொண்ட பன்னிரு
புயத்தோனே,

பழநியிலுறை பெருமாளே. ... பழனியில் வாழும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.386  pg 1.387 
 WIKI_urai Song number: 159 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)



Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil



Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Mrs. Malathi Velayudhan, Chennai
திருமதி வே. மாலதி, சென்னை

Mrs. Malathi Velayudhan, Chennai
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


YouTube  'YouTube' Links for this song  
  இப்பாடலுக்கான யூ ட்யூப் பதிவுகள்  

to come வரவிருக்கின்றது

 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 


 top 

Song 109 - aruththi vAzhvodu (pazhani)

aruththi vAzhvodu thanagiya manaiviyum ...... uRavOrum
     aduththa pErgaLum idhamuRu magavodu ...... vaLanAdum

thariththa Urume yenamana ninaivadhu ...... ninaiyAdhun
     dhanaip parAviyum vazhipadu thozhiladhu ...... tharuvAyE

eruththil ERiya iRaiyavar sevipuga ...... upadhEsam
     isaiththa nAvina idhaNuRu kuRamagaL ...... irupAdham

pariththa sEkara magapathi tharavaru ...... dheyvayAnai
     padhikkoL ARiru buyapazha niyiluRai ...... perumALE.

......... Meaning .........

aruththi vAzhvodu: In this life of endless desires,

thanagiya manaiviyum: I have a loving wife teasing and taunting me,

uRavOrum aduththa pErgaLum: close relatives and friends,

idhamuRu magavodu: delightful children,

vaLanAdum thariththa Urum: a prosperous country and the choicest town;

me yena mana ninaivadhu: and my mind considers them eternal!

ninaiyAdhun dhanaip parAviyum: Remove this misconception of mine; please make me praise Your glory

vazhipadu thozhiladhu tharuvAyE: and grant me the mission of Your worship.

eruththil ERiya iRaiyavar sevipuga: To reach the ears of Lord SivA, who mounts the Bull Nandi,

upadhEsam isaiththa nAvina: You preached the VEdic ManthrA with Your holy tongue!

idhaNuRu kuRamagaL irupAdham pariththa sEkara: You grabbed the two feet of VaLLi, the damsel on the platform in the millet field, and placed them on Your head in a gesture of love!

magapathi tharavaru dheyvayAnai padhikkoL ARirubuya: DEvayAnai, the daughter of IndrA, the King of DEvAs, has won You as her Consort, Oh MurugA with twelve shoulders!

pazhaniyil uRai perumALE.: Pazhani is Your abode, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை 
in PDF venue list alphabetical numerical 
mp3 audio   YouTube

Thiru Arunagirinathar's Thiruppugazh - 109 aruththi vAzhvodu - pazhani


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  




Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in https://kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top