திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 104 அகல்வினை (பழநி) Thiruppugazh 104 agalvinai (pazhani) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதன தத்தா தத்தன தனதன தத்தா தத்தன தனதன தத்தா தத்தன ...... தனதான ......... பாடல் ......... அகல்வினை யுட்சார் சட்சம யிகளொடு வெட்கா தட்கிடு மறிவிலி வித்தா ரத்தன ...... மவிகார அகில்கமழ் கத்தூ ரித்தனி யணைமிசை கைக்கா சுக்கள வருள்பவர் நட்பே கொட்புறு ...... மொருபோதன் பகலிர விற்போ திற்பணி பணியற விட்டா ரெட்டிய பரமம யச்சோ திச்சிவ ...... மயமாநின் பழநித னிற்போ யுற்பவ வினைவிள கட்சேர் வெட்சிகு ரவுபயில் நற்றாள் பற்றுவ ...... தொருநாளே புகலிவ னப்பே றப்புகல் மதுரைமன் வெப்பா றத்திகழ் பொடிகொடு புற்பாய் சுற்றிகள் ...... கழுவேறப் பொருதச மர்த்தா குத்திர துரகமு கக்கோ தைக்கிடை புலவரில் நக்கீ ரர்க்குத ...... வியவேளே இகல்படு நெட்டூர் பொட்டெழ இளநகை யிட்டே சுட்டருள் எழுபுவி துய்த்தார் மைத்துனர் ...... மதலாய்வென் றிடரற முப்பால் செப்பிய கவிதையின் மிக்கா ரத்தினை யெழுதிவ னத்தே யெற்றிய ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... அகல்வினை உள்சார் சட் சமயிகளொடு வெட்கா தட்கிடும் அறிவு இலி ... பரந்த வினை வசத்துக்கு* உட்பட்ட ஆறு சமயத்தவரோடும்** அஞ்சாது தடுத்து வாதம் செய்யும் அறிவு இல்லாதவனும், வித்தாரத் தனம் அவிகார அகில் கமழ் கத்தூரித் தனி அணை மிசை கைக் காசுக்கு அளவு ... பரந்த மார்பை உடைய, அழகிய அகில் மணமுள்ள, கஸ்தூரி இவை உள்ள ஒப்பற்ற படுக்கையில் தாம் கையில் பெற்ற பொருளின் அளவுக்குத் தக்கபடி அருள்பவர் நட்பே கொட்பு உறும் ஒரு போதன் ... அன்பு காட்டும் வேசியருடைய நட்பிலே தடுமாறும் ஓர் அறிவை உடைய (புழுப்போன்ற) நான். பகல் இரவில் போதில் பணி ப(ண்)ணி அற விட்டார் எட்டிய ... பகல், இரவு எப்போதும் பணி செய்து, (பற்றுக்களை) முழுதும் விட்டவர் அடையும் பரம மயச் சோதிச் சிவ மயமா(ய்) நின் பழநி தனில் போய் ... பரம சொரூபமாயும், ஜோதி வடிவமாயும், சிவ மயமாயுமுள்ள உனது பழனித் தலத்துக்குப் போய், உற்பவ வினை வி(ள்)ள கள் சேர் வெட்சி குரவு பயில் நல்தாள் பற்றுவது ஒரு நாளே ... பிறவி என்கின்ற வினை நீங்க, தேன் துளிர்க்கின்ற வெட்சி, குரா என்னும் மலர்கள் நிரம்பி உள்ள நல்ல திருவடிகளைப் பற்றும் நாள் எனக்குக் கிடைக்குமா? புகலி வனப்பு ஏறப் புகல் மதுரை மன் வெப்பு ஆறத் திகழ் பொடி கொ(ண்)டு புல் பாய் சுற்றிகள் கழு ஏற ... சீகாழி என்னும் தலத்துக்கு அழகும் பெருமையும் பெருகவும், சரணம் அடைந்த மதுரைக் கூன் பாண்டிய அரசனுடைய வெப்புநோய் தணியவும், விளங்கும் திருநீற்றால் கோரைப் புல்லாகிய பாய்களை உடுத்திய சமணர்களை வென்று, அவர்கள் கழுவில் ஏறவும், பொருத சமர்த்தா குத்திர துரக முகக் கோதைக்கு இடை புலவரில் நக்கீரர்க்கு உதவிய வேளே ... வாதம் செய்து வெற்றி பெற்ற ஆற்றல் உடையவனே (திருஞான சம்பந்தனே), வஞ்சனை உடைய, குதிரை முகம் கொண்ட பெண் பூதத்தின் வசத்தே நடுவில் அகப்பட்ட புலவர்களில் ஒருவராகிய நக்கீரருக்கு*** உதவி புரிந்த வேந்தனே, இகல் படு நெட்டு ஊர் பொட்டு எழ இள நகை இட்டே சுட்டு அருள் எழு புவி துய்த்தார் மைத்துனர் மதலாய் ... மாறுபட்ட பெரிய திரிபுரங்கள் தூளாகி விழ புன்னகை பூத்தே சுட்டு எரித்து அருள் புரிந்தவரும், ஏழு உலகங்களையும் உண்ட திருமாலின் மைத்துனருமாகிய சிவபெருமானின் குழந்தையே, வென்று இடர் அற முப்பால் செப்பிய கவிதையின் மிக்க ஆரத்தினை ... வெற்றி கொண்டு துன்பம் நீங்கும்படி (அறம், பொருள், இன்பம் என்ற) முப்பால் கூறும் திருக்குறளினும் மேலாகிய தேவாரத்தை எழுதி வனத்தே எற்றிய பெருமாளே. ... (ஞான சம்பந்தராகத் தோன்றி) ஏட்டிலே எழுதி வைகை ஆற்றில் எதிர் ஏற விட்ட பெருமாளே. |
* வினைகள்: மூன்று வகையான ஆகாமியம், சஞ்சிதம், பிராரப்தம் என்பனவும், இரண்டு வகையான நல்வினை, தீவினை என்பனவும் ஆகும். |
** சட் சமயங்கள்: உட் சமயங்கள் (6): வைரவம், வாமம், காளாமுகம், மாவிரதம், பாசுபதம், சைவம். புறச் சமயங்கள் (6): உலகாயதம், புத்தம், சமணம், மீமாம்சை, பாஞ்சராத்திரம், பாட்டாசாரியம். |
*** குதிரை முகமுடைய ஒரு பெண் பூதம், சிவ பூஜையில் தவறியவர்களை ஒரு குகையில் அடைத்து, ஆயிரம் பேர் சேர்ந்ததும் கொன்று தின்னும். குகையில் சிக்கிய நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாட, முருகன் மகிழ்ந்து வேலால் குகையையும் பூதத்தையும் பிளந்து, நக்கீரரையும் மற்ற புலவர்களையும் விடுவித்தான். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.378 pg 1.379 pg 1.380 pg 1.381 WIKI_urai Song number: 156 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 104 - agalvinai (pazhani) akalvinai yutsAr satchama yikaLodu vetkA thatkidu maRivili viththA raththana ...... mavikAra akilkamazh kaththU riththani yaNaimisai kaikkA sukkaLa varuLpavar natpE kotpuRu ...... morupOthan pakalira viRpO thiRpaNi paNiyaRa vittA rettiya paramama yacchO thicchiva ...... mayamAnin pazhanitha niRpO yuRpava vinaiviLa katchEr vetchiku ravupayil natRAL patRuva ...... thorunALE pukaliva nappE Rappukal mathuraiman veppA Raththikazh podikodu puRpAy sutRikaL ...... kazhuvERap poruthasa marththA kuththira thurakamu kakkO thaikkidai pulavaril nakkee rarkkutha ...... viyavELE ikalpadu nettUr pottezha iLanakai yittE suttaruL ezhupuvi thuyththAr maiththunar ...... mathalAyven RidaraRa muppAl seppiya kavithaiyin mikkA raththinai yezhuthiva naththE yetRiya ...... perumALE. ......... Meaning ......... akalvinai uLsAr sat chamayikaLodu vetkA thatkidum aRivu ili: I am not intelligent enough to challenge and debate with the zealots of the six* religious sub-sects who are subject to the impact of the wide gamut of past deeds**; viththArath thanam avikAra akil kamazh kaththUrith thani aNai misai kaik kAsukku aLavu aruLpavar natpE kotpu uRum oru pOthan: I am like a worm with a uni-sense, mired in the company of whores with large bosom who display their love on their unique bed, exuding the aroma of incense and musk, to the extent only of the money they receive; pakal iravil pOthil paNi pa(N)Ni aRa vittAr ettiya parama mayac chOthic civa mayamA(y) nin pazhani thanil pOy: will I be able to go to Your great shrine in Pazhani, which is the Supreme form of Effulgence of SivA, attained by those devotees in Your service, day and night, and who have renounced all attachments; uRpava vinai vi(L)La kaL sEr vetchi kuravu payil nalthAL patRuvathu oru nALE: in order that the deed of birth is done away with, will I be able one day to hold on to Your hallowed feet adorned with vetchi and kurA flowers dripping with honey? pukali vanappu ERap pukal mathurai man veppu ARath thikazh podi ko(N)du pul pAy sutRikaL kazhu ERa: He brought a lot of name and fame to his birth place, SeegAzhi; he was able to lessen the fever of King KUn PANdiyan of Madhurai who fell at his feet; with the bright holy ash, he was able send the ChamaNas, clad in mats of dry grass, to the gallows; porutha samarththA kuththira thuraka mukak kOthaikku idai pulavaril nakkeerarkku uthaviya vELE: You were able to debate and win over them, Oh Smart One (who came as ThirugnAna Sambandhar)! When many poets were caught by a treacherous she-devil with the face of a horse, You came, Oh Lord, to the aid of Nakkeerar***, one of those poets (imprisoned by the devil). ikal padu nettu Ur pottu ezha iLa nakai ittE suttu aruL ezhu puvi thuyththAr maiththunar mathalAy: The hostile and huge places called Thiripuram were burnt down to ashes by His gracious smile alone; He is the brother-in-law of Lord VishNu who had devoured the seven worlds; and You are that Lord SivA's child, Oh Lord! venRu idar aRa muppAl seppiya kavithaiyin mikka Araththinai: To derive benefit successfully after removing all sufferings, ThEvAram is a far superior text when compared to ThirukkuraL (that expounds the three basic traits of life, namely, righteousness, material wealth and love); ezhuthi vanaththE etRiya perumALE.: You wrote that ThEvAram (coming as ThirugnAna Sambandhar) on a dry palm-leaf and let it proceed upstream in River Vaigai, Oh Great One! |
* The six sub-sects of religion are: internal sub-sects: Bhairavam, VAmam, KALAmukam, MAvratham, PAsupatham and Saivam. external sub-sects: lOkAyatham, Budhdham, SamaNam, MeemAmsai, PAncharAthram, BhattAchAryam. |
** The deeds are of three kinds known as AkAmyam - futuristic, Sanchitham - present and prArabdham - past; two other kinds of deeds are: good and bad. |
*** A she-devil with the face of a horse used to imprison in a cave, offenders in the worship of SivA, and was biding its time to kill and devour them all when the arrested people numbered 1000; Nakkeerar, who was one of those prisoners, sang the glory of Lord Murugan as ThirumurugAtRuppadai; pleased with such rendering, Murugan wielded His spear to pierce through the cave killing the she-devil and freed all the poets along with Nakkeerar. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |